Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் குரலாக செயற்பட கூட்டமைப்பு தவறியுள்ளது: அருட்தந்தை செபமாலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் குரலாக செயற்பட கூட்டமைப்பு தவறியுள்ளது: அருட்தந்தை செபமாலை

Rev-720x450.jpg

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகக் கருதப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல தடவைகள் தமிழ் மக்களின் குரலாக செயற்பட தவறியுள்ளதாக, அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த சில நாட்களாக இலங்கை முழுவதும் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை காரணமாக எந்த கட்சி யாருக்கு ஆதரவளிப்பது என்ற குழப்பநிலையில் உள்ளது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர்.

ஆனால், அண்மை காலமாக பல சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பு தமிழ் மக்களின் குரலாக ஒழிக்காத சந்தர்ப்பங்களும் அமைந்திருக்கின்றன. ஆனாலும் இச்சந்தர்ப்பத்தில் அவர்கள் இதனை சரியாக பயன்படுத்த வேண்டும்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு, தமிழ் மக்களுடைய உரிமை பிரச்சினை, தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாக எந்த அரசாங்கம் தாங்கள் செய்வோம் என்று சொல்கின்றதே அதற்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும், ஐ.நா.வில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை எந்த அரசாங்கம் நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுக்கின்றதோ அந்த அரசாங்கத்துக்கே ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

போரக்குற்றம், இனப்படுகொலை, காணமல் ஆக்கப்பட்டோருடைய பிரச்சினை, அரசியல் கைதிகளுடைய விடுதலை, அரசியல் சீர்திருத்தம், தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை தொடர்பாக எந்த அரசாங்கம் தாங்கள் செய்வோம் என்று வாக்குறுதி கொடுக்கின்றார்களோ அவர்களுக்கு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

 

http://athavannews.com/தமிழ்-மக்கள்-குரலாக-செயற/

 

கட்சி தாவப் போவதில்லை – சாள்ஸ் நிர்மலநாதன்!

imageproxy-4-720x450.jpg

மஹிந்த அணியுடன் இணைந்து கொள்வதற்கான தீவிர முயற்சியில் தான் ஈடுபட்டு வருவதாக வெளியான செய்தியை நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மறுத்துள்ளார்.

குறித்த தகவல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போதுள்ள 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து எடுக்கும் முடிவே எனது முடிவு. என்னைக் குறித்து வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.

மஹிந்த அணியுடன் இணைந்து அமைச்சுப் பொறுப்பை கைப்பற்றிக்கொள்ள தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவே குறித்த தவறான செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

தற்போதுள்ள இலங்கையின் அரசியல் நிலவரம் தொடர்பில் கூட்டமைப்பு விரைவில் தனது நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்தவுள்ளது. எனவே இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/கட்சி-தாவப்-போவதில்லை-சா/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.