Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு!

Featured Replies

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு!

 

 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்காக வீதியில் தவிக்கும் மக்களின் விடிவுக்காக அண்மைக்காலமாக போராடிவந்த கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு செட்டியார் தெருவில் வைத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நவோதயம் மக்கள் முன்னணியின் தலைவராகவும் விளங்கும் இவர் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்ததுடன், ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளுக்கும் ஆதரவு கரம் நீட்டியிருந்தார்.

அது மாத்திரமின்றி இறுதி யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு உதவி செய்யும் வகையில் அமைப்பொன்றை நிறுவி, அதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து விபரங்களை திரட்டும் பணியில் அண்மைக்காலமாக ஈடுபட்டுவந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/?p=700977-கொழும்பு-மாநகர-சபை-உறுப்பினர்-துப்பாக்கிச்சூட்டில்-உயிரிழப்பு

35671616_2167535110144827_68672521404741

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் கல்வி செலவை பொறுப்பேற்றிருந்த கொழும்பு நகரசபை உறுப்பினர் சுட்டுக்கொலை!

July 9, 2018
 
35671657_200073624157748_473461256087404

இன்று காலை 7.45 மணியளவில் புறக்கோட்டை – ஹெட்டிவீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் மாநகர சபை உறுப்பினர் கிருஸ்ணபிள்ளை கிருபானந்தன் உயிரிழந்துள்ளார்.

நவோதயா மக்கள் முன்னணியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அரசியல் கைதிகள் விடயத்தில் அண்மைக்காலத்தில் அதிக அக்கறை காண்பித்ததுடன், ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை அண்மையில் கொழும்பிற்கு அழைத்து ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி, அந்த பிள்ளைகளின் கல்வி செலவை தானே ஏற்பதாக அறிவித்திருந்தது குறிப்பித்தக்கது.

 

http://www.pagetamil.com/10905/

  • தொடங்கியவர்

கொழும்பில் பெரும் பதற்றம்- அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு- மாநகர சபையின் தமிழ் உறுப்பினர் சுட்டுக் கொலை-!!

 

 

Capture-23-750x375.jpg

 
 
 

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

செட்டியார் தெரு – ஆண்டிவால் வீதிக்கு திரும்பும் சந்திக்கு அருகிலுள்ள பழக்கடை ஒன்றினுள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில், கொழும்பு மாநகர சபையின் (சுயேட்சைக் குழு) உறுப்பினரான ‘கிருஷ்ணா’ என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

 

மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர், பழக்கடையில் இருந்த மாநகர சபை உறுப்பினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை கொழும்பு ஜம்­பட்ட வீதி­யில் நேற்று இரவு 9 மணி­ய­ள­வில் இடம்­பெற்ற துப்­பாக்­கிச் சூட்டுச் சம்­ப­வத்­தில் இரு­வர் உயி­ரி­ழந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பெண் ஒரு­வர் உள்­ளிட்ட இரு­வரே உயி­ரி­ழந்­துள்­ள­னர். இரு­வர் படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் வைத்­தி­ய­சா­லை­யில் தீவிர சிகிச்சை பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்தச் சம்­ப­வங்களை அடுத்து கொழும்பில் பெரும் பதற்­றம் ஏற்­பட்­டுள்­ளது.

http://newuthayan.com/story/10/கொழும்பில்-பெரும்-பதற்றம்-அடுத்தடுத்து-துப்பாக்கிச்-சூடு-மாநகர-சபையின்-தமிழ்-உறுப்பினர்-சுட்டுக்-கொலை.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

நவோதயம் மக்கள் முன்னணியின் தலைவரும் மாநகரசபை உறுப்பினருமாக கிருஸ்ணா சுட்டுக்கொலை…

July 9, 2018

1 Min Read

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

Lகொழும்பு புறக்கோட்டை – ஆதிவால் வீதியில், இன்று (09) காலை 7.45 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தப் பகுதியில் உள்ள பழக்கடை ஒன்றிற்குள் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோகத்தில் 40 வயதுடைய கிருஷ்ணப்பிள்ளை கிருபாணந்தன் எனும் கிருஷ்ணா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கொல்லப்பட்டவர் நபர் கொழும்பு மாநகர சபையின் சுயாதீன கட்சி உறுப்பினர் ஒருவர் எனவும், காவற்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்திற்கு உள்ளான இவரை, உடனடியாகவே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். புறக்கோட்டை காவற்துறையினர் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Krishna.jpg?resize=800%2C445

