Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிறழ்வு - ஜீ.முருகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிறழ்வு ( சிறுகதை ) : ஜீ.முருகன்

 

அது நடிகை மோனிகா பெலூச்சிதான். ஒரு கட்டிலில் அவள் அமர்ந்திருக்கிறாள். மரக்கட்டிலா இரும்புக்கட்டிலா ஞாபகம் இல்லை. மேக்கப் பூசிய அந்த முகம், உதட்டுச் சாயம் சற்றே கலைந்த உதடுகள், வெறுமையான கைகள், கீழாடை விலகி வெளிர்ந்த தொடையுடன் நீண்டிருக்கும் கால்கள்…
அதற்குக் கீழே அவன் அமர்ந்திருக்கிறான், ஆமாம் கீழேதான்.
அவன் சொல்கிறான், “இப்படியும் சில அழகிகள் இருக்கிறார்கள். அவர்கள் சில நேரங்களில் கொஞ்சம் பகட்டாக தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள். இதில் தப்பில்லை…”

சற்று தள்ளி முறத்தில் ஏதோ புடைத்துக்கொண்டிருக்கும் அவன் அம்மா சிரிக்கிறாள்.

மோனிகா பெலூச்சியைப் பார்த்து அவன் கேட்கிறான், 

“உங்களை முத்தமிட்டுக்கொள்ளலாமா?”

அவன் அம்மா சற்றே கோபத்துடன் அவனைப் பார்த்துச் சொல்கிறாள், “உனக்கு வெட்கமே இல்லையா… முத்தமாம் முத்தம்…”

மோனிகா பெலூச்சி சிரிக்கிறாள்.

“இவன் ஒரு க்யுட்டான பையன். என்னை தாராளமாக முத்தமிடலாம்.”அவனைப் பார்த்துச் சொல்கிறாள், “பயப்படாதே வா…”

அவன் எழுந்து அவளுடைய நீண்ட தொடை மேல் அமர்ந்து அவளுடைய இடது கன்னத்தில் முத்தமிடுகிறான். அவள் சிரித்துக்கொண்டே முகத்தைத் திருப்பி வலது கன்னத்தைக் காட்டி “இங்கே” என்கிறாள். அதிலும் முத்தமிடுகிறான். பிறகு கீழே நழுவிச்சென்று அவளுடைய தொடைகளை தழுவி அவள் மீதான தனது வேட்கையை வெளிப்படுத்துகிறான்.
அவள் இப்போது படுக்கையில் கால்களை நீட்டி பின்னால் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாள். அவன் ஒரு குழந்தையைப் போல அவள் கால்களுக்குப் மேல் மல்லாந்தவாக்கில் படுத்திருக்கிறான். 

இடுப்புக்கீழே தனது விரைப்பை உணர்ந்த அவன் வெட்கத்துடன் கைகளால் அதை மூடுகிறான். மோனிகா பெலூச்சியின் கை அவன் கையை விலக்கிவிட்டு அதைப் பற்ற எத்தனிக்கிறது. ஆனால் எட்டவில்லை. “கொஞ்சம் மேலே வா பையா.” அவன் மேலே அசைந்து நகர்கிறான். இப்போது அந்தக் கை முழுதாகப் பற்றி ஆடையுடன் சேர்த்து அசைக்கிறது…உடைந்து வெளியேறிவிடும் போல ஒரு உணர்வு…
நம் கதாநாயகன் விழித்துக்கொள்கிறார், இடுப்புக்கீழே விரைப்பை உணர்கிறார். கையை வைத்துப் பார்க்கிறார், ஈரம் எதுவும் இல்லை. சங்கடத்துடன் வேட்டியை நன்கு இழுத்துவிட்டுக்கொண்டு சுவர் பக்கம் திரும்பிப் படுத்துக்கொள்கிறார்.

