Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம்? (1)

ஆர். அபிலாஷ்

 

சின்மயி என்பதாலே வைரமுத்து மற்றும் மலிங்கா பற்றீ அவர் சொல்வதை நாம் போதியவிசாரணையின்றி நிரூபணம் இன்றி ஏற்க வேண்டியதில்லை. தன்னுடைய கணவன்பற்றி ஒரு நடிகை நாளை புகார் சொன்னால் சின்மயி விசாரித்து ஆதாரம் கேட்டு சரிபார்த்தே அதை ஏற்பார். தடாலடியாய் இது போல டிவிட்டரில் போடுவாரா?

பெண்கள் சொல்வதெல்லாம் உண்மை என அப்போது நினைப்பாரா? மாட்டார்.

 

தமிழக ஆளுநருக்கும் பெண் புரோக்கருடன் தொடர்பு உண்டு என செய்தி வந்தபோதும் இதுவே நடந்தது என்பது நினைவுக்கு வருகிறது. அது தவறோ என இப்போதுதோன்றுகிறது. ஊரில் உள்ள அத்தனை ஆண்களும் உள்ளார ரேப்பிஸ்டுகள். ஆகையால் ஒரு பெண் விரல் சுட்டினால் உடனே கல்லை எடுத்து அடிக்க வேண்டும்எனும் மனோபாவம் ஏன் இப்படி இங்கு வலுத்து வருகிறது? 

ஏன் ஆதாரமின்றி வைரமுத்துவை உடனடி குற்றவாளியாய் அறிவிக்க நாம்துடிக்கிறோம் என்பதே என் அடிப்படை வினா; வைரமுத்து குற்றமற்றவர் எனசொல்வதல்ல என் நோக்கம்.

“நெருப்பின்றி புகையாது” என்பதை ஏன் பாலியலில் மட்டும் அப்படியே ஏற்கிறோம். திருட்டு, வன்முறை, கொலை போன்ற விவகாரங்களில் மட்டும் ஏன்பாதிக்கப்பட்டோரை / அவரது உறவினர்களை நாம் அப்படியே நம்புவதில்லை?

 என் பர்ஸ் காணாமல் போகிறது. நான் உடனே பக்கத்தில் நிற்பவரை சுட்டி “இவர் தான்திருடினார், நான் பார்த்தேன்” என்றால் உடனே ஏற்று அவரை சாத்துவீர்களா? திருடப்பட்ட பொருள் அவரிடம் உள்ளதா, அதற்கு சி.சி.டிவி ஆதாரம் உள்ளதாஎன்றெல்லாம் கேட்க மாட்டோம்? இல்லை என்றால் குற்றம் சாட்டப்பட்டவரை விட்டுவிடுவோம். “இந்த ஊரில் எல்லாருமே திருட்டுப் பசங்க தான், அதனால விடாதீங்க” எனச் சொல்ல மாட்டோம். 

ஆனால் பாலியலிலோ குற்றம் புரிவது ஆணின் இயல்பு என நாம் நம்புகிறோம். எந்தஆணும் ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு பெண்ணை வற்புறுத்துவான், பலாத்காரம் செய்வான் என நினைக்கிறோம். ஆணின் சபலம் குறித்து நம் சமூகத்தில்உள்ள பிம்பம் இதை செலுத்துகிறது.

அடுத்து நாம் ஆணை ஒரு காம வேட்டைக்காரனாய் காண்கிறோம். பெண்களுக்கு சதாஇந்த அச்சம் இருக்கலாம். தம் உடல் குறித்த ஒரு பிரக்ஞை இருக்கலாம். ஆண்கள்சதா யாரையாவது புணர வாய்ப்பு கிடைக்காதா என அலைவதாய் கற்பித்துக்கொள்கிறோம். இந்த ஆண் எப்போது மற்றமையாக இருக்கிறான். அதாவது நம் அப்பா, அண்ணன், தம்பி, மகனாக இந்த ஆண் இருக்க மாட்டான். ஆனால் அடுத்த வீட்டு ஆண்என்பவன் மட்டும் காமகுரோதன் என நினைக்கிறோம்.

