Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிநாட்டு கோரிக்கையால் இராணுவ மயவாக்கம் – கோட்டை வேண்டும் – அரசியல் நோக்கம் இல்லை 2880.08 ஏக்கரே எம்மிடம் உள்ளது…

Featured Replies

தனிநாட்டு கோரிக்கையால் இராணுவ மயவாக்கம் – கோட்டை வேண்டும் – அரசியல் நோக்கம் இல்லை 2880.08 ஏக்கரே எம்மிடம் உள்ளது…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

tharshana-krttiyarachchi.jpg?resize=800%

 

யாழ்.மாவட்டத்தில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது..

யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின் வசம் 2880.08 ஏக்கர் நிலமே உள்ளது. இந்த காணிகள் மக்களுக்கு சொந்தமான காணிகளாகும். அவற்றை மக்களிடமே மீளவும் வழங்குவதில் இராணுவம் உறுதியாக இருக்கின்றது. என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், கடந்த 2009ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின் வசம் 25 ஆயிரத்து 986.67 ஏக்கர் நிலம் காணப்பட்டது. குறித்த நிலத்தில் 88.80 வீதமான நிலம் மக்களிடம் மீள வழங்கப்பட்டுள்ளது. மேலும் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றிடம் தற்போது மொத்தமாக 4512.82 ஏக்கர் நிலம் காணப்படுகின்றது. இது யாழ்.மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 1.39 வீதமாகும்.

இதேவேளை வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மட்டும்  பலாலி விமான நிலையம் மற்றும் விமானப்படையின் கீழ் உள்ள 996.74 ஏக்கர் நிலமும், இராணுவத்திடம் உள்ள 2032.19 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து 3028.93 ஏக்கர் நிலம் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளது. இதேபோல் இராணுவத்தின் கீழ் உள்ள 500 ஏக்கர் நிலத்தை மக்களிடம் மீள கையளிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் மக்களுடைய நிலங்களை மக்களிடம் மீளவும் வழங்குவதில் இராணுவம் தெளிவாக உள்ளது. அதேசமயம் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களுடைய பாதுகாப்பிலும் இராணுவம் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது. குறிப்பாக இப்போது இயங்கிக் கொண்டிருக்கும் சிறு வன்முறை குழுக்களால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமா? என்பது குறித்தும் இராணுவம் சிந்தித்துக் கொண்டிருக்கின்றது. இதனடிப்படையில் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல், தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமல். தொடர்ச்சியாக மக்களுடைய நிலங்களை இராணுவம் விடுவிக்கும்.

இதேபோல் யாழ்.மாவட்டத்தில் பரவலாக உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஆனால் அவற்றை அகற்றி வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான பணம் எமக்கு தேவையாக உள்ளது. அது குறித்து நாங்கள் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அவர்களிடம் இருந்து எமக்கு தேவையான பணம் கிடைக்குமாக இருந்தால் மக்களுடைய காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறும் என தெரிவித்தார்.