கனவில் மோனிகா பெலூச்சி வந்தது அவருக்கு வியப்பாக இருந்தது. சமீபத்தில் அவளுடைய எந்தத் திரைப்படத்தையும் அவர் பார்த்திருக்கவில்லை. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்’How much to love me?’ பார்த்ததுதான். இரண்டாயிரத்து ஒன்றிலோ இண்டிலோ ‘மெலினா’ படத்தைக் கொடுத்து அலுவலக நண்பர் ஒருவர்தான் அவளை அறிமுகப்படுத்தி வைத்தார்.பிறகுதான் அவளைக் கவனிக்க ஆரம்பித்தது. சோகம், காமம் , நீண்ட வாழ்வனுபவம் நிரம்பி நிற்கும் ஒரு உயர்ந்தத் தோற்றம்.அவையே அவளை தனித்துக் காட்டியது போலும்.

இது போன்ற திரைப்படங்களை அவர் தேடிப் பார்ப்பது அவருடைய ஐம்பதைக் கடந்த பிறகுதான். மோனிகா பெலுச்சியை அறிமுகப்படுத்திய அலுவலக நண்பர்தான்சில டிவிடிக்களை கொடுத்து பார்க்கும்படி கூற இந்த ரசனைத் தொற்றிக்கொண்டது. பணி ஓய்வுக்குப் பிறகு பொழுதைக் கழிக்கவும் இது பயன்பட்டது. இப்போது மடிகணினியே அவர் துணைவன்.

கதைப் புத்ககங்கள் படிக்கும் ஆர்வமும் சிறுவயதிலிருந்தே உடன் வருகிறது. இப்போதும் நூலகம் போகிறார். நாளிதழ்கள், வார இதழ்கள் படித்துவிட்டு நாவல்கள் சிலவற்றை எடுத்து வந்து அறையில் வாசிக்கிறார்.
தொலைக்காட்சிப் பெட்டி அவரை ஈர்க்கவில்லை. அதனால்வரவேற்பறைக்குச் சென்று அமர்வதைத் தவிர்த்துவிடுகிறார். மேலும் அவருடைய மருமகள் பார்க்கும்தொடர்களும், பேத்தி பார்க்கும் குழுந்தைகளுக்கான சேனல்களும்ஒன்று மாற்றி ஒன்று ஓடிக்கொண்டிருக்கும் அந்தப் பெட்டியில் செய்திகளுக்கு இடமேது? காலையில் படிக்கும் ஆங்கில நாளேட்டோடு செய்களுடனான அவரது பரிச்சயம் முடிந்து போகிறது.

மடிகணினியில் யூடியூப் விடியோக்கள், முகநூல் பார்ப்பதுண்டு.முகநூலில்விருப்பக் குறிஇடுவதோடு சரி. நல்ல விஷயங்கள் கண்ணில்பட்டால் மற்றவர்களுக்குப் பகிர்வார். அவருடைய முகநூல் நண்பர்கள் வட்டம் அலுவலக நண்பர்கள், சில உறவினர்கள் என மிகச் சிறியது.
சமீப காலங்களாக அவருடை ஆர்வம் நீலப்படங்கள் கொட்டிக்கிடக்கும் இணையதளங்களின் மேல் திரும்பியிருந்தது. 

முன்பு எப்போதோ ஒரு முறை பார்த்து வந்தவை இப்போது தினசரி சென்று வரும்பூங்கா போல மாறிவிட்டன. இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது அதற்குள் சென்றுவிடுகிறார். மெல்லத் தலைகாட்டும் அந்த சபலம் பிறகுஉள்ளிழுத்துகொண்டு போய் அடுத்தது அடுத்தது என வெகுநேரம்அவரைப் புரட்டிப்போடத் தொடங்கிவிடுகிறது.
மனைவி இறந்த பிறகான இந்த ஒன்றரை ஆண்டுகளாகத்தான் உடலின் பெரும் தவிப்பை உணர்கிறார். ஒரு பெண் உடலைத் தழுவிக் கொள்ளவும், முலைகளைப் பற்றிக்கொள்ளவும் அவரது உடல் ஏங்கியது. இந்த உணர்வைக் கடப்பதற்கு அவருக்கிருந்த ஒரே வழி இந்த இணையதளங்களுக்கு நடுவே கண்களையும் மானசீகமாக உடலையும் புதைத்துக்கொள்வதுதான்.

