Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவுக்கும், இருப்பிடத்துக்கும்... யானைகள் எங்கே போவது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

elephant_28102018_SPP_CMY.jpg

உணவுக்கும், இருப்பிடத்துக்கும்... யானைகள் எங்கே போவது?

யானை_ மனித மோதல் போதாதென்று யானை_ ரயில் மோதலும் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான மோதல்கள் ஏன் உருவாகின்றன? அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது? என்ற விடயங்கள் குறித்து துறைசார் அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் சூழலியலாளர்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பேராதனை பல்கலைக்கழக விலங்கியல் விஞ்ஞான கற்கைகள் திணைக்களப் பேராசிரியர் கித்சிறி பீ. ரணவன இவ்வாறு கூறுகிறார்.

கேள்வி : யானை_ ரயில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கான காரணங்கள் எவை?

பதில் : யுத்தம் காரணமாக பல வருடங்கள் யாழ்ப்பாணப் புகையிரதப் பாதை மூடப்பட்டிருந்தது. அதனால் அந்தப் பாதையில் நீண்ட காலமாக ரயில்_யானை மோதல்கள் இடம்பெறவில்லை. இன்று அந்தப் பாதை திறக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் அநுராதபுரம் பாதையிலேயே விபத்துகள் ஏற்பட்டன. விசேடமாக ஹபரணை பிரதேசத்திலேயே யானைகள் விபத்தில் சிக்கின. தற்போது இரண்டு பாதைகளிலும் ரயில்கள் பயணிப்பதால் விபத்துகள் அதிகரித்துள்ளன.

யானை என்பது வாழ்வதற்கு பரந்த இடம் தேவைப்படும் விலங்கினமாகும். மக்கள் அவற்றின் இடங்களை ஆக்ரமிக்கும் போது அவை வேறு இடங்களை தேடிச் செல்கின்றன. மேலும் அவற்றுக்கு அதிகளவு உணவு தேவை. அதனால் உணவு தேடியும் இடத்துக்கிடம் செல்கின்றன. அவை ஒரு பிரதேசத்தை விட்டு இன்னொரு பிரதேசத்துக்கு இடம்பெயரும் காலமும் உண்டு. அதாவது வரட்சியான காலங்களில் உணவையும் நீரையும் தேடி வேறிடங்களுக்குச் செல்கின்றன. அதனாலும் ரயில் விபத்துக்களை சந்திக்கின்றன.

அடுத்த விடயம் மின் வேலிகள் காரணமாக இவ்வாறு இடம்மாறுவது சிரமமாகவுள்ளது. யானைகள் மின்வேலி ஓரமாக வந்து ரயில் பாதையில் இடைவெளியிருக்கும் இடங்களில் ரயில் பாதையை கடக்கின்றன. அதனாலும் விபத்துகள் ஏற்படுகின்றன.அடுத்த விடயம் யானைகளுக்கு ஏற்படும் விபத்துகள் தொடர்பாக ரயில் சாரதிகள் அறிவுறுத்தப்பட வேண்டும். இந்த அனுபவம் அவர்களுக்கு புதிதாக இருக்கலாம். ஏனென்றால் யாழ்ப்பாணப் பாதை அண்மையிலேயே திறக்கப்பட்டது.

கேள்வி : இந்தப் பிரச்சினை காரணமாக சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. போக்குவரத்தில் சிரமம் ஏற்படுகின்றது. யானைகளின் உயிர் பறிக்கப்படுகின்றது. இதற்கான தீர்வுதான் என்ன?

பதில் : தீர்வுகள் பல முன்வைக்கப்பட்டுள்ளன. குறுகிய கால தீர்வாக ரயிலின் வேகக் கட்டுப்பாடு குறித்து ரயில் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். இலங்கை வன விலங்கு திணைக்களம் இந்த தகவல்களை அடிக்கடி ரணில் திணைக்களங்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். ரயில் திணைக்களம் அதுபற்றி ரயில் சாரதிகளுக்கும் புகையிரத பாதுகாப்பு ஊழியர்களுக்கும் வேக கட்டுப்பாடு குறித்து அவதானத்துடன் செயற்பட அறிவுறுத்த வேண்டும்.

கேள்வி : இது தொடர்பாக தீர்வு காண ரயில் திணைக்களம் குழுவொன்றை அமைத்துள்ளது. அந்த குழு யானைகள் பாதை மாறும் இடங்களில் ரயில் பாதைக்கு மேலோ அல்லது கீழேயோ பாதையை அமைக்க பரிந்துரை செய்துள்ளதல்லவா?

பதில் : அந்த யோசனை நல்லதுதான். அதற்கான செலவை ஏற்றுக் கொள்வது என்பதில் தான் பிரச்சினையுள்ளது. ரயில் பாதையில் சுரங்கப் பாதை அமைப்பதானால் அது குறுகியதாக அமைய முடியாது யானைகளுக்கு இலகுவாக மாறக்கூடிய நல்ல உயரம் மற்றும் அகலமாக அமைக்கப்பட வேண்டும். அவ்வாறான பாதையை அமைக்க பெருமளவு நிதி தேவைப்படும். அந்தத் திட்டத்தை செயல்படுத்துவது சிறந்ததுதான்.

