Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்றம் எப்போது மீண்டும் கூடும்? வெளிவரும் முரண்பட்ட தகவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1192734566sl-parliament-5.jpg

நாடாளுமன்றம் எப்போது மீண்டும் கூடும்? வெளிவரும் முரண்பட்ட தகவல்கள்.

இலங்கையின் நாடாளுமன்றம் எப்போது கூடும் என்பது தொடர்பில் தெளிவற்ற நிலை காணப்படுகின்றது. இதற்கு நேற்றைய தினம் வெளியாகிய ஒன்றுக்கொன்று முரணான தகவல்களே காரணமாகும்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாக பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்த மறுநாள் நாடாளுமன்ற அமர்வை நவம்பர் மாதம் 16ம் திகதிக்கு ஒத்திவைத்திருந்தார்.

நாடாளுமன்றத்தை உடனே கூட்டவேண்டுமென்ற கோரிக்கைகள் உள்நாட்டிலும் சர்வதேசத்தரப்பிலிருந்தும் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டுவந்த நிலையில் நாடாளுமன்றம் நவம்பர் 5ம்திகதி கூட்டப்படும் என புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக்காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

எனினும் அவர் கூறிய சில மணிநேரங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றம் எதிர்வரும் 16ம்திகதி மீண்டும் கூட்டப்படும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவித்திருந்தார். இதேகருத்தை மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு பொது எதிரணி மற்றும் பொதுஜன பெரமுணவின் முக்கியஸ்தரான மஹிந்தானந்த அளுத்கமகேவும் நேற்றிரவு வலியுறுத்தியிருந்தார்.

இதனிடையே நாடாளுமன்றம் எதிர்வரும் 7ம்திகதி கூட்டப்படலாம் என்ற தகவலும் நேற்று உலாவந்தது. ஜனாதிபதி தரப்பில் இருந்து இதுவரை நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் விடயம் தொடர்பாக உத்தியோகபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நாடாளுமன்றம்-எப்போது-மீண/

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றம் 16ஆம் நாள் தான் கூடும் – மகிந்தானந்த

நாடாளுமன்றம் வரும் 16ஆம் நாளே கூட்டப்படும் என்று மகிந்த ராஜபக்ச ஆதரவு, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

‘சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றம், வரும் 16ஆம் நாளே கூடும் என்று அறிவித்திருந்தார். அதில் எந்த மாற்றமும் இல்லை.

நாடாளுமன்றம் வரும் 5ஆம் நாள் கூட்டப்படும் என்று நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.

ஆனால் அவர், அதற்குச் சாத்தியம் உள்ளது என்ற அடிப்படையில் தான் அப்படிக் கூறினார் ‘ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/11/02/news/34033

Mahindananda-Aluthgamage-300x200.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றம் 7ம்திகதி கூடும்- சபாநாயகர் ஐதேக எம்.பிக்களிடம் தெரிவிப்பு.

Dq-P17xU4AE2Buv-720x450.jpg

நாடாளுமன்றம் நவம்பர் 7ம்திகதி மீண்டும் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளதாக ஐதேக எம்.பி ஹர்ஸ டி சில்வா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 7ம்திகதி நாடாளுமன்றம் கூடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கூறியதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்த கூற்றையே இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றோ நாளையோ வெளியாகும் என எதிர்பார்ப்பதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியின் முதலாம் இலக்க அறையில் தற்போது இடம்பெற்று வரும் சந்திப்பின் போதே சபாநாயகர் இந்தத் தகவல்களை வெளியிட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7ம்திகதிக்கான வர்த்தமானி அறிவித்தல் தாமதிக்கப்படுமிடத்து சபாநாயகர் தனக்குரிய அதிகாரத்தைப் பாவித்து நாடாளுமன்றத்தைக் கூட்டவேண்டும் என கட்சித்தலைவர்கள் ஏகமனதாக சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

7ம்திகதிக்கான வர்த்தமானி அறிவித்தல் தாமதிக்கப்படுமிடத்து சபாநாயகர் தனக்குரிய அதிகாரத்தைப் பாவித்து நாடாளுமன்றத்தைக் கூட்டவேண்டும் என கட்சித்தலைவர்கள் ஏகமனதாக சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர். நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டவேண்டும் என வலியுறுத்தியுள்ள கட்சித்தலைவர்கள் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என்றும் அரசியல்சாசன சதிநடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளனர்.

Dq-NXSmU8AA5h2g-428x159.jpgDq-NXSmU8AA5h2g-428x159.jpg

ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்துப் பங்காளிக்கட்சிகள் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தச்சந்திப்பில் பங்கேற்றுள்ளதாக ஹர்ஸ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார். 116 எம்.பிக்கள் இந்தச்சந்திப்பில் பங்கேற்றுள்ளதாக சுட்டிக்காட்டியிருக்கும் ஹர்ஸ டி சில்வா, ஜேவிவியை பிரதிநிதித்துவப்படுத்தி 2 எம்.பிக்கள் பங்கேற்றுள்ள நிலையில் பிரதமருடன் சேர்த்து தம்வசம் 121 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://athavannews.com/நாடாளுமன்றம்-7ம்திகதி-கூ/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.