இப்படியான கணங்களை கடந்துவிட்டு உடல்வேட்கையை தனது கைகளால் தனித்துக்கொண்டபின் வெகு நேரம் படுக்கையிலேயே படுத்திருப்பார். வெளியே வரவேற்பறைக்குச் சென்று தன் மகனையோ மருமகளையோ பேரக் குழந்தைகளையோ எதிர்கொள்வதில் அவருக்கு தயக்கம் இருந்தது. எங்கே தன் முகமோ உடலோ அதைக் காட்டிக் கொடுத்துவிடுமோ என்றும் அஞ்சினார்.

அது அவருடைய மடிகணினிதான் என்றாலும் எப்போதாவது மகன் கைக்கும் மருமகள் கைக்கும் சென்றுவரக் கூடியதாக இருந்ததால், அந்த வகையான இணையதளங்களைப் பார்த்தபின் அதன் தடங்களை தாங்கி நிற்கும் வரலாற்றுப் பதிவுகளை காலி செய்து வைப்பதில் கனமாக இருந்தார்.
இதுபோன்ற படங்கள் பார்ப்பதிலும் அவருக்குப் பிரத்தேயக ரசனை ஏற்பட்டிருந்தது.அதன் தனித்துவமான கதாநாயகிகள் சிலர் மீது காதல் வயப்படவும் செய்திருந்தார். தேடு பொறியில்அவர்களின் பெயர்களை இட்டு அவர்கள் நடித்த பல வித விடியோக்களை பார்த்து மகிழ்வார்.

வகை மாதிரியில் தேசியக் கொடியைச் சொடுக்குவதன் மூலம் அவர் தேசபக்தராகவும் உருமாறியிருந்தார். தன் இணையின் அனுமதியில்லாமல் கேமராவை மறைத்து வைத்தோ, அனுமதியுடனோ- நம் நேர்மையற்ற ஆண்களால் – எடுக்கப்பட்ட திருட்டு விடியோக்கள் அவரை கவனம் ஈர்த்தன. வெகு தொலைவில் வேறொரு நாட்டில் விரக தாபத்தில் இருக்கும் தன் கணவனுக்காக ஸ்கைபியில்வெப்கேமிரா முன் தன் உடலை திறந்து காட்டிய பெண்களின் விடியோக்கள் – இதையெல்லாம் கூட பதிவேற்றம் செய்வார்களாஎன்ற கேள்வி – அவரை சங்கடப்படுத்தினாலும் விரும்பிப் பார்த்தார்.
லொலிட்டாக்களின்மேல் ஏற்பட்டிருந்த ஈர்ப்பு அவருக்கே வியப்பையும் சங்கடத்தையும் அளித்தது. 

பேத்தி வயதில் உள்ள பெண்கள் மேல் அப்படியென்ன மோகம்? இளைஞனாக இருக்கும் போது கூட அவர்கள் மேல்இப்படியான ஈர்ப்பு அவருக்கு ஏற்பட்டதில்லையே. பிறகு இப்போது ஏன்? இந்த பேய் அவரை மட்டும்தான் பிடித்து ஆட்டுகிறதா இல்லை அவர் வயதில் உள்ள மற்ற கிழவன்களையும் விட்டுவைப்பதில்லையா?இதற்கு உளவியல் காரணங்கள் ஏதாவது இருக்குமோ?
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர்கள் கைது செய்யப்பட்ட செய்திகளை படிக்கும் போது அவர்களில் தன்னை பொருத்திப் பார்த்துக்கொண்டார். அப்படிப்பட்ட தவறை நாமே செய்துவிடுவோமோ என்றும் அஞ்சினார். பேத்தி வந்து அவரின் கால்களை கட்டிக்கொள்ளும் போது கூட இந்த குற்ற உணர்வு ஏற்படத் தொடங்கியிருந்தது அவருக்கு. 