கேள்வி : அதிக உணர்திறன் மிக்க உபகரணங்களைப் பொருத்துவதன் மூலம் யானைகள் நடமாடும் இடங்களை முன்னரே அறியத் தரும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதல்லவா? இது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில் : அதுவும் நல்ல யோசனைதான். அது யானையின் நிறை உணரப்படும் அதி உணர்வு கூடிய உபகரணங்களைப் பொருத்தும் திட்டமாகும். அந்த உபகரணத்தை யானை மிதித்தால் பெரும் பிரதேசத்துக்குள் விளக்குகள் ஒளிர்ந்து அலாரம் சத்தமும் கேட்கும். அப்போது யானை பாதையைக் கடக்கின்றது என்றோ யானையின் நடமாட்டம் அண்மையில் உள்ளது என்றோ ரயில் சாரதிகள் உணர முடியும். அதனால் விபத்தைத் தவிர்க்கலாம்.

கேள்வி : இது தொடர்பாக பொறுப்புடன் செயல்பட வேண்டிய பிரிவுகள் எவை?

பதில் : புகையிரதத் திணைக்களம், வனவிலங்குகள் திணைக்களம் என்பன இணைந்து செயல்பட வேண்டும். அதேபோல் பல்கலைக்கழக மட்டம் மற்றும் இதுபற்றிய அக்கறையுள்ள அரச சார்பில்லாத சூழலியல் அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும். இங்கு அதிக உணர்திறன் மிக்க டிஜிட்டல் உபகரணங்களை ஆய்வு செய்ய முதலீட்டாளர்களும் இருக்க வேண்டும். அதனுடன் தொடர்புபட்ட வியாபார சமூகமும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

வனவிலங்கு திணைக்கள உதவிப் பணிப்பாளர் (யானைகள் பாதுகாப்பு)ஏ.எச். சுமனேசேன கூறும் கருத்துகள் வருமாறு:

கேள்வி :யானை_ ரயில் மோதலுக்குக் காரணம் என்ன?

பதில் : இதன் உண்மையான காரணம் யானைகள் வாழ்வதற்கான பிரதேசங்கள் குறைவடைவதாகும். கிராமங்களுக்கு சென்றால் யானை வெடி கொளுத்துகின்றார்கள். இன்னொரு புறம் மின்வேலிகளை அமைக்கின்றார்கள். அதனால் யானைகள் போவது எங்கே என்று தெரியாமல் அலைகின்றன. அவ்வாறான வேளைகளில்தான் விபத்துகள் ஏற்படுகின்றன.

கேள்வி : குறுகிய நாட்களிலேயே பல யானைகள் மரணமடைந்துள்ளன. ஆனால் அதிகாரிகள் ஏன் அதற்காக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லையே...

பதில் : தற்போது இந்த நிலையமையை ஆராய்ந்து தீர்வைக் காண அமைச்சர் குழுவொன்றை அமைத்துள்ளார். அதன் பிரகாரம் கடந்த தினங்களில் அதுபற்றி ஆராய்ந்து அதனுடன் தொடர்புடையவர்களுடன் கலந்துரையாடி அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

கேள்வி : ஒருபுறம் யானைகளின் எண்ணிக்கை குறைவடைகின்றது. இன்னொருபுறம் சொத்துகள் பயிர்கள் அழிவடைவதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றார்கள். மேலும் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. ரயில் பயணிகளும் பாதிக்கப்படுகின்றார்கள். இது அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டுக்கு பிரச்சினையல்லவா?

பதில் : நீங்கள் கூறிய விடயங்கள் உண்மையில் எமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் நாம் வனவிலங்குத் திணைக்களம், ரயில் திணைக்களம் என்பவற்றை இணைத்து கலந்துரையாடி சில தீர்வுகளை முன்வைத்துள்ளோம். அவற்றை செயல்படுத்தும் போது ஓரளாவாவது இந்த நிலைமையை சீர்செய்யலாம்.

சூழலியலாளர் சசிகலன ரத்வத்தை கருத்துத் தெரிவித்ததாவது:

கேள்வி : ரயில்_ யானை மோதல் ஏற்படுவதற்கான காரணமென்ன?

பதில் : காரணத்தை அறிவதற்கு முன்னர் பிரச்சினை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக யானைகள் ரயிலால் மோதப்படுவது அநுராதபுரம், மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில்தான். ஆனால் அதற்கான தீர்வைக் கூறுபவர்கள் அவற்றைத் தீர்ப்பதற்கான யோசனைகளை கொழும்பிலிருந்தே தயாரிக்கின்றார்கள்.

