Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் வளங்கள் ; எமது எதிர்காலம்

Featured Replies

எங்கள் வளங்கள் ; எமது எதிர்காலம்

 

ச. சிவந்தன் , இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் சர்­வ­தேச ரீதியில்  

அதி­க­ரித்து செல்லும் மக்கள் தொகை­யா­னது உணவு முத­லான அடிப்­படைத் தேவை­க­ளுக்­கான  கேள்­வியைத் (demand) தொடர்ச்­சி­யாக அதி­க­ரிக்க வைப்­ப­துடன் இயற்கை வளங்­களின் மீதான  அழுத்­தத்­தி­னையும்  அதி­க­ரிக்­கின்­றது.

 

இலங்கைத் தீவா­னது வள­மான கடற்­ப­கு­தியைக் கொண்­ட­மைந்­துள்­ள­துடன் நீருக்கும் நிலத்­திற்­கு­மான விகி­தா­சாரம் அதி­க­மான நாடாக குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. இத்­தீ­வா­னது உள்­நாட்டு யுத்தம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அழி­வு­களால் தடம் மாறிப் பய­ணித்து தற்­போது கொடிய யுத்­தத்தின் முடிவில் சிறிது சிறி­தாக தன்­னு­டைய பாதை­யினை அபி­வி­ருத்­தி­யினை நோக்­கி­ய­தாக திசை மாற்றி பய­ணிக்கத் தொடங்­கி­யுள்­ளது.

அபி­வி­ருத்தி எனும் கருத்­து­ரு­வாக்­கத்தின் போது சுதந்­தி­ர­மான வளப்­ப­யன்­பாடு (open access nature) மற்றும் திறந்த பொரு­ளா­தார நிலை (open economy) என்­பன முக்­கி­ய­மாகக் கரு­தப்­பட்­டாலும் பல சந்­தர்ப்­பங்­களில் வளப்­பா­து­காப்­பினை (resource conservation) நோக்கின் அச்­சு­றுத்­தல்­க­ளாக விளங்­கு­வ­துடன் வளம் மற்றும் நிலை­யான வளப்­ப­யன்­பாடு தொடர்­பான சரி­யான விஞ்­ஞான ரீதி­யான தக­வல்கள் போதி­ய­ளவில் இல்­லாமை மற்றும் இவற்றை திறம்­பட முகா­மைத்­துவம் செய்யும் வினைத்­தி­ற­னான நிர்­வாகக் கட்­ட­மைப்­பின்மை அல்­லது செயற்­ப­டாமை என்­பன இவற்­றிற்­கான கார­ணி­க­ளாக விளங்­கு­கின்­றது. இந்த நிலை­யா­னது வளங்­களின் மித­மிஞ்­சிய பயன்­பாடு (overexploitation) மற்றும் அரு­கி­வரும் இனங்­களின் அழிவு ஆகி­ய­வற்றை ஊக்­கு­விப்­ப­துடன் இறு­தியில் இவ்­வ­ளங்கள் மீள முடி­யாத (non-renewable) இக்­கட்­டான நிலைக்கு கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றன. உற்­பத்தி நிறைந்த இவ்­வ­ளங்கள் மாசு­ப­டுத்­தப்­பட்ட வளங்­க­ளாக மாற்­றப்­ப­டு­கின்ற இந்த நிலை­யா­னது இவ் இயற்கை வளங்­களை அண்­டி­யுள்ள பகு­தி­களில் வசிக்கும் மக்கள் மற்றும் ஏனைய ஜீவ­ரா­சி­களை நேர­டி­யாகப் பாதிப்­ப­துடன் ஏனைய பிர­தே­சங்­களில் வசிக்கும் உயி­ரி­னங்­க­ளையும் காலப்­போக்கில் மறை­மு­க­மாக சமூக, பொரு­ளா­தார, சுகா­தார மற்றும் சூழ­லியல் ரீதியில் பாதிக்­கின்­றது.