தனிநாட்டு கோரிக்கை

இலங்கையில் வடக்கில் தான் தனிநாட்டு கோரிக்கையுடன் பெரிய அமைப்பு ஒன்று உருவாகியது. அதனாலையே அதிகளவான இராணுவத்தினர் வடக்கில் உள்ளனர் என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.  பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் ஏனைய பாகங்களில் தனிநாட்டு கோரிக்கையுடன் ஆயுத அமைப்புக்களோ . போராட்டங்களோ தோற்றம் பெறவில்லை. வடக்கில் தான் அவ்வாறு தோற்றம் பெற்றது. அதனால் மீண்டும் அவ்வாறான அமைப்புக்கள் போராட்டங்கள் தொடர கூடாது என்பதனால் தான் இராணுவம் வடக்கில் அதிகளவில் நிலை கொண்டுள்ளது. என தெரிவித்தார்.
அதன் போது ஊடகவியலாளர் ஒருவர் தெற்கில் ஜே.வி.பி. தோற்றம் பற்றியும் , அதன் கலவரத்தின் போது கொல்லப்பட்ட அவர்களின் தோழர்களை அவர்கள் நினைவு கூறுவது அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் கேட்ட போது,  அவர்கள் தனிநாட்டு கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தை முன்னெடுக்க வில்லை. அவர்களிடம் தனிநாட்டு கோரிக்கை இருந்ததில்லை. ஆனால் வடக்கில் அந்த நிலைமை காணப்படவில்லை. வடக்கில் தனி நாட்டு கோரிக்கையை முன் வைத்தே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதிலும் புலம் பெயர் நாடுகளில் உள்ளவர்கள் இன்னமும் தனிநாட்டு கோரிக்கையை கைவிடவில்லை. அதனால் மீண்டும் வடக்கில் தனிநாட்டு கோரிக்கையை முன் வைத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனும் நிலைமை உள்ளது என தெரிவித்தார்.

கோட்டை வேண்டும்

யாழ்ப்பாண கோட்டையை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் பல காணிகளை இராணுவம் மீள கையளிக்க தயாராக உள்ளது என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதனை தெரிவித்தார்.

யாழில்,நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் பல ஏக்கர் காணிகளை மீள அதன் உரிமையாளர்களிடம் கையளித்து வருகின்றோம். இன்னமும் கையளிக்க உள்ளோம். யாழ் கோட்டை பகுதியை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் உள்ள இராணுவத்தினர் அங்கு நிலை கொண்டு ஏனைய பகுதிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்க தயாராக உள்ளோம். இதற்காக ஜனாதிபதி , பிரதமர், தொல்லியல் திணைக்களம் ஆகியோரிடம் கோரிக்கைகளை விடுத்துள்ளோம். அதற்கு சாதகமான பதில் வரும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.

இராணுவம் செய்யும் உதவிகள் அரசியல் நோக்கம் கொண்டவை அல்ல.

இராணுவம் மக்களுக்கு செய்யும் சேவைகள் அரசியல் நோக்கம் கொண்டதோ, அல்லது யாரையும் ஏமாற்றும் நோக்கம் கொண்டதோ அல்ல. என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி படைத்தலமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், யாழ்.மாவட்டத்தில் உள்ள இராணுவம் தெற்கில் உள்ள தொண்டு அமைப்புக்களுடன் இணைந்து வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி திட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு திட்டங்கள், மதங்களுக்கிடையிலான நல்லிணக்க திட்டங்கள், பொதுமக்களின் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள் அமைக்கும் திட்டங்கள், வீடற்றவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டங்கள், மற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள், அவயவங்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களை வழங்கும் செயற்றிட்டங்கள் என பல்வேறு செயற்றிட்டங்களை இன்றளவும் செய்து வருகின்றது.

இதேபோல் 10 ஆயிரம் இராணுவ வீரர்கள் தமது கண்களை தானம் செய்துள்ளார்கள், 10 ஆயிரம் மலசல கூடங்களை அமைத்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதேபோல் யாழ்.மாவட்டத்தில் கார் பந்தயம் மற்றும் மோட்டார் சைக்களின் பயந்தயம் போன்றவற்றை நடாத்தவும் இராணுவம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு இராணுவம் மக்களுக்கு செய்யும் உதவி திட்டங்கள் அரசியல் நோக்கம் கொண்டதாக அல்லது யாரையும் ஏமாற்றும் நோக்கம் கொண்டதோ அல்ல. 30 வருடங்கள் இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மக்கள் அனுபவித்த துன்பங்களை கண்கூடாக பார்த்து அதன் அடிப்படையில் செய்யப்படும் உதவிகளாகும். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் உருவாக்குவ தற்கு முயற்சிக்கின்றார்கள். அதன் ஒரு பாகமாகவே இந்த உதவித்திட்டங்கள் அமையும். எனவே நாம் வழங்கும் உதவி திட்டங்கள் தொடர்பாக சில ஊடாகங்கள் தவறான விமர்சனங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றது.

