Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைந்தா? பிரிந்தா? முடிவு கூட்­ட­மைப்­பி­டம் : சுய­ந­ல­ம் மிக்­க­வர்கள் அடை­யாளம் காணப்­பட வேண்டும் என்­கிறார் முத­ல­மைச்சர் சி.வி.

Featured Replies

இணைந்தா? பிரிந்தா? முடிவு கூட்­ட­மைப்­பி­டம் : சுய­ந­ல­ம் மிக்­க­வர்கள் அடை­யாளம் காணப்­பட வேண்டும் என்­கிறார் முத­ல­மைச்சர் சி.வி.

1254-4908d8a92a76d87383a3434bec084acef7f22518.jpg

 

நேர்­காணல்:- ஆர்.பி

வார­வெ­ளி­யீட்­டுக்கு  விசேட செவ்வி

வடக்கு அர­சி­யலில் தொடர்ந்தும் நீடிக்­கின்­ற­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் பய­ணிப்­பதா? இல்லை வேறு தளத்தில் பய­ணிப்­பதா? என்­பதை கூட்­ட­மைப்பே முடிவு செய்ய வேண்டும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். தமிழ்த் தேசிய அர­சியல் வலு­வான நிலைக்கு வர­வேண்டும் என்றால் அதற்கு சுய­ந­ல­ம்மிக்­க­வர்­களும் வேற்­றா­ருக்கு மேளம் தட்­டு­கின்­ற­வர்­களும் இனங்­கா­ணப்­பட வேண்டும். அத்­துடன் அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து தனிப்­பட்ட சலு­கை­களைப் பெற்றுக் கொண்டு தமிழர் தாயகம் பற்­றியோ சுயாட்சி பற்­றியோ வட,­கி­ழக்கு இணைப்புப் பற்­றியோ பேசு­வது கேலிக் கூத்­தாகும் எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய விசேட செவ்­வியின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அர­சியல் தீர்வை உடன்­காண்­ப­தற்கு  தமிழ்த்­த­லை­மைகள் முன்­வ­ர­வேண்டும்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பு­ட­னான கொள்கை ரீதி­யான முரண்­பா­டுகள், மாற்று அணி ஆரம்­பிப்­பது தொடர்­பாகக் கசியும் தக­வல்கள் மற்றும் சம­கால அர­சியல் நிலை­மைகள் தொடர்­பாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் மின்­னஞ்சல் ஊடாக வீரகேசரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய விசேட செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,

கேள்வி: விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு பின்­ன­ரான கால­கட்­டத்தில் தமிழ் மக்­க­ளுக்­கான தலை­மைத்­து­வத்­தினை ஏற்­றுக்­கொண்­டுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் கட்­ட­மைக்­கப்­பட்ட ஓர் அமைப்பு முறை­மை­யொன்று இல்லை என்று விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றதே அதனை நீங்கள் ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களா?

 பதில்: - ஆம். தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு ஒரு பதிவு பெற்ற கட்சி அல்ல. ஆக­வேதான் நாங்கள் இலங்கைத் தமி­ழ­ர­சுக் ­கட்­சியின் சின்­னத்தில் போட்­டி­யிட்டோம். சில கட்­சிகள் ஒன்று சேர்ந்து தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு என்ற ஒரு அமைப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார்கள். அதனைக் கட்­ட­மைக்­கப்­பட்ட ஓர் அமைப்­பாக மாற்­று­வ­தற்கு சில கட்­சிகள் ஒத்­துக்­கொள்­ள­வில்லை.

 கேள்வி: இத்­த­கை­ய­தொரு நிலைமை தொடர்ந்­ததன் கார­ண­மா­கவே மக்கள் மத்­தியில் அதி­ருப்தி நிலை­மைகள் உக்­கி­ர­மாகி 2015இற்குப் பின்­ன­ரான காலத்தில் தங்­க­ளி­டத்­தி­லான எதிர்­பார்ப்­புகள் அதி­க­ரித்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்­றமை தொடர்பில் உங்­களின் கருத்து என்ன?

