Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கானொளி - Gr.Brigade சார்பாக...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு பொழுதுபோக்க பல அம்சங்கள் இருக்கும். இவங்க என்னடா வேலையில்லாம இதுகள இதுக்குள்ள கொண்டு வாராங்க என்று எரிஞ்சு விழுவீர்கள்..

ஆனால் உங்களை மட்டுமன்றி எதிர்கால சந்ததியும் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய ஆபத்தை உணராத நிலையில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்..

உங்கள் சூழலியல் கடமையை மறந்து வாழ்ந்து மடியப் போகும்போது உயிர் வாழ்வுக்கு உகந்ததான பூமியை உங்கள் எதிர்கால சந்ததியிடம் விட்டுச் செல்வீர்களா என்பது கேள்விக் குறியாகி நிற்கிறது. உங்கள் பாட்டன் பூட்டன் செய்யத்தவறியதை நீங்கள் செய்து பூமியை விரைந்து மாற்றிச் சீரழித்துக் கொண்டிருப்பதை காணுங்கள்.. உங்களுக்கு சூழல் மீதுள்ள பொறுப்புணர்வை உணர்ந்து கொள்ளுங்கள்...!

யுத்தம் செய்து நாடு மீட்பினும்.. வாழ்வுக்கு உகந்த பூமி இன்றேல்.. நீங்கள் படைக்கும் தேசம் இருந்தும் என்ன பயன்....???!

கானொளி. கிறீன்பீஸ்.- Greenpeace.

யாழில் கிறீன் பிரிகேட்.

யுத்தம் செய்து நாடு மீட்பினும்.. வாழ்வுக்கு உகந்த பூமி இன்றேல்.. நீங்கள் படைக்கும் தேசம் இருந்தும் என்ன பயன்....???!

யாழில் கிறீன் பிரிகேட்.

அதற்கு பிறகு அதை புதுபூமியாக மாற்றுறது

:o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு பிறகு அதை புதுபூமியாக மாற்றுறது

:lol:

கவிதைகளில் கதைகளில் அரசியலில் புளுகித்தள்ளுவது போல் அல்ல இயற்கையின் மீதான மனித சீர்கேடுகளை சீர்செய்வதென்பது. சில விடயங்கள் மனிதனால் கூட கட்டுப்படுத்தப்பட முடியாதவை. சூழல் மாற்றங்களும் அந்த வகையினதாகவே மாறி வருகின்றன..!

சூழல் மாசடைத்தல் பற்றிய விழிப்புணர்வு நோக்கிய ஒரு இணைப்பு..

http://www.leonardodicaprio.org/whatsimpor...ing_movie01.htm

நல்ல இணைப்பு நன்றி எனக்கு ஒரு கேள்வி பொதுவாக இது அனைத்து நாடுகளிலும் காணப்படும் ஒரு பிரச்சினை ஆனால் சண்டை பிடிப்பதை மட்டும் இதில் சேர்பது அவ்வளவு பொருத்தமாக இருக்காது,அத்தோட இதை பற்றிய பல ஆய்வுகளை நான் அவுஸ்ரேலியா பல்கழைகழங்களில் செய்திருக்குறோம்,நான் இதை பற்றி தொடர்புடைய பாடம் படிக்கவில்லை பட் அவுஸ்ரேலியாவில் கட்டாயமாக இதை பற்றிய ஆயிவுகள் பற்றி படித்தாக வேண்டும்,அந்த ஒரு கோணத்தில் சிறிதளவு படித்தனான்,அதில் அவர்கள் கூறுகிறார்கள்,இது வளர்முகநாடு,வளர்ச்சி அடைந்த நாடு என்று இல்லாமல் எல்லா நாடுகளையும் பாதிக்கும் ஒரு போதுவான கூறாகவே இதை கணித்திருந்தார்கள்,உங்களுக்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகவெப்ப முறுதல் பொதுவான பிரச்சனை என்றாலும் industrialized நாடுகள் என்று அழைத்துக்கொள்ளும் வளர்ந்த நாடுகளே அதிகம் உலக வெப்பமுறுதலில் சம்பந்தப்பட்ட காரணிகளை CO2 உள்ளடங்க வெளித்தள்ளிக் கொண்டிருக்கின்றன. இப்போ சீனாவும் இந்தியாவும் அவற்றோடு சேர்ந்துவிட்டன.

world_water.gif

நன்னீர் பற்றாக்குறையை விளக்கும் படம்.