இது போன்ற இணையதளங்களில் மேய்ந்துவிட்டு,உடலும் கண்ணும் சோர படுத்துத் தூங்கிய சில நாட்களின் கனவில், வகைவகையான அம்மண உடல்கள் வந்து அவரையும் சேர்த்துக்கொண்டு விதவிதமாகக் கூடி முயங்கச் செய்தன. நள்ளிரவில் விழிப்புதட்டி எழுந்து உட்கார்ந்துகொள்வார். தமக்கு பைத்தியம்பிடித்துவிடுமோ என்றும்அஞ்சினார்.இப்படியான கனவொன்றில் அவருடைய அலுவலகத்தில் வேலை செய்த இளம்பெண் ஒருவள்வந்தாள். நிஜத்தில் கூச்ச சுபாவமுள்ள அவள்,கனவில்அவரைப் புரட்டி எடுத்துவிட்டாள். 

இதையெல்லாம் சகஜமாக எடுத்துக்கொண்ட அவர் தன் மருமகள் கனவில் வந்த அன்று அதிகமேவெட்கிப் போனார். இரண்டு மூன்று நாள் அவளுடைய முகத்தைப் பார்ப்பதையே தவிர்த்தார். கனவின் இந்த குரூர விளையாட்டை அவரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. இதற்கெல்லாம் மடிகணினிதான் காரணமோ என அதைத் திறக்கவே அஞ்சினார். வலிந்து புத்தகங்கள் படிப்பார். வெளியே சென்று யாராவது நண்பர்களைத் தேடிப் போய் பார்த்து அவர்களுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீடு திரும்புவார். பூங்காவுக்கு போய் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். பேருந்து நிலையத்துக்குப் போய் ஜனத்திரளுக்குள் தன்னைத் திணித்துக்கொள்வார். கோயில்களுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்கேயே நீண்ட நேரம் உட்கார்ந்துவிட்டு திரும்புவார்.
இன்று மோனிகா பெலூச்சி வந்தது இப்படியான எந்த பெரிய மனச்சிக்களையும் அவரில் ஏற்படுத்திடவில்லை. 

காலத்தையும் இடத்தையும் கவனத்தில் கொள்ளாத கனவின் பாய்ச்சல்தான் அவருக்கு வியப்பாக இருந்தது. அவள் இந்நேரத்தில் இந்த உலகத்தின் ஏதோ ஒரு இடத்தில் ஒரு படப்பிடிப்பில் இருக்கலாம்அல்லது வீட்டில்தன் கணவனுடனோ, குழந்தைகளுடனோ சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கலாம். ஆனால் அவளை இழுத்து வந்து அவரின் கனவில் புகுத்தி விஷமத்தை நிகழ்த்தியிருக்கிறது இக் கனவு.

படுக்கையைவிட்டு எழுந்த அவர் குளியல் அறைக்குச் சென்று திரும்பி கால்சராயையும் சட்டையையும் அணிந்து கொண்டார். படித்து முடித்திருந்த இரண்டு புத்தகங்களை கையில் எடுத்துக்கொண்டு வரவேற்பறைக்கு வந்தார். சமையல் அறையிலிருந்து வெளிப்பட்ட அவருடைய மருமகள் காப்பி குடித்துவிட்டுப் போகும்படி சொன்னாள். உட்கார்ந்து அக்கடமையை நிறைவேற்றிவிட்டு வெளியில் வந்த அவர்,தெருவில் இறங்கியதும் ஆசுவாசமாக உணர்ந்தார். அங்கே நகர்ந்துகொண்டிருந்த மனிதர்களுடன் அவரும் கலந்தார்.

நூலகத்தில் கவிந்திருந்த அமைதியும், தென்பட்ட மனிதர்களும் வழக்கம் போல ஒரு விநோத சூழலை அவருக்குள் நிறுவினார்கள். வயதான அந்த நூலகப் பணியாளரிடம் தான் கொண்டு வந்திருந்த புத்தகத்தைக் கொடுத்துவிட்டு அலமாரிகளில் தேட சோம்பல்பட்டதால் மற்றவர்கள் திருப்பிக் கொடுத்திருந்தபுத்தகங்களில் இரண்டை தேர்ந்தெடுத்து வாங்கிக்கொண்டார்.

