Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயார்.... கோத்­த­பாய ராஜ­பக்ஷ

Featured Replies

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயார்.... கோத்­த­பாய ராஜ­பக்ஷ 

 

 
 
 

முன்னைய மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தில் பாது­காப்பு செய­லா­ள­ராக நிர்­வாக சேவையில் ஈடு­பட்­டி­ருந்த  கோத்­த­பாய ராஜ­பக்ஷ  மஹிந்த  தரப்பில் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டுவார் என்ற கருத்­துக்கள் பல­மாக ஒலித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. அவரும் அதற்­கான தயார்­ப­டுத்­தல்­களில் ஈடு­பட்டு வரு­வ­தா­கவே தெரி­கி­றது. இந்­நி­லையில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிடப் போகின்­றா­ராயின் அவ­ரிடம் தமிழ் பேசும் மக்­களின்  சார்பில் கேட்­க­ப்படவேண்­டிய பல கேள்­விகள் உள்­ளன.  அதன்­படி இவ்­வாரம்  கோத்­த­பாய ராஜ­பக் ஷவிடம் பல்­வேறு   கேள்­வி­க­ளுக்­கான பதிலைப் பெறு­வ­தற்­காக அவரை சந்­தித்தேன்.எனக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த   குறிப்­பிட்ட கால­நே­ரத்தில் முடி­யு­மா­ன­வரை  தமிழ் பேசும் மக்­களின் சார்பில் அவ­ரிடம்  கேள்­வி­களை எழுப்­பினேன்.  அவர் எனது   கேள்­வி­க­ளுக்கு எவ்­வாறு பதி­ல­ளித்தார் என்­பதைப் பார்ப்போம்.

gotha2.jpg

கேள்வி : இப்­போது என்ன செய்­து­கொண்­டி­ருக்­கின்­றீர்கள்?

பதில் : நான் இந்­நாட்­களில்  வியத்­மக  அமைப்­புடன்   இணைந்து  செயற்­பட்டு வரு­கின்றேன்.தொழில்சார்  நிபு­ணர்­களே இந்த அமைப்பில் இருக்­கின்­றனர்.வர்த்­த­கர்கள்,  தொழில்­நி­பு­ணர்கள் எனப் பல்­வேறு தரப்­பினர் இந்த அமைப்பில் உள்­ளனர்.நாட்டின்  தற்­போ­தைய பிரச்­சி­னைகள் தொடர்­பி­லேயே  இத­னூ­டாக   ஆராய்ந்து வரு­கின்றோம்.அத்­துடன் பல்­வேறு தரப்­பினர் வந்து எம்மை சந்­தித்து பேசு­கின்­றனர்.  

கேள்வி : ஏன் இந்த அமைப்பின் ஊடாக   நீங்கள் செயற்­பட்டு வரு­கின்­றீர்கள்?

பதில் : என்னை சந்­திக்க வரு­கின்ற  தொழில்சார் நிபு­ணர்கள் ஒரு­வி­ட­யத்தை கூறு­கின்­றனர்.அதா­வது  தற்­போது நாட்டின் முன்­னேற்­றத்­துக்­காக தொழில்சார் நிபு­ணர்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டாமல் இருப்­ப­தாக   அவர்கள் என்­னிடம் குறை­கூ­றினர்.நாட்டின் நிர்­வா­கத்தில் அவர்கள்   பங்­கெ­டுக்­காமல் இருக்­கின்­றனர்.பயன்­ப­டுத்­தப்­ப­டாமல் இருக்­கின்­றனர் என்று கூறலாம். அதனால் இந்த அமைப்பை  ஆரம்பித்துச் செயற்­பட்­டு­வ­ரு­கின்றோம்.

கேள்வி : எவ்­வா­றான பிரச்­சி­னை­களை அடை­யாளம் கண்­டுள்­ளீர்கள்?

பதில் : பொது­வாக   கல்­விப்­பி­ரச்­சினை இன்று பாரிய  பிரச்­சி­னை­யாக இருக்­கின்­றது. அனைத்துப் பிரச்­சி­னைகளுக்கும் மூலா­தா­ர­மாக கல்­விப்­பி­ரச்­சி­னையே காணப்­ப­டு­கின்­றது.பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப, தொழில்­வாய்ப்பை  உரு­வாக்க, வறு­மையைப் போக்க, கல்­வியே அவ­சி­ய­மாகும்.  ஆனால் இன்று கல்­வித்­து­றையில் பாரிய நெருக்­க­டிகள் காணப்­ப­டு­கின்­றன.அதற்கு மேல­தி­க­மாக பொரு­ளா­தாரப் பிரச்­சி­னையும் காணப்­ப­டு­கின்­றது.பொரு­ளா­தார கட்­ட­மைப்பில் பல குறை­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன.ஆசி­யா­வுக்­கான பய­ணத்­துடன் எமது பொரு­ளா­தாரம் நக­ராமல் இருக்­கி­றது. 

கேள்வி : யுத்­தத்தை முடித்­ததில்  உங்­க­ளு­டைய மிகப்­பெ­ரிய பங்­க­ளிப்பு இருந்­த­தாக கரு­தப்­ப­டு­கின்­றது.அந்த வகையில் தற்­போ­தைய  நாட்டின் நிலை­மையை எவ்­வாறு  பார்க்­கின்­றீர்கள்?

பதில் : 2005ஆம் ஆண்டு  மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக வந்­ததும் யுத்­தமே  பாரிய சவா­லாக இருந்­தது. அது மஹிந்த ராஜ­பக் ஷ உரு­வாக்­கி­ய­தல்ல.  அது மஹிந்­த­வுக்கு கிடைத்­தது.   நாடு முன்­னே­று­வதில்  காணப்­பட்ட   மிகப்­பெ­ரிய தடை­யா­கவே  பயங்­க­ர­வாதம் காணப்­பட்­டது.மக்கள் அச்­சத்­துடன்  வாழ்ந்­தனர்.எனவே இந்த நிலை­மை­யா­னது அன்று  மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு பாரிய சவா­லாக காணப்­பட்­டது.எனவே இந்த நிலை­மையை முடிக்­க­வேண்டும் என்று நாம் கரு­தினோம்.அந்த சந்­தர்ப்­பத்­திலும் கூட நாம் வர­லாற்­றி­லி­ருந்து பல பாடங்­களை படித்­தி­ருந்தோம்.சமா­தானப் பேச்­சு­வார்த்­தைகள் தோல்­வி­ய­டைந்த  அனு­ப­வமும் எமக்கு இருக்­கி­றது. 

