Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களின் பாதிப்பும் இனவாத அரசியலும்

Featured Replies

மக்களின் பாதிப்பும் இனவாத அரசியலும்

 

பி.மாணிக்­க­வா­சகம்

எதையும் இன­வாத அர­சி­ய­லாக்­கு­வது, எங்­கேயும் அர­சியல் செய்­வது என்­பது இந்த நாட்டின் ஒரு தீவி­ர­மான போக்­காகும். ஆழ்ந்து நோக்­கினால் மாத்­தி­ரமே இதனைப் புரிந்து கொள்ள முடியும். ஆழ்ந்து நோக்­காத வரையில் நாட்­டுக்குக் கேடு விளை­விக்­கின்ற இந்த இன­வாத அர­சியல் போக்கின் உண்மைத் தன்­மையை இல­குவில் கண்டு கொள்ள முடி­யாது. 

"எதிலும் அர­சியல், எங்­கேயும் அர­சியல்" என்று இந்தப் பத்­தியில் இதற்கு முன்னர் நாட்டின் அர­சியல் போக்கு குறித்து எழு­தப்­பட்­டி­ருந்­தமை பல­ருக்கும் நினை­வி­ருக்­கலாம். அதனை இன்னும் துலாம்­ப­ர­மாக எடுத்­து­ரைக்கும் வகையில் யாழ்ப்­பாணம் வீர­சிங்கம் மண்­ட­பத்தில் இடம்­பெற்ற அபி­வி­ருத்தி தொடர்­பாக இரண்டு அமைச்­சர்கள் கலந்து கொண்­டி­ருந்த நிகழ்வு அமைந்­து­விட்­டது. அங்கு வெளி­யி­டப்­பட்ட கருத்­துக்கள் பாராளு­மன்­றத்­தையே பெரும் அம­ளி­து­ம­ளி­யாக்­கி­யி­ருந்­தது.  விடயம் அத்­துடன் நிற்­க­வில்லை. அர­சியல் களத்தில் புய­ல­டிக்கும் வகையில் நாட­ளா­விய அளவில் அர­சியல் ரீதியில் அது தீவி­ர­மாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.  

ஜனா­தி­பதி மக்கள் சேவை நிகழ்ச்சித் திட்­டத்தின் 8ஆவது நிகழ்வு யாழ்ப்­பாணம் வீர­சிங்கம் மண்­டபத்தில் நடை­பெற்­ற­போது அர­சாங்­கத்தின் போக்கு தமிழ் மக்­களை ஏமாற்­ற­ம­டையச் செய்­துள்­ளது என்று யாழ். மாவட்­டத்தின் முக்­கிய மக்கள் பிர­தி­நி­தி­க­ளினால் இடித்­து­ரைக்­கப்­பட்­டது.

ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து அமைத்­துள்ள கூட்­டாட்­சிக்கு ஆத­ரவு வழங்­கிய போதிலும் இந்த அரசின் மீது தாங்கள் நம்­பிக்கை இழந்­துள்­ள­தாக அந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் அர­சியல் தலை­வர்கள், மிகவும் கார­சா­ர­மான முறையில் தெரி­வித்­தி­ருந்­தார்கள். பாராளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யாக உள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் முக்­கிய தலை­வர்­களில் ஒரு­வ­ரா­கிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ரா­ஜாவும் அர­சாங்­கத்தின் பங்­கா­ளிக்­கட்­சி­யா­கிய ஐக்­கிய தேசிய கட்­சியைச் சேர்ந்­த­வரும் இராஜாங்க அமைச்­ச­ரு­மா­கிய விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுமே இந்த கருத்­துக்­களைத் தெரி­வித்­தி­ருந்­தனர். 

தமிழ் மக்­களின் வாக்­கு­களைப் பெற்று தேர்­தலில் வெற்­றி­யீட்­டிய இந்த நல்­லாட்சி அர­சாங்கம் அந்த மக்கள் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணத் தவ­றி­யி­ருக்­கின்­றது, என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா தனதுரையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்த இரண்டு அமைச்­சர்­க­ளிடம் எடுத்­து­ரைத்தார். உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் வஜிர அபே­வர்­தன மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன ஆகிய இரண்டு அமைச்­சர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்­டி­ருந்­தனர்.

