Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த இலட்சணத்தில் அடுத்த முதலமைச்சரும் நானே என்ற கனவில் விக்னேஸ்வரன் மிதப்பது வியப்பாக இருக்கிறது!

Featured Replies

இந்த இலட்சணத்தில் அடுத்த முதலமைச்சரும் நானே என்ற கனவில் விக்னேஸ்வரன் மிதப்பது வியப்பாக இருக்கிறது!

 

குடியானவனுக்குப் பேய் பிடித்தால் பூசாரியைக்கொண்டு வேப்பிலை அடிக்கலாம். ஆனால் பூசாரிக்கே பேய் பிடித்தால் என்ன செய்யலாம்?

வட மாகாண சபையின் நிருவாகம் கடந்த ஒரு மாதகாலமாக பேரளவு முடங்கிப் போய்க் கிடக்கிறது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்.

அமைச்சரவை கூடவில்லை. அமைச்சரவையைத் தனது ஒப்புதலின்றி கூட்டக் கூடாது என முதலமைச்சருக்கு ஆளுநர் கூரே எழுத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்குக் கனதியான காரணம் இருக்கிறது. முதலமைச்சர் உட்பட அமைச்சரவையின் எண்ணிக்கை 5 யை மேவக் கூடாது என்பது சட்டம். ஆறுஅமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை கூடினால் சட்டச் சிக்கல் வரும். அரசியல் யாப்பை மீறுவதாக இருக்கும்.

பா.டெனீஸ்வரன் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்தை நீக்கக் கேட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த செப்ரெம்பர் 1, 2017 இல் மனுவொன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் பிரதிவாதிகளாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், அந்த மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண ஆளுநர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர். ஓகஸ்ட் 20, 2017 இல் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார் என்று மனுதாரர் பா. டெனீஸ்வரன் கூறினார்.

viky.jpg

பதவி நீக்குவதற்கு முன்னர் முதலமைச்சர் தனக்கு எதிராக எந்தவிதமான விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை என்று கூறிய மனுதாரர், அரசியல் சாசனத்தின்படி மாகாண அமைச்சர் ஒருவரை பதவி நீக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனவே தன்னை பதவி நீக்குவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தீர்ப்பளிக்குமாறு நீதிமன்றத்தில் கோரியிருந்த மனுதாரர், முதலமைச்சரின் தீர்மானத்தை நீக்கும் கட்டளையொன்றைப் பிறப்பிக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த யூன் 29, 2018 அன்று வெளிவந்தது. இருபத்துமூன்று பக்கங்கள் கொண்ட தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்கிரமசிங்கி எழுதினார். இரண்டாவது நீதிபதி ஜானக் டி சில்வா அதற்கு இசைவு தெரிவித்தார்.

நீதிபதிகள் தங்கள் இடைக் காலத் தீர்ப்பில் பா.டெனீஸ்வரனது அமைச்சுக் கடைமைகளை எஞ்சிய அமைச்சர்கள் மேற்கொள்வதற்குத் தடை விதித்தது. அதுமட்டுமல்ல பா.டெனீஸ்வரனை அவரது அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அனுப்பி வைத்த கடிதத்தை இரத்து செய்தது. ஒரு அமைச்சரை நீக்கும் அதிகாரம் சட்டப்படி முதலமைச்சருக்குக் கிடையாது என நீதிபதிகள் தீர்ப்பளித்தார்கள்!

“முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தவறைச் சுட்டிக் காட்டவே அவரது உத்தரவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தேன். எனது முயற்சி அநீதிக்கு எதிரானது. முதலமைச்சர் தான்தோன்றித்தனமாக எடுத்த முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது ” என டெனீஸ்வரன் குறிப்பிட்டார்.

எல்லோருக்கும் பலன் சொல்லும் பல்லி தான் மட்டும் கூழ்ப்பானைக்குள் விழுந்து உயிரை விட்ட கதையாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தான் வெட்டிய குழிக்குள் தானே விழுந்துவிட்டார். வழக்குகளை விசாரித்து சான்றுகளின் அடிப்படையில் தீர்ப்பளித்து வந்த முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் ஒரு சாதாரண சட்டத்தரணிக்குத் தெரிந்த சட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டுள்ளார். ஒரு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் கைகளினால் குட்டுவாங்குவது வெட்கக் கேடானது!