யுத்த நட­வ­டிக்­கைகள்   பின்­ன­டைவை சந்­தித்த  அனு­ப­வமும் எமக்கு இருந்­தது.   எனவே யுத்­தத்தை  முடிக்­க­வேண்­டிய தேவை மஹிந்­த­வுக்கு ஏற்­பட்­டது. ஆனால் அவர் முதலில் அந்தத் தெரிவை செய்­ய­வில்லை. கடந்­த­கா­லத்தில் கசப்­பான அனு­ப­வங்கள் ஏற்­பட்டும்  கூட முதலில் பேச்­சு­வார்த்தை மூலமே பிரச்­சி­னையை முடிக்க எத்­த­னித்தார்.   நான் பேச்­சு­வார்த்­தைக்கு தயார்  பேச வாருங்கள் என்று  மஹிந்த ராஜ­பக் ஷ பகி­ரங்­க­மாகவே கூறினார்.ஆனால் ஜெனி­வாவில் நடை­பெற்ற முதல் பேச்­சு­வார்த்­தையே  தோல்­வியில் முடி­வ­டைந்­தது.ஆனால் அப்­போது கூட  பிர­பா­கரன் பேச்­சு­வார்த்தை மூலம்   பிரச்­சி­னையைத் தீர்க்கும் நிலைப்­பாட்டில் இருக்­க­வில்லை. 

கேள்வி : பிர­பா­க­ர­னுக்கு பேச்­சு­வார் த்தை மூலம்  பிரச்­சி­னையை தீர்க்கும் எண்ணம்  இருக்­க­வில்லை என்­பதை உறு­தி­யாக கூறு­கின்­றீர்­களா?

பதில் : பேச்­சு­வார்த்­தை­ மூலம் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­கான எண்ணம் பிர­பா­க­ர­னுக்கு இருந்­தி­ருந்தால் அவ­ருக்கு அதற்­கான பல சந்­தர்ப்­பங்கள் கிடைத்­தன. ஆனால் அவர் அதனை பயன்­ப­டுத்­த­வில்லை. 1987 ஆம் ஆண்டு இந்­தியா தலை­யிட்ட  சந்­தர்ப்பம் தான் சிறந்த சந்­தர்ப்பம்.அன்று கொண்­டு­வ­ரப்­பட்ட மாகா­ண­சபை முறை­மையை அதி­க­மான மக்கள் விரும்­ப­வில்லை. எதிர்த்­தனர். ஆனால்  அந்த முறைமை அன்று கொண்­டு­வ­ரப்­பட்­டது.அந்த சந்­தர்ப்­பத்­தையும் பிர­பா­கரன் வீணாக்­கி­விட்டார்.   அந்த சந்­தர்ப்­பத்தை அன்று அவர் நன்­றாக பயன்­ப­டுத்­தி­யி­ருந்தால் இந்­தியா உள்­ளிட்ட சர்­வ­தே­சத்தின் ஒத்­து­ழைப்பு அவ­ருக்கு கிடைத்­தி­ருக்கும்.  

பின்னர்   நோர்­வேயின் தலை­யீட்­டுடன் ஏற்­ப­டுத்­தப்­பட்ட உடன்­ப­டிக்­கையும் தோல்­வி­ய­டைந்­தது.அவ்­வா­றான  அனு­ப­வங்கள்  இருந்தும் மஹிந்த ராஜ­பக் ஷ பேச்­சு­வார்த்­தைக்கு  சென்றார்.ஆனால் அந்த முயற்­சியும் தோல்­வி­ய­டைந்­தது.  எனினும் அதன் பின்­னரும் மாவி­லாறு விவ­காரம் வரை நாங்கள்  பொறு­மை­யு­ட­னேயே இருந்தோம்.  அது­வரை இரா­ணுவ நட­வ­டிக்கை எதுவும் எடுக்­க­ப்படவில்லை.மாவி­லாறு பிரச்­சினை வந்­த­போது நாம்  நெருக்­க­டி­யான கட்­டத்­திற்கு வந்­து­விட்­டதை  உணர்ந்தோம்.   அதன் பின்னர்  இந்த யுத்­தத்தை  முடிக்­க­வேண்டும் என நாம் தீர்­மா­னித்தோம். எனவே குறு­கிய காலத்தில் சரி­யான திட்­ட­மி­ட­லுடன் யுத்­தத்தை முடித்தோம். 

எனினும் சர்­வ­தேச சமூ­கமும்  தமிழ் அர­சி­யல்­வா­தி­களும்  புலம்­பெயர் மக்­களும்   ஒரு­வி­ட­யத்தை மறந்­து­விட்­டனர்.  அதா­வது யுத்­தத்தின் பின்னர்  மஹிந்த ராஜ­பக் ஷ வடக்கு, கிழக்­கிற்­காக  ஆற்­றிய  சேவையை   அவர்கள் மறந்­து­விட்­டனர்.யுத்­தத்தின் பின்னர்   மஹிந்த  எடுத்த வேலைத்­திட்­டங்­க­ளுக்கு இந்த தரப்­பினர் ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை. அவற்றை அங்­கீ­க­ரிக்­க­வில்லை, பேச­வு­மில்லை.

கேள்வி : என்ன திட்­டங்கள் அவை?

பதில் : 3 இலட்­சத்­துக்கும் அதி­க­மானோர்  அன்று நிர்க்­கதி நிலையில் இருந்­தனர்.   ஒரு பிரச்­சினை ஏற்­பட்­ட­வுடன் முன்­னு­ரிமை அளித்து   செய்­ய­வேண்­டிய வேலைத்­திட்­டங்­களை அடை­யாளம் காண­வேண்டும். அத­னையே மஹிந்த அன்று  செய்தார். முதலில் எதை செய்­வது?பின்னர் எதை  செய்­வது என்ற திட்டம் எம்­மி­ட­மி­ருந்­தது.  முதலில் செய்­ய­வேண்­டி­யதை பின்னர் செய்தால்  சிக்கல் ஏற்­படும்.  யுத்தம் முடிந்த பின்னர் வந்த  ஐந்து வரு­டங்­களில்   மஹிந்த  முக்­கி­ய­மான திட்­டங்­களை முன்­வைத்தார்.   முத­லா­வது விட­ய­மாக  3 இலட்சம் மக்­களை மீள் குடி­யேற்­ற­வேண்­டிய   தேவை இருந்­தது.  அடுத்­த­தாக   இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த புலி உறுப்­பி­னர்­களை  என்ன செய்­வது  என்ற  விடயம் இருந்­தது.  இவை   இரண்­டுமே   முதன்மை விட­யங்­க­ளாக  இருந்­தன.   இந்­நி­லையில் 3 இலட்சம் பேரை மீள்­கு­டி­யேற்­ற­வேண்­டு­மானால்  நிலக்­கண்­ணி­வெ­டி­களை  அகற்­ற­வேண்­டி­யி­ருந்­தது.   

கேள்வி : இந்த கட்­டத்தில் உங்­களின் பங்­க­ளிப்பு எவ்­வாறு இருந்­தது? 