 பதில்: - பல கட்­சிகள் கட்­ட­மைப்­பில்­லாமல் சேர்ந்து செயற்­ப­டும்­போது பல­வி­த­மான முரண்­பா­டு­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்டி வரும். இந்த முரண்­பா­டுகள் கொள்கை ரீதி­யா­கவும் ஏற்­ப­டக்­கூடும் தனி­நபர் வேற்­று­மை­க­ளி­னாலும் ஏற்­படக் கூடும். கொள்கை ரீதி­யான முரண்­பாடு தலை­மைத்­து­வத்­துடன் எனக்கு இருப்­பது உண்­மையே. அண்­மைக்­கா­லத்தில் நான் கூறி­வந்த பல விட­யங்கள் யதார்த்­த­மா­ன­வையே என்­பது தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்­பி­னாலும் இன்று ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. ஒரு­வேளை எதிர்­பார்ப்­புக்கள் அதி­க­ரித்­துள்­ள­தாக நீங்கள் கூறு­வது அவை சம்­பந்­த­மாக இருக்­கக்­கூடும்.

 கேள்வி: - மக்­களின் எதிர்­பார்ப்­பு­க­ளையும், உணர்­வு­க­ளையும் புரிந்­து­கொண்டு செயற்­ப­ட­வேண்டும் என்று அடிக்­கடி கூறி­வரும் நீங்கள் அதனை எவ்­வாறு சாத்­தி­யப்­ப­டுத்­தலாம் என்று கூறு­வீர்­களா?

 பதில்: - மக்­களின் எதிர்­பார்ப்­புக்­க­ளையும் உணர்­வு­க­ளையும் புரிந்து கொள்­வது ஒரு புறம் இருக்க அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது இன்­னொரு விட­ய­மாகும். தலை­மைத்­துவம் மக்­களின் எதிர்­பார்ப்­புக்­க­ளையும் உணர்­வு­க­ளையும் புரிந்து கொள்­ளாது இது­வரை நடந்து வந்­த­தையே நான் குறிப்­பிட்­டுளேன். சேர்ந்து செல்லும் எல்­லோரும் மக்­களின் எதிர்­பார்ப்­புக்­க­ளையும் உணர்­வு­க­ளையும் புரிந்து கொண்டால் அவற்றை எவ்­வாறு சாத்­தி­யப்­ப­டுத்­தலாம் என்­பதைப் பேசி முடி­வெ­டுக்­கலாம்.

கேள்வி: - கூட்­ட­மைப்­பினுள் சிறந்­த­தொரு அர­சியல் ரீதி­யான கட்­ட­மைப்­பினை ஏற்­ப­டுத்த முய­லாத பட்­சத்தில் தாங்கள் கட்­ட­மைக்­கப்­பட்ட அமைப்­பொன்றை ஸ்தாபிக்க முயற்­சிகள் செய்வீர்­களா?

 பதில்: - கட்­ட­மைப்­பொன்­றினை ஏற்­ப­டுத்த முய­ல­மாட்டோம் என்று கட்­சியின் தலை­மைத்­துவம் உங்­க­ளுக்குக் கூறி­யுள்­ளதா?

 கேள்வி: - வடக்­கி­லி­ருந்து இரா­ணுவம் வெளி­யேற வேண்டும் என்று கூறி­வ­ரு­கின்­றீர்கள். எனினும் அதற்கு மாறான செயற்­பா­டு­களே தொடர்­கின்­றன. மேலும் வன்­மு­றை­களும் அதி­க­ரித்து சிவில் நிர்­வாக கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்த முடி­யாத சூழல் நில­வு­கின்­ற­மைக்கு முக்­கிய கார­ண­மாக உள்­ளது எது­வென நீங்கள் இனங்­கண்­டுள்­ளீர்கள்?

 பதில்: - தமிழ்க் கட்­சிகள் யாவும் சேர்ந்து வடக்கில் இருந்து இரா­ணுவம் வெளி­யேற வேண்டும் என்று கூற முன்­வந்தால் சர்­வ­தேச சமூகம் எங்கள் கோரிக்­கைக்கு ஆத­ரவு நல்கும். சிவில் நிர்­வாகக் கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்த முடி­யாத சூழல் நில­வு­கின்­ற­மைக்கு அர­சியல் தீர்வு ஒன்று ஏற்­ப­டா­மையே காரணம். வட,கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு சமஷ்டி முறை­யி­லான தீர்வு தரப்­பட்டு, இரா­ணு­வத்­தினர் வெளி­யேற்­றப்­பட்டு, பொலிஸ் அதி­கா­ரங்கள் எங்­க­ளுக்கு வழங்­கப்­பட்டால் வன்­முறைச் சம்­ப­வங்­க­ளுக்கு ஒரு முற்­றுப்­புள்ளி வைக்க எம்மால் முடியும். எப்­ப­டி­யா­வது இங்கு தொடர்ந்­தி­ருக்க வேண்டும் என்ற எண்­ணத்­துடன் இருக்கும் படை­யி­னரை வைத்துக் கொண்டு எம்மால் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் அதி­கா­ர­மில்­லாமல் நிலை நாட்ட முடி­யாது.