"அர­சாங்­கத்­துடன் இணைந்து பணிகள் செய்­யவும் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண­வுமே கூட்டு அர­சாங்­கத்தைப் பத­விக்குக் கொண்டு வந்தோம். ஆனால் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளினால் நாங்கள் இப்­போது ஏமாற்­றமே அடைந்­துள்ளோம்" என்று அமைச்­சர்­களின் கவ­னத்தை ஈர்க்கும் வகையில் உணர்­வு­பூர்­வ­மாக அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

யுத்தம் முடி­வுக்கு வந்து ஒன்­பது வரு­டங்கள் கடந்­து­விட்ட போதிலும் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் தீர்த்து வைக்­கப்­ப­ட­வில்லை. அவர்­க­ளது வாழ்க்கை மேம்­பாட்­டுக்­கு­ரிய அவ­ச­ர­மான அபி­வி­ருத்திப் பணிகள் முறை­யான வகையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. ஆனால், போரினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்­கான அபி­வி­ருத்திப் பணி­களை முன்­னெ­டுக்கும் கைங்­க­ரியம் அர­சி­ய­லாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

அர­சாங்­கத்தின் பங்­காளிக் கட்­சி­க­ளா­கிய ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரா­கிய ஜனா­தி­ப­தியும் ஐக்­கிய தேசி­ய­கட்­சியின் தலை­வ­ரா­கிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்து ஏட்­டிக்குப் போட்­டி­யாகக் கூட்­டங்­களை நடத்தி அர­சியல் செய்­கின்­றார்கள். இரண்டு அரச தலை­வர்­க­ளுமே பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உறு­தி­ய­ளித்­த­வாறு பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வில்லை. மாறாக பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் அர­சியல் செய்­வ­தையே நோக்­க­மாகக் கொண்டு செயற்­ப­டு­கின்­றனர் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா குற்றம் சுமத்­தி­யி­ருந்தார். 

வேகம் கொண்ட விஜ­ய­கலா

இந்த நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்த சிறுவர் விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான இராஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் இன்னும் ஒரு­படி முன்னே சென்று, யாழ். குடா­நாட்டில் அதி­க­ரித்­துள்ள  வன்­மு­றை­க­ளுக்கு முடி­வு­கட்டி சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­வ­தற்கு அர­சாங்கம் தவ­றி­யி­ருக்­கின்­றது என்­பதைச் சுட்­டிக்­காட்­டினார். 

வன்­மு­றை­களும் சமூகக் குற்றச் செயல்­களும் தலை­வி­ரித்­தா­டு­வ­தால், பாலியல் வன்­கொ­டு­மை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டு­வி­டுவோம் என்று பெண்­களும் சிறு­மி­களும் பெரிதும் அச்­ச­ம­டைந்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். பெண்கள் பாது­காப்­பாக வீதி­களில் செல்ல முடி­யா­தி­ருப்­பது மட்­டு­மல்ல. வீடு­களில் வயோ­திபப் பெண்­கள்­கூட பாது­காப்­பாக இருக்க முடி­யாத அள­வுக்கு பாலியல் வன்­கொ­டு­மைகள் அதி­க­ரித்து, நிலைமை மோச­ம­டைந்­துள்­ளது என்­ப­தையும் அவர் எடுத்­து­ரைத்தார். 

யாழ். குடா­நாட்டின் நிலை­மைகள் குறித்தும், அர­சாங்­கத்தின் மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யு­ட­னான செயற்­பா­டு­க­ளையும் சுட்­டிக்­காட்­டிய அவர், நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஆட்­சி­யிலும் பார்க்க, விடு­த­லைப்­பு­லி­களின் காலத்தில் பெண்­க­ளுக்­கான பாது­காப்பும் பொது­மக்­களின் பாது­காப்பும் சிறப்­பாக இருந்­தது என்றும் அவர் குறிப்­பிட்டார். படை பலத்தைக் கொண்ட அர­சாங்­கத்­தினால் குற்­றச்­செ­யல்­களைக் கட்­டுப்­ப­டுத்தி சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்ட முடி­யா­தி­ருப்­ப­தாக அவர் குறித்துக் காட்­டினார். 