பதில் : அதி­க­மான நட­வ­டிக்­கை­களை  இரா­ணுவம் முன்­னெ­டுத்­தது.  அதன்­படி நாங்கள்  எமது இரா­ணு­வத்­தையும் பயன்­ப­டுத்தி  கண்­ணி­வெ­டி­களை  அகற்­றினோம்.  இரண்­டரை வரு­டங்­களில்  நிலக்­கண்ணி வெடி­களை அகற்­றினோம்.  இலங்கை இரா­ணு­வமே  70 வீத­மான கண்­ணி­வெ­டி­களை அகற்­றி­யது.  இன்று  யுத்­தக்­குற்றம்  பற்றி  பேசு­ப­வர்கள்  இரா­ணு­வத்தின் இந்த செய­லைக்­கு­றித்து  பேசு­வ­தில்லை. அடுத்­த­தாக 3 இலட்சம் மக்­களை    மீள்­கு­டி­யேற்­றினோம்.  அதன் பின்னர் மீள்­கு­டி­யேற்­றப்­ப­கு­தி­களில் அபி­வி­ருத்­தி­களை செய்தோம். உட்­கட்­ட­மைப்பு  வச­தி­களை மேற்­கொண்டோம். ரயில் பாதை­களை அமைத்தோம்.   மின்­சா­ரத்தை வழங்­கினோம்.  நீர்ப்­பா­ச­னத்­திட்­டங்­களை    அபி­வி­ருத்­தி­செய்தோம், குடி­நீர்த்­திட்­டத்தை மேற்­கொண்டோம்.  குறு­கிய ஐந்து வரு­டங்­க­ளி­லேயே இந்தத் திட்­டங்­களை முன்­னெ­டுத்தோம். அதன்­பின்னர் கல்வி, சுகா­தாரம்,  போன்றத் துறை­களில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­தினோம்.அதன்­பின்னர்  12 ஆயிரம் புலி உறுப்­பி­னர்கள் விட­யத்தில் என்ன செய்­வது  என்று ஆராய்ந்தோம்.  அவர்­க­ளுக்கு  முழு­மை­யான  புனர்­வாழ்­வுத்­திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு தீர்­மா­னித்தோம்.   இதில் மஹிந்த ராஜ­பக் ஷ உறு­தி­யாக இருந்தார்.  

கேள்வி : அந்த இடத்தில் உங்­க­ளுக்கு  வேறு­பட்ட கருத்து இருந்­ததா?

பதில் : இல்லை. இல்லை.  நாம்   மஹிந்த ராஜ­பக் ஷ   முன்­வைத்த  கோரிக்­கையை ஏற்­றுக்­கொண்டோம்.   முழு­மை­யான புனர்­வாழ்வு அளித்து போரா­ளி­களை சமூ­க­ம­யப்­ப­டுத்தும் திட்­டத்தை முன்­னெ­டுத்தோம்.எமது புனர்­வாழ்வு அளிக்கும் திட்டம் சிறந்த  வெற்­றி­யை­ய­ளித்­தது.சர்­வ­தே­சத்தின்  தொடர்பும் இதில் இருந்­தது.முன்னாள்  போரா­ளி­களை சமூ­க­ம­யப்­ப­டுத்­தி­ய­போது அவர்­க­ளுக்­கான தொழில்­வாய்ப்பு பிரச்­சினை  ஏற்­பட்­டது. அப்­போது தனியார் துறையின் முத­லீ­டு­களை அங்கு கொண்டு சென்றோம்.அத்­துடன் சிவில் பாது­காப்பு சேவையில் முன்னாள் போரா­ளி­களை இணைத்­துக்­கொண்டோம்.   

யாழ்­.கு­டா­நாட்டை 1998 ஆம் ஆண்டு அர­சாங்கம் மீட்­டது.எனினும் அந்தப் பிர­தேசம் ஒரு பங்­கர் ­போன்றே காணப்­பட்­டது.  யுத்­தத்தின் பின்னர்  அனைத்து இடங்­களில் இருக்­கின்ற இரா­ணு­வத்­தி­னரை  முக்­கி­ய­மான இடங்­களைத் தவிர்த்து  குறைப்­ப­தற்கு   தீர்­மானம் எடுத்தோம்.இன்று விடு­விக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ முகாம்கள் இந்த அர­சாங்­கத்­தினால் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு  உட்­பட்­ட­வை­யல்ல.எமது அர­சாங்கம்   அன்று எடுத்த முடிவு.  தெல்­லிப்­பழை, கீரி­மலை, காங்­கே­சன்­துறை உள்­ளிட்ட  இடங்­களை நாங்கள் விடு­வித்தோம்.பலா­லிப் ­ப­கு­தியை மட்­டுமே எம்மால் விடு­விக்க முடி­யாமல் இருந்­தது.  அது  தொடர்­பிலும்  ஒரு  திட்டம் தயா­ரிக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருந்­தது.கொழும்­பி­லி­ருந்த பல்­வேறு மக்­களின் வீடுகள் யாழ்ப்­பா­ணத்தில் அவர்­க­ளிடம் மீண்டும் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன. அர்­ஜுன மகேந்­தி­ரனின் தந்­தையும் தனது யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்த வீட்டை  என்­னிடம் வந்து கேட்டு விடு­வித்­துக்­கொண்டார்.கொழும்பு முன்னாள் மேயர் கணே­ச­லிங்­கத்தின் பாரி­யாரும்   யாழில் உள்ள அவ­ரது இல்­லத்தைப் பெற்­றுக்­கொண்டார்.இப்­ப­டித்தான் நாம் சேவை­யாற்­றினோம். 