ஆனால் இது உண்மை அல்ல. ஆண்களுக்கு செக்ஸ் பற்றாக்குறை உள்ளது தான். ஆனால் அவர்கள் 24 மணிநேரமும் பெண்ணுக்காய் காத்திருப்பதில்லை. ஆணுலகில்சொத்து, பணம், அதிகாரம், புகழ், பாதுகாப்பு, சமூக அங்கீகாரம், உணவு, கேளிக்கைஆகியனவற்றுடன் பக்கத்திலேயே செக்ஸ் தேவையும் இருக்கிறது. செக்ஸ் என்பதுஆணின் ஒரே இலக்கு அல்ல. ஆண்களுக்கு வாழ்விலுள்ள பல இலக்குகளில், தேவைகளில் ஒன்றே செக்ஸ்.

இதற்கு இரு சான்றுகள் தருகிறேன்.

1)   பெரும்பாலான ஆண்கள் செக்ஸுக்காக மேற்சொன்ன விசயங்களை விட்டுக்கொடுப்பதில்லை. பத்து கோடி ரூபாய் பணமா பிடித்த ஒரு பெண்ணுடன் ஒருமுறைசெக்ஸா என்றால் எந்த ஆணும் பணத்தைத் தான் கேட்பான். ஒரு பிரபலஇளம்நடிகையுடன் திருமண வாழ்வா அல்லது மணிரத்னம், சங்கர் போன்றஇயக்குநர்களுக்கு இணையான திரைசாதனை செய்ய வேண்டுமா என தெய்வம்தோன்றி கேட்டால் எந்த இளம் இயக்குநரும் இரண்டாவது தான் வேண்டும் என்பார், 

என் நண்பர் ஒருவர் ( நண்பர்களுடன் உயர்தர பார்களில்) மதுவருந்த மட்டுமே மாதம்30,000 மேல் செலவழிக்கிறார். அது அவரது பாதி மாத சம்பளம். அவர் பேச்சிலர். வேறுஎந்த பொறுப்புகளோ செலவோ இல்லை. அவர் அந்த பணத்தில் இரண்டு நாளுக்குஒருமுறை ஒரு புது விலைமகளிடம் செல்லலாமே! ஏன் செய்வதில்லை? பெண்ணாசரக்கா என்றால் அவருக்கு சரக்கு தான் வேண்டும்.

 

சொல்லப் போனால் சொத்து, பணம், அதிகாரம், அந்தஸ்து, பிள்ளைகளின் நலனுக்காகமிக அதிகமாய் செக்ஸை தியாகம் செய்வது நம்மூரில் தான் நடக்கிறது.

 

ஆண்களுக்கு செக்ஸ் என்பது non-negotiable அல்ல. கிடைத்தால் நல்லது, கிடைக்காவிட்டால் பிறகு பார்க்கலாம் என்பதே அவர்களின் மனப்போக்கு.

மேற்சொன்ன அத்தனை வசதி வாய்ப்புகளும் புகழும் வேண்டும், கூடவே அல்லதுஅடுத்து செக்ஸும் வேண்டும் என்றே ஆண்கள் நினைப்பார்கள். அவர்கள் செக்ஸையும்பிற தேவைகளையும் சமன் படுத்த முயல்கிறார்கள்.

சிலநேரம் இப்படி சமன்படுத்துவது முடியாமல் போகும்; அப்போது தான் அவர்கள்சறுக்குவார்கள். ஒரு பெண்ணுடனான பந்தத்துக்காக கொலை செய்து சிறை செல்லும்ஆண்களை பார்க்கிறோம் / கள்ள உறவு கொண்டு அதனால் பிரச்சனைக்குஉள்ளாகிறவர்களைப் பார்க்கிறோம். ஆனால் அடுத்து உடனே சமநிலைக்கு மீண்டுவிடுவார்கள்.

முழுநேர செக்ஸ் கேளிக்கை என வாழ்பவர்கள் அரிதாக இருக்கலாம். பெரும்பாலானவர்கள் அப்படி இல்லை.

