Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி எனக்கு மிகவும் வேண்டியவர்: அவரின் மனதைப் புண்படுத்த எனக்கு எந்த தேவையுமில்லை

Featured Replies

ஜனாதிபதி எனக்கு மிகவும் வேண்டியவர்: அவரின் மனதைப் புண்படுத்த எனக்கு எந்த தேவையுமில்லை

 

ஜனாதிபதி எனக்கு மிகவும் வேண்டியவர். அவரின் மனதைப் புண்படுத்த எனக்கு எந்த விதத்திலும் தேவையுமில்லை, மனமும் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலக 'இலங்கை முயற்சியாண்மை' தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று காலை யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டப்பத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நான் இன்று பேசுவதாக இருக்கவில்லை. ஆனால் அம்மையார் சந்திரிக்க அவர்கள் வருவதால் ஒருவேளை அவர்கள் உங்களைப் பேச அழைத்தாலும் ஆயத்தமாக இருங்கள் என்று என்னிடம் அபாய ஒலி எழுப்பப்பட்டது.

பல விதமான வேலைப்பளுக்களுள் அகப்பட்டிருக்கும் நான் எனது கருத்துக்களை இன்று அதிகாலை கடதாசியில் எழுந்து எழுதி வைத்தேன்.

“ஆங்கிலத்தில் Enterprise என்ற சொல் தமிழில் முயற்சியாண்மை என்று தரப்பட்டுள்ளது. முன்பு 'அருந் தொழில்' என்று இச் சொல் மொழி பெயர்க்கப்பட்டமை நினைவிருக்கின்றது. அதாவது ஒரு வித்தியாசமான தொழில் தான் Enterprise என்று தமிழில் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் மொழி பெயர்க்கப்பட்டது.

ஆனால் தற்போது அதற்குக் கொடுத்திருக்கும் 'முயற்சியாண்மை' என்ற சொல் அதன் தாற்பரியத்தை விளக்குவதாக அமைந்துள்ளது.

ஆண்மை என்ற சொல்லின் அர்த்தம் 'ஆளுந் தன்மை' என்பது. ஒருவன் தன்னைத்தானே ஆளலாம். மற்றவர்களை ஆளலாம். இங்கு தன் சொந்த முயற்சிகளால் ஒருவன் தன்னைத் தானே விருத்தி செய்து சுயதொழில் செய்து தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள மக்களையும் அவர்கள் வாழும் இடத்துக்கும், நாட்டுக்கும் நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதையே 'முயற்சியாண்மை' என்ற சொல் குறிக்கின்றது.

அதாவது ஒரு நாட்டை தொழில்கள் மூலம் கட்டி எழுப்ப அந்நாட்டின் மக்களுக்கு அரசாங்கங்கள் இடமளிப்பதையே இந்தச் சொல் குறிக்கின்றது.

பல வருடங்களுக்கு முன்னர் இந்த அடிப்படைக் கருத்தை அரிமா கழகங்கள் என்று அழைக்கப்படும் லயன் கழகங்கள் முன் வைத்திருந்தன. அதாவது லயன் கழகங்கள் மக்களுக்குக் கொடைகள் கொடுத்து, பரிசுகளை வழங்கி, அன்பளிப்புக்கள் செய்து வருவதை மாற்றி மக்கள் தம்மைத் தாமே விருத்தி செய்ய நாம் உதவி புரிய வேண்டும் என்ற சித்தாந்தத்தைக் கொண்டு வந்திருந்தார்கள்.

ஒரு பச்சிளம் பாலகனைக் கைகளில் பிடித்து நடத்திச் செல்லலாம். அதை விட்டு அவன் நடக்க எத்தனித்து விழும் போது அவனைத் தூக்கி விட்டு, வேண்டும் போது அவனுக்கு ஒரு முட்டுக் கொடுத்து தூக்கி, ஊன்று கோல் போல் அவன் செய்யும் செயல்களுக்கு ஒத்தாசையாகவும் நாம் செயற்படலாம். அதைத்தான் 'முயற்சியாண்மை' என்ற சொல் குறிக்கின்றது.

ஒருவன் தன்னைத் தானே தொழிலில் விருத்தியடைய எத்தனிக்கும் போது தக்க பக்க உதவிகள் கொடுத்து தன்னைத்தானே அவன் தொழில் ரீதியாக ஆள வழிவகுப்பதே 'முயற்சியாண்மை' என்பது. தொழிலில் உதவிகளுடன் தானாக முயன்று ஆட்சித் தன்மையைப் பெறுவதே 'முயற்சியாண்மை' என்று கூறலாம்.

இந்த கருத்தை மொண்டசூரி அம்மையார், பச்சிளம் குழந்தைகளின் வளர்ச்சியில் முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்து வெற்றி கண்டார். மொண்டசூரி அம்மையாரின் முதல் மாணவிகளில் ஒருவர் ஜொய்ஸ் குணசேகர என்ற இலங்கையர்.

