Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினருக்குப் பாதுகாப்பில்லை- எண்ணெய்க் கடையை மூட உத்தரவு!!

Featured Replies

படையினருக்குப் பாதுகாப்பில்லை- எண்ணெய்க் கடையை மூட உத்தரவு!!

 

160227181336_mullaitivu_512x288_bbc_nocr

 
 
 

முல்லைத்தீவு கேப்பாப்பிலவுப் பகுதியில் மீள்குடியேற்றப்பட்டு தங்களின் வாழ்வாதாரத்திற்காக ஒரு சிறு எண்ணெய் கடை ஒன்றினை வைத்து நடத்தி வந்த குடும்பத்தினை கடையை மூடுமாறு முள்ளிவளைப் பொலிஸார் பணித்துள்ளனர் என்று அறியமுடிகிறது.

கேப்பாபுலவில் படைத்தலைமையம் அமைந்துள்ள இடத்திற்கு முன்னால், மீள்குடியேறிய குடும்பம் ஒன்று சிறு பெட்டிக்கடையாக எண்ணெய் கடை ஒன்றினை நடத்தி வந்தனர்.

இந்த நி்லையில் படையினரின் முகாமிற்கு பாதுகாப்பு இல்லை என்பதால் கடையை அகற்றுமாறு கோரியுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். கடை உரிமையாளர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

இந்தச் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸாரைக் தொடர்பு கொண்டு கேட்ட போது, குறித்த எண்ணெய்கடை நடத்துவதற்கு அங்கு அவர்கள் அனுமதி எடுக்கவில்லை. அவ்வாறு எண்ணெய்கடை நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படுவதும் இல்லை. அனுமதி இல்லாத நிலையில் குறித்த கடையினை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.

http://newuthayan.com/story/03/படையினருக்குப்-பாதுகாப்பில்லை-எண்ணைக்-கடையை-மூட-உத்தரவு.html

  • தொடங்கியவர்

இராணுவம் எமது நிலங்களை விட்டு வெளியேறினால் இந்த அவல நிலை எமக்கு இருக்காது : மக்கள் குரல்!!!

 

 

 

முல்லைத்தீவு - கேப்பாபுலவு இராணுவ முகாம் முன்பாக சிறிய எரிபொருள் விற்பனை நிலையத்தினை நடத்திவந்த கேப்பாபுலவு பகுதியை சேர்ந்த ஒருவரின் கடையை குறித்த இடத்தில் நடத்த முடியாது என தெரிவித்து முள்ளியவளை பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவது,

கேப்பாபுலவில் படைத்தலைமையகம் அமைந்துள்ள இடத்திற்கு முன்னால் அண்மையில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட தமது நிலத்தில் மீள் குடியேறிய குடும்பம் ஒன்று சிறு பெட்டிக்கடையாக எண்ணெய் கடை ஒன்றினை வைத்து நடத்தி வந்துள்ளார்கள்.

koppapulavu_.jpg

இந் நிலையில் படையினரின் முகாமிற்கு இது பாதுகாப்பு இல்லை எனவும் இந்த கடை இப் பகுதியில் இருப்பதால் இராணுவத்துக்கு இது ஆபத்தாக அமையும் என தெரிவித்து முள்ளியவளை பொலிஸார் குறித்த கடையை மூடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.

இராணுவம் தமக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இராணுவத்துக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தினாலேயே குறித்த கடையை நடத்த வேண்டாம் என தாம் உத்தரவிடுவதாக முள்ளியவளை பொலிஸார் தமக்கு தெரிவித்ததாக கடையின் உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.

தமது காணிகளை அத்துமீறி பிடித்துவைத்துள்ள இராணுவம் அந்த நிலங்களில் உள்ள தமது வாழ்வாதாரங்களை, வருமானங்களை தம்மை பெற விடாது தாமே அனுபவித்துவரும் நிலையில் அண்மையில் விடுவிக்கப்பட்ட தமக்குரிய நிலத்தில் கடன்களை பெற்று சிறிய முதலீட்டை செய்து இந்த வியாபார நிலையத்தினை நடாத்திவரும் நிலையில் இராணுவத்தின் ஏவலில் பொலிஸார் தமது நடவடிக்கைக்கு தடைபோட்டிருப்பது வேதனை அளிப்பதாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.

இராணுவம் தமது நிலங்களை விடுவித்து விட்டதாக கூறிக்கொண்டு விடுவித்த எமது நிலங்களில் நாம் சுதந்திரமாக தொழில்செய்ய தடைவிதிப்பதாக கடையின் உரிமையாளர் மேலும் தெரிவித்தார். இராணுவம் எமக்குரிய எமது நிலங்களை விட்டு வெளியேறினால் இந்த அவல நிலை எமக்கு இருக்காது என மேலும் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரை தொடர்புகொண்ட முல்லைத்தீவு பாதுகாப்புபடைத்தலைமையக இராணுவ ஊடக அதிகாரி குறித்த உத்தரவை தாம் வழங்கவில்லை எனவும் அவர்கள் அந்த இடத்தில் கடை நடத்துவதில் தமக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லை எனவும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த எண்ணெய் கடை நடத்துவதற்கு அங்கு அவர்கள் அனுமதி எடுக்கவில்லை அவ்வாறு எண்ணெய்கடை நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படுவதும் இல்லை அனுமதி இல்லாத நிலையில் குறித்த கடையினை மூடுமாறு அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் இவ்வாறுகூறியிருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல நூறுக்கணக்கான எரிபொருள் விற்பனை நிலையங்கள் இவ்வாறு பல வருடங்களாக இயங்கிவருகின்றதோடு அவ் வியாபார நடவடிக்கைகளுக்கு எவரும் இதுவரையில் தடை விதிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/37541

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.