2)   மேற்சொன்ன சமூக எண்ணம் (ஆண் எனும் வக்கிர மிருகம்) உருவாக காரணம்சிக்மண்ட பிராயிட். அவர் ஆணின் அடிப்படையான உயிரியல் விழைவு செக்ஸேஎன்றார். அவர் காலத்திலேயே டார்வின் மனிதன் தன் உய்வுக்காக அன்றாடம்போட்டியிடும் ஒரு மிருகம் என்றார். இந்த இருவரும் சேர்ந்து இருபதாம் நூற்றாண்டில்ஆண் = செக்ஸ் + மிருகம் எனும் பிம்பத்தை கட்டமைத்தார்கள். இந்த மிருகம் என்பதுஎப்போதும் ஏனோ ஆணாக மட்டுமே இருக்கிறது. ஆக, எங்கு பாலியல் குற்றச்சாட்டுஎழுந்தாலும் கண்ணை மூடி “அந்த செக்ஸ் வெறிகொண்ட மிருகம் செய்திருக்கும்” என்கிறோம். ஆனால் இது பிழையான பார்வை.

ஒரு பெண்ணை அடைய ஒரு ஆணுக்கு சாத்தியம் ஏற்பட்டால் அவன் உடல் அவனைஅவளை நோக்கி செலுத்தும். அது இயற்கை. ஆனால் எப்போதும் அப்படிநடப்பதில்லை. சந்தர்ப்ப சூழல், அவனது அப்போதைய மன / உடல் நிலை, மனப்போக்கு ஆகிய பல விசயங்கள் இதை தீர்மானிக்கும். ஆனால் இப்படி சூழ்நிலைஏற்படுவதும் மிக அரிது தான்.

பெரும்பாலும் ஆண்கள் ஒரு பெண்ணுடன் இடத்தை / நேரத்தை செலவிட நேர்வதுபொதுப் போக்குவரத்து, சாலை, கேளிக்கைத் தலங்கள், அலுவலகம் ஆகியஇடங்களில் தான். இங்கு எல்லா ஆண்களும் பெண்களை நோக்கிப் பாய்வதில்லை. பேருந்தில் பெண்ணை உரசுவது, பொதுவிடங்களில் பிரச்சனை தருவது ஆகியவற்றைநூற்றில் ஒன்றிரண்டு ஆண்களே செய்கிறார்கள். ஆனால் மொத்த பழியும் அந்த நூறுபேர்களுக்கும் போகிறது. ஆண் ஒரு செக்ஸ் வெறி கொண்ட மிருகம் என்றால் ஏன்எல்லா ஆண்களும் ஏன் அதை செய்வதில்லை? ஏனெனில் எல்லா ஆண்களுக்கும்எப்போதும் பெண்ணுடல் தேவையில்லை.

சமூகம் பழிக்குமே என்ற பயமா?

அது மட்டுமில்லை. ஒரு குற்றத்தை செய்யும் போது பிடிபட மாட்டோம் எனும்நம்பிக்கை அந்த கணத்தில் எல்லாருக்கும் இருக்கிறது.

இப்போதெல்லாம் மாணவ மாணவியர் (படிக்கிறோம் என்ற பெயரில்) பரஸ்பரம்வீட்டுக்கு சென்று இரவை படுக்கையறையில் பேசியும் குடித்தும் கழிப்பது நடக்கிறது. அங்கெல்லாம் கூட்டு செக்ஸ் நடக்கிறதா? இல்லை. ஏனெனில் செக்ஸ் மட்டுமேமனிதனின் ஒரே தேவை இல்லை.

 

http://thiruttusavi.blogspot.com/2018/10/blog-post_91.html?m=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம்? (2)

ஆர். அபிலாஷ்

நம் சமூகம் திறந்தநிலை / தாராளவாத செக்ஸை அனுமதிக்காததால் ஆண் அந்த இச்சையை மட்டுப்படுத்திஅமுக்கி வைத்து கலைஅரசியல்சிந்தனைஎழுத்துசமூக மேம்பாடு என வெளிப்படுத்துகிறான் என்றார் பிராயிட்.

ஆனால் பிராயிடின் பார்வையில் ஒரு கிறுத்துவ கத்தோலிக்க குற்றவுணர்வு செயல்படுவதாய் பிற சிந்தனையாளர்கள் கருதுகிறார்கள்செக்ஸ் ஒரு பாவம் எனும் கிறித்துவ நம்பிக்கையே அவரை இப்படி அதை வகைப்படுத்த செய்திருப்பதாய் சொல்கிறார்கள்.

