Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசாங்கம் அழுத்தமான தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசாங்கம் அழுத்தமான தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தல்!

1535597817-720x450.jpg

காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற ஒரு அழுத்தமான தீர்வை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வுனியாவில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு, கிழக்கு இணைப்பாளர் அன்ரனி யேசுதாசன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ‘அரசாங்கத்திடம் நாம் சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகின்றோம்.

அந்தவகையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பல வருடங்களாக எந்தவித வழக்குகளும் இன்றி கூட பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கேட்டு நிற்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக மக்களுக்கு நம்பிக்கையில்லாது இருக்கிறது. அமைக்கப்படும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காரியாலயம் கூட காணாமல் ஆக்கப்பட்டோரை தேடும் காரியலயமாகவே இருக்கிறது.

இதுவரை காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற ஒரு அழுத்தமான தீர்வை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் சிபாரிசுகளுக்கு அமைவாக பதில் அளிக்க வேண்டும்.

மீள்குடியேறிய மகள் தமது வீட்டுத்திட்டங்களை சரியாக கட்டி முடிக்க முடியாத நிலை உள்ளது. அரசாங்கம் வேறுபட்ட வீட்டுத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளமையால் மக்கள் மத்தியில் வேறுபாடுகள் ஏற்படுகின்றது.

எனவே வீட்டுத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/காணாமல்-ஆக்கப்பட்டோர்-வ-7/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிடின், தீக்குளித்து தற்கொலை செய்யவேண்டிய நிலை ஏற்படும்

October 1, 2018

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

Political-pr3.jpg?resize=800%2C450

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்யவேண்டிய நிலை ஏற்படும் என வயோதிப் பெண் ஒருவர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்தை நிறுத்துவதுடன், சிறைகளில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று (30.09.18) ஞாயிற்றுக்கிழமை பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.

பொன்னாலை மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் பொன்னாலை மக்கள் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட 70 வயதுடைய வே.தவமணி என்ற பெண்மணியே கைதிகளுக்காகத் தீக்குளிப்பேன் எனத் தெரிவித்தார்.

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு நலன்வேண்டி நேற்று பிற்பகல் 5.00 மணிக்கு பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து ஆலயத்திற்கு முன்பாக கவனீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு கோசங்களை எழுப்பினர். கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால் தீக்குளித்து தனது உயிரை மாய்க்கவேண்டிய நிலை ஏற்படும் என இப்போராட்டத்தில் கலந்துகொண்ட வயோதிபப் பெண்ணொருவர் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

இப்போராட்டத்தில் வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா, பொன்னாலை ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத் தலைவர் த.பாஸ்கரன், பொன்னாலை ஸ்ரீ கண்ணன் விளையாட்டுக் கழகத் தலைவர் செ.றதீஸ்வரன், விடுவிக்கப்பட்ட அரசியல் கைதி கோமகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Political-pr1.jpg?resize=800%2C450Political-pr2.jpg?resize=800%2C450 Political-pr4.jpg?resize=800%2C450Political-pr5.jpg?resize=800%2C450Political-pr6.jpg?resize=800%2C450

 
 
  • கருத்துக்கள உறவுகள்

9_B4_F3149-12_E9-40_BE-_A5_BF-_BCA62_FC7

Edited by Kavi arunasalam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.