உண்மைகளை அல்லது சரியானவற்றை சரியானவையாகவும், உண்மையானவையாகவும் மக்களிடம் சொல்லுங்கள். அதேசமயம் இராணும் எதாவது பிழைகள் புரிந்தால் அல்லது தவறான நடத்தைகளில் ஈடுபட்டால் அல்லது இன நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டால் அவை குறித்தும் நேரடியாக எமக்கு தெரியப்படுத்துங்கள் அவ்வாறானவர்களுக்கு இராணுவத்தில் தக்க தண்டணைகள் வழங்கப்படும்.

மேலும் நான் தெற்கில் சிங்கள மொழி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் மிக தெளிவாக கூறியுள்ளேன். வடக்கு மக்கள் குறித்தும், வடக்கு குறித்தும் தெற்கில் கூறப்படும் கருத்துக்களை அப்படியே நம்பாதீர்கள். உண்மையை அறிந்து கொள்ள வடக்குக்கு வாருங்கள், அங்குள்ள மக்களுடன் இயல்பாக பேசி உண்மைகளை அறியுங்கள் என்றும் கூறினேன். ஆகவே ஊடகங்கள் உண்மையை, நல்லவிடயங்களை நல்லபடியாக மக்களுக்கு சொல்லுங்கள் என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/96447/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

யாழ்ப்பாண கோட்டையை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் பல காணிகளை இராணுவம் மீள கையளிக்க தயாராக உள்ளது என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பெற்றோமாக்ச்த்தான் வேணுமாம் .

  • தொடங்கியவர்

பணத்தை அரசாங்கம் வழங்குமாயின் 6 மாதத்தில் காணிகளை கையளிக்க தயார்

 

(ரி.விரூஷன்)

யாழ்.மாவட்ட இராணுவ தளபதி ஹெட்டியாரச்சி

 

வடக்கில் படைத்­த­ரப்­பா­னது கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள பொது மக்­க­ளது காணி­களை மீள மக்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்கு ஏற்ற வகையில் படைத் தரப்­பி­ன­ரது முகாம் மற்றும் படைக்­க­லன்­களை இட­மாற்றம் செய்­வ­தற்கு தேவைப்­படும் பணத்தை அரசாங்கம் வழங்­கு­மாயின் ஆறு மாத காலத்தில்  மக்­களின் நிலங்­களை மீள கைய­ளிப்­ப­தற்கு தாம் தயா­ராக இருப்­ப­தாக யாழ்.மாவட்ட இரா­ணுவ கட்­டளை தள­பதி தர்ஷன ஹெட்­டி­யா­ரச்சி தெரி­வித்­துள்ளார். 

தெற்கில் ஜே.வி.பி யினர் போரா­டிய காலத்­திலும் அவர்கள் தனி நாட்­டினை கோர­வில்லை. ஆனால் தனி­நாடு கோரிய போராட்­ட­மா­னது வடக்­கி­லேயே ஆரம்­பிக்­கப்­பட்­டது. தற்­போதும் புலம்­பெயர் மக்கள் அதனை செயற்­ப­டுத்த வேண்டும் என்­பதில் உற்­சா­க­மாக உள்­ளார்கள். எனவே தான் வடக்­கினை தொடர்ந்து இரா­ணுவம் கண்­கா­ணிக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது எனவும் அவர் தெரி­வித்தார்.

