Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்­தி­ரிக்கு புதிய நெருக்­கடி

Featured Replies

மைத்­தி­ரிக்கு புதிய நெருக்­கடி

 

ஆர்.ராம்

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பில் அங்­கத்­துவம் வகிக்­கின்ற நவ சிங்­கள உறு­மய, பல­மு­பெ­ர­முன போன்ற சிறு அர­சியல் கட்சிகள் தம்மைக் கருத்­தி­லெ­டுக்­காது செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக விசனம் வெளி­யிட்­டுள்­ளன. மறு­பக்­கத்தில் மாவட்ட அமைப்­பா­ளர்கள் சுதந்­தி­ரக்­கட்­சியின் சுயா­தீன 16பேர் அணி தொடர்பில் தீர்க்­க­மான முடி­வெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்று அழுத்­தங்­களை பிர­யோ­கிக்க ஆரம்­பித்­துள்­ளனர். இதனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு புதிய நெருக்­க­டிகள் ஏற்­பட்­டுள்­ளன.  

இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பில் அங்­கத்­துவம் வகிக்கும் நவ­சிங்­கள உறு­மய, பல­மு­பெ­ர­முன போன்ற சிறு அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் அடங்­கிய குழு­வினர் எதிர்­கா­லத்தில் நடை­பெ­ற­வுள்ள தேர்­த­லுக்கு எவ்­வாறு முகங்­கொ­டுத்தல், சுதந்­தி­ரக்­கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் அடுத்­த­கட்ட செயற்­பா­டுகள் உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் தீர்க்­க­மான முடி­வு­களை எடுப்­ப­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேர­டி­யாகச் சந்­திப்­ப­தற்கு 15நிமிட கால­அ­வ­கா­சத்­தினை கடந்த வாரம் கோரி­யி­ருந்­தன. கால­அ­வ­காசம் வழங்­கப்­பட்­ட­போதும் மேற்­படி தரப்­பி­னரால் தமது பிரச்­சி­னைகள் தொடர்பில் ஜனா­தி­ப­தி­யுடன் விரி­வாக கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு சந்­தர்ப்பம் கிடைத்­தி­ருக்­க­வில்லை. இவ்­வா­றான நிலையில் மேற்­படி குழு­வினர் ஜனா­தி­ப­திக்கு அவ­சர கடி­த­மொன்றை அனுப்­பி­யுள்­ளனர்.

அக்­க­டி­தத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பாக தொடர்ந்தும் செயற்­ப­டு­வது தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட வேண்­டி­யுள்­ளது. சிறு அர­சியல் கட்­சி­க­ளான நாம் அண்­மைய காலங்­களில் பரா­மு­க­மாக இருந்து வரு­கின்றோம். ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பாக எந்­த­வொரு செயற்­பா­டு­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. கால்­பந்து போன்று நாம் அங்கும் இங்­கு­மாக திசை­தி­ருப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்றோம். ஆகவே வெகு விரைவில் இவ்­வி­ட­யங்கள் குறித்து தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட வேண்டும் என்று கோரு­வ­தோடு ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பாக செயற்­ப­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும் என்றும் கோரி­யுள்­ளன.

இதே­வேளை சுதந்­தி­ரக்­கட்­சியின் மாவட்ட தேசிய அமைப்­பா­ளர்­க­ளுக்கும் ஜனா­தி­ப­திக்கும் இடை­யி­லான முக்­கிய சந்­திப்­பொன்றும் நடை­பெற்­றுள்­ளது. இச்­சந்­திப்­பின்­போது, சுதந்­தி­ரக்­கட்­சியின் சுயா­தீன 16பேர் கொண்ட அணி தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. இதன்­போது சுயா­தீன 16பேர் அணியில் உள்­ள­வர்கள் மகிந்த ராஜ­பக்ஷ தரப்­பி­ன­ருடன் நெருக்­க­மாகச் செயற்­ப­டு­வதால் அவர்­க­ளுக்கு கட்­சியில் காணப்­ப­டு­கின்ற பத­வி­களை நீக்க வேண்டும். அத்­துடன் அவர்கள் அங்கம் வகிக்கும் மாவட்ட தேசிய அமைப்­பா­ளர்கள் பத­வி­களை அவர்­க­ளி­டத்­தி­லி­ருந்து பெற்று புதி­ய­வர்­க­ளுக்கு வழங்க வேண்டும் போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்விடயம் சம்பந்தமாக ஆராய்கின்றேன் என்றே பதிலளித்துள்ளார். சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணியை அடுத்த தேர்தலுக்கு முன்னதாக பரந்து பட்ட அளவில் வலுப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள ஜனாதிபதிக்கு இவ்விரு விடயங்களும் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. 

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-07-01#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.