deniswaran.jpg

நீதிமன்றங்களில் நேரவிரயத்தையும் பணவிரயத்தையும் தவிப்பதற்கு டெனீஸ்வரன் ஒரு ஆலோசனையை முன்வைத்துள்ளார். தன்னைப் பதவி விலக்கியது தவறு என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒத்துக் கொண்டால் தான் தனது பதவியை இராஜினாமா செய்துவிடுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு டெனீஸ்வரனின் பெருந்தன்மையை பறைசாற்றுகிறது. எதிர்பார்த்தது போலவே இந்த அறிவிப்பையிட்டு முதலமைச்சர் மவுனம் சாதிக்கிறார். வழக்கம் போல் விக்னேஸ்வரன் இந்தச் சிக்கலைத் தனது தன்மானத்துக்கு விடுத்த சவாலாக நினைக்கிறார்! மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து விக்னேஸ்வரன் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருக்கிறார்.

தன்னை சட்டச் சிக்கலில் மாட்டுவதற்கு அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் சில உறுப்பினர்கள் முயற்சிப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம் சாட்டுகிறார். இதனை அவைத் தலைவர் சிவஞானம் மறுத்திருக்கிறார். வடமாகாண அமைச்சர்கள் விவகாரம் குறித்து முதலமைச்சர் நினைத்தால் உடனடியாகவே தீர்வினைக் காணலாம் என அவைத் தலைவர் சிவஞானம் கூறியுள்ளார். இது தொடர்பாக நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சட்டத்தின்படி அமைச்சர்களை நியமனம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது. அதேபோல் ஆளுநர் அமைச்சர்களை முதலமைச்சரின் ஆலோசனைகளின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்யலாம். அந்த அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கிறது. ஆனால் அவரால் அமைச்சர்களை நேரடியாக தன் விருப்பப்படி நியமிக்கும் உரிமையில்லை. அதே போல் அமைச்சர்களை தன் விருப்பப்படி நீக்க முடியாது. அந்த அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதாவது முதலமைச்சர் தனியாகவோ அல்லது ஆளுநர் தனியாகவோ செயற்பட இயலாது. இருவரும் ஒன்றாகவே செயற்படவேண்டும். அப்படித்தான் அரசியல் யாப்புச் சொல்கிறது.

அதேசமயம் அமைச்சர் டெனீஷ்வரன் விடயத்தில் அவரை முதலமைச்சர் பதவி நீக்கம் செய்த முறமை பிழையானது என்றே மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. மற்றப்படி டெனீஷ்வரனை பதவி நீக்கம் செய்ய முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிடவில்லை. இருந்தும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு மாகாண அமைச்சரை நியமிக்கவோ பதவி நீக்கம் செய்யவோ தனக்கு அதிகாரம் இல்லை எனப் பொய் சொல்கிறார் அதன் மூலம் 13 ஏ சட்டத் திருத்தத்தினால் எந்தப் பலனும் இல்லை எனச் சொல்கிறார். அது சரியென்றால் பின் எதற்காக அதே சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட முதலமைச்சர் பதவிக்கு நாயாய் பேயாய் அலைகிறார்?

வட மாகாண சபையின் அமைச்சரவை கூட்டப்படுவதற்கு ஆளுநர் தடை விதித்துள்ளதால் சபையின் நிருவாகம் பேரளவு முடக்கப்பட்டுள்ளது. பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது என்பது போல எமது மக்கள்தான் பாவம் செய்தவர்கள். முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சர் இடையிலான அதிகாரப் போட்டிக்கு இடையில் அகப்பட்டு மக்கள் தவிக்கிறார்கள். அவர்களது துன்பங்கள், துயரங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்றால் குறைந்தது இன்னும் ஆறுமாதங்கள் காத்திருக்க வேண்டும். மாகாண சபைத் தேர்தல் அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடைபெறலாம் எனத் தெரிகிறது.