பிராயிடுடன் எனக்கு ஏன் உடன்பாடில்லை எனச் சொல்கிறேன்:

ஒரு ஆணை நீங்கள் நூறு பெண்களுடன் ஒரு வீட்டில் அடைத்தால் அவன் சதா எப்படி அந்த நூறு பேருடனும் உறவு கொள்ளலாம் என நினைக்க மாட்டான்பிக்பாஸ் வீட்டில் கூட எல்லா காமிராக்களும் பழுதானால் கூட அப்படி நடக்காதுஒரு சிலருடன் அவனுக்கு நிச்சயம் உறவு ஏற்படும்ஆனால் அவன் செக்ஸைக் கடந்து வாழவும் சிந்திக்கவும் நிச்சயம் முயல்வான்.

இசையில் துவங்கி சிற்பம்கட்டிடவியல்கோட்பாடுகள்எழுத்து என ஒவ்வொன்றால் அடிப்பனையான உடல் இச்சையின் வெளிப்பாடு மட்டுமல்ல – தனது ரசனையைகனவைஇச்சையை பலமடங்கு பெருக்கு மட்டற்று அனுபவிக்க அவன் கண்டறிந்த மார்க்கமே மேற்சொன்னவை.தா., இன்றைய உலகில் செக்ஸில் அரைமணி நேர சுகம் உண்டெனில் எழுதுவதிலோபாடுவதிலோபணம் சம்பாதிப்பதிலோ பல மடங்கு அதிக சுகம் உண்டுநீங்கள் செக்ஸ் இன்றி வாழ முடியாதுஆனால் செக்ஸ் மட்டுமே கொண்டும் வாழ முடியாதுமனிதன் புத்திசாலி – அரை-ஸ்பூன் இன்பத்தை அவன் அளவற்ற இன்பமாய் மாற்ற கற்றிருக்கிறான்.

இந்த நிலையில் தான் நாம் மீண்டும் ஆணை அடிப்படையில் ஒரு செக்ஸ் மிருகம்யார் மாட்டினாலும் குதறி வைப்பவன் என அற்பமாய் நினைக்கும் இடத்துக்கு வந்திருக்கிறோம் என்பது வருந்தத்தக்கது.

ஏனென்று தெரியவில்லை எந்த ஒரு மனிதன் பெரும் சாதனைகள் செய்து வாழ்வை உன்னதமாய் வாழ்ந்து அனுபவிக்க முயன்றாலும் அவனைப் பற்றின செக்ஸ் சர்ச்சைகள் கிளம்பும்மக்களும் அதை ஆர்வமாய் படிப்பார்கள்காந்தியடிகள் மீதான பாலியல் அவதூறுகள் ஒரு நல்ல உதாரணம். “டாவின்ஸி கோட்” நினைவுள்ளதாகர்த்தரும் சாதாரண மனிதரேஅவரும் செக்ஸ் வைத்துக் கொண்டவரே என சொல்வதே அந்நாவலின் நோக்கம்அந்நோக்கம் பல கோடி பேருக்கும் இருந்ததாலே அந்நாவல் ஒரே சமயம் சர்ச்சைக்கும் பெரும் புகழுக்கும் உள்ளானதுஎந்த ஒரு மாமனிதனையும் நீ ஒரு மிருகமே என முத்திரை குத்துவதில் நமக்கு ஒரு தனி சந்தோஷம்.

செக்ஸ் விசயத்தில் மட்டுமே இப்படி நடக்கிறது என்பது தான் விசித்திரம்!

ஒரு பெண் குற்றம் சுமத்தியதும் ஊரே கேள்வியின்றி ஆணை பழிக்க தயாராவது மேற்சொன்ன பிழையான எண்ணத்தையே காட்டுகிறதுபெண் பலவீனமானவள்அவள் எப்போதும் ஒடுக்கப்படுபவள் என்பதால் அல்ல நாம் ஆணைப் பழிப்பதுஎல்லா சந்தர்பங்களிலும் நாம் இது போல் பாதிக்கப்பட்டோரை கண்ணை மூடி ஆதரிப்பதில்லையே!

