Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய பிரதமருக்கு ஆதரவு அளிக்க முடியாத நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம்: சித்தார்த்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய பிரதமருக்கு ஆதரவு அளிக்க முடியாத நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம்: சித்தார்த்தன்

புதிய பிரதமருக்கு ஆதரவு அளிக்க முடியாத நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம்: சித்தார்த்தன்

புதிய பிரதமருக்கு ஆதரவு அளிக்க முடியாத நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம் என புளொட் அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தமிழீழ விடுதலை கழகத்தின் மத்தியகுழு கூட்டமும், வன்னி பிராந்திய புளொட் அமைப்பின் கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் கூட்டமும் இன்று (04) புளொட் அமைப்பின் தலைவரும், யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தலைமையில் கோவில்குளம் சந்தியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் வன்னி பிராந்திய புளொட் அமைப்பின் உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் சந்தித்த தமிழீழ விடுதலை கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் கழகத்தின் உறுப்பினர்களுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக விளக்கமளித்ததுடன் உறுப்பினர்களின் கேள்விக்கும் பதிலளித்திருந்தார்.

அதன் பின் நடைபெற்ற தமிழீழ விடுதலை கழகத்தின் மத்திய குழு கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்களுக்கு அவர் மேலும் கருத்து தெரிவித்த த.சித்தார்த்தன்,

நாட்டில் பிரதமரை மாற்றி நியமித்தமை அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சைகளையும் குழப்பங்களையும் உருவாக்கியுள்ளது. அரசியல் அமைப்புக்கு விரோதமான ஒரு செயல்பாடாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு அதைப் பார்க்கின்றது. ஆகவே புதிய பிரதமருக்கு ஆதரவு அளிக்க முடியாத நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம்.

புளொட் அமைப்பிலிருந்து கட்சி மாறிய கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவர்களை எமது கட்சி விலக்கியுள்ளதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்தும் விலக்குமாறும் பரிந்துரை செய்துள்ளது என தெரிவித்தார்.

IMG_0275IMG_0287

 

http://www.samakalam.com/செய்திகள்/புதிய-பிரதமருக்கு-ஆதரவு/

 

  • கருத்துக்கள உறவுகள்

sitharthan-720x450.jpg

புதிய பிரதமருக்கு ஆதரவில்லை: சித்தார்த்தன் திட்டவட்டம்

நாட்டின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் மத்தியகுழு கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரதமர் மாற்றமானது அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சைகளையும் குழப்பங்களையும் உருவாக்கியுள்ளதென குறிப்பிட்டுள்ள சித்தார்த்தன், அரசியலமைப்புக்கு விரோதமான ஒரு செயற்பாடாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு இதனை பார்ப்பதாக சுட்டிக்காட்டினார். ஆகையால் புதிய பிரதமரை ஆதரிக்க போவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட வியாழேந்திரனை புளொட் அமைப்பிலிருந்து நீக்கியுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்தும் அவரை விலக்குவதற்கு பரிந்துரை செய்துள்ளதாக சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டார்.

http://athavannews.com/புதிய-பிரதமருக்கு-ஆதரவில/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.