Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லாட்சிக்கு எதிராக கொழும்பை அதிர வைத்த 'ஜனபல சேனா'

Featured Replies

நல்லாட்சிக்கு எதிராக கொழும்பை அதிர வைத்த 'ஜனபல சேனா'

 

 
 

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த பொது எதிரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'ஜனபல சேனா' ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. 

m1.jpg

தற்போதைய அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட மேற்படி ஆர்ப்பாட்டம் லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகி விகாரமாதேவி பூங்கா வரை சென்றது. இதில் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

m4.jpg

மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்க கூடாது, பிணைமுறி விவகாரம் தொடர்பில் பிரதமருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், மாகாணசபைத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் போன்ற விடயங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களினால் வலியுறுத்தப்பட்டதுடன் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தலை நிறுத்துங்கள், இந்த அரசாங்கம் எமக்கு வேண்டாம், நல்லாட்சி அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் எங்கே ஆகிய கோஷங்களும் எழுப்பப்பட்டன.

m2.jpg

m3.jpg

m5.jpg

விகாரமாதேவி பூங்கவில் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்ததோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பொது எதிரணியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/37734

  • தொடங்கியவர்
நாட்டை இராணுவமயமாக்க அரசாங்கம் முயற்சி
 

image_046712cf55.jpgபா.நிரோஸ்

இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதை சட்டமாக்குவதற்கு நல்லாட்சி அரசாங்கம் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் ஐ.தே.க மற்றும் சு.கவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவதானமாக இருக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்கள் அதிகரித்துவிட்டதாக கூறி அதனை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினரை களத்திலிறக்கிய அரசாங்கம், நாளை மனித கொலைகள் அதிகரிப்பதாக கூறி அதனை கட்டுப்படுத்துவதற்கும் இராணுவத்தினரை களத்திலிறக்கும். இதுவே இராணுவமயமாக்களின் முதற்படியாகுமெனவும் அவர் மேலும் தெரிவித்தள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியனரால், அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த ‘ஜனபலசேன’ எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போது அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றியவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து நாட்டு மக்களை ஒருவேளை உணவை மாத்திரம் உட்கொள்ளும் நிலைமைக்கு கொண்டுவந்துவிட்டனர் எனவும் கூறினார்.

பிரதமர் ரணில் விக்கரமசிங்க வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் நாட்டு வளங்களை சர்வதேச நாடுகள் வாங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்த மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் மலர உள்ள தனது ஆட்சியில் நல்லாட்சி அரசாங்கம் விற்பனை செய்த நாட்டின் சொத்துக்களை, திரும்ப வாங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும்  அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/நாட்டை-இராணுவமயமாக்க-அரசாங்கம்-முயற்சி/175-219834

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.