"வீதி­களில் செல்­கின்ற பெண்­களும் சிறு­மி­களும் பாது­காப்­பாக வீடு­க­ளுக்குத் திரும்ப வேண்­டு­மானால், நாங்கள் நிம்­ம­தி­யா­கவும் அமை­தி­யா­கவும் வாழ வேண்­டு­மானால் வடக்­கிலும் கிழக்­கிலும் விடு­த­லைப்­பு­லி­களின் கை ஓங்க வேண்டும்" என இராஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் குறிப்­பிட்டார். 

அர­சாங்­கத்தின் ஓர் அமைச்­ச­ரா­கவும் அரசின் பங்­கா­ளிக்­கட்­சி­யா­கிய ஐக்­கிய தேசிய கட்­சியின் முக்­கிய உறுப்­பி­ன­ரா­கவும் உள்ள நிலையில் அவர் விடு­த­லைப்­பு­லி­களின் கை ஓங்க வேண்டும் என தெரி­வித்த கருத்து, சிங்­களப் பேரி­ன­வாத அர­சி­யல்­வா­தி­க­ளி­னாலும் அர­சாங்­கத்­தி­னாலும் பயங்­க­ர­வா­தி­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்ற விடு­த­லைப்­பு­லி­களை மீண்டும் உயிர்ப்­பிப்­ப­தற்கு முயற்­சிப்­ப­தையே காட்­டு­கின்­றது என்று அரச தரப்­பி­னரும் பேரின தீவி­ர­வா­தி­களும் கூச்­ச­லிட்­டி­ருக்­கின்­றார்கள். 

அமைச்சர் என்ற வகையில் அவர் நாட்டின் அர­சி­ய­ல­மைப்பை மீறிச் செயற்­பட்­டி­ருக்­கின்றார். பயங்­க­ர­வா­தத்­துக்கு அவர் மீண்டும் உயிர் கொடுக்க முற்­பட்­டி­ருக்­கின்றார் என குற்றம் சுமத்தி அவர் அமைச்சுப் பத­வியில் இருப்­ப­தற்­கான தார்­மீக உரி­மையை இழந்­துள்ளார் என தெரி­வித்து, அவரை அமைச்சுப் பத­வியிலிருந்து நீக்க வேண்டும். அவரைக் கைது செய்ய வேண்டும் என்­றெல்லாம் பல­வா­றாக அவ­ருக்கு எதி­ராகப் பலரும் குரல் எழுப்­பி­யி­ருந்­தனர். 

பாரா­ளு­மன்­றத்தில் இது தொடர்­பாக விசேட கவனம் செலுத்தி கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்­ட­துடன் அங்கு இடம்­பெற்ற கடும் விவா­தங்­க­ளினால் அம­ளி­து­மளி ஏற்­படுமள­வுக்கு விஜ­ய­கலா விவ­காரம் உச்சநிலையில் தீவிரம் பெற்­றி­ருந்­தது. 

அரச தரப்­பினர் மட்­டு­மல்­லாமல் தென்­னி­லங்­கையிலுள்ள எதிர்த்­த­ரப்­பி­ன­ரி­ட­மி­ருந்தும் இந்த விவ­காரம் குறித்து பல்­வேறு கருத்­துக்கள் வெளி­வந்­தன. கண்­ட­னங்­களும் வந்­தி­ருந்­தன. நாட்டில் ஏதோ நடக்கக் கூடா­தது நடந்­து­விட்­டது போலவும் இதனால் முழு நாடுமே குடி­மு­ழுகிப் போய்­விடக் கூடி­யதோர் ஆபத்­தான நிலை­மைக்கு உள்­ளா­கி­யி­ருப்­பது போன்ற ஒரு தோற்­றத்தை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லேயே இராஜாங்க அமைச்சர் விஜ­ய­க­லாவின் விவ­காரம் பேரி­ன­வாத அர­சியல் தரப்­பி­ன­ராலும் அரச தரப்­பி­ன­ராலும் கையா­ளப்­பட்­டி­ருந்­தது. 