 கேள்வி: - இத்­த­கைய நிலையில் காணி, பொலிஸ் அதி­கா­ரங்­களைப் பெற்­றுக்­கொள்­வதால் எத்­த­கைய நன்­மைகள் விளை­யப்­போ­கின்­றன?

 பதில்: - காணி, பொலிஸ் அதி­கா­ரங்­கள்தான் ஒரு பாரம்­ப­ரிய மக்கள் கூட்­டத்­திற்கு முக்­கி­ய­மா­னவை. மக்­க­ளிடம் இருந்து காணி பிரிக்­கப்­பட்டால் அவர்­களின் அடை­யா­ளமே அழிந்­து­விடும். ஆகவே எமது காணி மீது எமக்கு அதி­காரம் இருக்க வேண்டும்.

 பொலிஸ் அதி­கா­ரங்கள் பிற மக்கட் கூட்­டத்தின் கையில் இருந்தால் எம்மால் சட்ட ஒழுக்­கத்தை உத்­த­ர­வா­தப்­ப­டுத்த முடி­யாது. நாம் அவர்கள் கட்­டுப்­பாட்­டுக்குள் என்­றென்றும் இருக்க வேண்டி வரும். முழு­மை­யான காணி, பொலிஸ் அதி­கா­ரங்கள் இல்­லை­யென்றால் இன்­றி­ருக்கும் நிலையே தொடரும். வன்­மு­றைகள் தொடரும். கள்ளக் கடத்தல் தொடரும். சிவில் சமூகக் கட்­டுப்­பாடு குன்­றி­விடும். எமது வாழ்க்கை முறை பிறழ்­வு­ பட்டு சிதை­படும். நிலை­மையைச் சீர்­தி­ருத்த வேண்­டு­மென்றால் ஒரு சமஷ்டி அலகின் கீழ் வட,கிழக்கை ஒன்­றி­ணைத்து மற்ற உரி­மை­க­ளுடன் எமக்கு காணி, பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்­கப்­படல் வேண்டும்.

 கொழும்பு வேறு வட,கிழக்கு வேறு. கொழும்பு பல்­லின நகரம். ஆனால் வடக்கு, கிழக்கில் மக்கள் ஓர் இனம். பொலிஸ் இன்­னொரு இன­மாக இருக்கும் போது மக்­களின் எதிர்­பார்ப்­புக்கள் நிறை­வேற்­றப்­ப­டு­வது கேள்விக் குறி­யாகி விடும்.

கேள்வி: - 13ஆவது திருத்­தச்­சட்­டத்தின் பிர­காரம் காணி, பொலிஸ் அதி­கா­ரங்கள் தவிர்ந்து 35அதி­கா­ரங்­களைப் பிர­யோ­கிக்கக் கூடிய சூழல் இருந்தும் இறுதி ஆண்டில் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்கும் வட­மா­காண சபையால் வினைத்­தி­ற­னாக செயற்­பட்­டி­ருக்க முடி­ய­வில்லை என்று குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றதே?

 பதில்: - 1987ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 28ஆம் திகதி எமது தமிழ்த் தலை­வர்கள் ரஜீவ் காந்­திக்குக் கடிதம் எழுதி 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் குறை­பா­டு­களை விளக்­கி­யி­ருந்­தார்கள். அன்­றி­ருந்த குறை­பா­டு­க­ளுக்கு மேல­தி­க­மாக எமது அதி­கா­ரங்­களைப் பறிக்கும் மேல­திக நட­வ­டிக்­கைகள் 1992இல் எடுக்­கப்­பட்டு தற்­போது எமது நிலை பல­மற்­ற­தாக இருக்­கின்­றது. மிக அத்­தி­யா­வ­சி­ய­மான அதி­கா­ரங்­களைப் பிர­யோ­கிக்­கக்­கூ­டிய சூழல் இருக்­கின்­றதா என்­பதை அண்­மைய மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றத் தீர்ப்பில் இருந்து நீங்கள் புரிந்து கொள்­ளலாம். பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் முன்னர் கூறி­யது போன்று ஒரு கையால் அதி­கா­ரங்­களைத் தந்து மறு­கையால் அவற்றை அர­சாங்கம் திருப்பி எடுத்துக் கொண்­டுள்ள நிலையே இன்­றைய 13ஆவது திருத்­தச்­சட்­டத்தின் ஏற்­பா­டு­களின் நிலை. எமக்கு அதி­கா­ரங்கள் இருக்­கின்­றன. ஆனால் இல்லை!

