Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைதாகி தடுத்து வைக்கப்படுவோர் வழக்கு விசாரணையின்றி விடுதலை?

Featured Replies

கைதாகி தடுத்து வைக்கப்படுவோர் வழக்கு விசாரணையின்றி விடுதலை?

 

 

Untitled-1zq.jpg

புலனாய்வுப் பிரிவின் அசமந்தம் குறித்து ஜனாதிபதி விசனம்

பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜே குணவர்தன வெளிநாடு சென்றமை தொடர்பில் ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்படுகின்றது. புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு முகம்கொடுக்காமல் நாட்டைவிட்டு வெளியேற இடமளிக்கப்படுவதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் சுமத்தும் குற்றச்சாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் கேள்விக்குட்படுத்தினார்.

புலனாய்வுப் பிரிவினரின் அசமந்தப் போக்கு குறித்தும் ஜனாதிபதி விசனம் தெரிவித்தார். விசாரணையின்றி தொடர்ச்சியாக பலர் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் வழக்குத் தொடராமல் பிணையில் விடுதலை செய்யப்படுவது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு விசனம் தெரிவித்தார். 2015 முதல் குற்றப்புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கைகளில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை மட்டுமே இடம்பெற்றுள்ளது.

சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மற்றும் சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்றும் சிலர் இன்றளவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் கைதானவர்களுக்கு எதிராக ஏன் வழக்கு தொடரப்படாமலிருக்கின்றது. இந்த கைதுகள், விசாரணைகள், விடுவிப்புகள் குறித்த உண்மைகளை நாட்டு மக்கள் அறிந்துகொள்ள முடியாதுள்ளது. கைது செய்யப்பட்ட ஒருவர்மீதேனும் வழக்குத் தொடரப்படவில்லை. இது குறித்து பொலிஸ் மா அதிபரிடம் விளக்கம் கோரியுள்ளேன்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளாக காணப்பட்டால் வழக்குத் தொடரப்பட வேண்டும். அதனை புலனாய்வுப் பிரிவு செய்யத்தவறியுள்ளது. லசந்த விக்கிரமதுங்க, கீத் நொயார், பிரகீத் எக்னலிகொட போன்றோர் விடயத்தில் விசாரணைகள் மட்டுமே நீண்டுகொண்டு போகிறது. குற்றவாளிகள் எவரும் தப்பியோட இடமளிக்கப்படக்கூடாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் அதி உச்சபட்ச தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும்.

 

 
 

விசாரணைகள் தாமதமாவது குறித்து கேட்கப்பட்டபோது, புலனாய்வுப் பிரிவிலும், சட்டமா அதிபர் திணைக்களத்திலும் ஆளணிப்பற்றாக்குறையென தெரிவிக்கப்படுகின்றது. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வழக்குத் தொடரமுடியாது போனால் அவர்களை சிறையிலடைப்பது தவறு. அதேபோன்று உரிய ஆதாரமின்றி கைது செய்யப்படவும் கூடாது.

நாட்டின் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறேன். பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவமும், முப்படைகளும் உறுதியான நிலையில் உள்ளன.

உலகின் மிகப் பெரிய பயங்கரவாதிகளை அடக்கிய பெருமை எமது படையினருக்கு இருக்கின்றது. நாட்டின் பாதுகாப்பையும், படையினரின் பலத்தையும் குறைத்து மதிப்பிட முனைபவர்கள் விடயத்தில் விழிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. ஊடகங்கள் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

எம்மிடம் பலம் வாய்ந்த, நல்ல பயிற்சிபெற்ற படையுள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் பயிற்சி பெற்ற வீரர்கள் எம்மிடமுள்ளனர். அதேபோன்று சக்திமிக்க போர்க்கப்பல், போர் விமானங்களும் ஏனைய உபகரணங்களும் உள்ளன. இவ்வாறான நிலையில் நாட்டின் பாதுகாப்பைக் கொச்சைப்படுத்த எவரும் முனையக்கூடாது.

எதிர்வரும் நவம்பர் 8ல் சமர்ப்பிக்கப்படும் பட்ஜட்டில் கூட 230 பில்லியன் ரூபா பாதுகாப்புக்காக ஒதுக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

http://www.thinakaran.lk/2018/09/15/உள்நாடு/26972/கைதாகி-தடுத்து-வைக்கப்படுவோர்-வழக்கு-விசாரணையின்றி-விடுதலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.