அவுஸ்திரேலியா மட்டுமல்ல உலகின் நன்னீர் இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது. நன்னீர் புதிப்பிக்கப்பட முடியாத வளங்களுக்குள் ( non - renewable resourses) இடப்படுகிறது. நன்னீர் நிலைகளின் சேமிப்பிடமாக துருவப் பனிப்பாறைகள் இருந்தன.. உயர்ந்த பிரதேச பனிப்படிவுகள் இருந்தன.. மலைகளில் தோன்றும் நீரோடைகள் விளங்கின.. நிலத்தடி நன்னீர் நிலைகள் விளங்கின.. உலக வெப்ப முறுதல் இந்த வளங்களை மீள முடியாத அளவுக்கு குறைத்து வருகிறது. அதனைக் காட்டவே முதலாவது காணொளி தரப்பட்டது. உலகின் உயர்ந்த பிரதேசமாக விளங்கும் இமாலயத்தை அண்டிய திபெத்தே பாலைவனமாகி வரும் நிலையில் ஏற்கனவே பாலவனத்தை அதிக அளவில் கொண்ட அவுஸ்திரேலியா என்னாகும்...??!

அதுமட்டுமன்றி அடிக்கடி நிகழும் பூகம்பங்கள் நிலக்கீழ் பாறைகளின் ஒழுங்குகளை மாற்றியமைப்பதால் கூட நிலத்தடி நன்னீர் நிலைகள் கூட உவர்ப்பாவது நிகழ்கிறது..!

அதுமட்டுமன்றி உலக வெப்பமுறுதல் நீர்வட்டத்திலும் குறிப்பிடத்தக்க அளவு செல்வாக்குச் செய்வதால் நன்னீர் பிடிப்புள்ள நில அமைப்பு மாறுபடுவதால் அதிகளவு மழை நீர் கடலையே சேர்கிறது. உலகெங்கும் வாழும் மக்கள் நன்நீர் முகாமைத்துவ அறிவின்மையோடே வாழ்கின்றனர். எதிர்கால சந்ததியின் நிலை பற்றி சிந்திப்பவர்களாக இல்லல..! இந்த நிலை தொடர்ந்தால் குடி நீர் பெற்றோலை விட பெறுமதி கூடியதாக இருப்பதோடு குடிநீர் இன்றிய சாவுகள் வறிய நாடுகள் எங்கும் அதிகரிக்கும்..!

உசாத்துணைக்கு..

http://whyfiles.org/131fresh_water/2.html

Edited by nedukkalapoovan

தகவலுக்கு நன்றி நெடுக்ஸ்

நெடுக்ஸ் இங்கே ஆராயிச்சியாளர்கள் சொல்வது போல இன்னும் 60,70 வருடங்களில் அவுஸ்ரேலியா பாலைவனமாக மாறிடும் என்று குறிபிட்டிருந்தார்கள் அது சாத்தியபட வாயிப்பிருக்கா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் இங்கே ஆராயிச்சியாளர்கள் சொல்வது போல இன்னும் 60,70 வருடங்களில் அவுஸ்ரேலியா பாலைவனமாக மாறிடும் என்று குறிபிட்டிருந்தார்கள் அது சாத்தியபட வாயிப்பிருக்கா

உலக வெப்பமுறுதல் இதே வேகத்தில் தொடர்ந்து நிகழுமானால் அவுஸ்திரேலியா என்ன உலகின் பல பகுதிகள் பாலைவனமாவது தவிர்க்க முடியாததாக இருக்கும். பல பகுதிகள் சமுத்திரங்களால் விழுங்கப்படுவதும் நிகழும்..! :lol:

உங்களுக்கு ஆங்கிலப் புலமை இருக்கும் என்பதால் இதில் உள்ள குறிப்புக்களை வாசியுங்கள்..!

Global warming will make climates 'disappear'

IF trends in global warming continue, South Australia's climate would vanish by 2010, taking with it vulnerable plants and animals.

The dire prediction comes from US researchers who claim global warming may cause climatic conditions prevailing on almost half the world's landmass to change beyond recognition, effectively "disappearing".

http://www.theaustralian.news.com.au/story...6-30417,00.html

http://www.sciencedaily.com/news/earth_cli...global_warming/

மேலும் சில காணொளிகள்..

http://www.weberberg.de/skool/global-warming.html

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.