கேள்வி: - உங்­களின் செயற்­பா­டுகள் அதி­க­ளவில் அர­சியல் ரீதி­யாக அமைந்­தி­ருந்­ததன் கார­ணத்தால் தான் வடக்கு அபி­வி­ருத்­தியில் தங்­களின் பங்­க­ளிப்­பினை அதி­க­மாக மேற்­கொள்­ள­மு­டி­யாது போயுள்­ள­தோடு வடக்கு மாகாண சபை­யினை வினைத்­திறன் மிக்­க­தாக நகர்த்திச் செல்­ல­மு­டி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்­றதே இது உண்­மையா?

 பதில்:- வடக்கு அபி­வி­ருத்தி என்று நீங்கள் எதனைக் குறிப்­பி­டு­கின்­றீர்கள்? வெளியில் இருந்து முத­லீ­டு­களைக் கொண்­டு­வந்தால் வடக்கு அபி­வி­ருத்தி அடைந்து விடும் என்று எண்­ணு­கின்­றீர்­களா? அப்­ப­டி­யானால் யார் அந்த முத­லீ­டு­களைக் கொண்­டு­வர வேண்டும்? எமது அர­சியல் பிரச்­ச­ினைகள் ஒரு தீர்­வுக்கு வராமல் வெளியார் முத­லீ­டு­களைக் கொண்­டு வந்தால் எமது வளங்கள் சூறை­யா­டப்­படும். பல­வி­தங்­களில் மத்­திய அர­சாங்கம் தொடர்ந்து அத­னு­டைய செல்­வாக்கை இங்கு பிர­யோ­கிக்கும். தற்­போது நடப்­பது போன்று சிங்­களக் குடி­யேற்­றங்கள் இன்னும் கூடிய மும்­மு­ரத்­துடன் நடை­பெ­று­வன. எமது கடல் வளங்­களை வெளியார் வந்து எடுத்துச் செல்­வார்கள். இவற்­றிற்கு அனு­ச­ர­ணை­யாக தற்­போது இங்கு பெரு­வா­ரி­யாகக் குடி­கொண்­டி­ருக்கும் இரா­ணு­வத்­தினர் நடந்து கொள்­வார்கள்.

 எனது செயற்­பா­டுகள் அர­சியல் ரீதி­யா­னவை என்று நீங்கள் கூறும் போது அதில் உண்மை இருக்­கத்தான் செய்­கின்­றது. அர­சி­யல்­தீர்வை எட்­டாமல் வெளி­யார்­களின் முத­லீ­டு­க­ளையும் உள்­நு­ழை­வையும் உத்­த­ர­வா­தப்­ப­டுத்­து­வது எம்மை இருந்த இடந்­தெ­ரி­யாமல் ஆக்­கி­விடும்.

அர­சாங்கம் அர­சியல் தீர்வை ஏற்­ப­டுத்­தாமல் முத­லீ­டு­களைச் செய்­யவும் சமா­தானத்தை ஏற்­ப­டுத்­தவும் பார்க்­கின்­றார்கள். இது காலக்­கி­ர­மத்தில் வட,கிழக்கை கப­ளீ­கரம் செய்யும் வேலை. தென்­ஆ­பி­ரிக்­காவில் அர­சியல் தீர்வு கண்ட பின்­னரே உண்­மைக்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது.

