Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குவைத் தம்பதிக்கு பிணை நாட்டை விட்டு வெளியேற தடை

Featured Replies

குவைத் தம்பதிக்கு பிணை நாட்டை விட்டு வெளியேற தடை

 

 

குவைத் தம்பதிக்கு பிணை நாட்டை விட்டு வெளியேற தடை-Kuwait Couple Ban to Leaving from Country

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் 5 பேரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட குவைத்திலிருந்து வந்த தம்பதியினருக்கு நாட்டிலிருந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (30) நீர்கொழும்பு நீதவான் சஜிந்திர ஜயசூரிய முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விசாரணைகள் முடியும் வரை குறித்த இருவரையும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிப்பதாக உத்தரவிட்ட நீதவான், குறித்த உத்தரவின் பிரதியை குடிவரவு - குடியகல்வு திணைக்களத்திற்கும் அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை (27) காலை குவைத்திலிருந்து வந்த 32, 24 வயதான தம்பதியினர், தம்முடன் தமது செல்லப்பிராணியான நாயையும் அழைத்து வந்துள்ளனர்.

செல்லப் பிராணிகள் கடவுச்சீட்டு மற்றும் இறக்குமதி தொடர்பான இலங்கை சட்டத்தின் கீழ், அது நோய் எதனையும் கொண்டுள்ளதா என அவதானிப்பதற்காக, குறித்த பிராணியை 3 நாட்களுக்கு தடுத்து வைத்து அவதானிக்க மேற்கொண்ட முயற்சிக்கு மறுப்புத் தெரிவித்த குறித்த தம்பதியினர், வருகை தரும் பகுதியிலிருந்து பலாத்காரமாக வெளியேற முயற்சி செய்துள்ளனர்.

 

 
 

இதன்போது, அங்கிருந்து சுங்க அதிகாரிகள் ஐவரை அவர்கள் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த ஐவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் ரூபா ஒரு இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டதோடு, குறித்த வழக்கு விசாரணையை இன்று (30) வரை ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

http://www.thinakaran.lk/2018/07/30/குற்றம்/25763/குவைத்-தம்பதிக்கு-பிணை-நாட்டை-விட்டு-வெளியேற-தடை

  • தொடங்கியவர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பெரும் பதற்றம்! காணொளி வெளியானது

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த 27ஆம் திகதி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தின் காணொளி வெளிவந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த 27ஆம் திகதி பெண் சுங்க அதிகாரி ஒருவர் உள்ளிட்ட ஐவர் மீது குவைத் நாட்டு தம்பதியினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

குறித்த குவைத் நாட்டு தம்பதியினர் நாய் ஒன்றை நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்துள்ளனர். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட சுங்கப் பிரிவினர் நாயை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரினர்.

எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்த குவைத் பிரஜைகள் சுங்க அதிகாரிகள் மீது இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

 

இதையடுத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை இவர்கள் நாட்டை விட்டு வெளியேற நீர்கொழும்பு நீதிவான் சஜீந்ர ஜயசூரிய தடை விதித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இதையடுத்து தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு கட்டுநாயக்க நிலைய அதிகாரிகள் நேற்றும் இன்றும் பணிப் பகிஷ்ரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக சுங்க நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு விமான நிலையத்தை பரபரப்படையச் செய்திருந்த சம்பவத்தை ஒருவர் காணொளி எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/security/01/189527?ref=imp-news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.