சர்­வ­தேச ரீதியில் அதி­க­ரித்து செல்லும் மக்கள் தொகை­யா­னது உணவு முத­லான அடிப்­படைத் தேவை­க­ளுக்­கான கேள்­வியைத் (demand) தொடர்ச்­சி­யாக அதி­க­ரிக்க வைப்­ப­துடன் இயற்கை வளங்­களின் மீதான அழுத்­தத்­தி­னையும் அதி­க­ரிக்­கின்­றது.

இலங்­கையின் வட பகு­தி­யா­னது தனது மூன்று பக்­கங்­க­ளிலும் வள­மான கடற் பகு­தி­யையும், நிலப்­ப­கு­தியில் கணி­ச­மான அள­வி­லான நன்னீர் வளத்­தி­னையும் கொண்டு தனித்­து­வ­மான கலா­சார பண்­பாட்டுக் குறி­யீட்­டுடன் விளங்­கு­கின்­றது. வட இலங்­கையைப் பொறுத்­த­வரை விவ­சா­யமும், மீன்­பி­டித்­து­றை­யுமே பொரு­ளா­தார நிலை­யினைத் தீர்­மா­னிக்கும் இரு பெரும் உற்­பத்தித் துறை­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றன. விவ­சா­யத்­தினைப் பொறுத்­த­ளவில் நிலத்­தடி நீரி­னையும், மழை நீரி­னையும் நம்பி முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­துடன், மீன்­பி­டித்­து­றை­யினைப் பொறுத்­த­ளவில் பெரும்­பா­லான கட­லு­ணவு உற்­பத்தி கரை­யோர மீன்­பி­டி­யி­னையே (coastal fisheries) நம்­பி­யுள்­ளது. இக்­க­ரை­யோர மீன்­பி­டி­யா­னது சிறு கடற்­றொழில் முயற்­சி­களை (small scale fishing) பெரு­ம­ள­விலும், ஆழ்­கடல் கடற்­றொழில் முயற்­சி­களின் ஆரம்ப நிலை­யிலும் காணப்­ப­டு­கின்­றது. இலங்கைத் தீவின் வட பகு­தி­யினை நோக்­கு­மி­டத்து கடந்த மூன்று தசாப்த உள்­நாட்டு யுத்­தத்­தி­னாலும், 2004ஆம் ஆண்டு இடம்­பெற்ற சுனாமி அனர்த்­தத்­தி­னாலும் பெரும் உயி­ரி­ழப்­புகள், உட­மை­யி­ழப்­பு­க­ளி­னூ­டாக பாரிய பொரு­ளா­தார பின்­ன­டை­வினை சந்­தித்­துள்­ள­துடன் தற்­போது அர­சாங்க, சர்­வ­தேச, புலம்­பெயர் மக்கள் மற்றும் தனி­யாரின் முத­லீ­டு­க­ளுடன் நிமிரத் தலைப்­ப­டு­கின்­றது. இன்­றைய சூழ் நிலையில், இங்கு காணப்­படும் வளங்­களின் அடிப்­ப­டை­யிலும் மற்றும் உள்­நாடு மற்றும் வெளி­நாட்டில் காணப்­படும் கேள்­வி­களின் அடிப்­ப­டை­யிலும் கட­லு­ணவு உற்­பத்தி, பத­னி­டுதல் மற்றும் சந்­தைப்­ப­டுத்தல் துறை­யா­னது ஒரு பிர­தான துறை­யாக அடை­யா­ளங்­கா­ணப்­பட்­டுள்­ள­துடன் அதனை நோக்­கிய