 ஆனால் அதற்­காக நாங்கள் பொரு­ளா­தார ரீதி­யாக எது­வுமே செய்­ய­வில்லை என்று அர்த்­த­மில்லை. நிர்­வாக ரீதி­யாக எதுவும் செய்­ய­வில்லை என்று அர்த்­த­மில்லை. சமூக ரீதி­யாக எமது தமிழ்ச் சமு­தா­யத்தை ஒன்­றி­ணைக்­கவும் வறு­மையில் வாடு­வோ­ருக்கு நன்­மை­களைப் பெற்­றுத்­த­ரவும் சமூகக் குறை­பா­டு­களை நீக்­கவும் பல நட­வ­டிக்­கை­களை எடுத்து வந்­துள்ளோம். நிர்­வாக ரீதி­யாக அண்­மையில் முழு இலங்­கை­யிலும் 800க்கும் மேற்­பட்ட திணைக்­க­ளங்கள், அமைச்­சுக்கள், அமைப்­புக்கள் ஆகி­ய­வற்றின் நிதி நிர்­வாகம் சம்­பந்­த­மான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் பரி­சீ­லித்துப் பார்த்­ததில் வட­மா­காண முத­ல­மைச்­சரின் அமைச்சே முத­லிடம் பெற்­றது.

 ஆனால் மத்­திய அர­சாங்கம் எமது முன்­னேற்­றத்தைப் பல விதங்­க­ளிலும் வெளிப்­ப­டை­யா­கவும் மறை­மு­க­மா­கவும் தடை செய்­கின்­றது. உதா­ர­ணத்­திற்கு வட­மா­காண முத­ல­மைச்­சரின் நிதியம் சம்­பந்­த­மான சட்ட வரைவு நாலரை வரு­டங்­க­ளுக்குப் பின்னர் கூட அர­சாங்­கத்தால் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

இதற்குக் காரணம் புலம்­பெ­யர்ந்த தமி­ழர்கள் வட­மா­கா­ணத்தில் முத­லி­டு­வதை அர­சாங்கம் விரும்­ப­வில்லை. சிங்­கள ஆதிக்கம் வட­மா­கா­ணத்தில் நிலைத்து நிற்க தெற்கில் இருந்து முத­லீ­டுகள் வர­வேண்டும் என்றே அர­சாங்கம் விரும்­பு­கின்­றது.

அண்­மையில் மத்­திய கிழக்குக் கம்­பனி ஒன்று ஏற்­று­ம­திக்­காக மரக்­க­றி­க­ளையும் பழங்­க­ளையும் உற்­பத்தி செய்ய காணி கேட்­டி­ருந்­தது. அதற்­கான காணியை தெரிந்­தெ­டுத்து உரிய நட­வ­டிக்­கைகள் எடுத்து தேவை­யான அனு­ம­திகள் பெற்று இறு­தி­யாக மத்­திய அர­சாங்­கத்தின் கீழ் செயற்­படும் காணி ஆணை­யாளர் நாய­கத்­திடம் அனு­மதி கேட்ட போது குறித்த காணியின் ஒரு பகுதி வன­ப­ரி­பா­லனத் திணைக்­க­ளத்­திற்கு உரி­யது என்று கூறி அனு­மதி இது­வ­ரையில் மறுக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஆகவே நாங்கள் அர­சியல் ரீதி­யா­கவும், சமூக ரீதி­யா­கவும், பொரு­ளா­தார ரீதி­யா­கவும், நிர்­வாக ரீதி­யா­கவும் தடைகள் மத்­தி­யிலும் வினைத்­தி­ற­னுடன் நடந்து வந்­தி­ருக்­கின்றோம் என்­பதை உங்­க­ளுக்குக் கூற விரும்­பு­கின்றேன்.

 கேள்வி: - இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சிக்கு கடும் அதி­ருப்தி ஏற்­ப­டு­வ­தற்கு ஜனா­தி­பதி, பாரா­ளு­மன்றம், உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் ஆகி­ய­வற்­றுக்­கான தேர்­தல்­களின் போது தங்­களின் கருத்­துக்கள் கார­ண­மாக அமைந்­ததா இல்லை வேறு விட­யங்­களும் காணப்­ப­டு­கின்­ற­னவா?