2015ஆம் ஆண்டு எமக்கு அதி­காரம் கிடைத்­தி­ருந்தால் நாம் அடுத்த பிரச்­சி­னை­க­ளையும் தீர்த்­தி­ருப்போம்.ஒரு கட்­டத்தில்  தீர்­வுத்­ திட்­ட­மா­கவே இந்த நாட்டில் மாகா­ண சபை முறைமை வந்­தது.  தெற்கின் அனைத்­துப்­ப­கு­தி­க­ளிலும் மாகா­ண­ சபை உரு­வாக்­கப்­பட்­டது.கிழக்கில் நாம் உரு­வாக்­கினோம்.வடக்கில் மாகா­ண­ சபை இருக்­க­வில்லை.வடக்கில்  முதன்­மு­தலில் மாகா­ண­ ச­பையை யார் அமைத்­தது?   மஹிந்த ராஜ­பக் ஷவே அதனை ஸ்தாபித்தார்.  அன்று  வடக்கு தேர்­தலை நடத்­தும்­போது அதில் நாம் தோல்­வி­ய­டைவோம் என  எமக்குத் தெரியும். அமைச்­ச­ர­வையில் பலர் அதனை  எதிர்த்­த­தாக  தகவல் இருக்­கி­றது. ஆனால்  மஹிந்த ராஜ­பக் ஷ வட­மா­காண சபையை உரு­வாக்­க­ வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருந்தார்.வடக்கு தேர்­தலை நடத்தும் முன்னர் அதனை சுதந்­தி­ர­மாக நடத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு என்­னிடம் கேட்­டுக்­கொண்டார்.  அதா­வது  இரா­ணுவம் மற்றும் பொலி­ஸாரை  தவிர வேறு யாரி­டமும்  ஆயுதம் இருக்­கக்­கூ­டாது என மஹிந்த ராஜ­பக் ஷ என்­னிடம் கூறினார்.அதன்­படி பல்­வேறு குழுக்­க­ளி­ட­மி­ருந்து நாங்கள் ஆயு­தங்­களை களைந்தோம்.ஆனால் அவை தொடர்பில் சர்­வ­தே­சமோ தமிழ் அர­சி­யல்­வா­தி­களோ பேசு­வ­தில்லை.அவ்­வாறு  நாம் செய்­தி­ருக்­கா­விட்டால் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில்  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவுக்கு வாக்­குகள் கிடைத்­தி­ருக்­குமா?வட­மா­கா­ண ­சபை எம்­முடன் இணைந்து செயற்­படும் என்று  நாம் அன்று எதிர்­பார்த்தோம்.  ஆனால் அது நடக்­க­வில்லை.எமக்கு எந்­த­வி­த­மான ஒத்­து­ழைப்­பையும் வழங்­க­வில்லை.வடக்கில்  அதி­க­ளவு  இரா­ணுவம் இருப்­பதால்  அங்கு இடம்­பெ­ற­வேண்­டிய செயற்­பா­டுகள் தொடர்பில் சம்­பந்­த­னுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­மாறு அப்­போ­தி­ருந்த இந்­தியத் தூதுவர் என்­னிடம் கேட்டார்.நான் சரி­யென்று கூறினேன்.  அதன்­படி இந்­தியத் தூது­வரின் இல்­லத்தில்  இரண்டு மணி­நேரம்  சம்­பந்­த­னுடன் பேச்சு நடத்­தினேன்.  

கேள்வி : எப்­போது இது நடந்­தது?

பதில் : வட­மா­கா­ண­ சபை உரு­வாக்­கப்­பட்­டதன் பின்னர் இது நடந்­தது.   

கேள்வி : அதன்­போது சம்­பந்தன் என்ன கூறினார்?

பதில் : நாம் எவ்­வாறு  வடக்கை கட்­டி­யெ­ழுப்ப  உதவி செய்ய முடியும் என சம்­பந்­த­னிடம் கேட்டேன்.எனினும் அந்த சந்­திப்பின் ஊடாக  எந்தப் பிர­தி­ப­லனும் கிடைக்­க­வில்லை.   அதன்­பின்னர் வடக்கு முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனை சந்­திக்­க­வேண்டும் என விக்­கி­னேஸ்­வ­ரனை நான் கேட்டேன்.இரா­ணுவம் தொடர்­பான  சிக்­கல்­க­ளுக்கு தீர்­வு ­கா­ணவே  அவ­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்த கேட்டேன்.அந்தப் பேச்­சு­வார்த்­தைக்கு வடக்கு முதல்வர் இணங்­கினார். திக­தியும்  இடமும், நேரமும் ஒதுக்­கப்­பட்­டன.எனினும்  அவரை சந்­திப்­ப­தற்கு  அரை­மணி நேரத்­திற்கு முன்னர் விக்­கி­னேஸ்­வரன் முடி­யாது என்று கூறி­விட்டார்.கூட்­ட­மைப்பின் உயர்­மட்­டத்­த­ரப்பின் கோரிக்­கைக்கு அமை­யவே அவர் அதனை மறுத்தார். 

கேள்வி : இவை­பற்றி அந்­த­நேரம் ஏன் வெளிப்­ப­டுத்­த­வில்லை?

பதில் : சில இடங்­களில் கூறினேன்.  ஆனால் இவற்றைக்  கூறித்­தி­ரி­வதில் அர்த்­த­மில்லை என எண்­ணினேன்.எப்­ப­டியும் நாங்கள்  முன்­னு­ரிமை அளித்து மேற்­கு­றித்த வேலைத்­திட்­டங்­களை  செய்­யாமல் தீர்வு குறித்து  பேசி­யி­ருந்தால் இரண்­டுமே நடந்­தி­ருக்­காது.அது­தொ­டர்பில்  நான்  நேர்­மை­யான முறையில் மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன்.    வடக்கு, கிழக்கில் மட்­டு­மின்றி 100அடிக்கு  இடையில்   சோத­னைச்­சா­வ­டிகள் காணப்­பட்­டன.வீதித்­த­டைகள்  இருந்­தன.2015ஆம் ஆண்டு நாம் நாட்டை பொறுப்பு கொடுக்­கும்­போது ஒரு சோத­னைச்­சா­வ­டியும் இருக்­க­வில்லை.

விஜ­ய­கலா பாலியல் வல்­லு­றவுகள்  இடம்­பெ­று­வ­தா­கவும் போதைப்­பொருள் கொண்­டு­வ­ரு­வ­தா­கவும் குற்­றம்­சாட்­டி­யி­ருக்­கின்றார்.  எமது ஆட்­சி­க்கா­லத்தில் அவ்­வா­றான எந்த சிக்­கலும் இருக்­க­வில்லை.  யுத்தம் முடிந்த பின்னர் கடந்து சென்ற ஐந்து வரு­டங்கள் தொடர்பில் விஜ­ய­கலா பேச­வில்லை. அவர் 2015 ஆம் ஆண்­டுக்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தியை பேசு­கின்றார்.  நாம் சட்டம், ஒழுங்கை நிலை­நாட்­டினோம்.         (தொடர்ச்சி நாளை)

http://www.virakesari.lk/article/36561

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

( தொடர்ச்சி )

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயார்.... கோத்­த­பாய ராஜ­பக்ஷ

 

gotha2.jpg

 

 

 

Q: உங்கள் ஆட்­சிக்­கா­லப்­ப­கு­தியில் காணா­மல்­போனோர் தொடர்பில் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள் திருப்தி தரு­கின்­ற­னவா?

A: யுத்தம் முடிந்­ததும் நாங்கள் ஒரு புள்­ளி­வி­ப­ரக்­க­ணக்­கெ­டுப்பை செய்தோம். அந்­தக் ­க­ணக்­கெ­டுப்பை புள்­ளி­வி­ப­ரத்­தி­ணைக்­க­ளமே செய்­தது.அந்தக் கணக்­கெ­டுப்பில் சர்­வ­தேச சமூ­கமோ, புலம்­பெயர் மக்­களோ மகிழ்ச்சி அடைய முடி­யாத பெறு­பேறே வந்­தது.அந்த அறிக்­கை­யின்­படி இக்­கா­லப்­ப­கு­தியில் புலிகள் உறுப்­பி­னர்கள் உட்­பட 7ஆயிரம் பேர­ள­வி­லேயே காணா­மல்­போ­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. அதே­போன்று யுனேஸ்கோ அமைப்பு எமது அர­சாங்­கத்­திற்கு தெரி­யாமல் வட­மா­கா­ணத்­துடன் இணைந்து ஒரு கணக்­கெ­டுப்பை நடத்­தி­யது. அதில் மூவா­யிரம் பேர­ள­வி­லேயே எண்­ணிக்கை காணப்­பட்­டது. இரா­ணுவம் பலரை முகாம்­களில் மறைத்து வைத்­தி­ருப்­ப­தாக சிலர் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தனர். அது முழு­மை­யான பொய்­யான தக­வ­லாகும்.