யாழ்ப்­பாணம் பலா­லியில் அமைந்­துள்ள இரா­ணுவ தலை­மை­ய­கத்தில் நேற்­றைய தினம்  இடம்­பெற்ற விஷேட செய்­தி­யா­ளர்கள் சந்­திப்பில் கலந்­து­கொண்டு செய்­தி­யா­ளர்­க­ளது கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் இதனை தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

இந்­நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என்­பதில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் செயற்­பட்டு வரு­கின்­றனர். வடக்­கிற்கு பல்­வேறு தட­வை­களில் விஜயம் செய்த ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகியோர் இங்கு இடம்­பெறும் அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களை அவ­தா­னித்து சென்­றி­ருக்­கின்­றனர். இது தவிர தற்­போது வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்தி செய­லணி ஒன்­றையும் ஜனா­தி­பதி அமைத்­துள்ளார்.

இவ்­வாறு வடக்கின் அபி­வி­ருத்­தி­களில் இரா­ணு­வமும் கவனம் செலுத்தி வரு­கின்­றது. நாம் பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை இங்கு செய்து வரு­கின்றோம். எதிர் காலத்­திலும் பல்­வேறு வேலைத் திட்­டங்­களை மேற்­கொள்­ள­வுள்ளோம். இவற்றை நாம் யாரையும் ஏமாற்ற செய்­ய­வில்லை. நாம் உண்­மை­யா­கவே இதனை செய்­கின்றோம். இத்­த­கைய வேலைத் திட்­டங்­களை செய்­து­விட்டு பின்னர் இதனை காண்­பித்து அர­சி­யலில் இறங்கும் எண்­ணமும் எமக்கு இல்லை.

நீண்ட கால அழி­வு­களில் இருந்து மீண்ட மக்­க­ளுக்கு நல்ல பொரு­ளா­தார ரீதி­யி­லான கட்­ட­மைப்­புடன் கூடிய வாழ்க்­கையை வழங்க வேண்டும் என்­ப­தற்­காவே நாம் இதனை மனப்­பூர்­வ­மாக செய்து வரு­கின்றோம். நாம் கூறு­வதை கேளுங்கள். நாம் சொல்லும் சரி­யான விட­யங்­களை மக்­க­ளுக்கு சொல்­லுங்கள். நாம் தவ­றி­ழைக்கும் போது அதனை செய்­தி­யாக வெளி­யி­டு­வ­தற்கு நாம் தடை­யாக இல்லை.

வடக்கில் உள்ள மக்­களும் எமது மக்­களே. ஒரு முறை ஓர் செவ்­வி­யொன்றில் இதனை நான் குறிப்­பிட்­டி­ருந்தேன். வடக்­கி­லுள்ள மக்­க­ளது பிரச்­சி­னை­களை நாம் தீர்த்து வைக்க வேண்டும். எமது மனதில் வைராக்­கி­யங்­களை வைத்து செயற்­ப­டக்­கூ­டாது என்­பதை தெற்கு மக்­க­ளுக்கு ஒர் தொலைக்­காட்சி செவ்­வியின் போது குறிப்­பிட்டேன். இரா­ணு­வமும் மனி­தர்­களே. நாம் சீரு­டையில் இருக்­கின்றோம். நீங்கள் சிவிலில் இருக்­கின்­றீர்கள். இதுவே வித்­தி­யாசம் என்றார்.

கேள்வி : இரா­ணு­வத்­தினர் மக்­க­ளது காணி­களை மீள கைய­ளிப்­பதில் ஆரம்­பத்தில் அதி­க­ளவில் காணி­களை விடு­வித்த போதும் தற்­போது அதன் அளவு குறைந்­துள்­ளதே ? ஏன் இவ்­வாறு தாம­த­மா­கின்­றது ?

பதில் : இரா­ணு­வத்­தினர் மக்­களின் நிலங்­களை விடு­விப்­பதில் நாட்டின் பாது­காப்­பி­னையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.  இதற்கு முன்னர் விடு­விக்­கப்­பட்ட பகு­தி­களில் அதி­க­ள­வான பாது­காப்பு பிரச்­சினை இருக்­க­வில்லை. தற்­போது மீத­மா­க­வுள்ள பகு­தி­களில் அதி­க­ளவு பாது­காப்பு தேவை இருக்­கின்­றது.