 பதில்: - தமி­ழ­ர­சுக்­கட்­சிக்கு கடும் அதி­ருப்தி ஏற்­பட்­டது சம்­பந்­த­மாகக் கூறி­யுள்­ளீர்கள். மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அதி­ருப்­தியை மறந்­து­விட்­டீர்கள். கட்சி முதன்­மை­ய­டைந்தால் மக்கள் புறக்­க­ணிக்­கப்­ப­டுவர். அதை மறந்து விடக் கூடாது. குறித்த தேர்­தல்­களின் போது தமி­ழ­ர­சுக்­கட்சி சார்ந்த பலரின் நட­வ­டிக்­கைகள் அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட்ட கார­ணத்­தி­னா­லே­யேதான் மக்கள் தமது அதி­ருப்­தியை வெளிக் காட்ட வேண்டி வந்­தது. இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யினர் தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் குறிப்­பிட்­ட­வாறு செயல்­படத் தொடங்­கினால் மக்கள் அதி­ருப்தி கொள்ளத் தேவை­யேற்­ப­டாது. எனது கருத்­துக்கள் மக்­களின் கருத்­துக்­களை பிர­தி­ப­லித்­த­னவே அன்றி நானாக எந்­தக்­கட்­சிக்கும் சார்­பா­கவோ எதி­ரா­கவோ நடந்து கொள்­ள­வில்லை.

கேள்வி: - வடக்கு அர­சி­யலில் தொடர்ந்தும் நீடிப்­பீர்கள் என்று தாங்கள் உறு­தி­படத் தெரி­வித்­துள்ள நிலையில் அது கூட்­ட­மைப்­புடன் இணைந்த பய­ண­மாக அமை­யுமா? இல்லை வேறு தள­மாக இருக்­குமா?

 பதில்: - அதனைக் கூட்­ட­மைப்பு தான் முடி­வு­செய்ய வேண்டும்.

கேள்வி - முற்­று­மு­ழு­தாக வடக்­கினை மையப்­ப­டுத்தி அர­சியல் நகர்­வு­களைச் செய்­து­வ­ரு­கின்ற நீங்கள் மாற்று அணி­யொன்றை உரு­வாக்­கு­கின்­ற­போது வடக்கின் நிலை­மை­க­ளி­லி­ருந்து முற்­றிலும் மாறு­பட்ட கிழக்கு மாகாணம் குறித்த நிலைப்­பா­டுகள் என்­ன­வா­க­வுள்­ளன?

 பதில்: - தமிழ் மக்கள் பேர­வையில் வடக்கும் கிழக்கும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. கிழக்கின் பிரச்­ச­ினைகள் வேறு வடக்கின் பிரச்­சி­னைகள் வேறு. அவற்றை நாம் புரிந்­து­கொண்­டுள்ளோம். அர­சியல் தலை­மைகள் யாராக இருந்­தாலும் இவற்றைப் புரிந்து கொண்டு நட­வ­டிக்­கைகள் எடுக்க வேண்­டி­யி­ருக்கும்.

கேள்வி: - கொள்­கை­ரீ­தி­யாக முரண்­பா­டுகள் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சி­யுடன் காணப்­ப­டு­கின்­றன எனப் பகி­ரங்­க­மா­கவே நீங்கள் பல­த­ட­வைகள் குறிப்­பிட்­டுள்ள அதே­நேரம் சம்­பந்­த­னுக்கு எதி­ரான நிலைப்­பா­டொன்­றுக்கு செல்­ல­மாட்டேன் என்ற தொனிப்­பொ­ரு­ளிலும் கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றீர்­களே? இது ஒன்­றுக்­கொன்று முரண்­பா­டாக இல்­லையா?

பதில்: - சம்­பந்தனை மீறிய சிலர் இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பாரம்­ப­ரிய கொள்­கை­க­ளுக்குக் குந்­தகம் விளை­விக்கும் விதத்தில் நடந்து கொள்ளும் போது அவற்றை ஏற்­றுக்­கொள்ளச் சொல்­லு­கின்­றீர்­களா? சம்­பந்தன் அவ்­வா­றான முரண்­பா­டான நிலைப்­பாட்டில் இருந்து கொண்டு எம்­முடன் பேசா­த­தா­லேயே அவ­ருடன் ஒத்­துப்­போ­கக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. அத்­துடன் அவர் ஒரு பழுத்த அர­சி­யல்­வாதி. அனு­பவம் தலை­மைத்­து­வத்­திற்கு அதி­முக்­கியம்.

 கேள்வி: - தாங்கள் மாற்று அணி­யொன்றை உரு­வாக்­கினால் தமி­ழர்­களின் வாக்­குகள் சிதைந்து தமிழ்த் தேசிய அர­சியல் வலு­வற்ற நிலைக்குச் செல்லும் ஆபத்து ஏற்­ப­டு­மல்­லவா?

