Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா, மன்னாருக்கு புதிய அரச அதிபர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா, மன்னாருக்கு புதிய அரச அதிபர்கள்!

July 3, 2018
14341506932_eedb235525.jpg

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிற்கு புதிய மாவட்ட செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம் இன்று மாலை வழங்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் மோகன்ராஜ், மன்னார் மாவட்டச் செயலாளராகவும் நிந்தாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா வவுனியா மாவட்டச் செயலாளராகவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

மன்னார் மாவட்டத்துக்கு முஸ்லிம் அரச அதிபரை நியமிக்கவேண்டும் என அமைச்சர் ரிசாத் பதியூதீன் கோரியிருந்தார். அதேவேளை, மன்னார் அரச அதிபராக கிருஸ்தவர் ஒருவர் நியமிக்கவேண்டும் என ஆயர் இல்லம் கேட்டிருந்து.Divisional-Secretary-SL.-Muhammath-Hanee

இந்த நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சரின் ஆலோசனையையும் பெற்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த நியமனங்களை இன்று மாலை வழங்கியது.

 

http://www.pagetamil.com/10384/

இலங்கை: 30 ஆண்டுகளுக்கு பின் முஸ்லிம் ஒருவர் அரசாங்க அதிபராகிறார்

இலங்கையில் 30 வருடங்களுக்குப் பிறகு மாவட்ட அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவரை, நியமிக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியாளராக நியமனம் பெற்றுள்ள ஐ.எம். ஹனீபா Image caption25 நிர்வாக மாவட்டங்களில் எந்தவொரு மாவட்டத்தின் கடந்த 30 வருடங்களில் முஸ்லிம் எவரும் அரசாங்க அதிபராக நியமிக்கப்படவில்லை.

இதன்படி, ஐ.எம். ஹனீபா என்பவரை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க செவ்வாய்கிழமை அனுமதி கிடைத்துள்ளது.

முஸ்லிம் சமூகத்திலிருந்து இலங்கையில் அரசாங்க அதிபர் பதவியை வகிக்கும் இரண்டாவது நபர் எனும் பெருமையை இதன்மூலம் ஹனீபா பெறுகிறார்.

முதலாவது அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட எம்.எம். மக்பூல், 1988ஆம் ஆண்டு ஆயுதக் குழுவினரால்சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐ.எம். ஹனீபாவை நியமிக்க தற்போது அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இலங்கையிலுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் எந்தவொரு மாவட்டத்திலும் கடந்த 30 வருடங்களில் முஸ்லிம் எவரும் அரசாங்க அதிபராக நியமிக்கப்படவில்லை.

இந்தப் பதவிக்கு தகுதியான பலர் முஸ்லிம் சமூகத்தில் இருந்தாலும், அவர்களை நியமிக்காமல் அரசாங்கம் அநீதி இழைத்து வருவதாக, ஆட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களில் வெளிப்படையாக குற்றஞ்சாட்டிவந்தனர்.

ஐ.எம். ஹனீபா சாய்ந்தமருது பிரதேச செயலாளராக பணியாற்றி வரும் நிலையில், தற்போது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமனம் பெறுகிறார்.

அம்பாறை மாவட்டம் - சம்மாந்துறையை சேர்ந்த இவர், 1999ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் பணிபுரியத் தேர்வானவர். இதற்கு முன்னர் இவர் ஆசிரியராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-44708284

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.