Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவுடன் இராஜதந்திர அரசியல் தொடர்புகளை ஏற்படுத்த இந்தியா முயற்சி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுடன் இராஜதந்திர அரசியல் தொடர்புகளை ஏற்படுத்த இந்தியா முயற்சி?

October 30, 2018

மகிந்த ராஜபக்சவின் நியமனம் அரசமைப்பிற்கு உட்பட்டதாகயிருக்கும் பட்சத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற தயார்…

Mahi-Modi-Namal.jpg?resize=770%2C458

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுடன் இராஜதந்திர அரசியல் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இந்தியாவின் என்டிரீவி தெரிவித்துள்ளது. மகிந்த ராஜபக்சவின் மீள்வருகையை எதிர்பார்க்காத இந்தியா இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களிற்கு பின்னர் மகிந்தவுடன் தொடர்பை ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது என என்டிரீவி தெரிவித்துள்ளது.

சிறிசேனவின் நடவடிக்கை காரணமாக மகிந்த ராஜபக்ச மீள அதிகாரத்தை கைப்பற்றியுள்ளமை இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது குறித்த கவலையை இந்தியாவிற்கு ஏற்படுத்தியுள்ளது என அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய இராஜதந்திரிகள் மகிந்த ராஜபக்ச தரப்பினருடன் தொடர்புகொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள புதுடில்லி தகவல்கள் மகிந்த ராஜபக்சவின் நியமனம் அரசமைப்பிற்கு உட்பட்டதாகயிருக்கும் பட்சத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற தயார் என குறிப்பிட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்தியாவின் ஆர்எஸ்எஸ் அமைப்பு மகிந்த ராஜபக்ச தரப்பினருடன் தொடர்புகொண்டுள்ளதாகவும் உறவுகளை வலுப்படுத்த முயல்வதாகவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் சேசாத்திரி சாரி புதிய தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையும் இந்தியாவும் சிறந்த உறவுகளை ஏற்படுத்த பாடுபடும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மாறியுள்ள பூகோள அரசியல் சூழ்நிலைகளில் நாங்கள் எங்கள் தேசிய நலனை பாதுகாப்பதற்கு யதார்த்தபூர்வமாகயிருக்கவேண்டும் வர்த்தகத்தில் ஈடுபடவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

http://globaltamilnews.net/2018/101312/

 

1 hour ago, கிருபன் said:

இதேவேளை இந்தியாவின் ஆர்எஸ்எஸ் அமைப்பு மகிந்த ராஜபக்ச தரப்பினருடன் தொடர்புகொண்டுள்ளதாகவும் உறவுகளை வலுப்படுத்த முயல்வதாகவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் சேசாத்திரி சாரி புதிய தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையும் இந்தியாவும் சிறந்த உறவுகளை ஏற்படுத்த பாடுபடும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆர் இந்த ஆர்.எஸ்.எஸ்.? ஆர் இந்த சேசாத்திரி சாரி?
சரியான கல்லுளி மங்கன்களாக இருப்பான்கள் போலிருக்கு.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.