எம்­மிடம் இருந்­த­வர்கள் தொடர்பில் எங்­க­ளிடம் தர­வுகள் இருந்­தன. ஒரு­த­ரப்­பி­னரை புனர்­வாழ்வு அளித்து சமூ­க­ம­யப்­ப­டுத்­தினோம்.மற்­று­மொ­ரு­ த­ரப்­பினர் நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். யுத்தம் முடிந்­த­போது இவ்­வாறு 4ஆயிரம் பேர் வரையில் இருந்­தனர். எனினும் 2014ஆம் ஆண்டு ஆகும்­போது 290 பேர் இருந்­தனர். அவர்­க­ளையும் உற­வி­னர்­களும் சட்­டத்­த­ர­ணி­களும் சந்­திப்­ப­தற்கு ஏற்­பாடு செய்தோம். எம்­மிடம் இன்னும் பலர் இருப்­ப­தாக அதி­க­மானோர் நம்­பினர். ஆனால் அப்­படி யாரும் எம்­மிடம் இல்லை.  

Q: யுத்­தத்தின் இறு­திக்­கட்­டத்தில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ?

A: அவை வெறும் குற்­றச்­சாட்­டுகள் மட்­டு­மே­யாகும். இது தொடர்பில் ஆராய முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜகத் ஜய­சூ­ரிய தலை­மையில் நாம் இரா­ணு­வக்­கு­ழு­வொன்றை நிய­மித்தோம். இந்தக் குற்­றச்­சாட்­டுக்­களில் உண்­மை­யுள்­ளதா என விசா­ரிக்­கு­மாறு கோரினோம்.யாரா­வது அவ்­வாறு சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் இருக்­கின்­றார்­களா என கேட்டோம். மேலும் இது தொடர்பில் விசா­ரணை நடத்­திய ஐ.நா. ஏன் யுனெஸ்­கோவின் அறிக்­கையை பரி­சீ­லனை செய்­ய­வில்லை? யுத்­தத்தின் இறு­திக்­கட்­டத்தில் தப்­பித்து வந்­த­வர்­களை இரா­ணுவம் எவ்­வாறு பார்த்­துக்­கொண்­டது என்­பதை இந்த நாட்டு மக்கள் பார்த்­தனர். மக்­களை எவ்­வாறு பார்த்­துக்­கொண்­டனர் என்­பது மக்­க­ளுக்குத் தெரியும். அது வெளிப்­ப­டை­யா­கவே முன்­னெ­டுக்­கப்­பட்­டது. புல்­மோட்­டைக்கு கடற்­ப­டை­யினால் மக்கள் மீட்­கப்­பட்டு கொண்­டு­வந்து இறக்­கப்­பட்­ட­போது அவர்­களை முதலில் இரா­ணு­வத்­தி­னரால் அமைக்­கப்­பட்ட மருத்­து­வக்­கு­ழாமே பொறுப்­பேற்­றது.

யுத்தம் என்­பது இனி­மை­யா­னது அல்ல. உலகில் எங்­குமே யுத்தம் என்­பது இனி­மை­யற்­ற­துதான். பயங்­க­ர­வா­தி­க­ளுடன் யுத்தம் செய்­வது அதனை விடக்­க­டி­ன­மா­னது. எதிரி எம்மைத் தாக்­கும்­போதும் நாங்கள் அவர்களை தாக்­கும்­போதும் வரை­ய­றை­யற்ற சேதங்கள் ஏற்­ப­டலாம். ஆனால் அது எந்த யுத்­தத்­திலும் இருக்கும். எமக்கு யுத்­தத்தை முடிக்கும் தேவை இருந்­தது.பொது­மக்­களை யுத்­தத்­தி­லி­ருந்து மீட்­டெ­டுக்க பாரிய அர்ப்­ப­ணிப்பை செய்தோம். புலிகள் மக்­களை மனி­தக்­கே­ட­ய­மாக பயன்­ப­டுத்­தினர்.

கிளி­நொச்சி வீழ்ந்த பின்னர் பொது­மக்கள் பாது­காப்பு வல­யத்­திற்கு வந்­த­போது துப்­பாக்கிச் சூடு மேற்­கொண்­டனர். தற்­கொலைத் தாக்­கு­தலும் நடத்­தப்­பட்­டது. அவ்­வாறு மக்கள் தடுக்­கப்­பட்­டனர். இந்­நி­லையில் இரா­ணுவம் எவ்­வா­றான மனி­தா­பி­மான சேவையை மக்­க­ளுக்கு வழங்­கி­யது என்­பதை புரிந்­து­கொள்­ள ­வேண்டும்.

பொது­மக்­களை தாக்­கு­வது தொடர்­பான எவ்­வி­த­மான பொது­நோக்­கமும் இரா­ணு­வத்­திடம் இருக்­க­வில்லை. அது அக்­கா­லத்தில் அங்­கி­ருந்த சர்­வ­தேச அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­க­ளுக்குத் தெரியும்.ஆனால் இரா­ணுவம் இவ்­வாறு பொது­நோக்­கத்­துடன் செயற்­பட்­ட­தாக காட்­டு­வ­தற்கு ஐ.நா. அதி­கா­ரி­களும் புலம்­பெயர் மக்­களும் முயற்­சிக்­கின்­றனர். யுத்­தத்தின் போது ஏதா­வது நடந்­தி­ருக்­கலாம். ஆனால் பொது­வான நோக்கம் ஒன்று இருக்­க­வில்லை. நாம் உணவு அனுப்­பினோம், மருந்து அனுப்­பினோம், பாது­காப்பு வல­யங்­களை உரு­வாக்­கினோம். கன­ரக ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்­தாமல் இருந்தோம். உலக உண­வுத்­திட்­டத்தின் பிர­தி­நி­திகள் அங்­கி­ருந்­தனர், தமிழ் அர­சாங்க அதி­கா­ரிகள் அங்­கி­ருந்­தனர். அவர்­கள்தான் இந்­த­ளவு எண்­ணிக்­கை­ பொ­து­மக்கள் இருப்­ப­தாக எமக்கு தகவல் தந்­தனர். அதற்கேற்­ற­வாறு உணவும் மருந்தும் அனுப்­பு­மாறு எமக்குக் கூறினர்.இலட்­சக்­க­ணக்கில் இறந்­த­தா­கவும் 40 ஆயிரம் பேர் இறந்­த­தா­கவும் கூறு­வது மிகவும் பொய்­யா­ன­த­க­வல்கள்.