நாற்காலிகளில் புத்தகங்களுடன் சமைந்திருந்தவர்களில் வழக்கமான சிலமுகங்களைக் கண்டார். அங்கே கடைசியாக உட்கார்ந்து படித்துக்கொண்டிருக்கிறானே ஒரு தாடி இளைஞன் எப்போது அவனை அங்கு பார்க்கிறார்.நூற்றாண்டு பல கடந்தாலும் அதே இடத்தில் அவனைப் பார்க்கலாம் போலும். 

மேஜையின் மேல் வகைவகையான இதழ்கள் குவிந்து கிடந்தன. யார் இதையெல்லாம் படிக்கிறார்கள் என்று கேள்வியை எழுப்பும் இதழ்களுக்கிடையே அவருக்கு விருப்பமான வார இதழ்கள் கண்ணில் தென்படுகிறதா என்று பார்த்தார். அவையெல்லாம் அங்கே படித்துக்கொண்டிருந்தவர்களின் கைகளில் இருந்ததால் காலியாக இருந்த ஒரு நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டார். அவருடைய கைகள் எதிரே இருந்தவற்றை கிளறிக்கொண்டிருந்தன. 

எதிரே இருந்த சுவரில் – பிடிவாதமாக – மாட்டப்பட்டிருந்த முன்னாள் முதல்வரின் படம் அவர் பார்வையில் பட்டது. அது புகைப்படம்தான் என்றாலும் உதடுகளை செயற்கையாகத் திருத்தியிருந்தார்கள். அது லிப்ஸ்டிக் பூசப்பட்ட மோனிகா பெலூச்சியின் உதட்டை ஞாபகப்படுத்தியது.ஆனால் ஒன்று காமம் இன்னொன்று கபடம் என அவரது மனம் மதிப்பிட்டது. சஞ்ஜை காந்தியின் வாயைப் பெண் குறியோடு ஒப்பிட்டு யாரோ ஒரு எழுத்தாளர் எழுதியிருந்ததாக நண்பர் சொன்னது அவரின் நினைவுக்கு வந்தது. பின்னர் வாய், உதடுகள், நாக்கு, மூக்கு, பெண் உடல் என சிந்தனை சென்றதில் அவருக்கு விரைப்பு ஏற்பட்டுவிட்டது. அத்தனை பேர் புத்தகம் படிப்பதென்ற புனிதக் காரியத்தில் ஈடுபட்டிருக்க அவர் சிந்தனை இப்படி விகாரம் கொண்டதில் வெட்கிப்போனார்.
கடந்த வாரம் கூட இது போன்ற சங்கடம் ஒன்றில் சிக்கியிருந்தார். வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலில் கூட்டம் அதிகம் இருந்தது. அந்த ஊரில் பெரியப்பெரிய கோயில்கள் பல இருந்தாலும் ஏதோ ஒரு பலனைச் சொல்லி கூட்டத்தைஇச்சோட்டா கோயில் பக்கம் திருப்பிவிட்டிருந்தார்கள்.

சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசை நின்றிருந்தது. திரும்பிப் போய்விடலாம் என்ற யோசனையை வீழ்த்தி பக்தி உணர்வு வெற்றி கண்டிருந்ததால் அவரும் அந்த வரிசையில் நின்றிருந்தார். ஆண் பெண் பேதமில்லா வரிசை. சுவாமியை நெருங்க நெருங்க அவரின் உடல் எதிரே இருந்த ஒரு பெண்ணின் மேல் அழுந்த, அது நேரம்காலம் தெரியாமல் விழித்துக்கொண்டுவிட்டது. சுதாகரித்துக்கொண்ட அவர் பக்கத்தில் இருந்த தடுப்புகளை கெட்டியாகப் பற்றிக்கொண்டு நகர்வை நிறுத்தினார். அதன் மூலம் கிடைத்த ஒரு அரையடி இடைவெளியை சுவாமி தரிசனம் செய்யும் வரை நிறுவியபடி வந்தார்.‘கோயிலில் போய் இப்படி நடக்குமா? என்ன வெவஸ்தை கெட்ட உடல் இது?’என்ற தன்னையே சபித்துக்கொண்டார்.
புத்தகங்களுடன் நூலகத்திலிருந்து வெளியே வந்த அவர் பூங்காவை நோக்கி நடந்தார்.கூட்டம் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் வழக்கமாக உட்காரும் இடம் காலியாகவே இருந்தது. அதில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினார்.