சட்ட ரீதி­யாக அவ­ருக்கு எதி­ராக என்ன வகையில் நட­வ­டிக்­கைகள் எடுக்க முடியும் என்­பது குறித்து, சட்­டமா அதி­ப­ரிடம் பாரா­ளு­மன்றம் அரக்கப் பரக்க ஆலோ­சனை  கேட்­டி­ருந்­தது என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. 

வெட்கக்கேடான செயல்

பயங்­க­ர­வாதம் மீண்டும் தலை­யெ­டுத்து, ஒரு பிர­ள­யமே ஏற்­பட்­டு­விட்­டதோ என்று சிங்­கள மக்கள் அஞ்சி பதற்­றப்­படும் அள­வுக்கு விஜ­ய­கலா விவ­காரம் பேரி­னவா­தி­க­ளினால் பெரி­து­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஆனால் உண்­மையில் நாட்டின் சட்­டமும் ஒழுங்கும் சீர்­கு­லைந்து நிலை­மைகள் மோச­ம­டைந்­துள்­ளன. தேசிய பாது­காப்பு குறித்து வாய்­கி­ழிய பேசு­ப­வர்­களும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­ப­வர்­களும் தேசிய பாது­காப்பின் அச்­சா­ணி­யாகத் திகழ்­கின்ற பொது­மக்­களின் பாது­காப்பு சமூ­க­வி­ரோ­தி­க­ளி­னாலும் மோச­மான குற்­றச்­செ­யல்­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளி­னாலும் சீர­ழிக்­கப்­பட்­டி­ருப்­பதைக் கவ­னத்தில் கொள்­ளாமல் வேறு எங்­கேயோ கவ­னத்தைச் செலுத்­தி­யி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது. 

அர­சாங்க கட்­சி­யொன்றின் முக்­கி­யஸ்­தரும் அமைச்­ச­ரு­மா­கிய பெண் ஒரு­வரே உணர்ச்சிவசப்­பட்டு கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தும் வகையில் நிலை­மைகள் மோச­ம­டைந்­துள்­ளன என்ற சாதா­ரண உண்­மையை அரச தலை­வர்கள் இரு­வரும் உண­ர­வில்­லையோ என்ற சந்­தேகம் எழு­கின்­றது. 

சட்­டத்­தையும் ஒழுங்­கையும் பேண முடி­யாமல் அரச நிர்­வா­கமும் சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­டு­வ­தற்குப் பொறுப்­பான அரச பொறி­மு­றையும் திணறிக் கொண்­டி­ருக்­கின்­றன என்ற யதார்த்த நிலை­மையை கவ­னத்தில் எடுத்து அது குறித்த கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருக்க வேண்டும். அது தொடர்­பான சட்ட நடை­மு­றைகள் குறித்து ஆராய்ந்­தி­ருக்க வேண்டும். ஆனால் அது நடக்­க­வில்லை. மாறாக புலியை விட்­டு­விட்டு அதன் வாலைப்­பி­டித்­தது போன்ற காரி­யங்­க­ளி­லேயே அரச தரப்­பி­ன­ராலும் ஏனைய தென்­னி­லங்­கையைச் சேர்ந்த தீவி­ர­வாத அர­சியல் சக்­தி­க­ளி­னாலும் உட­ன­டி­யாகக் கவனம் செலுத்­தப்­பட்­டது. 