முத­லீட்­டா­ளர்­களின் வர­வேற்பும், வரு­கையும் அதி­க­ரித்து செல்­கின்­றது. ஆனாலும் கட­லக மீன்­பி­டி­யினால் (wild fishing) பெறப்­படும் கட­லு­ண­வு­களின் தர­மா­னது சரி­யான அறு­வ­டைக்குப் பிந்­திய பாது­காப்பு முறை­களைக் கைக்­கொள்­ளா­மை­யி­னாலும், வளத்­திற்குப் பாதிப்­பினை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய மீன்­பிடி முறை­களைக் கையாள்­வ­தாலும் பல சந்­தர்ப்­பங்­களில் ஏற்­று­மதி தரத்­திற்கு ஏற்­ற­தல்­லா­த­தாக காணப்­ப­டு­கின்­றது. அத்­தர இழப்பு கார­ணத்­தி­னாலும், உற்­பத்­திக்கு மேல­தி­க­மாக சந்­தையில் கேள்வி காணப்­ப­டு­வ­த­னாலும் கட­லக மீன்­பி­டிக்கு மேல­தி­க­மாக நீரில் வளர்ப்பு (aquaculture) முறை­களும், தொழி­நுட்­பமும் மாற்­றீ­டாக அடை­யா­ளங்­கா­ணப்­ப­டு­கின்­றன. வட இலங்­கையின் அபி­வி­ருத்­தியைப் பொறுத்­த­ளவில் இங்கு காணப்­படும் வளங்­களின் அடிப்­ப­டை­யிலும், இவ்­வுற்­பத்­தித்­து­றைக்கு காணப்­படும் உள்­நாட்டு, வெளி­நாட்டு உயர் சந்­தைப்­பெ­று­ம­தியின் அடிப்­ப­டை­யிலும், இப்­ப­கு­தியில் வாழும் மக்­களின் வாழ்­வா­தா­ரத்­திற்கும் இந்த நீரில் வளர்ப்புத் தொழி­ல்நுட்­பத்தின் அறி­மு­கமும், வளர்ச்­சியும் சாத­க­மா­கவும், தேவைப்­பா­டுள்­ள­தா­கவும் விளங்­கு­கின்­றது. நீரில் வளர்ப்­பினைப் பொறுத்­த­ளவில் நீர் வாழ் உயி­ரி­னங்கள் அவை இயற்­கையில் வாழும் சூழ்­நி­லைக்­கேற்ப நன்­னீ­ரிலோ, உவர்­நீ­ரிலோ வளர்க்­கப்­பட முடியும் என்­ப­துடன் சரி­யான தொழி­நுட்­பத்­தி­னூடு சூழ­லுக்கு இயைந்த முறையில் மேற்­கொள்­வதன் மூலம்­நீ­டித்த மற்றும் கூடிய வரு­வா­யினைப் பெற்­றுக்­கொள்ளும் சந்­தர்ப்­பத்­தினை வழங்கும் தொழிற்­று­றை­யாகக் காணப்­ப­டு­கின்­றது. ஆனாலும் இந்­நீரில் வளர்ப்பு முறைகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் போதும், விஸ்­த­ரிக்­கப்­படும் போதும் பல விட­யங்கள் கவ­னத்­திற்­கொள்­ளப்­பட வேண்­டி­யது வளங்­களின் நீடித்த பயன்­பாட்­டிற்கும், பிணக்­குகள் ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களைக் குறைத்துக் கொள்­வ­தற்கும் ஏது­வாக அமை­கின்­றன.

