Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்­த­பாய அடக்­கு­முறை மூல­மாகவே இலக்கை அடை­ய முயற்­சிப்பார்

Featured Replies

கோத்­த­பாய அடக்­கு­முறை மூல­மாகவே இலக்கை அடை­ய முயற்­சிப்பார்

012-94ed02785c18951390d1a0969024a243588a551b.jpg

 

(ஆர்.யசி)

பாரிய விளை­வுகள் ஏற்­படும் என்­கி­றது பிர­தான எதிர்க்­கட்சி

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயல்திறன் மீதான அதி­ருப்­தி­யி­லேயே சிலர் சர்­வா­தி­காரி ஒருவர் ஆட்­சிக்கு வர­வேண்டும் என்ற கருத்­தினை முன்வைத்­துள்­ளனர். ஆனால் ஜன­நா­யக சூழலில் கோத்­த­பா­ய­விடம் ஆட்சி செல்­வது எந்­த­ளவு பார­தூ­ர­மா­னது என்­பதை அறி­யா­த­வர்­க­ளாக உள்­ளனர். கோத்­த­பாய தனது ஆதிக்­கத்தை செலுத்த அடக்­கு­மு­றையை கையாள்வார் என பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.  

எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு தேர்­தலில்  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான அணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ கள­மி­றங்­குவார் என பலரால் எதிர்வு கூறப்­ப­டு­கின்­றது. இதே நிலையில் ஹிட்லர் போன்ற இறுக்­க­மான தன்­மை­யி­லான ஆட்சி அமைந்­தாலும் பர­வா­யில்லை என்ற கருத்­துக்கள் தேரர்கள் உள்­ளிட்ட ஒரு சிலரால் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் இது குறித்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சாளர் சுமந்­திரன் தெரி­விக்­கை­யி­லேயே இதனை குறிப்­பிட்டார்.   

அவர் இது குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்

ஹிட்லர் போன்ற ஒரு ஆட்சி அமைந்­தாலும் பர­வா­யில்லை என அஸ்­கி­ரிய அனு­நா­யக தேரர் ஒருவர் குறிப்­பிட்­டி­ருந்தார். அவர் கூறிய கருத்­துடன் இணங்கும் சிந்­தனை கொழும்பில் ஒரு சில­ரிடம் உள்­ளது. காரணம் இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த காலத்தில் இருந்து எத­னையும் சீராக செய்­ய­வில்லை. ஆனால் ஒரு சர்­வா­தி­கா­ரியின் கையில் ஆட்சி முறைமை இருந்தால் அவர் அவற்றை சரி­யாக செய்­விப்பார் என்ற ஒரு எண்ணம் உள்­ளது. குறிப்­பாக கோத்­தா­பய ராஜபக் ஷ கொழும்பு நகரை சுத்­த­மாக வைத்­தி­ருந்தார், சீர்­தி­ருத்­தினார் என்ற கருத்­துக்­களை கூறு­கின்­றனர்.

அவ்­வா­றான ஒரு­வரின் கையில் ஆட்­சியை கொடுத்தால் இரா­ணு­வத்தின் உத­வி­யுடன் ஒரு கட்­டுப்­பாட்­டுடன் செய்வார் என்ற எண்ணம் சிலர் மனதில் உள்­ளது. அதன் வெளிப்­பா­டாக தான் அந்த அனு­நா­யக தேரர் உள்­ளிட்ட ஒரு சிலரின் கருத்­துக்­களை நாம் பார்க்­கின்றோம். ஆனால் இவர்கள் முன்­வைத்த கருத்­துக்கள் எந்­த­ளவு பார­தூ­ர­மா­னவை என்­பதை அவர்கள் விளங்­கிக்­கொள்­ள­வில்லை.

ஒரு ஜன­நா­யக சூழலில் அவ்­வா­றான ஒரு முறை­மைக்கு செல்­வது நாட்­டுக்கு பாரிய விளை­வு­களை ஏற்­ப­டுத்தும். ஏனெனில் கோத்­த­பாய ராஜபக் ஷ தாம் வினைத்­தி­ற­னாக செய்ய வேண்டும் என்­ப­தற்­காக கட்­டுப்­பாட்­டுக்கு அப்பால் சென்று அடக்­கு­முறை மூல­மாக தமது இலக்கை அடை­யவே முயற்­சிப்பார். அடக்­கு­முறை என்­பது ஜன­நா­ய­கத்­துக்கு நேர் எதி­ரான ஒன்­றாகும். ஆகவே அதனை மறந்து சிலர் உட­ன­டி­யாக அபி­வி­ருத்­தி­களை செய்ய முடியும், நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்ற கருத்­துக்­களை கூறிக்­கொண்­டுள்­ளனர்.

எனினும் எமது நாட்டில் அவ்­வா­றான ஒரு சிந்­த­னைக்கு மக்கள் ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்­டார்கள் என நினைக்­கின்றோம். இப்­போ­துள்ள சூழலில் இன்று அவ்­வா­றான ஒரு சிந்­தனை உள்­ளது. மேல் மட்­டத்தில் அவ்­வா­றான சிந்­த­னைகள் உள்­ளது. ஆனால் பெரும்­பா­லான சிங்­கள மக்­களும் கோத்­த­பாய ராஜபக் ஷ என்ற சர்­வா­தி­கார தலை­வரை ஆத­ரிக்க மாட்­டார்கள் என்­பதே உண்மை. அதேபோல் பொது எதி­ரணி தமது வேட்பாளர் குறிந்து சிந்திக்கும் போது வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் என்ற அடிப்படையில் சிந்தித்தால் கோத்தாபய ராஜபக் ஷவை அவர்கள் நிறுத்த மாட்டார்கள். அதேபோல் அனுநாயக தேரரின் கருத்து கோத்தபாய ராஜபக் ஷவின் தேர்தல் எதிர்பார்ப்புக்கு பாரிய இடியாக வந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-02#page-1

  • தொடங்கியவர்

நாட்டின் தலைமை கோட்டாவின் கைகளுக்குள் சிக்கினால் ஆபத்து!- சுமந்திரன்

 

suma-720x450.png

 

நாட்டின் ஆட்சிப் பொறுப்பை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ பொறுப்பேற்பாராயின் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கோட்டாபய அடக்குமுறையினால் அபிவிருத்தியையும், இராணுவ ஒழுக்கத்தையும் ஏற்படுத்துவார் என சிலர் நம்புகின்றனர். ஆனால், அது நாட்டிற்கு அபாயகரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை.

ஜனநாயக சூழலில் பயணிக்கும் நாட்டிற்கு அது ஒரு மோசமான திருப்பமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

http://athavannews.com/?p=697828-நாட்டின்-தலைமை-கோட்டாவின்-கைகளுக்குள்-சிக்கினால்-ஆபத்து!--சுமந்திரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.