இவை தவிர யாழில் தற்­போது ஆவா குழு போன்ற பல குழுக்கள் மக்­களை அச்­சு­றுத்தும் வகையில் உள்­ளது.  எனவே இவை தொடர்­பிலும் மற்றும் நாட்டின் தேசிய பாது­காப்பு தொடர்­பிலும் கவனம் செலுத்­தியே இந் நிலங்­களை விடு­விக்க முடியும்.

கேள்வி : இரா­ணுவம் முன்னால் போரா­ளி­களை கண்­கா­ணிப்­பதால் அவர்­க­ளுக்கு தொழில் வாய்ப்­புக்­களை பெற்­றுக்­கொள்ள முடி­யாமல் இருக்­கின்­றது என்ற குற்­றச்­சாட்­டுள்­ளதே ?

பதில் : முன்னால் போரா­ளிகள் 5ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. மேலும் இது தொடர்­பாக அர­சாங்­கத்தால் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

கேள்வி : தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் விடுக்கும் எதேனும் நிலைமை யாழில் உள்­ளதா ?

பதில் : மக்­க­ளிற்கு அச்­சு­றுத்­த­லான குழுக்கள் உள்­ளன. இவற்றை நாம் கவ­னிக்­காது படை முகாம்­களை அகற்­றினால் அவர்கள் அந்த இடங்­க­ளுக்கும் சென்று அச்­சு­றுத்தல் செய்­வார்கள். எனவே இவற்­றையும் அவ­தா­னித்து தான் நாம் எமது நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ள வேண்டும்.

கேள்வி : யாழ்ப்­பா­ணத்தில் இரா­ணுவம் விடு­வித்­துள்ள காணிகள் எவ்­வ­ளவு ? இன்னும் விடு­விக்­கப்­பட வேண்­டிய காணி எவ்­வ­ளவு ?

பதில் : யாழில் 25,986.67 ஏக்கர் கைய­கப்­ப­டுத்­தப்­பட நிலையில் அவற்றில் 23,078.36 ஏக்கர் நிலம் மீள கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது இன்னும் விடு­விக்­கப்­ப­டாத நில­மாக 2880.08 ஏக்கர் நிலமே உள்­ளது. இதில் அரச காணிகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பா­ணத்தின் மொத்த நிலப்­ப­ரப்பில் 1.39 வீத­மான நிலமே படைத்­த­ரப்பு வசம் உள்­ளது. மேலும் விரைவில் 500 ஏக்கர் காணிகள் மீள மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

கேள்வி : அவ்­வாறு விடு­விக்க தீர்­மா­னித்­துள்ள பகு­திகள் எவை ?

பதில் : இரா­ணுவ சிறு சிறு முகாம்கள் பல வெவ்­வேறு இடங்­களில் உள்ள நிலையில் அவற்றை அங்­கி­ருந்து அகற்றி தலை­மை­ய­கத்­திற்கு கொண்டு வந்த பின்­னரே அவற்றை விடு­விக்­க­வுள்ளோம். எனவே தற்­போது அது தொடர்­பான சரி­யான தக­வல்­களை கூற முடி­யா­துள்­ளது.

கேள்வி : குடா­நாட்டில் படைத்­த­ரப்பு வச­முள்ள மக்­க­ளது காணி­களை மீள கைய­ளிக்க எவ்­வ­ளவு காலம் தேவை ?

பதில் : மக்­க­ளது காணி­களில் உள்ள படை­க­லன்­களை படை முகாம்­களை அகற்றி அவற்றை இட­மாற்றம் செய்­வ­தற்கு தேவைப்­படும் பணத்தை அர­சாங்கம் வழங்­கினால் ஆறு மாத காலத்­தி­லேயே அந் நிலங்­களை விடு­விக்க தயா­ரா­க­வுள்ளோம்.