இது இவ்வாறிருக்க,தனது சாணக்கியம் அறவே அற்ற வீறாப்புப் பேச்சுக்களாலும் நடவடிக்கைகளாலும் விக்னேஸ்வரன் தனது எதிரிகளின் எண்ணிக்கையை கூட்டிக் கொண்டு போகிறார்.

sivaganam.jpg

போரினால் வீடுவாசல்களை இழந்து வானமே கூரையாகப் படுத்துறங்கி எழும் தமிழ்மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் பல்லாயிரக் கணக்கில் இப்போதும் இருக்கிறார்கள். போர் முடிந்து 9 ஆண்டுகள் கடந்தும் அவர்கள்,அவர்களது சொந்தக் காணிகளில் மீள் குடியேற்றப்படவில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் மக்களுக்கு சொந்தமான 4,507 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படவில்லை. அது படையினர் வசம் உள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் 9,564 குடும்பங்களைச் சேர்ந்த 33,286 மக்கள் இன்னமும் மீள்குடியமர்த்தப் படவில்லை. மொத்தம் 580 குடும்பங்களைச் சேர்ந்த 2,204 பேர் 24 இடைத் தங்கல் முகாம்களில் ஏதிலிகளாக வாழ்கிறார்கள். இவ்வாறு அல்லல்படும் எமது மக்களுக்கு இந்திய அரசு கடந்த காலத்தில் 40,000 கல்வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது. இந்த ஆண்டு இந்திய அரசின் உதவியுடன் மேலும் 60,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இடம் பெயர்ந்து மீளக் குடியேறியவர்களுக்கு சில ஊர்களில் இராணுவம் சிறு தொகையான வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது. கட்டிக் கொடுத்து வருகிறது. ஆனால் விக்னேஸ்வரன் இராணுவம் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதுபற்றி என்ன சொல்கிறார்?

“பெரும்பான்மையினரின் அரசியலுக்காக சாதாரண தமிழ்மக்களின் வறுமையைப் பாவித்து உதவ வருவது சரிபோல் தெரிந்தாலும் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவது தமிழினமே” என ஒப்பாரி வைக்கிறார் விக்னேஸ்வரன். இராணுவத்தினர் ஆங்காங்கே சிறு எண்ணிக்கையில் வீடுகள் கட்டிக் கொடுப்பது, குளங்கள் துார்வாருவது பேன்ற நிருமாண வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இதற்கு எதிராக விக்னேஸ்வரன் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.

முதலமைச்சருக்கு கொழும்பில் சொந்த வீடு இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் அரசாங்க செலவில் மாதம் உரூபா 75,000 கொடுத்து வாடகை வீட்டில் இருக்கிறார். எனவே அவருக்கு வீட்டுச் சிக்கல் இல்லை. ஆனால் ஏழை பாழைகளுக்கு வீட்டுச் சிக்கல் பெரிய சிக்கலாக இருக்கிறது. வீடுகளை யார் கட்டிக் கொடுத்தாலும் இரண்டு கைகளாலும் அவற்றை வாங்க அவர்கள் அணியமாக இருக்கிறார்கள்.

சரி, தமிழ் மக்கள் இராணுவத்தினர் கட்டிக் கொடுக்கும் வீடுகளை ஏற்கக் கூடாது, அது தமிழர்களது தன்மானத்துக்கு இழுக்கு என்றால் முதலமைச்சருக்கு கொடுக்கப்படும் சம்பளம், வீடு, பயணச் செலவு எங்கிருந்து வருகிறது? பதவி ஏற்ற பின்னர் யாழ்ப்பாணம் – கொழும்புக்கும் இடையில் இடம்பெற்ற விமானப் பயணத்துக்கு விக்னேஸ்வரன் உரூபா 22 இலட்சத்தை மக்களது வரிப்பணத்தில் இருந்து செலவழித்துள்ளார்! இதில் அவரது உதவியாளரும் அடக்கம். இந்தச் சலுகையை விக்னேஸ்வரன் யாரிடம் யாசித்துப் பெற்றார்?

இராணுவ தளபதி சி.ஏ. சந்திரசிறி ஆளுநராக இருந்த போது அவரிடம்தான் விக்னேஸ்வரன் பயணச் சலுகையை யாசித்துப் பெற்றார். அதில் குற்றமில்லை. ஆனால் அதே விக்னேஸ்வரன் தமிழ்மக்கள் இராணுவம் கட்டிக் கொடுக்கும் வீடுகளை பெறக் கூடாதாம்! அது தன்மானத்துக்கு இழுக்காம்!தமிழ் இனத்தின் எதிர்கால நலன் பாதிக்கப்படுமாம்!

இந்த இலட்சணத்தில் அடுத்த முதலமைச்சரும் நானே என்ற கனவில் விக்னேஸ்வரன் மிதப்பது வியப்பாக இருக்கிறது!

 

http://www.newsuthanthiran.com/2018/07/24/இந்த-இலட்சணத்தில்-அடுத்த/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.