அவரின் முதல் மாணவிகளில் ஒருவரே எனது மனைவியார். நாங்கள் குழந்தைகளை வளர்க்கக் கூடாது வளர விட வேண்டும் என்று எனது மனைவியார் எப்பொழுதும் கூறுவார். இந்தக் கருத்து தற்போது சமூக சிந்தனைகளிலும் சுடர் விட்டு ஒளிர்வதைக் காண்கின்றேன்.

இதையே தத்துவஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆத்மீகத்திலும் அடையாளப்படுத்தினார்.

ஓணூர் எனப்படும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் இந்த வகையிலேயே இலங்கை முயற்சியாண்மை என்ற செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

கடனுதவிகள் செய்து, உபகரண உதவிகள் செய்து, நிபுணத்துவ ஆலோசனைகள் கொடுத்து தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதே 'இலங்கை முயற்சியாண்மை' என்ற செயற்றிட்டத்தின் நோக்கு.

மூன்று தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி அவர்களால் கூட்டப்பட்ட 48 பேர் கொண்ட கூட்டத்தில் மிக்க மனவருத்தத்துடன் கலந்து கொள்ளாது விட்டேன். காரணமும் கூறினேன்.

ஜனாதிபதி எனக்கு மிகவும் வேண்டியவர். அவரின் மனதைப் புண்படுத்த எனக்கு எந்த விதத்திலும் தேவையுமில்லை, மனமும் இல்லை. அவருக்கு என்னால் அரசியல் ரீதியாகத் தெரிவிக்கப்பட்ட கருத்து தெற்கானது எங்களை நாங்களாக வாழ உதவி புரிய வேண்டும் என்பதே.

நீங்களாக முடிவெடுத்து எம்மை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காதீர்கள் என்பதையே அவருக்கு சுட்டிக் காட்டினேன். சந்திரிக்கா அம்மையாருக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த டி.பி.விஜயதுங்க சிங்கள மக்கள் மரமென்றால் சிறுபான்மையோர் அதைச் சுற்றி வளரும் கொடி போன்றவர்களாக வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என்றார்.

அந்த கருத்துடன் எமக்கு ஏற்பில்லை. எம்மையும் சிறு மரங்களாக நாம் விரும்பும் விதத்தில் வாழ வழி வகுத்துத் தாருங்கள் என்பதே எமது கோரிக்கை. இன்று சந்திரிக்கா அம்மையார் இந்த நிகழ்வில் இங்கு பங்குபற்றி எம்மை ஊக்குவிக்கின்றார் என்றால் அவரின் கருத்துக்களும் மேலிருந்து எமக்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆணை இடுவதை விட்டு கீழிருந்து நாம் செய்வதை உன்னிப்பாக கவனித்து எம்மை உயர்வடைய வைக்க அவர் ஆயத்தமாக இருக்கின்றார் என்று அர்த்தம்.

சுயாட்சி தந்து எம்மை நாமே ஆள விடுங்கள் என்று அரசியலில் நாம் கோருகின்றோம். நீங்கள் மத்தியில் இருந்து தாய்க் கோழி குஞ்சுகள் வளர்வதைப் பக்குவமாய்ப் பார்த்து வருவது போல் எங்களைப் பார்த்து வாருங்கள் என்றே எமது அரசியல் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றோம்.

இன்று தொழில் முயற்சியாண்மையை ஆதரிக்கும் நீங்கள் அரசியலிலும் எமது முயற்சியாண்மையை ஆதரிக்க முன்வர வேண்டும். நாங்கள் பிரிந்து சென்று விடுவோம் என்ற கருத்துக்கு இடமில்லை. ஏனென்றால் மத்தி தாயாக வாழ எத்தனித்தால் மாகாணங்கள் தனையர்களாகவே இருக்க ஆசைப்படுவார்கள்.

குபேக்கைப் பாருங்கள்! 'ஆங்கிலக் கனடாவை விட்டு பிரான்சியர்களான நாம் பிரிந்து செல்ல மாட்டோம்' என்று கருத்துத் தெரிவித்திருந்தார்கள். ஆகவே 'இலங்கை முயற்சியாண்மை' என்ற சிறுதொழில், மத்திமதொழில் முயற்சியாளர்களுக்கு உதவி வழங்கி ஊக்குவிக்கும் இந்த செயற்பாடு மேலும் மேலும் வளர்ச்சியடைந்து எமது மக்களை சுயகௌரவத்துடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ வழி வகுக்க வாழ்த்துகின்றேன்.

அதே வாழவைக்கும் இந்தக் கருத்தை எமது அரசியல் யாப்பிலும் உள்ளடக்கி பிராந்திய சுயாட்சியை உத்தரவாதப்படுத்த அம்மையார் அவர்கள் முன்வர வேண்டும் என்று அவரை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

அவரே முதன் முதலில் பிராந்தியங்களின் ஒன்று கூடிய நாடே இலங்கை என்ற கருத்தை 2000ஆம் ஆண்டளவில் எமது அரசியலில் முன்வைத்தவர். அவரின் வருகைக்கு நன்றி” எனக் கூறினார்.

 

http://www.tamilwin.com/politics/01/189717?ref=home-top-trending

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.