Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானக் கொள்வனவில் ’தரகுப் பணம் பரிமாற்றம்’

Featured Replies

விமானக் கொள்வனவில் ’தரகுப் பணம் பரிமாற்றம்’
 
 

ரஞ்சித் ராஜபக்‌ஷ

 

இலங்கைக்கு நேற்றைய தினம் (30) இறக்குமதி செய்யப்பட்ட எயார் பஸ் 321 ரக விமானக் கொள்வனவில், பாரிய தரகுப் பணம் பரிமாறப்பட்டுள்ளதென, மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

 

கினிகத்தேன கூட்டுறவுக் கலாசார நிலையத்தில் நேற்று (30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றுக் கருத்து வெளியிடுகையிலேயே, இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

முன்னைய அரசாங்கத்தால், விமானத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், தற்போதைய அரசாங்கத்தால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதென, இந்த மக்கள் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டினார்.

"ஒப்பந்தத்தை இரத்துச் செய்தமையால், இலங்கை விமான நிறுவனத்தால் 1,750 மில்லியன் ரூபாய் மக்கள் பணம், அந்த நிறுவனத்துக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

"புதிய விமானம் ஒன்றை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்படின், முன்னைய அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்துக்கு அமைய விமானத்தைக் கொள்வனவு செய்திருக்க முடியும். எனினும் அந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்து, மூன்று மணித்தியாலங்களுக்குள் 321 எயார் பஸ் ரகத்தைச் சேர்ந்த விமானத்தைக் கொள்வனவு செய்துள்ளனர். இந்த கொள்வனவில் பாரிய தரகுப் பணம் கைமாறப்பட்டுள்ளது" எனவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/விமானக்-கொள்வனவில்-தரகுப்-பணம்-பரிமாற்றம்/150-219686

 
 
 
இலங்கை விமான சேவைக்கு புதிதாக A-321neo விமானம்
 
 

 

image_cec5852f9a.jpg

டீ.கே.ஜீ.கபில

இலங்கை விமான சேவையில், புதிதாக சேவையில் ஈடுபடுத்தும் பொருட்டு இன்று (30), புதிய விமானம் ஒன்று சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

சர்வமத வழிபாடுகளை தொடர்ந்து, எயார் பஸ் நிறுவனத்தின், ஜேர்மன் ஹெம்பர்க் தொழிற்சாலையினால் உற்பத்தி செய்யப்பட்ட, A-321neo ரக விமானமே இவ்வாறு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் காற்று எதிர்ப்பைக் குறைத்து பறக்கக்கூடிய வகையில் புதிய நிர்மாணிப்பதாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் நீளம் 146 அடியும், இறக்கைகள் 117.5 அடியையும் கொண்டுள்ளதுடன், உயரம் 37.7 அடியென தெரிவிக்கப்படுகிறது.

 சுமார் 176 பயணிகளும், 6 விமான சேவை பணியாளர்களும் இதில் பயணம் செய்யக்கூடியவாறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

குறித்த விமானம் நேற்று (29), கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த விமானத்தை, சுமார் 3 மணித்தியாலங்களில் பயணம் செய்யக்கூடிய சீனா, டுபாய் போற்ற நாடுகளுக்கு பயணம் செய்வதற்காக பயன்படுத்த உள்ளதாக, இலங்கை விமான சேவைகள் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரரா தெரிவித்துள்ளார்.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கை-விமான-சேவைக்கு-புதிதாக-A-321neo-விமானம்/175-219674

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.