Q: யுத்­தத்தின் இறு­திக்­கட்­டத்தில் வெள்­ளைக்­கொ­டி­யுடன் சர­ண­டை­ய­வந்த புலித்­த­லை­வர்­களை சுட்­டுக்­கொன்­ற­தாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ?

A: அது முற்­று­மு­ழு­தாக ஒரு பொய்­யான குற்­றச்­சாட்டு. யுத்தம் முடி­வ­டைய முன்­பாக அப்­போ­தைய இலங்­கைக்­கான நோர்வே தூதுவர் என்னைத் தொடர்­பு­கொண்டு 50 பேர்­கொண்ட குழு­வினர் இருப்­ப­தாக கூறினார். பின்னர் அதனை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அவர் என்­னிடம் கூறினார். அதன் பின்னர் அவர் என்னைத் தொடர்­பு­கொண்டு தனக்கு அவர்­க­ளுடன் தொடர்பை ஏற்­ப­டுத்த முடி­யாமல் போன­தாக தெரி­வித்தார். தற்­போது அவர் கூட இந்த விட­யங்­களை வெளியில் கூறாமல் இருக்­கின்றார்.

Q: யுத்தம் முடி­வ­டைய எத்­தனை தினங்­க­ளுக்கு முன்­பாக நோர்வே தூதுவர் உங்­களை தொடர்­பு­கொண்டார். ?

A: ஒரு ­தி­னத்­துக்கு முன்­பா­கவே என்னைத் தொடர்­பு­கொண்டார். இங்கு ஒரு விட­யத்தை அனை­வரும் புரிந்­து­கொள்­ள­வேண்டும். யுத்­த­களம் தொடர்­பான எந்­த­வி­த­மான கள அறிவும் அற்­ற­வர்­களே இந்த குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்­றனர். நீங்கள் ஒரு விட­யத்தை சிந்­தித்­துப்­பா­ருங்கள். களப்­பி­லி­ருந்து வரு­கின்ற மக்கள் மீதும் துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டதை நாம் கண்டோம்.

அதா­வது யுத்­த­கா­லத்தில் இந்­தப்­பக்கம் இருந்து யுத்தம் செய்­து­கொண்டு இருக்கும் ஒரு இரா­ணுவ வீரரால் புலி­களின் நடேசன் சர­ண­டைய வரு­கின்றார் என்­பதை அறிந்­து­கொள்ள முடி­யுமா? அல்­லது புரிந்­து­கொள்ள முடி­யுமா? வெள்­ளைக்­கொடி ஏந்­தி­வந்­தாலும் அது தெரிந்­தி­ருக்­குமா? அதுவும் இருளில் அங்­கி­ருந்து வரு­ப­வரை எவ்­வாறு அடை­யா­ளம்­காண்­பது? எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அவர்கள் இவ்­வாறு வந்­த­தாக எந்­த­வி­த­மான உறு­திப்­ப­டுத்தும் தக­வல்­களும் இல்லை. வெள்­ளைக்­கொ­டி­யுடன் வரு­ப­வர்­களை இரா­ணுவ வீரர்­களால் அடை­யாளம் காண முடி­யுமா? சர­ண­டைய வந்­த­வர்கள் கொல்­லப்­பட்­டார்கள் என்­ப­தற்கு எவ்­வி­த­மான ஆதா­ரங்­களும் இல்லை.

Q: சரி.அவர்­க­ளுக்கு உயி­ரைப்­பா­து­காத்­துக்­கொள்ளும் எண்ணம் இருந்­தி­ருந்தால் அவர்கள் என்ன செய்­தி­ருக்­க­வேண்டும்?

A: அவர்­க­ளுக்கு அதற்கு அதி­க­ள­வான சந்­தர்ப்­பங்கள் இருந்­தன. ஆனால் யுத்­தத்­தின்­போது புலித்­த­லை­வர்­களை இரா­ணுவ வீரர்கள் உட­ன­டி­யாக அடை­யா­ளம் ­காண முடி­யுமா? வேண்­டு­மெனில் பிர­பா­க­ரனை மட்டும் இரா­ணுவ வீரர்­க­ளினால் அடை­யாளம் காண முடியும். ஏனை­ய­வர்கள் தொடர்பில் புகைப்­ப­டம்­ கூட இருக்­க­வில்லை.பொட்டு அம்­மானை நாம் கண்­டி­ருக்­க­வில்லை. பொட்­டு­அம்மான் இன்று இந்த கொழும்பு நகரில் நடந்து சென்றால் கூட எம்மால் அடை­யாளம் காண முடி­யாது. யுத்­த­க­ளத்தில் இருப்­பது சாதா­ரண இரா­ணுவ வீரர்கள். அந்த சாதா­ரண இரா­ணுவ வீரர்­க­ளுக்கு புலித்­த­லை­வர்­களை அடை­யா­ளம்­ காண முடி­யுமா? பெயர்கள் கேள்­வி­ப்பட்­டி­ருந்­தாலும் அவர்­களின் உருவம் தெரி­யாது.

Q: நோர்வே தூதுவர் உங்­க­ளிடம் சரி­யாக என்ன கூறினார்?

A: 50 பேர் கொண்ட குழு­வினர் இருப்­ப­தாக கூறினார்.அதா­வது விருப்­பத்­துடன் இருப்­ப­தாக கூறினார். அது தொடர்பில் பின்னர் தான் தகவல் தரு­வ­தாக கூறினார். ஆனால் அதன்­பின்னர் அவரால் குறித்த 50 பேரை தொடர்­பு­கொள்ள முடி­ய­வில்லை என்று கூறினார்.

எனவே இந்­தக்­குற்­றச்­சாட்டை நான் முற்­று­மு­ழு­தாக நிரா­க­ரிக்­கின்றேன். அவர்கள் உயிரைப் பாது­காத்­துக்­கொள்ள எண்­ணி­யி­ருந்தால் அதற்­கான நிறைய சந்­தர்ப்­பங்கள் இருந்­தன. அவர்கள் பொது­மக்­க­ளுடன் வந்­தி­ருக்­கலாம். நீங்கள் ஒரு விட­யத்தை புரிந்­து­கொள்­ளுங்கள். புலித்­த­லை­வர்கள் பலர் மக்­க­ளுடன் வந்து இரா­ணு­வத்­திடம் சர­ண­டை­யாமல் புனர்­வாழ்வும் பெறாமல் இந்­தி­யா­வுக்கு சென்று அங்­கி­ருந்து மேற்­கு­ல­க ­நா­டு­க­ளுக்கு சென்­றுள்­ளனர். பிரான்ஸில் கூட பலர் இருக்­கின்­றனர்.

Q: அதில் புலித்­த­லை­வர்கள் உள்­ள­னரா?

