Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாம்சங் கேலக்ஸி நோட் 9 அறிமுக வீடியோவில் வெளியான தகவல்கள்

Featured Replies

சாம்சங் கேலக்ஸி நோட் 9 அறிமுக வீடியோவில் வெளியான தகவல்கள்

 

 

கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் இரண்டு அறிமுக வீடியோக்கள் தவறுதலாக லீக் ஆகி பின் உடனே எடுக்கப்பட்டு விட்டது. வீடியோக்களில் கிடைத்திருக்கும் தகவல்களை பார்ப்போம். #Unpacked #GalaxyNote9

 
 
 
 
சாம்சங் கேலக்ஸி நோட் 9 அறிமுக வீடியோவில் வெளியான தகவல்கள்
 
 
 
சாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் இரண்டு அதிகாரப்பூர்வ அறிமுக வீடியோக்களை வெளியிட்டு, பின் அவற்றை எடுத்து விட்டது. புதிய வீடியோக்களின் மூலம் நோட் 9 ஸ்மார்ட்போனில் 512 ஜிபி மெமரி வழங்கப்பட இருப்பது உறுதியாகியுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட இருக்கிறது.
 
201808031619235912_1_Note-9-Battery-Promo-Leak._L_styvpf.jpg
 
201808031619235912_2_New-S-Pen-Leak._L_styvpf.jpg
 
நோட் 9 ஸ்மார்ட்போனுடன் புதிய எஸ் பென் ஸ்டைலஸ், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது. இதன் எஸ் பென் கீழ்புறம் பட்டன் மற்றும் க்ளிக்கர் ஒன்றை கொண்டுள்ளது.
 
ஸ்மார்ட்போனின் பின்புறம் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கேமராவின் கீழ் புறம் சாம்சங் பிரான்டிங் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் ஐரிஸ் சென்சார் முன்பக்கம் வழங்கப்படுகிறது. புதிய நோட் 9 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9810 அல்லது ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம்.
 
201808031619235912_3_Note-9-Promo-Leak-Pic._L_styvpf.jpg
 
இதன் கேமரா சென்சார்கள் தற்சமயம் விற்பனையாகும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். இத்துடன் சாம்சங்கின் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை மேம்படுத்தப்பட்டு பிக்ஸ்பி 2.0 வெர்ஷன் அறிமுகம் செய்யலாம். புதிய நோட் 9 ஸ்மார்ட்போன் பிளாக், புளு, கிரே, லாவென்டர் மற்றும் புதிய பிரவுன் நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.
 
புதிய கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் விலை 1000 டாலர்களுக்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்டு 9-ம் தேதி தெரியவரும். #Unpacked #GalaxyNote9

https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/08/03161924/1181295/Samsung-Galaxy-Note-9-promo-video-goes-live-accidentally.vpf

  • தொடங்கியவர்

சாம்சங் கேலக்ஸி நோட் 9 விலை மற்றும் சிறப்பம்சங்கள்

 
அ-அ+

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #GalaxyNote9 #Unpacked

 
 
 
 
சாம்சங் கேலக்ஸி நோட் 9 விலை மற்றும் சிறப்பம்சங்கள்
 
 
 
சாம்சங நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 அறிமுக வீடியோ இணையத்தில் லீக் ஆனதில் ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் தெரியவந்தது. இந்நிலையில், ஸ்மார்ட்போன் பெட்டியின் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது. 
 
அதன்படி 6.4 இன்ச் QHD+ சூப்பர் AMOLED ஸ்கிரீன், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இது முந்தைய கேலக்ஸி எஸ்9 பிளஸ் மாடலை விட பெரியதாக இருக்கும். இதன் சிப்செட் மற்றும் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் கேலக்ஸி எஸ்9 பிளஸ் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது.
 