விஜ­ய­க­லா­விடமிருந்து அமைச்சுப் பத­வியைப் பறிப்­ப­தற்கு முன்­ன­தாக தனது கட்­சியின் தலை­மைப்­பீ­டத்­துக்கு தன்­னிலை விளக்கம் ஒன்றை அளித்த அவரே, தனது அமைச்­சுப்­ப­த­வி­யையும் இரா­ஜி­னாமா செய்­துள்ளார். உண்­மையில் இவ்­வாறு இடம்பெற வேண்­டி­ய­தில்லை. பல­வீ­ன­மான ஆட்­சிக்குப் பொறுப்­பா­ன­வர்­களும் நல்­லாட்சி நடத்­துவோம், பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்போம் என்று வாக்­கு­று­தி­ய­ளித்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய வாக்குப்பலத்தில் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­யுள்ள அர­சாங்­கத்தில், சட்டம் ஒழுங்­குக்குப் பொறுப்­பா­ன­வர்­களே இரா­ஜினாமா செய்­தி­ருக்க வேண்டும். அது நடை­பெ­ற­வில்லை.

நாட்டு குடி­மக்­களின் பொது­வான பாது­காப்­புக்கும் சமூ­கத்தின் மென்­மை­யா­ன­வர்கள், வலு­வில்­லா­த­வர்கள் என்று கரு­தப்­ப­டு­கின்ற பெண்­க­ளி­னதும் சிறு­மி­க­ளி­னதும் அந்­த­ரங்க நிலை­மை­களின் பாது­காப்­புக்கும் பொறுப்­பான சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்ட முடி­யா­த­வர்கள் பயங்­க­ர­வாதம் மீண்டும் தலை­தூக்கப் போகின்­றதே என்று போலி­யான நிலை­மையைச் சுட்­டிக்­காட்டி கூக்­கு­ர­லி­டு­வ­தையும் இன­வாத ரீதியில் செயற்­ப­டு­வ­தையும் நியா­ய­மான அர­சியல் நட­வ­டிக்­கை­யாக ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. 

நாட்டில் சட்­டமும் ஒழுங்கும் சீர்­கு­லை­வ­தென்­பது சாதா­ரண விட­ய­மல்ல. பாதாள உலகக் கோஷ்­டி­யி­னரும் கொள்­ளை­யர்­களும் குற்­ற­வா­ளி­களும் சமூக விரோ­தி­களும் வாளேந்திச் சென்று வீடு­களில் இருப்­ப­வர்­க­ளையும் வீதி­களில் செல்­ப­வர்­க­ளையும் வெட்டிச் சரிப்­ப­வர்­க­ளையும் பகி­ரங்­க­மாகச் செயற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­பட்­டி­ருப்­பது வெட்­கக்­கே­டா­னது. 

உண்மை நிலை என்ன?

தேசிய பாது­காப்­புக்குக் குந்­தகம் ஏற்­படக் கூடாது என்­ப­தற்­காக வரவு – செலவுத் திட்­டங்­களில் வரு­டந்­தோறும் பெரு­ம­ளவு நிதி­யொ­துக்கி படைத் தரப்­பி­னரை, அரசு முதன்மை நிலையில் நாட்டில் பர­வ­லாக நிறுத்­தி­யுள்­ளது, ஆனால், பொது­மக்­களின் பாது­காப்பு கவ­னிப்­பா­ரின்றி சீர்­கு­லைந்­துள்­ளது. 

"தோலி­ருக்க சுளை­ வி­ழுங்­கி­யதைப் போன்று" நாட்டின் பொதுச் சொத்­தா­கிய வங்கி ஒன்றிலிருந்து பெருந்­தொ­கை­யான பணம் கொள்­ளை­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. அது எப்படி நடந்­தது, யாரால் நடத்­தப்­பட்­டது என்­ப­து­கூட தெரி­யாத நிலை­மையில் நாட்டின் பொது பாது­காப்பு நிலைமை நகைப்­புக்கிட­மா­கி­யுள்­ளது.