சரி­யான வளர்ப்­பினம் (species) / பிர­தே­சங்­களை இனங்­கா­ணுதல்:

இங்கு காணப்­படும் இயற்கை வளங்­களின் அடிப்­ப­டையில் சரி­யான வளர்ப்­பி­னங்­களை தெரிவு செய்து வளர்க்­கப்­பட முடியும்; அல்­லது உற்­பத்­தித்­திறன் மற்றும் சந்­தைப்­பெ­று­மதி கூடிய வளர்ப்­பி­னங்­களைத் தெரிவு செய்து வளர்க்­கவும் முடியும். ஆனாலும் இரண்­டா­வது முறை­யா­னது மிகவும் சிக்­க­லா­ன­தாகக் காணப்­ப­டு­வ­துடன் குறிப்­பிட்ட பிர­தே­சத்தில் காணப்­ப­டாத புது வளர்ப்­பி­னங்­களைத் தெரிவு செய்து வளர்க்க முற்­படும் போது சரி­யான முறையில் விஞ்­ஞான ரீதி­யாக உறுதி செய்து வளர்க்­கப்­ப­டா­த­விடத்து அப்­பி­ர­தே­சத்தின் இயற்கை சம­நி­லையைக் குழப்பும் செயற்­பா­டாக அமை­வ­துடன் புது­வித நோயாக்­கி­க­ளையோ/ நோய்க்­கா­வி­க­ளையோ அறி­மு­கப்­ப­டுத்தும் தவ­றான செயற்­பா­டாக மாறி­விடும் அபா­யமும் உள்­ளது. ஆகவே நீரில் வளர்ப்­பிற்கு உகந்த இடங்கள் சரி­யான முறையில் இனங்­கா­ணப்­பட்டு வடக்கில் இந்­நீரில் வளர்ப்­பிற்­கான ஒரு விளக்­க­மான திட்டம் (master plan) தயா­ரிக்­கப்­ப­டு­வது முக்­கி­ய­மாகும்.

நீரில் வளர்ப்­பிற்­கான அடிப்­படைக் கட்­ட­மைப்­பினை ஏற்­ப­டுத்தும் போது இயற்கை வளங்­களில் ஏற்­படும் மாற்றங்கள் மற்றும் பாதிப்­பு­களைக் குறைத்தல்:

நீரில் வளர்ப்­பா­னது உள்­நாட்டில் நன்­னீ­ரிலோ, கரை­யோ­ரப்­பி­ர­தே­சங்­க­ளிலோ, ஆழ்­கடற் பிர­தே­சங்­க­ளிலோ மேற்­கொள்­ளப்­பட முடியும். தரை­யினில் அல்­லது கரை­யோ­ரப்­பி­ர­தே­சங்­களில் மேற்­கொள்­ளப்­படும் போது கண்டற் தாவ­ரங்கள், நன்னீர் வங்­கிகள் – நிலத்­தடி நீர்/ குளங்கள் (freshwater banks – ground water/ reservoirs), கடல் அடித்­த­ளத்தில் காணப்­படும் உயிர்ச்­சூழல், களப்­பு­களை அண்­டிய பிர­தேச சூழல் போன்ற உணர்­திறன் மிக்க பிர­தே­சங்கள் பாது­காக்­கப்­ப­டு­வது முக்­கி­ய­மா­வ­துடன் அவற்றில் ஏற்­படும் மாற்­றங்கள் மற்றும் பாதிப்­புகள் மொத்த வளத்­தி­னை­யுமே பாதிப்­பினை நோக்கி இழுத்துச் செல்­வ­துடன் அவற்­றினை நம்­பி­யி­ருக்கும் மக்­களின் வாழ்­வா­தா­ரத்­தி­னையும் பாதிப்­ப­டையச் செய்யும்.

வினைத்­தி­ற­னான தொழி­ல்

நுட்­பங்­களைப் பயன்­ப­டுத்­தப்­ப­டுதல்:

நீரில் வளர்ப்­பினைப் பொறுத்­த­ளவில் மேற்­கொள்­ளப்­படும் முறைக்­கேற்ப பல­வி­த­மான தொழி­நுட்­பங்­களும், முறை­களும் பயன்­ப­டுத்­தப்­ப­டலாம்; அவை பௌதீக, இர­சா­யன மற்றும் உயி­ரியல் தொழி­நுட்­பங்­க­ளாக அமையும். ஆனாலும் அவ்­வாறு பயன்­ப­டுத்­தப்­படும் முறைகள் வளத்­திற்கோ அல்­லது பயன்­பாட்­டா­ள­ருக்கோ பௌதீக ரீதி­யா­கவோ அல்­லது உடற்­சு­கா­தார ரீதி­யா­கவோ பாதிப்­பினை ஏற்­ப­டுத்­தாத முறை­க­ளாக இருத்தல் அவ­சி­ய­மா­னது என்­ப­துடன் தற்­போது ஐரோப்­பிய ஒன்­றியம் உள்­ள­டங்­க­லான பெரும்­பா­லான மேற்­கத்­தேய நாடுகள் இர­சா­யனப் பயன்­பாட்­டி­லி­ருந்து விலகும் போக்­கினைக் கடைப்­பி­டிப்­பது கருத்­திற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டி­யது முக்­கி­ய­மா­ன­தாகும். அத்­துடன் இத்­தொ­ழில்­நுட்­பத்­துடன் பரீட்­ச­ய­மான, தொழி­ல்நுட்ப அறி­வுள்ள ஆளணி இருத்தல் முக்­கி­யமா­னது என்­ப­துடன், ஒரு நிலை­யான தொழி­நுட்ப ஆள­ணியைப் பேணுதல் முக்­கி­ய­மா­ன­தாகும்.