பெற்றோருடன் வந்தக் குழந்தைகள் அங்கிருந்த விளையாட்டு சாதனங்களில் சறுக்கியும் ஏறியும் குதித்தும் விளையாடிக்கொண்டிருந்தன. பாரிய சரீரம் கொண்ட ஒரு பெண்ணும் சிலரும் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.


அவரைப் போன்ற வயதானவர்கள் சிலர் தனியாகவும் சிலர் குழுவாகவும் உட்கார்ந்திருந்தார்கள். வழக்கமாக அவர் பார்க்கும் முகங்கள்தான் அவை. அவர்களில் பெரும்பாலானவர்கள் காம இச்சைகளைக் கடந்துவிட்டவர்கள் போலவேத் தோன்றினார்கள். ‘மேலுக்குத்தான் இப்படியா? இல்லை அவர்களுக்குள்ளும் அத்தீ இன்னும் அடங்காமல் கனன்று கொண்டிருக்கிறதா?’ என்று கேட்டு தனக்குள் குழம்பினார். ஆனால் வயதானவர்களின் இத்தேவைசமூக பிரக்ஞைக்கு உறைக்காது போனது ஏன்? இக்கேள்வி பாலை படர்ந்த ஒரு வெறுமையை அவருக்குள் கொண்டு வந்து நிரப்பியது. 

தொலைவிலிருந்த மரங்களுக்குப் பின்னால் சில காதல் ஜோடிகள் தென்பட்டனர். அவர்கள் உட்கார்ந்திருந்த விதமும் அசைவுகளும் அவரை சங்கடப்படுத்தியது. ‘பூங்காக்கள், கடற்கரை, திரையரங்கம், பேருந்து என இவர்கள்இச்சையைத் தீர்த்துக்கொள்ள படும்பாடு…கடவுளே இவர்களுக்கு உறுப்புகளைக் கொடுத்த நீ, ஒரு மறைவிடத்தையும் ஒரு படுக்கையையும் கொடுப்பற்கென்ன?’என அவர் மனம் சாடியது.
இருள் கவியத்தொடங்கியதும் வீடு திரும்பினார். அறைக்குள் நுழைந்த அவர் புத்தகங்களை மேஜை மேல் வைக்கும் போது அங்கே மடிகணினி இல்லாமல் இருந்ததைகண்டு திடுக்கிட்டார். 

வரவேற்பறையில் ஷோபாவில் உட்கார்ந்து தன் மருமகள் மடிகணினி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தது அப்போதுதான் பிரக்ஞைக்குள்உறைத்தது. தயக்கத்துடன்சென்று வரவேற்பறையைப் பார்த்தார். ஆமாம், அவளின் கையில் இருந்தது அவருடைய மடிகணினிதான்.
அறைக்குத் திரும்பி வந்த அவர் கட்டிலில் உட்கார்ந்து மேஜையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த வெறுமை அவரைக் கலக்கமடையச் செய்தது.

கடைசியாக அதற்கு முந்தின நாள் இரவுதான் அவர் தன் காதலிகளோடு காமக்களியாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.வரலாற்றை காலி செய்தோமா என்று ஞாபகப்படுத்திப் பார்த்தார். இல்லை, அவர் செய்யவில்லை. அவசரமாக குளியல் அறைக்கு ஓடியது ஞாபகத்துக்கு வந்தது. திரும்பி வந்ததும் மடிகணினியை அணைத்துவிட்டு சோர்வுடன் படுத்துவிட்டார்.

கணினியின் தேடுபொறியில் அவள் எதையோ தேடப் போய் ஆண் பெண் உறுப்புகளைக் குறிக்கும் அந்த வார்த்தைகள் தோன்றிவிட்டால்?உள்ளே சென்று வரலாற்றைப் பார்த்துவிட்டால்?

