Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எது பயங்கரவாதம் என்பதை சார்க் தலைவர்கள் புரிந்து கொள்ளட்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எது பயங்கரவாதம் என்பதை சார்க் தலைவர்கள் புரிந்து கொள்ளட்டும்

[10 - April - 2007] [Font Size - A - A - A]

வி.திருநாவுக்கரசு

22 வயது நிரம்பிய தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கம் (சார்க்) தனது 14 ஆவது உச்சி மாநாட்டினை சென்ற வாரம் புதுடில்லியில் நடத்தியது. உலக சனத்தொகையில் 20% அல்லது 1.5 பில்லியன் மக்கள் வாழும் இப்பிராந்தியத்தில் தான் அதிகளவு வறுமையும் காணப்படுகிறது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் நாடுகளுடன் புதிதாக ஆப்கானிஸ்தானும் இணைந்துள்ளது. மேலும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் தென்கொரியாவும் முதல் முதலாக பார்வையாளர்களாக பங்கேற்றுள்ளனர். பார்வையாளர்கள் மேற்பார்வையாளர்கள் என எண்ணத் தோன்றியது.

`சார்க்' இருட்டில் தடவிக் கொண்டிருக்கிறது (SARCK Gropes in the dark) என முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் அமரர் ஏ.சி.எஸ்.ஹமீது கூறியது ஞாபகம். இன்று கூட அது ஆண்டுகள் கூடி மடம் கட்டும் இடம் அல்லது `கதைக் கடை' என பல்வேறு வட்டாரங்களில் விமர்சிக்கப்படுகின்றது. அங்கத்துவ நாடுகளுக்கு உள்ளேயும் இடையேயும் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகின்ற போதும் சார்க் சாசனத்தின் படி இரு தரப்பு பிரச்சினைகள் உச்சி மாநாட்டில் விவாதிக்க முடியாது. இது சார்க் அமைப்பின் செயற்பாட்டிற்கு ஒரு தடைக்கல்லாக உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான குரோதங்களுக்கு `சார்க்' முன்னேற்றத்திற்கு குந்தகமாயுள்ளன.

நிற்க, 14 ஆவது மாநாட்டில் நிறைவேற்றிய பிரகடத்தினை பார்க்குமிடத்து தெற்காசிய சுங்க சபை மற்றும் தெற்காசிய பொருளாதார சபை போன்றவற்றுக்கான திட்டம் விரைவில் தீட்டுதல், சந்தை வாய்ப்பு வசதிகள் ஏற்படுத்தல் மற்றும் தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (SAFTA) நடைமுறைப்படுத்துவது போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டன. மாநாட்டு இறுதியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையில் மேற்குறித்த பிரகடனம் `முழுமையாகவும் முன்னோக்கியதாகவும் இருப்பதுடன் அது எமது பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு கூடுதலான ஆணையை வழங்குகின்றது. எம் முன்னால் உள்ள பணியை ஒரு யுத்தம் என்றெடுத்தால் இதில் வெற்றியீட்டுவதற்கு நாம் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். எமது பேதங்களை சுகமாகத் தீர்த்து பிராந்திய ஒத்துழைப்பினை அதிகரிக்க வேண்டும்' என சூளுரைத்திருந்தார்.

`சார்க்' காலத்திற்கு காலம் பிரகடனங்கள் வெளியிடுவதைத் தவிர 21 வருடங்களாக குறிப்பிடத்தக்க எதையுமே சாதிக்கவில்லை என்பதே பிராந்தியத்தின் சாதாரண மக்களின் கவலையாகும். உதாரணமாக குஅஊகூஅ உருவாக்கப்பட்டு 10 வருடங்களுக்கு மேலாகிவிட்ட போதும் அது இன்றுவரை உருப்படியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே `சார்க்' கடந்து வந்த பாதையை ஒட்டுமொத்தமாக பார்க்குமிடத்து அதன் எதிர்கால போக்கு பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை எனலாம்.

`சார்க்' பிரகடனத்தில் பயங்கரவாதம் எனப்படும் விடயம் தொடர்பாக என்ன கூறப்பட்டுள்ளது என்பது பிரதானமாக நோக்கப்பட வேண்டியதாகும். அதாவது தலைவர்கள் சாதாரண (சிவிலியன்) மக்கள் பயங்கரவாத குழுக்களால் குறிவைத்து கொலை செய்யப்படுதல் மற்றும் எங்கேயும் எவருக்கு எதிராகவும் முடுக்கிவிடப்படும் சகல வடிவங்களிலுமான பயங்கரவாத வன்செயல்களை கண்டித்துள்ளனர். மற்றும் குறிப்பாக பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி வழங்குதல், நிதி சேகரித்தல் இவற்றிற்கு முகவர் அமைப்புகளை பயன்படுத்தல், போதைப் பொருட்கள், ஆட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் போன்ற செயல்களுக்கு எதிராக சகல நடவடிக்கைகளும் எடுப்பதற்கான பற்றுறுதியை வெளிப்படுத்தினர். இப்பிராந்தியத்தின் சமாதானத்திற்கும் ஸ்திரத்தன்மைக்கும் பயங்கரவாதம் அச்சுறுத்தலாக இருப்பதால் அதனை வன்மையாகக் கண்டித்தனர்" என பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஆனால், பயங்கரவாதம் என சார்க் தலைவர்களால் இனம் கண்டுள்ள பிரச்சினைக்கான அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியிலான அடிப்படை காரணிகள் மீது அவர்கள் கவனம் செலுத்தத் தவறிவிட்டனர். மேலும், அவர்கள் கூறும் பயங்கரவாதத்திற்கு இட்டுச் செல்லும் ஆளும் வர்க்கத்தினரின் எதேச்சாதிகார அடக்குமுறை மற்றும் அரச பயங்கரவாதம் என்பவற்றையும் அவர்கள் கம்பளத்திற்கு கீழே தள்ளிவிட்டுள்ளனர்.