அதனால் சரியான தீர்வு கிடைக்குமெனறு கூற முடியாது. அதற்குக் காரணம யானை_ ரயில் மோதல் தொடர்பான சரியான தரவுகள் அவர்களிடம் இல்லை. முதலில் இந்த மோதல் எவ்வாறான காலத்தில் நடைபெறுகின்றன? விபத்து எந்த நேரத்தில் இடம்பெறுகின்றது? எந்தப் பிரதேசத்தில் இடம்பெறுகின்றது என்பதை அறிவது அவசியம். கடந்த மூன்று வருடங்களில் இடம்பெற்ற ரயில்_ யானை மோதல்கள் தொடர்பான தரவுகள் என்னிடம் உள்ளன. அவற்றை ஆராயும்போது அநேகமாக விபத்துக்கள் இரவு வேளைகளிலேயே இடம்பெறுகின்றன.

அதேபோல் யானைகள் கூட்டமாக செல்லும் போதே விபத்துக்கள் அதிகமாக இடம்பெறுகின்றன. வருடத்தில் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில்தான் இந்த விபத்துக்கள் இடம்பெறுகின்றன.

இந்த விபத்துகள் காட்டிலிருந்து ஓரளவு தூரத்திலுள்ள மக்கள் வசிக்கும் இடங்களிலேயே இடம்பெறுகின்றன. யானைகள் மிகவும் நுண்ணறிவுள்ள விலங்குகளாகும். அவைகள் மிகவும் கவனத்துடனேயே செயல்படுகின்றன. இந்த விபத்துகள் மனித நடவடிக்கை காரணமாக இடம்பெறுகின்றனவா என ஆராய வேண்டும். யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் சந்தர்ப்பங்களில் அவற்றை விரட்ட முற்படும் விதத்தினாலும் ரயில்_ யானை மோதல் விபத்துகள் ஏற்படலாம். சிலவேளைகளில் குட்டி யானைகள் புகையிரதப் பாதைக்கு வரும் வேளையில் அவற்றைப் பாதுகாக்க யானைக் கூட்டம் முற்படும் வேளையில் விபத்துக்கள் நேரலாம். அதனால் இது தொடர்பாக ஆராய வேண்டும்.

கேள்வி : இது தொடர்பாக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு முன்வைக்க தயாராகவுள்ள அறிக்கை பற்றி அறிந்துள்ளீர்களா?

பதில் : அவர்கள் ஐந்து விடயங்களின் கீழ் தீர்வுகளை முன்வைத்துள்ளார்கள். ஆனால் அவை விஞ்ஞானபூர்வமாக அமையவில்லை. அந்த தீர்வுகளால் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காததுடன் வேறு விதமான பிரச்சினைகளும் ஏற்படலாம். இப்பிரச்சினையில் யானையையோ ரயிலையோ மாத்திரம் காப்பாற்றலாம் என கூற முடியாது. அதனால் இரண்டையும் காப்பாற்றக்கூடிய தீர்வுக்கே செல்ல வேண்டும்.

கேள்வி : இதற்கான தீர்வு என்னவென்று நீங்கள் எண்ணுகின்றீர்கள்?

பதில் : எமது அண்டை நாடான இந்தியாவிலும் இந்த பிரச்சினை அநேகமாக உள்ளது. அவர்கள் அதனைத் தடுக்க தேவையான தீர்வுகளை கண்டறிந்துள்ளார்கள். எமது நாட்டில் இந்த பிரச்சினைக்குத் தீர்வை வழங்கும் குழுவினர் நான்கு நாட்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் பின்னரே தீர்வுகளை முன்வைத்துள்ளார்கள். குறுகிய காலத்தில் இதற்கான தீர்வைத் தேடமுடியாது.

யானைக்கூட்ட தலைவனுக்கோ தலைவிக்கோ ஒளிப்பதிவு செய்யக் கூடிய உபகரணத்தை பொருத்தி சில காலம் அவற்றின் நடத்தையை ஆய்வு செய்து நல்ல புரிந்துணர்வைப் பெற்றுக் கொள்வதுடன் அவை எவ்வாறு விபத்துகளுக்கு முகங்கொடுக்கின்றன என்ற முடிவுக்கு வரலாம்.

அதற்கு நீண்ட காலம் தேவைப்படும். நிலைமை தற்போது மோசமாகியுள்ளதால் குறுகிய கால தீர்வாக ரயில் வண்டிகளின் விளக்குகளின் ஒளியை அதிகரிக்கச் செய்தல், போதுமான அளவு பணியாளர்கள் இல்லாத வனவிலங்கு திணைக்களத்துக்கு சிவில் பாதுகாப்பு திணைக்களம் போன்ற நிறுவனங்களிற்கு பணியாளர்களை நியமித்து யானைகள் விபத்துக்குள்ளாகும் பிரதேசங்களில் அவர்களை இரவு நேரப்பணிகளில் ஈடுபடுத்தலாம். குறிப்பிட்ட பிரதேசங்களில் ரயில் வண்டியின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கலாம்.

தில்ரூ ஜயசேகர
(தினமின)

http://www.thinakaran.lk/2018/10/31/கட்டுரைகள்/28061/உணவுக்கும்-இருப்பிடத்துக்கும்-யானைகள்-எங்கே-போவது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.