இத்துடன் புதிய 512 ஜிபி வெர்ஷனும் அறிமுகமாகிறது, எனினும் 8 ஜிபி ரேம் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
 
201808041307264571_1_Note-9-Retail-Box-Leak._L_styvpf.jpg
 
சாம்சங் கேலக்ஸி நோட் 9 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
 
- 6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960x1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் / அட்ரினோ 630 GPU
- ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9810 பிராசஸர் / மாலி G72MP18 GPU
- 6ஜிபி ரேம் 
- 64 ஜிபி / 128 ஜிபி / 512 ஜிபி மெமரி
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம்
- 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.4-f/1.5 வேரியபிள் அப்ரேச்சர், எல்இடி ஃபிளாஷ், 960fps சூப்பர் ஸ்லோ-மோ
- 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 8 எம்பி ஆட்டோ ஃபோக்கஸ் செல்ஃபி கேமரா, வைடு-ஆங்கிள் லென்ஸ்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் AKG, Dolby Atmos டியூன் செய்யப்பட்டுள்ளன
- கைரேகை சென்சார், ஐரிஸ் சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்ஏஹெச் பேட்டரி 
- ஃபாஸ்ட் சார்ஜிங், வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்
 
சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மிஸ்டிக் பிளாக், என்ஜினீர்டு புளு மற்றும் ஆர்டிசன் காப்பர் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் என்றும் இதன் 128 ஜிபி மாடலின் விலை 69,990 ரூபெல்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.75,705), 512 ஜிபி விலை 89,990 ரூபெல்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.97,340) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. #GalaxyNote9 #Unpacked
 
புகைப்படம் நன்றி: Dmitriy Ryabinin

https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/08/04130726/1181654/Samsung-Galaxy-Note9-retail-box-specs-price-leak.vpf

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கேலக்ஸி நோட் 9, கேலக்ஸி ஹோம், ஸ்மார்ட் வாட்ச்! - சாம்சங் ஆர்மிக்கு ஜாக்பாட்

 
 

பெரும்பாலான நிறுவனங்கள் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி விட்ட நிலையில் சாம்சங் மட்டுமே மிச்சம் வைத்திருந்தது. கேலக்ஸி ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியதன் மூலமாக அந்தச் சந்தையிலும் கால் பதிந்திருக்கிறது.

கேலக்ஸி நோட் 9, கேலக்ஸி ஹோம், ஸ்மார்ட் வாட்ச்! -  சாம்சங் ஆர்மிக்கு ஜாக்பாட்
 

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் மாடலுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த வருடத்திற்கான கேலக்ஸி நோட் மாடலை நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங். அது மட்டுமின்றி இன்னும் சில தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. பிரபலமான Fortnite என்ற விளையாட்டை மொபைலுக்கு கொண்டு வந்திருக்கிறது சாம்சங். முதலில் இது சில கேலக்ஸி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் பிரத்யேகமாக கிடைக்கும். 

கேலக்ஸி நோட் 9

 

 

 

கேலக்ஸி நோட் 9

 

கடந்த வருடம் வெளியான கேலக்ஸி நோட் 8 -உடன் ஒப்பிடும் போது வடிவமைப்பில் பெரிய அளவில் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை. அதே பழைய வடிவமைப்புதான். கடந்த முறையே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பின்புறமாக கேமராவிற்கு பக்கவாட்டில் மாற்றப்பட்டிருந்த நிலையில் அதைப் பயன்படுத்துவதற்கு சிரமமாக இருந்ததாகப் பலர் தெரிவித்திருந்தனர். எனவே இந்த முறை அதன் இடம் கேமராவிற்கு கீழே மாற்றப்பட்டிருக்கிறது. வழக்கம் போலவே இதில் S Pen தான் ஸ்பெஷல். ப்ளூடூத் மூலமாகத் இது ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் ஆகிக் கொள்ளும்.இதன் மூலமாக கேமரா, ஆப்ஸ் என மொபைலில் இருக்கும் விஷயங்களை திரையைத் தொடாமலேயே கன்ட்ரோல் செய்ய முடியும். இதன் முனையில் 4096 பிரஷர் லெவல்கள் இருப்பதால் இதைத் திரையில் பயன்படுத்தும் போது எந்த உறுத்தல்களும் இருக்காது. எடுத்துக்காட்டாக இதன் மூலமாகத் திரையில் எழுதினால் பேப்பரில் எழுதுவதைப் போலவே உணர முடியும்.