 பதில்: - ஒரு கணவன் மனை­வியை தொடர்ந்து அடித்துத் துன்­பு­றுத்­து­கின்றான். குடும்­பத்தில் பிரச்­சி­னைகள் இல்லை என்று காட்­டு­வ­தற்­காக அந்தப் பெண் வாயை மூடிக்­கொண்­டி­ருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்­லு­கின்­றீர்கள். அது அவ­ளுக்குத் தான் அதிக பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்தும். திட­மான கொள்­கைகள் இருந்தால் தமிழ்த்­தே­சிய அர­சியல் வலு­வான நிலைக்கு வர­மு­டியும். அதற்கு, சுய­ந­ல­மி­களும் வேற்­றா­ருக்கு மேளம் தட்­டு­ப­வர்­களும் அடை­யாளம் காணப்­பட்டு கட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

 கேள்வி: - வட­மா­காண சபைக்­கான தேர்­தலில் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கு­வ­தற்கு தங்­க­ளி­டத்தில் நிபந்­த­னைகள் உள்­ள­னவா? அவை யாவை?

பதில்: - அது­பற்றி நான் இன்­னமும் சிந்­திக்­க­வில்லை. இருக்கும் வேலை­களைத் திறம்­படச் செய்து வரு­கின்றேன்.

கேள்வி: - புதிய அரசியலமைப்புக்கான பணிகள் நெருக்கடியில் உள்ளதோடு, பொறுப்புக்கூறல், சர்வதேச விசாரணை போன்றனவும் கானல்நீராகும் நிலையில் உரிமைக்காகவும், நீதிக்காவும் காத்திருக்கும் தரப்பின் எதிர்காலம் என்ன?

பதில்: - வெறுமனே உரிமைக்காகவும் நீதிக்காகவும் போராடுவதில் பயன் இல்லை. தரப்பினர் மத்தியில் புரிந்துணர்வு ஏற்படுவதற்கு ஏற்றவாறு நாங்கள் எமது போராட்டங்களை விரிவுபடுத்த வேண்டும். இதில் சர்வதேச சமூகமும் ஈடுபடுத்தப்பட வேண்டும். புலம்பெயர் எமது உறவுகளும் பயன்படுத்தப்பட வேண்டும். உரிமைகளை இதோ பெற்றுக் கொடுக்கின்றோம் என்று மார்தட்டியவர்கள் தான் இன்று கானல் நீராகுந் தன்மையைக் கண்டு கொதித்திருக்கின்றனர். எழுபது வருட வரலாற்றை மறந்து அவர்கள் எதிர்பார்த்தவை கானல் நீராகியதில் வியப்பொன்றுமில்லை.

கேள்வி: - இவற்றைப் பெற்றுக்கொள் வதற்கு தங்களிடத்தில் உள்ள அணுகு முறை ரீதியான திட்டங்கள் எவை?

பதில்: - நான் இன்னமும் ஒரு கட்சியின் தலைவராக மாறவில்லை. தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம். கட்சி அல்ல. அதில் இணைத்தலைவராக இருக்கின்றேன். ஆனால் கட்சிகளின் தலைமைகளுக்கு நான் கூறுவது அரசியல் தீர்வை உடனேயே பெற முயற்சியுங்கள். மற்றவை தற்போது முக்கியமில்லை. பொருளாதார ரீதியாக நாங்கள் நாளையும் முன்னேறலாம். எமது உரிமைகள் தராது விட்டு, பொருளாதார ரீதியாக மற்றவர்களின் தயவில் முன்னேற்றம் கண்டால் எமது அரசியல் அபிலாஷைகள் ஏட்டுச் சுரைக்காயாக மாறிவிடும். கரவாக அரசாங்கத்திடம் இருந்து தனிப்பட்ட சலுகைகளைப் பெற்றுக் கொண்டு தமிழர் தாயகம் பற்றியோ சுயாட்சி பற்றியோ வடகிழக்கு இணைப்புப் பற்றியோ பேசுவது கேலிக் கூத்தாகும்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-07-08#page-1

  • கருத்துக்கள உறவுகள்

30_EAA71_B-0_EAD-4_A7_E-_A96_C-1_EA27518

Edited by Kavi arunasalam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.