சீனா­வுக்கு நாட்டில் காலூன்­று­வ­தற்கு இட­ம­ளித்து ஹம்­பாந்­தோட்டை துறை­முக நிர்­மா­ணத்துக்குப் பொறுப்­பான சீன கம்­ப­னி­யிடமிருந்து ஜனா­தி­பதி தேர்தல் செல­வுக்­காக 7.6 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் பணத்தை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பெற்­றி­ருந்­த­தாக அரச உள்­ளகக் கணக்­காய்வு விசா­ர­ணை­களில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட ஓர் ஆவ­ணத்தை ஆதா­ர­மாகக் காட்டி சர்­வ­தேச அளவில் பிர­ப­ல­மான "நியூயோர்க் டைம்ஸ்" பத்­தி­ரிகை தகவல் வெளி­யிட்­டுள்­ளது. இந்த விடயம் இலங்கை அர­சியல் வட்­டா­ரங்­க­ளிலும் இலங்­கை­யுடன் தொடர்­பு­டைய சர்­வ­தேச இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்­க­ளிலும் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள ஒரு சூழ­லி­லேயே இராஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா விவ­காரம் உள்ளூர் அர­சியல் வட்­டா­ரங்­களில் சூடு பிடித்­தி­ருக்­கின்­றது. 

நாட்டின் தென் கோடியில் ஹம்­பாந்­தோட்­டையின் புதிய துறை­மு­கத்தில் வர்த்­தக நோக்­கத்தைக் காட்டி கால் பதித்­துள்ள சீனா, இலங்கை அர­சாங்­கத்­துக்குப் பாரிய நிதியைக் கட­னாகக் கொடுத்து அந்தக் கடனை வசூ­லிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­யாக இலங்கை மண்ணை தனது இரா­ணுவ தேவைக்குப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கா­னதோர் இரா­ஜ­தந்­திர நகர்வை மேற்­கொண்­டி­ருப்­ப­தாகப் பர­வ­லாகப் பேசப்­ப­டு­கின்­றது. 

 

நாட்டின் தேசிய பாது­காப்­புக்கும் அதன் ஜன­நா­யக இருப்­புக்கும் ஜன­நா­யக அர­சி­ய­லுக்கும் சீனாவின் இந்த நட­வ­டிக்­கையின் மூலம் ஆபத்து நெருங்­கி­யி­ருப்­ப­தாக சர்­வ­தேச இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்­களில் கரு­தப்­ப­டு­கின்­றது. இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான், சிறுவர் விவ­கா­ரத்­துக்குப் பொறுப்­பான இரா­ஜாங்க அமைச்­ச­ராக இருந்­தும்­கூட, பெண்­களின் பாது­காப்பை உத்­த­ர­வா­தப்­ப­டுத்த முடி­யா­மலும் பாலியல் வன்­கொ­டு­மைக்குப் பின்னர் கொல்­லப்­பட்ட ஒரு சிறு­மியின் மர­ணத்­துக்கும் வயோ­திபப் பெண் ஒருவர் மோச­மான முறையில் பாலியல் வன்­கொ­டு­மைக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­மைக்கும் உரிய நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்க முடி­யா­மலும் உள்­ளதே என்ற கையறு நிலையில் ஒரு பெண்­ணாகக் குரல் கொடுத்­த­போது வெளி­யிட்ட கருத்­துக்­களை இன­வாத அர­சி­ய­லாக்கி பயங்­க­ர­வாதம் தலை­தூக்கப் போகின்­றது என்று கூச்­ச­லி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இது ஜன­நா­யக விரோத நிலை­யி­லான வெறும் இன­வாத அர­சியல் கூச்­ச­லாகும். 

விஜ­ய­கலா விவ­கா­ரத்­திலும் பார்க்க மஹிந்த ராஜ­­பக் ஷ சீனா­விடமிருந்து பணம் பெற்ற விவ­காரம், தேசிய நலன் சார்ந்த அதி முக்­கிய பிரச்­சி­னை­யாகும். அதனை மூடி­ம­றைத்து திசை திருப்­பு­வ­தற்­கா­கவே விஜ­ய­கலா விவ­காரம் தென்­னி­லங்­கையைச் சேர்ந்த தீவிர அர­சி­யல்­வா­தி­க­ளினால் முக்­கி­ய­மாகக் கவ­னத்தில் எடுத்து கையா­ளப்­பட்­டி­ருக்­கின்­றது. 

வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நடை­பெற்ற நிகழ்­வா­னது பிர­தேச அபி­வி­ருத்தி தொடர்­பா­னது. வடக்கு – கிழக்கு பிர­தே­சங்­களின் அபி­வி­ருத்­திக்­கென அர­சாங்­கத்­தினால் விசே­ட­மாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள செய­ல­ணியின் கூட்­ட­மாகக் கூட அது நடை­பெ­ற­வில்லை. இதில் உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்­சரும் வெளி­வி­வ­கார அமைச்­ச­ருமே கொழும்பிலிருந்து வந்து பங்­கேற்­றி­ருந்­தனர். 

பிர­தேச அபி­வி­ருத்தி விட­யங்­களில் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் முக்­கி­யத்­துவம் பெறு­வதை மறுக்க முடி­யாது. ஆனால் இரா­ணு­வத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகள் தொடர்பான தகவல்களைப் பெறவும் அது தொடர்பில் ஆராய்வதற்காகவும் யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் விஜயம் செய்ததாக வீரசிங்கம் மண்டப நிகழ்வில் கலந்து கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்திருந்தார். அவருடைய வருகை இராணுவத்தின் பிடியில் இன்னும் எஞ்சியுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான நடவடிக்கைகள் சார்ந்ததாகத் தெரியவில்லை. 

அந்த வகையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்வை பெரியளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருத முடியவில்லை. நல்லாட்சி அரசாங்கத்திலும் முன்னைய அரசாங்கத்தைப் போலவே தமிழ் மக்களின் நிலைமை மோசமடைந்து செல்வதை இனிமேலும் தாங்க முடியாது என்ற மனநிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் உண்மையான நிலைமைகள் தொடர்பிலான கருத்துக்களை இந்த நிகழ்வில் வெளியிட்டிருந்தனர். 

இந்தக் கருத்துக்கள் திறந்த மனதோடு நாட்டின் பொதுவான மக்கள் நலன் சார்ந்த நிலையில் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எடுக்கப்படவில்லை. 

மாறாக விடுதலைப்புலிகளுக்கு மீண்டும் உயிர் கொடுப்பதற்கான முயற்சி எடுக்கப்படுகின்றது என்ற இனவாத அரசியல் நோக்கத்திலேயே அதனைப் பலரும் கவனத்தில் எடுத்திருந்தனர். அதேநேரத்தில் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்ட கருத்துக்களும் தமிழ் மக்களுடைய நலன் சார்ந்த நிலையிலான ஆதங்கமும் நாட்டின் உயர்மட்ட அரசியல் களமாகிய பாராளுமன்றத்தில் இன்னும் சிறப்பான முறையில் வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். 

மொத்தத்தில் வீரசிங்கம் மண்டப நிகழ்வில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் இனவாத அரசியலுக்கும் பேரினவாத சுயநல அரசியலுக்கும் தீனிபோடவே உதவியிருக்கின்றது. இது கவலைக்குரியது.  

நாட்டின் தேசிய பாது­காப்­புக்கும் அதன் ஜன­நா­யக இருப்­புக்கும் ஜன­நா­யக அர­சி­ய­லுக்கும் சீனாவின் இந்த நட­வ­டிக்­கையின் மூலம் ஆபத்து நெருங்­கி­யி­ருப்­ப­தாக சர்­வ­தேச இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்­களில் கரு­தப்­ப­டு­கின்­றது. இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான், சிறுவர் விவ­கா­ரத்­துக்குப் பொறுப்­பான இரா­ஜாங்க அமைச்­ச­ராக இருந்­தும்­கூட, பெண்­களின் பாது­காப்பை உத்­த­ர­வா­தப்­ப­டுத்த முடி­யா­மலும் பாலியல் வன்­கொ­டு­மைக்குப் பின்னர் கொல்­லப்­பட்ட ஒரு சிறு­மியின் மர­ணத்­துக்கும் வயோ­திபப் பெண் ஒருவர் மோச­மான முறையில் பாலியல் வன்­கொ­டு­மைக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­மைக்கும் உரிய நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்க முடி­யா­மலும் உள்­ளதே என்ற கையறு நிலையில் ஒரு பெண்­ணாகக் குரல் கொடுத்­த­போது வெளி­யிட்ட கருத்­துக்­களை இன­வாத அர­சி­ய­லாக்கி பயங்­க­ர­வாதம் தலை­தூக்கப் போகின்­றது என்று கூச்­ச­லி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இது ஜன­நா­யக விரோத நிலை­யி­லான வெறும் இன­வாத அர­சியல் கூச்­ச­லாகும்.