இன்றைய இலங்கை நிலைமையை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பயங்கரவாதப் பிரச்சினை என்பது தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை பல தசாப்தங்களாக தீர்க்கப்படாதது மட்டுமல்லாமல் சாத்வீக போராட்டங்களை முறியடிப்பதற்கு அரச பயங்கரவாதம் முடுக்கி விடப்பட்டு தமிழர் தலையெடுக்க முடியாத நிலையிலேயே ஆயுத போராட்டம் மேற்கொள்ளப்பட்டது வரலாறு. அப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இன்றுவரை உருப்படியானதொன்றும் செய்யப்படவில்லை. இன்றைய பிரதான ஆளும் கட்சியினர் பல மாதகால இழுத்தடிப்பின் பின்னர் மே மாதம் முதலாம் திகதி தமது தீர்வுத் திட்டம் முன் வைக்கப்படுமென அறிவித்துள்ளனர். அதுவும் சிங்கள பேரினவாத ஒற்றையாட்சி தத்துவம் என அறியக்கிடக்கிறது. அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க ஆற்றிய உரையின் போது, "பேச்சுவார்த்தை மூலம் தீர்வு" என்பதை ஆங்கிலத்தில் Negotiated Settlement என கூறப்படுவதற்கான சிங்கள சொற்பதம் தனக்கு தெரியாது எனக் கூறியுள்ளார். அதாவது அரசியல் தீர்வு ஒன்று தேவையற்றது என்றே அவர் கருதுகிறார். அநுராதபுரத்தில் நடைபெற்ற பிறிதொரு வைபவத்தில் `பௌத்தம் அஹிம்சையை போதித்த போதும் யுத்தத்திற்கு நாம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளோம்' என அவர் கூறியுள்ளார். தமிழரின் அஹிம்சைப் போராட்டங்கள் ஆட்சியாளரால் நசுக்கப்பட்டு தமிழர் தான் யுத்தத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டனர் என்பதை பிரதமர் ஏன் மறந்து விட்டார்? அதேநேரத்தில் ஜே.வி.பி.யினர் அதிகாரப் பகிர்வு மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டைத் துண்டாட முயல்கிறார் என குற்றம் சாட்டியுள்ளனர். வடக்கு, கிழக்கை துண்டாடுவதற்கு கங்கணம் கட்டி நின்றவர்களின் கதை இப்படி இருக்கிறது. அமெரிக்க தூதுவர் றொபெட் ஒ பிளேக் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்கவை சந்தித்த போது தாம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதை எதிர்ப்பதாகவும் அவர்களை இராணுவ ரீதியாக தோற்கடிக்க வேண்டும் எனவும் அமரசிங்க கூறியுள்ளார். மேலும் கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலை ஒரு நாடாவது கண்டிக்கவில்லை என ஜே.வி.பி.பிரசார செயலாளர் விமல் வீரவன்ச கவலை தெரிவித்துள்ளார்.

இந்திய நிலைமைகள்

எமது அண்டைய நாடும் பிராந்திய வல்லரசுமாகிய இந்தியாவின் ஒட்டுமொத்தமான சமகால நிலைமையை சற்று நோக்குவோம். இச் சந்தர்ப்பத்தில் பிரபல இந்திய சமூகவியலாளர் அருந்ததிரோய் அண்மையில் `ரொஹல்க்கா' எனப்படும் இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே கூறிவைத்த சில கருத்துக்களை பகிர்ந்துகொள்வது போதுமானதாகும். அதாவது, இந்திய மத்தியதர வர்க்கத்தினர் அளவுக்கதிகமான நுகர்வுப் பழக்கத்தினையும் அதிகளவு பேராசையும் கொண்டவர்களாக உள்ளனர். அப்பாவி ஏழை மக்களுக்குரிய நீர், நிலம் போன்ற வளங்களை அபகரித்துக் கொண்டு உலகளாவிய மேட்டுக் குடியினருடன் இணைந்து நிற்கின்றனர். அதாவது, ஏகாதிபத்தியத்தின் ஒரு பகுதியினர் என்றெண்ணி கீழ் மட்டத்தினரை சுரண்டிக்கொண்டிருக்கின்றனர

'எது பயங்கரவாதம்?' என்பதை சாக்கு தலைவர்கள் புரிந்துகொள்ள முன், 'சாக்கு என்றால் என்ன?' என்பதை சாக்கு தலைவர்கள் முதலில் புரிந்து கொள்ளட்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.