பெண் என்பதாலாஆம்ஆனால் ஆண்-பெண் சம்மந்தப்பட்ட எல்லா விவகாரங்களிலும் செக்ஸ் கூடவே வருகிறதேஆனால் செக்ஸ் சம்மந்தப்படாத எந்த விசயத்திலாவது நாம் இப்படியான நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கிறோமா.தா., ஒரு 100 வயதுப் பாட்டிஅவர் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. “என்னை பழிவாங்க வேண்டுமென்று வேண்டுமென்றே வீட்டு உரிமையாளர் மின்சாரத்தை துண்டிக்கிறார்” எனச் சொன்னால் நாம் நம்பத் தயங்குவோம்வீட்டு உரிமையாளர் குற்றச்சாட்டை மறுத்தால் அதை பரிசீலிப்போம்ஆனால் இப்போது 100 வயதை 20 வயதாக மாற்றுங்கள்உடனே “ஆமா அந்த வீட்டு உரிமையாளருக்கும் இளம்பெண்ணுக்கும் ஏதோ விவகாரம் போலஇவளை முயன்று பார்த்து அவள் மறுத்ததால் அதான் அந்தாள் மின்சாரத்தை துண்டித்திருக்கிறார்கொடூரமானவன்” என யோசிப்போம்செக்ஸ் என்று வந்து விட்டால் நாம் ஆதாரம்லாஜிக் எதுவும் தேடுவதில்லை.

ஒரு ஆண் தன் வாழ்வில் பல விசயங்களில் சமநிலை தவறுவது போல செக்ஸிலும் செய்கிறான்ஆனால் எப்போதும் அல்லநூறில் ஒரு ஆண் நூறில் ஒருமுறை பிறழ்கிறான்ஆனால் நீங்களோ நூற்றுக்கு நூறு ஆண்கள் நூற்றுக்கு நூறு முறை பிறழ்கிறார்கள் என்கிறீர்கள்ஆணுக்கு இதுவே வேலை என்கிறீர்கள்.

பெண்களைத் துரத்துவதே வைரமுத்துவின் அடிப்படையானதவிர்க்க முடியாதகட்டுப்பாட்டைக் கடந்த இயல்பென்றால் அவர் இவ்வளவு ஆயிரம் பாடல்களை எழுதி இருக்க மாட்டார்அப்படி செக்ஸ் அவரது கட்டுப்பாட்டை மீறியமிக மிக ஆதரமான இயல்பு அல்ல எனில் அவர் நிச்சயம் குற்றவாளியே என நாம் கூற முடியாது.

எப்படிப் பார்த்தாலும் ஆதாரமின்றி ஆண் மீது கண்ணை மூடி முத்திரை குத்துவது நியாயமல்ல.

பாதிக்கப்படும் பெண்களால் எப்போதும் ஆதாரத்தை காட்ட முடியாதே என்கிறார்கள்இதையே நீங்கள் எல்லா குற்றங்களுக்கும் சொல்லலாமே.

என்னை கூட்டமாய் சேர்ந்து சிலர் ஒரு தனியான இடத்தில் வைத்து தாக்குகிறார்கள்நான் பயந்து பின்வாங்குகிறேன்அதன் பிறகு புகார் தெரிவிக்கிறேன். “என் வசம் ஆதாரம் இல்லைஆனால் நான் பாதிக்கப்பட்டவன்நம்புங்கள்” என்றால் நம்புவார்களாபுகார் சொல்பவள் பெண் என்றாலும் கூட (அதில் பாலியல் அரசல்புரசலாய் தொனிக்கவில்லை என்றால்ஆதாரம் கேட்போம்ஆனால் பாலியல் என்றால் மட்டும் ஏன் ஆதாரம் எல்லாம் வேண்டாம் என அவ்வளவு அவசரமாய் நம்பத் தலைப்படுகிறோம்?

இது தவறல்லவாமுரண் அல்லவா?

 

http://thiruttusavi.blogspot.com/2018/10/2_12.html?m=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.