A: ஆம், புலித்­த­லை­வர்கள் இவ்­வாறு சென்று வெளி­நா­டு­களில் இருக்­கின்­றனர். புலி­க­ளிடம் விமா­னப்­ப­டைப்­பி­ரிவு இருந்­தது. விமா­னி­களும் அவர்­க­ளிடம் இருந்­தனர். எமது இரா­ணுவம் எத்­தனை விமா­னி­களை பிடித்­தது?ஒருவர் கூட எம்­மிடம் சிக்­க­வில்லை.

Q: என்ன நடந்­தது அவர்­க­ளுக்கு?

A: அதைத்தான் நானும் கேட்­கின்றேன் அவர்கள் எங்கே? நாம் அடை­யாளம் கூட காண­வில்லை. அந்த விமா­னிகள் பிர­பா­க­ர­னுடன் புகைப்­படம் எடுத்­தி­ருந்­தனர். அது பிர­ப­ல­மான புகைப்­ப­ட­மாகும். அவர்கள் இன்று வெளி­நா­டு­களில் இருப்­பார்கள். எத்­தனை பேர் அவ்­வாறு தப்­பித்துச் சென்­றுள்­ளனர் தெரி­யுமா? காரணம் இரா­ணு­வத்­தி­னரால் அவர்­களை அடை­யாளம் காண முடி­யாது. பிர­பா­க­ரனின் தந்தை மற்றும் தாயை பாது­காப்­பாக மீட்­டெ­டுத்தோம். அத்­துடன் சூசையின் மனை­வியை நாங்கள் மீட்­டெ­டுத்தோம். அவர் தற்­போது வெளி­நாட்டில் இருக்­கின்றார். கடலில் வைத்தே அவரை மீட்­டெ­டுத்தோம். அது­பற்றி யாரும் பேச­வில்லை.காணா­த­தைப்­பற்றி பேசு­கி­றார்கள். கண்­ட­தைப்­பற்றி பேசு­வ­தில்லை.சூசையின் மனை­வியை நடுக்­க­டலில் வைத்து பிடித்­ததும் அவர் தான் யார் என்­பதை கூறினார். அவர்­களை அழைத்து வந்து நாம் பாது­காத்தோம்.

Q: பிர­பா­க­ரனின் மகன் பாலச்­சந்­திரன் விவ­காரம்?

A: அது ஒரு பொய்­யான குற்­றச்­சாட்டு. பாலச்­சந்­தி­ரனைப் பிடித்து வைத்­தி­ருப்­ப­தாக யாரும் எமக்கு கூற­வில்லை. அவர் இறந்­து­விட்டார் என்ற செய்தி மட்­டுமே எமக்குத் தெரியும்.

Q: ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிடும் எண்ணம் உங்­க­ளுக்கு இருக்­கி­றதா?

A:மஹிந்த ராஜ­பக் ஷ­வு­ட­னேயே மக்கள் சக்தி இருக்­கி­றது. நான் அர­சியல் செய்­த­தில்லை. நான் பாது­காப்புச் செய­லா­ள­ராக எனது சேவையை செய்தேன். பாது­காப்பு செய­லா­ள­ராவே இந்த நாடு என்னைத் தெரிந்து கொண்­டது. யுத்­தத்தை நிறைவு செய்தல் மற்றும் நகர அபி­வி­ருத்தி என்­ப­வற்றின் ஊடா­கவே மக்கள் என்னைத் தெரிந்து கொண்­டனர். அதன்­படி மக்கள் மத்­தியில் இது­தொ­டர்பில் ஒரு கருத்து உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

என்னை சந்­திக்கும் அனை­வரும் நான் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட வேண்­டு­மென கூறு­கின்­றனர்.என்னால் வேலை­செய்ய முடியும் என்று மக்கள் நம்­பு­கின்­றனர். ஆனால் நான் அர­சியல் செய்­தது இல்லை என்­பது உண்­மை­யாகும். எனது குடும்­பத்தில் அனை­வரும் அர­சி­யல்­வா­திகள். நான் அர­சியல் செய்­ய­வில்லை. நான் இரா­ணு­வத்­தி­லி­ருந்து ஓய்வு பெற்று வெளி­நாட்டில் இருந்தேன். 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யா­னதும் பாது­காப்பு செய­லா­ள­ராக பதவி வகித்தேன்.

தற்­போது மஹிந்த ராஜ­பக் ஷவுக்கே மக்கள் சக்தி இருக்­கி­றது. எனவே மஹிந்த ராஜ­பக் ஷவே வேட்­பா­ளரை தெரிவுசெய்து அறி­விப்பார். இன்­னு­மொரு வேட்­பா­ள­ராக பஷில் ராஜ­பக் ஷவின் பெயரும் காணப்­ப­டு­கின்­றது.ஆனால் பஷில் ராஜ­பக் ஷ தான் போட்­டி­யிட மாட்டேன் எனக் கூறி­யி­ருக்­கின்றார். மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கும் பஷில் அதனைக் கூறி­யி­ருப்பார். எப்­ப­டி­யி­ருப்­பினும் யார் வேட்­பாளர் என்­பதை மஹிந்த ராஜ­பக் ஷவே தெரிவு செய்வார். யார் வேட்­பா­ள­ராக வந்­தாலும் இந்த நாட்­டுக்கு நான் சேவை­யாற்ற முடியும். மஹிந்த ராஜ­பக் ஷவின் தலை­மையில் உரு­வா­கப்­போகும் அர­சாங்­கத்தில் எனது பொறுப்பை நான் வகிப்பேன். அதில் பஷில் ராஜ­பக் ஷவிற்கும் பாரிய பொறுப்பு இருக்கும். மஹிந்­தவின் தலை­மைத்­து­வ­மின்றி மக்கள் யாரையும் ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள். தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்­பின்­படி பிர­த­ம­ருக்கு பாரிய அதி­கா­ரங்கள் உள்­ளன. பாரா­ளு­மன்­றத்­திற்கு அதி­கா­ரங்கள் உள்­ளன. எனவே அந்த அதி­காரம் மஹிந்­த ­ராஜ­பக் ஷவுக்கே செல்லும்.கடந்த காலத்தில் நாம் சகோ­தரர்கள் என்ற வகையில் பொறுப்­புடன் செயற்­பட்டோம்.

Q: மஹிந்த ராஜ­பக் ஷ என்ன முடி­வெ­டுத்­தாலும் ஜனா­தி­பதி வேட்­பாளர் ஆவது தொடர்பில் உங்­க­ளுக்கு எண்ணம் இருக்­கின்­றதா?

A: நான் அதற்கு தயார். என்னை மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக தெரிவு செய்தால் போட்­டி­யிட்டு நாட்டின் தலை­மைத்­து­வத்தை ஏற்க நான் தயா­ராக இருக்­கின்றேன். காரணம் என்னை வரு­மாறு கோரிக்கை எழுந்­தி­ருக்­கின்­றது. மஹிந்த கோரிக்கை விடுத்தால் நான் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக தயா­ரா­கவே இருக்­கின்றேன்.