இதேவேளை நவோதயம் மக்கள் முன்னணியின் தலைவராக செயற்பட்டு வந்த கொழும்பு மாநகர சபை உறுப்பினரான கிருஷ்ணா எனப்படும் கிருஷ்ணப்பிள்ளை கிருபாணந்தன், . காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்காக, அண்மைக்காலமாக போராடிவந்தவர். குறிப்பாக இவர் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்ததுடன், ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளுக்கும் உதவிகளை மேற்கொண்டு வந்தார்.

அத்துடன் இறுதி யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு உதவி செய்யும் வகையில், காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து விபரங்களை திரட்டும் பணியில் அண்மைக்காலமாக ஈடுபட்டுவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

http://globaltamilnews.net/2018/86930/

 

  • தொடங்கியவர்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா கொலை- பின்னணியில் அரசியல்!!

 

36795520_199072560811460_526035736438872

 

நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான எஸ்.கே.கிருஷ்ணாவின் கொலையில் அரசியல் பின்னணிகள் இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிருஷ்ணா செட்டித்தெருவில் உள்ள அவரது அலுவலகத்துக்கு எதிரில் இன்று காலை 7.20 அளவில் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

39 வயதான கிருஷ்ணா சமூக சேவையில் ஈடுபட்டு வந்ததுடன் கொழும்பு, வடக்கில் தமிழர்கள் உட்பட அனைத்து இன மக்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்று வந்தார்.

 

இவருக்கு இருந்து வரும் மக்கள் ஆதரவு காரணமாக கடந்த உள்ளூராட்சி சபைத் தேரதலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு கொழும்பு மாநகரசபைக்கும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

கிருஷ்ணா என்ற இந்த இளம் அரசியல் தலைவரின் அசுர வளர்ச்சியானது ஏனைய சிறுபான்மை கட்சிகளுக்குச் சவலாக இருந்து வந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர் கூறுகின்றனர்.

மக்களுடன் சர்வசாதாரணமாக நெருங்கி பழகி வரும் கிருஷ்ணா சுட்டுக்கொல்லப்பட்டமை பிரதேச மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு அரசியல் விரோதம் காரணமாக இருக்கலாம் என அவருக்கு நெருக்கமான தரப்புகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளில் கொலைக்கான காரணங்கள் வெளியாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

http://newuthayan.com/story/16/கொழும்பு-மாநகர-சபை-உறுப்பினர்-கிருஷ்ணா-கொலை-பின்னணியில்-அரசியல்.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சுட்டுக்கொல்லப்பட்ட கிருஷ்ணா கஞ்சா போதைப்பொருள் வழக்கில் பிணையில் விடுதலையானவர்?

 

Krisna.png?resize=580%2C321

கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான கிருஷ்ண பிள்ளை கிருபானந்தனின் மரணம் போதைப்பொருள் வியாபரத்துடன் தொடர்புடையதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து கருத்து தெரிவித்த அவர்,  24 மணிநேரத்துக்குள் இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் புறக்கோட்டை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட செட்டியார்தெருவில் பழக்கடையொன்றுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான 40 வயதுடைய கிருஷ்ண என்பவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இவர் மீது கஞ்சா போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் இரண்டு வழக்குகள் காணப்படுகின்றன. இதில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்ட இவர் தற்போது பிணையிலிருந்த நேரத்திலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

இவரது மரணமானது போதைப்பொருள் வியாபாரத்தை மையப்படுத்தியே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகின்றது.

எவ்வாரெனினும் மேல்மாகாண சிரேஷ்ட காவற்துறை மா அதிபரின் வழிக்காட்டலின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவு காவற்துறை பிரிவாலும், புறக்கோட்டை காவற்துறை  நிலைய பொறுப்பதிகாரியின் கீழான குழுவொன்றும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

http://globaltamilnews.net/2018/87026/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.