பதற்றத்தில் உடல் வியர்த்துவிட்டது. அவருடைய மடிகணினியைப் பார்த்துக்கொண்டிருந்த அவளுடைய மருமகளின் முகத்தில் எப்படிப்பட்ட உணர்வு நிழலாடியது? பதற்றத்தில்அதை கவனிக்க மறந்தவிட்டார். திரும்பவும் போய் பார்க்கவும் அச்சமாக இருந்தது.
ஆடைகளைக் கூட மாற்றாமல் அதே நிலையில் உட்கார்ந்திருந்தார். இதுவரை சந்தித்தேயிராத வாழ்வின் மிகப்பெரிய ஆபத்துக்கு முன் நின்றிருப்பது போல இருந்தது அவருக்கு. 

அவள் பார்த்துவிட்டிருந்தால், அதை கண்டுபிடித்துவிட்டிருந்தால் இனி என்ன? அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? 

அவர் அறிந்த வரை, இதெல்லாம் சகஜம் என இங்கிதத்துடன் கடந்து போகும் பெண்ணாகவோ,இரக்கம் காட்டும் பெண்ணாகவோ அவளை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. நிச்சயம் அவள் ஆத்திரப்படுவாள். ‘என்ன ஒரு வெவஸ்தைக் கெட்ட மனுஷன், அசிங்கம் பிடித்தவன்’ என மனதுக்குள் திட்டுவாள். தன்னிடம் முகம் கொடுத்துப்பேசுவதைத் தவிர்ப்பாள். உணவு பறிமாறும்போது அந்த துட்சம் பாத்திரங்களின் நகர்த்துதலாக,சப்தங்களாக வெளிப்படும். கணவனிடம் சொல்லவும் கூடும். அதைவிட வெட்கக்கேடு எதுவும் இல்லை. அறிவுரை சொல்ல வரமாட்டான் என்றாலும் முன்பு போல அவன் நடத்தை இருக்காது. பேத்தியை அவர் பக்கம் அனுப்பாமல் செய்துவிட்டால்? அதை விட அவமானம் வேறு என்ன இருக்கிறது? ஏன் இந்த அசிங்கத்தை உடன் வைத்திருந்தோம்?இவ்வளவு நாள் கெளரவமாக வாழ்ந்துவிட்டு இந்த அல்ப விஷயத்தில் அவமானப்பட்டு சாக வேண்டுமா?அவர் மனம் தவித்தது.

மேஜைமேல் இப்போது மடிகணினி இல்லாமல் இருக்கும் இடத்தில் கிடத்தி தன் கற்பனையில் புணர்ந்தகாதலிகள் பலர் அவருக்கு நினைவில் தோன்ற,‘தேவிடியாக்கள்’ என வெறுப்புடன் அவர்களைத் திட்டித்தீர்த்தார்.

‘என்ன எழவு இது? இதை எப்படிக் கடக்கப் போகிறோம்? என்ற கேள்விகள் அவரை கூரிய பற்களால் கடித்துத் தின்றுகொண்டிருந்த போது மடிகணினியுடன் அவருடைய மருமகள் உள்ளே வந்தாள்.


அவள்மடிகணினியை மேஜையின் மேல் வைத்துவிட்டுச் சொன்னாள், “ரூம்ல இருந்த கம்ப்யூட்டர் ஒர்க்காவல மாமா. மெயில் கொஞ்சம் பார்க்க வேண்டியிருந்தது.”
அவள் சென்றுவிட்டாள்.

நம் கதாநாயகன் அதே நிலையில் உட்கார்ந்திருந்தார். அவருடையப் பார்வை அந்த சாத்தானையேவெறித்துக்கொண்டிருந்தது. ஆபத்து விலகிய மனதின் கிறுக்கினாலோ என்னவோ, அந்த மடிகணினி,பின்புறத்தைக் காட்டிகுனிந்து படுத்திருக்கும் ஒரு நிர்வாணப் பெண்ணைப் போல அவருக்குத் தோன்றியது.
வலது கை விரல்களை இறுக்கி ஆபாசமாக அசைத்தபடி அவர் சொன்னார், “F***…”

0

 

http://malaigal.com/பிறழ்வு-சிறுகதை-ஜீ-முரு/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.