விஜ­ய­கலா விவ­கா­ரத்­திலும் பார்க்க மஹிந்த ராஜ­­பக் ஷ சீனா­விடமிருந்து பணம் பெற்ற விவ­காரம், தேசிய நலன் சார்ந்த அதி முக்­கிய பிரச்­சி­னை­யாகும். அதனை மூடி­ம­றைத்து திசை திருப்­பு­வ­தற்­கா­கவே விஜ­ய­கலா விவ­காரம் தென்­னி­லங்­கையைச் சேர்ந்த தீவிர அர­சி­யல்­வா­தி­க­ளினால் முக்­கி­ய­மாகக் கவ­னத்தில் எடுத்து கையா­ளப்­பட்­டி­ருக்­கின்­றது. 

வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நடை­பெற்ற நிகழ்­வா­னது பிர­தேச அபி­வி­ருத்தி தொடர்­பா­னது. வடக்கு – கிழக்கு பிர­தே­சங்­களின் அபி­வி­ருத்­திக்­கென அர­சாங்­கத்­தினால் விசே­ட­மாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள செய­ல­ணியின் கூட்­ட­மாகக் கூட அது நடை­பெ­ற­வில்லை. இதில் உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்­சரும் வெளி­வி­வ­கார அமைச்­ச­ருமே கொழும்பிலிருந்து வந்து பங்­கேற்­றி­ருந்­தனர். பிர­தேச அபி­வி­ருத்தி விட­யங்­களில் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் முக்­கி­யத்­துவம் பெறு­வதை மறுக்க முடி­யாது. ஆனால் இரா­ணு­வத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகள் தொடர்பான தகவல்களைப் பெறவும் அது தொடர்பில் ஆராய்வதற்காகவும் யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் விஜயம் செய்ததாக வீரசிங்கம் மண்டப நிகழ்வில் கலந்து கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்திருந்தார். அவருடைய வருகை இராணுவத்தின் பிடியில் இன்னும் எஞ்சியுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான நடவடிக்கைகள் சார்ந்ததாகத் தெரியவில்லை. 

அந்த வகையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்வை பெரியளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருத முடியவில்லை. நல்லாட்சி அரசாங்கத்திலும் முன்னைய அரசாங்கத்தைப் போலவே தமிழ் மக்களின் நிலைமை மோசமடைந்து செல்வதை இனிமேலும் தாங்க முடியாது என்ற மனநிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் உண்மையான நிலைமைகள் தொடர்பிலான கருத்துக்களை இந்த நிகழ்வில் வெளியிட்டிருந்தனர்.  இந்தக் கருத்துக்கள் திறந்த மனதோடு நாட்டின் பொதுவான மக்கள் நலன் சார்ந்த நிலையில் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எடுக்கப்படவில்லை. 

மாறாக விடுதலைப்புலிகளுக்கு மீண்டும் உயிர் கொடுப்பதற்கான முயற்சி எடுக்கப்படுகின்றது என்ற இனவாத அரசியல் நோக்கத்திலேயே அதனைப் பலரும் கவனத்தில் எடுத்திருந்தனர். அதேநேரத்தில் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்ட கருத்துக்களும் தமிழ் மக்களுடைய நலன் சார்ந்த நிலையிலான ஆதங்கமும் நாட்டின் உயர்மட்ட அரசியல் களமாகிய பாராளுமன்றத்தில் இன்னும் சிறப்பான முறையில் வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். 

மொத்தத்தில் வீரசிங்கம் மண்டப நிகழ்வில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் இனவாத அரசியலுக்கும் பேரினவாத சுயநல அரசியலுக்கும் தீனிபோடவே உதவியிருக்கின்றது. இது கவலைக்குரியது.  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-07-07#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.