Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையைச் சேர்ந்த லண்டன் ஹரோவின், முதலாவது பெண் முஸ்லிம் மேயருக்கு கண்டியில் வரவேற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mayor%2BMaking%2B2018%2Bcopy2.jpg.gallery.jpg

கண்டி பெண்கள் உயர் கல்லூரியின் பழைய மாணவியான கரீமா மரிக்கார் ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்.
 
1990ஆம் ஆண்டி திருமண பந்தத்தில் இணைந்ததையடுத்து அவர் இலண்டனுக்குச் சென்றார்.
 
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கரீமா மரிக்கார், இலண்டனின் ஹரோவ் கவுன்சிலின் உறுப்பினராக 2010ஆம் ஆண்டில் முதன் முறையாக தெரிவு செய்யப்பட்டார்.
 
2017 – 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில், பிரதி மேயராக பதவி வகித்த அவர், 2018 – 2019ஆம் ஆண்டிற்கான மேயராக கடந்த மே மாதம் தெரிவானார்.
 
லண்டனின் ஹரோவ் கவுன்சிலின் முதலாவது பெண் முஸ்லிம் மேயரான இலங்கையைப்
பூர்வீகமாகக் கொண்ட கரீமா மரிக்காரை வரவேற்கும் நிகழ்வு கண்டியில் இன்று நடைபெற்றது.
 
 
 
அவர்கள் ஒருகாலத்தில் எம்மை ஆட்சி செய்தார்கள். இப்போது நாம் அவர்களை ஆட்சி புரிகின்றோம் என பிரித்தானியாவின் ஹெரோ சிட்டி நகர மேயரான கண்டியைச் சேர்ந்த திருமதி கரீமா மரிக்கார் தெரிவித்தார். (6.8.2018)
 
கண்டி மாநகர சபையால் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு வைபவத்தில் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் நன்றி தெரிவித்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-
 
நான் கண்டியில் பிரபலம் பெற்று விளங்கிய இரு தனவந்தர்களது குடும்ப வாரிசாகும். அதில் ஒருவர் சிங்கள மரைக்கார் என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் எம்.ஏ.எஸ். மரைக்கார். மற்றவர் எனது பாட்டனான பிரபல வர்த்தகர் எம்.கே.எம். முத்தாலிப் ஆகியோர்களாகும். ஒரு காலத்தில் நாம் கண்டியை ஆண்ட பரம்பரை என்பது குறிப்பிடத்தக்கது. எனது பிரதான ஆயுதமாக எனது நேர்மையுள்ளது. எனது நேர்மையே என்னை இந்தளவுக்கு உயர்த்தி வைத்ததுள்ளது. என்னிடம் இனமத பேதங்கள் கிடையாது. 
 
எமது மூதாதையர்களது கடையை மெதமகநுவர பகுதியில் முதலாவதாக எரித்த பின்புதான் திகனை வன்முறை ஆரம்பமாகியது. சுர்வதேச நாடுகளுக்கு இது பற்றி அறிவிக்கும் படி பலர் என்னிடம் கேட்டுக்கொண்டனர். இருப்பினும்; நான் அதனை அப்படியே விட்டு விட்டேன். மேற்கொண்டு எதனையும் செய்யவில்லை. 
 
நான் ஹெரோ நகரின் இராணியாக இல்லை. அந்த நகரின் ஒரு சேவகியாகவே தொழிற்பட்டு வருகிறேன். நான் பதவி உயர்த்ப்பட இதுவும் ஒரு காரணியாக இருக்கலாம். நான் தமிழில சாதாரணமாகக் கதைத்தாலும் கடுஞ் சொற் பிரயோகங்களை மேற்கொள்ள முடியாது. ஆனால் சிங்களம், ஆங்கிலம் இவை கைவந்த கலையாகும். நூன் கண்டி பெண்கள் உயர் கல்லூரி மாணவியாகும். 
 
ஒருகாலத்தில் பிரித்ததானியர் எம்மை ஆட்சி செய்தனர். இன்று அவர்களைது நாட்டில் அவர்களை நாம் ஆட்சி செய்கிறோம். நான் மேயராக உள்ள நகரத்தில் இரண்டு இலட்சத்து நாற்பத்தெட்டாயிரம் மக்கள் உள்ளனர். அவர்களில் குஜாரத் மக்கள் அதிகமாக உள்ளனர். எட்டாயிரம் பேர் அளவில் தமிழர்களும் உள்ளனர் என்றும கூறினார். 
 
இவ்வைபவத்தில் பிரதி மேயர் இலாஹி ஆப்தீன் தெரிவித்ததாவது-
 
புpரித்தானியாவில் இலங்கையைப் போன்று குடும்ப கௌரவம் அல்லது பணபலம் போன்ற ஏதாவது ஒன்றைக் காட்டி அரசியல் செய்ய முடியாது. அங்கு திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும. அதனை கரீமா மரிக்கார் செய்து காட்டியுள்ளார். திறமை இருப்பின் நாம் செல்ல எதிர் பார்க்கும் இடத்திற்கு செல்ல முடியும். இவரது உயர்ச்சி கண்டிக்குப் பெருமை சேர்த்துள்ளது எனறார்.
 
குண்டி மாநகர சபையின் இவ்வைபவம் நடக்கும் மண்டபம் தேசிய தலைவர்கள் பலருக்கு கௌரவிப்பு வழங்கிய மண்டபமாகும் அதேபோல் தேசிய ரிதியில் சகல தலைவர்களுக்கும் பாராட்டு நடத்திய இடமாகும். அந்த வரிசையில் இன்று கரீமாவும் இடம் பிடித்துள்ளார். அவரும் ஒரு தேசிய அல்லது சர்வதேச தலைவராக வருவார் என்பதை அது கட்டியம் கூறுகிறது என்றார்.
 
முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவித்ததாவது-
 
200 வருடங்களுக்கு முன் பிரித்தானியர் கண்எயைக் கைப்பற்றினர். அன்று அவர்களது ஆட்சி இங்கு ஊண்றப்பட்டது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவருகிறது. ஆதன் ஒருகட்டம்தான் இப்போது எம்மவர்கள் அவர்களது நாட்டில் ஆட்சி பீடமேறியுள்ளர். அது கரீமா மரிக்கார் மூலம் ஆரம்பமாகியுள்ளது என்றார். 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

குண்டி மாநகர சபையின் இவ்வைபவம் நடக்கும் மண்டபம் தேசிய தலைவர்கள் பலருக்கு கௌரவிப்பு வழங்கிய மண்டபமாகும் அதேபோல் தேசிய ரிதியில் சகல தலைவர்களுக்கும் பாராட்டு நடத்திய இடமாகும். அந்த வரிசையில் இன்று கரீமாவும் இடம் பிடித்துள்ளார். அவரும் ஒரு தேசிய அல்லது சர்வதேச தலைவராக வருவார் என்பதை அது கட்டியம் கூறுகிறது என்றார்.

ஜாவ்னாமுஸ்லீமுக்கு பீட்டர் வாசிக்கிறதில.. கண்டி.. என்னவாகி நிற்கென்று பாருங்க.

இங்க இங்கிலாந்தில்.. மேயர் பதவி என்பது ஒரு முக்கிய பதவியே அல்ல. சர்வ சாதாரணம். 

இப்படித்தான் இவை எல்லா விசயத்திலும்.. பெருமை பேசிக்கினம் போல...☺️

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.