Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலே எனது பிரதமர்- மகிந்த ராஜபக்ச அமைச்சரவையிலிருந்து விலகினார் மனுச நாணயக்கார

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலே எனது பிரதமர்- மகிந்த ராஜபக்ச அமைச்சரவையிலிருந்து விலகினார் மனுச நாணயக்கார

மகிந்த ராஜபக்ச அமைச்சரவையில் பிரதியமைச்சராக பதவியேற்ற காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்கார தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் சட்டவிரோத அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளிற்கு துணைபோகக்கூடாது என்ற முடிவிற்கு வந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மனுச நாணயக்கார தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது

மகிந்த ராஜபக்சவை நீங்கள் பிரதமராக நியமித்து பாராளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்தியதை தொடர்ந்து கடந்த சில நாட்கள் குழப்பம் மிகுந்தவையாக காணப்படுகின்றன.

அவ்வேளை நான் உங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன்,நீங்கள் தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு புதிய அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக பணியாற்றும் அரசியல் முடிவையெடுத்தேன்

உங்களின் நடவடிக்கையினால் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளை தெளிவுபடுத்தி சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கையொன்றை வாசிக்க நேர்ந்தது.

பதவிப்பிரமாணம் செய்துள்ள புதிய அரசாங்கத்தை எந்த உலகநாடும் ஏற்றுக்கொள்ளவில்லை.இது எனது ஜனநாயக மனச்சாட்சியை ஆழமாக சிந்திக்க தூண்டியுள்ளது,நான் எனது அரசியல் சகாக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் பின்னர் இவ்வாறான சட்டவிரோத அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளிற்கு துணைபோகக்கூடாது என்ற முடிவிற்கு வந்துள்ளேன்.

இதன் காரணமாக எனது ஜனநாயக- அரசியல் நம்பிக்கைகள்  மற்றும் மனச்சாட்சியின்  அடிப்படையில் நான் எனது இராஜினாமாவை சமர்ப்பிக்கின்றேன்.

manusha_nana.jpg

2015  ஜனவரி 8 ம் திகதி தேர்தலில் உங்களிற்கு கிடைத்த ஆணையும் அதன் பின்னர் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதும் அதிகார துஸ்பிரயோகங்களையும்  ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் ஒழி;ப்பதற்கே என்பதை நான் உங்களிற்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

இன்று முதல் நான் சபாநாயகரின் நிலைப்பாட்ட ஏற்று  பிரதமராக ரணில் விக்கிரமசி;ஙகவையே ஏற்பேன் என தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/43950

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனுஷ நாணயக்காரவைத் தொடர்ந்து மேலும் 15 பேர் எம்மோடு இணைவர் -ஐ.தே.க தெரிவிப்பு

(நா.தனுஜா)

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மனுஷ நாணயக்கார அப்பதவியிருந்து இராஜினாமா செய்து, மீளவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும், ஜனநாயக விரோத செயற்பாடுகளை முறியடிப்பதற்கு எம்மோடு இணைந்து எமக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளமையானது அரசியலமைப்பினையும், ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக நாம் மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றியாகும் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்ததுடன், மனுஷ நாணயக்காரவைப் போன்று இன்னும் 15 பேர் வரையில் எம்மோடு இணைந்து கொள்வதாக உறுதியளித்துள்ளனர் என அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதனைத் தொடர்ந்து பதவியேற்ற புதிய அமைச்சரவையில் ஜக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மனுஷ நாணயக்கார எம்.பி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 

தத்தமது கட்சிகளின் பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கான கட்சித்தாவல்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், நேற்றையதினம் மனுஷ நாணயக்கார புதிய அரசாங்கத்தில் தான் பெற்றுக் கொண்ட அமைச்சுப்பதவியினை இராஜினாமா செய்துள்ளதுடன், மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாகவும், ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படுவதற்கு தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் இன்று செவ்வாய்கிழமை அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அஜித் பி பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/43978

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனுஷ நாணயக்கார சிங்கப்பூரில் கைது ?: மஹிந்த அணி தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார சிங்கப்பூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆதவன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிலைவரம் நிகழ்ச்சில் தொலைபேசி ஊடாக கருத்து வெளியிடும்போதே மஹிந்த ராஜபக்ச ஆதரவு மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில்ராஜ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்திலிருந்து விலகி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்ட மனுஷ நாணயக்கார இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இதுதொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவித்தல்கள் எதனையும் பொலிஸ் தலைமையகம் இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/பெருந்தொகைப்-பணத்துடன்-ம/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.