Q: நீங்கள் அமெ­ரிக்க குடி­யு­ரிமை உள்­ளவர்., எனவே அது உங்­க­ளது வேட்­பாளர் ஆகும் எண்­ணத்­திற்கு தடை­யாக அமை­யுமா?

A: இங்­குள்ள அர­சி­யல்­வா­திகள் அவ்­வாறு கூறி­னாலும் அமெ­ரிக்கா குறு­கிய அர­சியல் நோக்கம் கொண்ட செயற்­பாட்டில் இறங்­காது என்று நான் நம்­பு­கின்றேன். அது தவ­றா­ன­து­மாகும். அமெ­ரிக்கா எப்­போ­துமே தனிப்­பட்ட சுதந்­திரம் குறித்து பேசு­கின்­றது. இது எனது தனிப்­பட்ட சுதந்­திரம்.அமெ­ரிக்கா அவ்­வாறு நடந்­து­கொள்ளும் என எதிர்­பார்க்க முடி­யாது. அதற்கு எந்­த­வி­த­மான ஒரு கார­ணமும் கிடை­யாது.

தற்­போது அர­சாங்­கத்தில் இருக்கும் அனை­வரும் என்னைத் தடுப்­ப­தி­லேயே குறி­யாக இருக்­கின்­றனர். இதுவா ஜன­நா­யகம்? . எவ­ரா­வது ஒருவர் தேர்­தலில் நிற்­ப­தற்கு ஏன் பயப்­ப­ட­வேண்டும்? அதனை ஏன் தடுக்க முயற்­சிக்க வேண்டும்? அவர்கள் திற­மை­யா­ன­வர்கள், மக்கள் செல்­வாக்கு உடை­ய­வர்கள் என்றால் ஏன் என்னைத் தடுக்க முற்­ப­ட­வேண்டும்? சரி­யான ஜன­நா­யகம் இருக்­கு­மென்றால் நான் போட்­டி­யி­டு­வதை வர­வேற்­க­வேண்டும்.

Q: நீங்கள் சீனா­வுக்குச் சென்று ஒரு­ மா­த­கா­ல­மாக அர­சியல் பயிற்சி பெற்­ற­தாக கூறப்­ப­டு­கின்­றதே?

A: இல்லை, இல்லை. அது தவ­றான தகவல். 2015ஆம் ஆண்டு தேர்தல் முடி­வ­டைந்­ததும் அப்போது இருந்த சீனத்தூதுவர் என்னை அழைத்து சீனாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் எங்களது அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். நான் சரியென்று கூறினேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை. அதேபோன்று தேர்தல் முடிந்த மறுதினமே சிங்கப்பூரின் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் சண்முகம் என்னை அழைத்து அங்குள்ள பல்கலைக்கழகத்தில் உரையாற்றுமாறு கூறினார். நான் அதை ஏற்று சிங்கப்பூர் சென்றேன். அதுபோன்று சீன விஜயமும் அமைந்தது.

Q: கோத்தபாய ராஜபக் ஷவினால் தமிழ், முஸ்லிம் வாக்குகளைப் பெற முடியாது என்ற கருத்து உள்ளது. இதை எப்படி நீங்கள் பார்க்கின்றீர்கள்?

A: 2015ஆம் ஆண்டு சிறுபான்மை மக்களின் வாக்குகள் மஹிந்த ராஜ­பக் ஷவுக்கு அதிகம் கிடைக்கவில்லை. பொதுபலசேனாவுக்கு நாங்கள் ஆதரவு என்ற பொய்ப்பிரசாரம் நிலவியதால் எமக்கு அந்த நிலைமை ஏற்பட்டது. ஆனால் இன்று முஸ்லிம் மக்கள் உண்மையை புரிந்துகொண்டுள்ளனர். எனவே முஸ்லிம் மக்களின் வாக்குகளை என்னால் பெற முடியும். தமிழ் மக்களின் வாக்குகள் மஹிந்த ராஜ­பக் ஷவுக்கு கிடைக்கும். மஹிந்த ராஜ­பக் ஷவை நம்பி தமிழ் மக்கள் வாக்களிப்பர். அப்படியாயின் எனக்கு தமிழ் மக்களின் வாக்குகளையும் பெற முடியும்.

காரணம் தமிழ் மக்கள் மஹிந்த மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் தமிழ் மக்கள் அவர்களுக்கு நாங்கள் எவ்வளவு சேவையாற்றினோம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். எம்மைப்போன்று எவரும் தமிழ் பேசும் மக்களுக்கு சேவையாற்றவில்லை. தமிழ் தலைவர்களுக்கு நாம் தேவையற்றவர்களாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு நாம் தேவைப்படுகின்றோம். நாம் தான் சமாதானத்தைக் கொண்டுவந்தோம். நாம்தான் அபிவிருத்தி செய்தோம். கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நாம் வீடுகள் வழங்கினோம்.

Q: நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தேசிய பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில் என்ன அணுகுமுறையைப் பின்பற்றுவீர்கள்.?

A: இதனைத்தருவேன் என்று என்னால் இப்போது கூற முடியாது. ஆனால் தமிழ், முஸ்லிம் , சிங்களம் என யாராக இருந்தாலும் அனைவரும் கௌரவமான பிரஜையாக இலங்கையர் என்ற ரீதியில் வாழும் சூழலை நான் உருவாக்குவேன். அனைத்து மக்களுக்கும் வீடுகளை பெற்றுக்கொள்ளும் உரிமை, தொழில்பெறும் உரிமை, வாழும் உரிமை கல்வி கற்கும் உரிமை என்பவற்றை சமமான முறையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். தமக்கு விருப்பமான மதத்தை பின்பற்றவும் விருப்பமான வியாபாரத்தை செய்யவும் சந்தர்ப்பத்தை உறுதிப்படுத்துவேன். குறிப்பாக பல்கலைக்கழகத்துக்கு 2 இலட்சம் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டால் அவர்கள் அனைவருக்கும் உயர்கல்வியைப் பெற்றுக்கொடுக்கும் நிலைமையை உருவாக்குவேன்.

Q: தமிழ் பேசும் மக்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?

A: சிறுபான்மை மக்கள் ராஜ­பக் ஷமாரைப் பார்த்து பயப்படவேண்டாம். எம்மைப்பற்றி பொய்யான பிரசாரம் செய்யப்படுகின்றது. நாங்கள் ஒரு இனத்தைப் பார்த்து வேலைசெய்பவர்கள் அல்லர். ராஜ­பக் ஷமாரின் நெருங்கிய உறவினர்களாக தமிழர்களும் உள்ளனர். எனவே எம்மை நம்புங்கள். சிறந்த பௌத்தர்கள் அனைத்து இனமக்களையும் நேசிப்பார்கள். பௌத்தர்கள் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானவர்கள் என்று தவறான பிரசாரம் செய்யப்படுகின்றது. நாம் அனைவருக்கும் சமமாகவே சேவையாற்றுவோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-07-14#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.