Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனவர் பிரச்சினையை தீர்க்க அடுத்தவாரம் முக்கிய சந்திப்பு! – கண்டியில் செங்கோட்டையன் தெரிவிப்பு

Featured Replies

மீனவர் பிரச்சினையை தீர்க்க அடுத்தவாரம் முக்கிய சந்திப்பு! – கண்டியில் செங்கோட்டையன் தெரிவிப்பு

 

 

India-sri-lanka-fishermans-issue-meeting-2.jpg

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் காணப்படும் மீனவர் பிரச்சினை தொடர்பாக தீர்வினைப் பெறும் முகமாக தமிழகத்தில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் விஜயமுனி சொய்சாவுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 102 வது பிறந்த தின நிகழ்வுகள் அவர் பிறந்த ஊரான கண்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 102ஆவது பிறந்ததின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் பிறந்த ஊரில் நாங்கள் காலடி எடுத்து வைத்தது எங்களுக்கு பெருமையாக உள்ளது. இதற்கு கல்வித்துறை அமைச்சர் இராதாகிருஷ்ணனுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இதேவேளை மீன்வளைத்துறை அமைச்சருடன் இன்று சந்திப்பை மேற்கொண்டேன். இதன்போது மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் பேசினோம்.

இதன்பொருட்டு அடுத்த வாரம் தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோர் இலங்கை மீன்வளத்துறை அமைச்சருடன் கலந்துரையாடுவார்கள்” என்று தெரிவித்தார்.

இதன்போது கல்வியமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவிக்கையில், இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இருநாட்டு மீன்வளத்துறை அமைச்சர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெறும்.

இன்று காலை எமது மீன்வளத்துறை அமைச்சரை நானும், தமிழ்நாடு கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சந்தித்தோம். இதன்போது எமது மீன்வளத்துறை அமைச்சர் சென்னை செல்வதாக தெரிவித்தார்.

சென்னையில் உள்ள மக்களோடு சந்தித்த பின்னர் டெல்லி அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் சேர்ந்து இதற்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்தைகளை முன்னெடுக்கவுள்ளார்கள். இதன்மூலம் இலங்கை – இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

India-sri-lanka-fishermans-issue-meeting

http://athavannews.com/இலங்கை-இந்திய-மீனவர்-பிர-3/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.