கேள்வி : அவ்­வா­றாயின் நீங்கள் கோரி­யி­ருக்கும் பணம் எவ்­வ­ளவு ?

பதில் : அது ஒவ்­வொரு படை முகா­மிற்கு ஒவ்­வொரு வித­மாக காணப்­படும்.

கேள்வி : அப்­ப­டி­யா­யினும் தலை­மைப்­பீடம் என்ற வகையில் உங்­க­ளிடம் அதன் கணக்­கீடு இருக்­கு­மல்­லவா ?

பதில் : அனைத்து படை முகாம்­களின் அகற்­று­வ­தற்­கான பணத்தின் தொகை பெறப்­பட்டு உங்­க­ளிற்கு ஒரு சில நாட்­களில் அறியத் தரு­கின்றேன்.

கேள்வி : தொல்­லியல் ஆதா­ர­மான யாழ்ப்­பாணம் கோட்­டையை இரா­ணுவம் கைய­கப்­ப­டுத்­த­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றதே ?

பதில் : அக் கோட்­டையை முழு­மை­யாக இரா­ணு­வத்­திடம் வழங்­கினால் அங்கு எமது படை முகாம்­களை நகர்த்தி விட்டு பொது மக்­க­ளது காணி­களை விடு­விக்க கூடி­ய­தாக இருக்கும். இது தொடர்­பாக நாம் தொல்­லியல் திணைக்­க­ளத்­துடன் பேசி வரு­கின்றோம்.

கேள்வி : வடக்கு மாகாண சபையும் யாழ்ப்­பா­ணத்தின் சில உள்­ளூ­ராட்சி சபை­களும் யாழ்ப்­பா­ணத்தில் இரா­ணுவம் ஈடு­ப­டக்­கூ­டாது என தீர்­மானம் நிறை­வேற்­றிய போதும் நீங்கள் தொடர்ந்தும் மக்­க­ளுக்­கான சிவில் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­கின்­றீர்­களே ?

பதில் : நாம் செய்­வ­தனை யார் கூறி­னாலும் நிறுத்த போவ­தில்லை. அது மக்­க­ளுக்­கான தேவை. எனவே யார் கூறி­னாலும் நாம் அதனை நிறுத்த மாட்டோம்.

கேள்வி : வடக்கில் வாள்­வெட்டு குழுக்­களே உள்ள நிலையில் தெற்­கி­லேயே துப்­பாக்கி சூட்டு சம்­ப­வங்கள் போன்­றன இடம்­பெ­று­கின்­றன. ஆனால் வடக்­கி­லேயே தேசிய பாது­காப்பு அச்­சு­றுத்தல் இருப்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றதே ?

பதில் : அவ்­வாறு காணப்­பட்­டாலும் ஆயுத ரீதி­யான போராட்டம் என்­பது வடக்­கி­லேயே தோற்றம் பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து இடம்பெற்ற முப்பதாண்டு கால போராட்டம் காரணமாக வடக்கு அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தான் இங்கு அதிகளவு கவனத்தை வைத்துள்ளோம்.

கேள்வி : ஆனால் தெற்கிலும் ஜே.வி.பி போன்ற போராட்டங்கள் இடம்பெற்றிருந்தனவே. அதன் பின்னர் அதில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்ததே ?

பதில் : ஜே.வி.பி யினர் தனிநாட்டு கோரிக்கையை முன்வைக்கவில்லையே. தனி நாட்டு கோரிக்கையை முன்வைத்த போராட்டம் வடக்கிலேயே ஆரம்பமாகியது. தற்போதும் கூட புலம்பெயர்ந்துள்ளவர்களில் சிலர் இக் கோரிக்கையை செயற்படுத்துவதில் ஆர்வமாக உள்ளார்கள். எனவே தான் வடக்கினை நாம் தொடர்ச்சியான கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டியுள்ளது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-21#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.