பிணக்­குகள் உரு­வாக்­கமும்

சமா­ளித்­தலும்:

இலங்­கையில் கரை­யோரம் உள்­ள­டங்­க­லான கடற்­பி­ர­தே­ச­மா­னது எல்­லை­க­ளற்ற வளங்­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு அத­ன­டிப்­ப­டையில் முறை­யான அனு­ம­தி­க­ளூ­டாக இவ்­வ­ளங்­களை யாரும் பயன்­ப­டுத்­த­மு­டியும் என்ற நிலை காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பிட்ட வளங்­களின் பயன்­பாட்­டினை ஆராயும் போது ஒரு குறிப்­பிட்ட பிர­தேசம்/ வள­மா­னது பல தொழிற்­று­றைக்கும் பொருத்­த­மா­ன­தாக அடை­யா­ளங்­கா­ணப்­ப­டு­மி­டத்து போட்டித் தன்­மை­யினை உரு­வாக்­கு­கின்­றது. ஆனாலும் இந்த நிலை­மையின் போது குறிப்­பிட்ட அவ்­வ­ளத்தின் பாரம்­ப­ரிய பயன்­பாட்­டா­ளர்­க­ளி­னதும், அவ்­வ­ளத்­தினை நம்பி வாழ்­வா­தா­ரத்­தினை முன்­னெ­டுக்கும் சமூ­கத்­தி­னதும் தேவைகள், விருப்­பங்கள் மற்றும் கருத்­துக்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்தல் இன்­றி­ய­மை­யா­த­தாகும். கடற்­றொழிற்றுறையில் இதனை நெறிப்­ப­டுத்தும் முக­மாக பல அர­சாங்கக் கட்­ட­மைப்­புகள் காணப்­பட்­டாலும், இற்­றைக்கு பல தசாப்­தங்­க­ளுக்கு முன்னர் உரு­வாக்­கப்­பட்ட கூட்­டு­றவு சங்கக் கட்­ட­மைப்பு போன்ற வட­ப­கு­தியில் பலம் பொருந்­திய நிலையில் காணப்­ப­டு­கின்ற மக்கள் சார் அமைப்­பு­களின் வகி­பாகம் முக்­கி­ய­மா­ன­தாகும். இவ்­வா­றான மக்கள் மயப்­ப­டுத்­தப்­பட்ட அமைப்­புக்­க­ளா­னது அவர்கள் சார்ந்த மக்­களின் விருப்பு வெறுப்­புகள், தேவைகள் ஆகி­ய­வற்றை சரி­யான முறையில் இனங்­கண்டு முன்­வைப்­ப­துடன், இவ்­வ­மைப்­புக்கள் தாம் சார்ந்த மக்­க­ளுக்கு நியா­ய­மான வரு­மா­னத்­தினை (equitable economic returns) உறு­தி­செய்­வ­துடன் வெளிப்­பங்­கு­தா­ரர்­க­ளுடன் (stakeholders) பேரம் பேசும் அமைப்­பா­கவும் தொழிற்­பட முடியும். அத்­துடன் இவ்­வா­றான அமைப்­பு­க­ளுடன் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வதன் மூலம் பிணக்­குகள் ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களை வெகு­வாகக் குறைத்­துக்­கொள்ள முடி­வ­துடன் திட்­டங்­களை இல­கு­வா­கவும், வெற்­றி­க­ர­மா­கவும் செயற்­ப­டுத்த முடியும். ஆகவே இவ்­வா­றான மக்கள் சார் கட்­ட­மைப்­புகள் பலம்­பொ­ருந்­தி­ய­தா­கவும், தற்­கால சூழ­லுக்கு ஏற்­ற­தா­கவும் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டுதல் இன்­றி­ய­மை­யா­த­தாகும்.