 

 

கேலக்ஸி நோட் 9

6.4 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்பிளே கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. நோட் 7-னை விட பேட்டரியின் அளவு இதில் அதிகமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 4,000mAh பேட்டரி ஒரு நாள் முழுவதும் இந்த ஸ்மார்ட்போனை உபயோகப்படுத்த போதுமானதாக இருக்கும். 2.8GHz ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 புராஸசர் இதில் இருக்கிறது. பின்புறமாக இருக்கும் 12+12 MP கேமராக்கள் டூயல் பிக்சல், PDAF, OIS போன்ற வசதிகளைக் கொண்டிருக்கின்றன. முன்புறமாக 8MP கேமரா இருக்கிறது. இதை வாங்கிவிட்டால் மொபைலில் இடமில்லையே என்று கவலைப்படவே தேவையிருக்காது. அதற்கேற்றவாறு இந்த மொபைலில் 512 ஜிபி இன்டெர்னல் மெமரியை கொடுத்திருக்கிறது சாம்சங் இதைத் தவிர்த்து கூடுதலாக 512 ஜிபி மெமரி கார்டையும் பயன்படுத்த முடியும். இரண்டு வேரியன்ட்களில் கேலக்ஸி நோட் 9 விற்பனைக்கு வருகிறது. 512 ஜிபி / 8 ஜிபி ரேம் மற்றும் வேரியண்ட் 84,900 ரூபாய்க்கும், 128 ஜிபி / 6 ஜிபி ரேம் வேரியண்ட் 67,900 ரூபாய்க்கும் கிடைக்கும். 

 

 

கேலக்ஸி ஹோம் 

கேலக்ஸி ஹோம் 

ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னிலையில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி விட்ட நிலையில் சாம்சங் மட்டுமே மிச்சம் வைத்திருந்தது. கேலக்ஸி ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியதன் மூலமாக அந்தச் சந்தையிலும் கால் பதிந்திருக்கிறது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம் என்பதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதால் இந்த ஸ்பீக்கரின் வடிவத்தை முற்றிலும் வித்தியாசமாக வடிவமைத்திருக்கிறது. ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் பொதுவான வடிவமைப்பில் இருந்து மாறுபட்டு மூன்று கால்களுடன் தோற்றமளிக்கிறது. எட்டு மைக்ரோபோன்களும், ஆறு ஸ்பீக்கர்களும் இதனுள்ளே பொருத்தப்பட்டிருப்பதனால் இதன் மூலமாக சிறப்பான அனுபவத்தைப் பெற முடியும். கேலக்ஸி ஹோமை "Hey Bixby” என்று அழைப்பதன் மூலமாக இதனைச் செயல்பட வைக்க முடியும். இதன் விலை மற்றும் இதன் விற்பனை பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. 

கேலக்ஸி வாட்ச்

கேலக்ஸி வாட்ச்

சாம்சங் தனது ஸ்மார்ட் வாட்சிற்கு இதற்கு முன்பு வரை கியர் என்றே பெயரிட்டு வந்தது. அதை தற்பொழுது மாற்றி 'கேலக்ஸி வாட்ச்' என்று பெயர் வைத்திருக்கிறது. AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்ட இந்த வாட்ச்சில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியும் உண்டு.  ஒரு முறை சார்ஜ் செய்தல் இதைத் ஐந்து நாள்களுக்கு மேலாகப் பயன்படுத்த முடியும்.

https://www.vikatan.com/news/information-technology/133743-samsung-new-products-galaxy-note9-galaxy-home-and-galaxy-watch.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.