இலங்­கையின் வடக்குப் பிர­தே­சத்தின் அபி­வி­ருத்தி தொடர்­பான கவனம் அதி­க­ரித்­தி­ருப்­ப­த­னாலும், அந்த அபி­வி­ருத்தி எனும் கருப்­பொ­ருளில் கடற்­றொழிற் துறையும் உள்­வாங்­கப்­ப­டு­வ­த­னாலும், இத்­து­றையில் முத­லிட உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் முன்­வ­ரு­கின்­றனர். ஆனாலும் நிலை­யான அபி­வி­ருத்தி (Sustainable development) என்­பது மனி­த­குல நன்­மை­க­ளையும் (human wellbeing), சூழ­லியல் நன்­மை­க­ளையும் (ecological wellbeing) வினைத்­தி­ற­னான முகா­மைத்­து­வத்­தி­னூ­டாக (good governance) சம­நி­லைப்­ப­டுத்தும் போதே ஏற்­ப­டு­கின்­றது. இந்த மாதி­ரி­யான சம­நிலையே நியா­ய­மான பொரு­ளா­தாரப் பங்­கீடு (equitable economic returns) மற்றும் சமூக வெளிப்­பா­டு­களை (social outcomes) உறு­திப்­ப­டுத்தும். யுத்­தத்­திற்குப் பின்னரான வடக்கின் அபிவிருத்தி தற்போதும் ஆரம்ப நிலையில் முன்னகர்வதனால், இந்த ஆரம்ப நிலையிலேயே அபிவிருத்தித் திட்டங்கள் சரியான முறையில் விஞ்ஞான ரீதியாக ஒழுங்கமைக்கப்படுவது முக்கிய­மாகும். அந்த அடிப்படையில் இங்கு காணப்படும் வளங்களின் பங்கீடும், பயன்பாடும் சரியான திட்டமிடல்களினூடு மேற்கொள்ளப்படுவது முக்கியமாகும். அந்த நிலையில் மேற்குறிப்பிட்ட நீரில் வளர்ப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த முனையும் போது அது சார்ந்த சரியான மற்றும் உறுதியான தகவல்கள் இருத்தல் முக்கியமாகும். இந்த நிலையில் நீடித்த பயன்பாட்டுப் பிரதேசங்களின் (Sustainable Use Areas – SUAs) உருவாக்கமானது இவ்வியற்கை வளங்களை வினைத்திறனான முறையில் முகாமைத்துவம் செய்வதற்கான பொறிமுறையை ஏற்படுத்துவதுடன் அந்த இயற்கை வளங்களை சரியான முறையில் பாதுகாத்து அவற்றினை நம்பி வாழ்ந்துவரும் கிராமிய சமூகத்தின் வாழ்வாதாரத்தினை உறுதிப்படுத்தும் செயற்பாடாகவும் அமையும். அத்துடன் மேலதிகமாக உருவாகும் கழிவுகள் சரியான முறையில் முகாமைத்துவம் செய்யப்படுதல் இன்றியமையாததாக இருப்பதுடன் முறையற்ற கழிவு முகாமைத்துவம் இயற்கை வளத்தினை மேலும் மாசுபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன் ஒருகட்டத்தில் அவ் வளங்களை பாவனைக்குதவாத நிலைக்கு மாற்றிவிடக்கூடிய அபாய நிலை­யினையும் கருத்திற்கொண்டு செயற்படுதல் நீடித்த பாவனைக் கொள்கைக்கு நன்மை பயக்கும்.

“பாதுகாப்பினை விட முற்பாதுகாப்பே பாதுகாப்பானது”

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-22#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.