சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன்  சீனத் தூதுவர் பேச்சு

 

sarath-amunugama-chen-xiyuan-1-300x199.jசிறிலங்காவுக்கான  சீனத் தூதுவர் சென்  ஷியுவான் நேற்று, சிறிலங்கா  வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகமவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கொழும்பில் உள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சீனத் தூதரக அதிகாரிகள் குழுவொன்றும், சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் ரவிநாத ஆரியசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றது.

சிறிலங்காவின் தற்போதைய சர்ச்சைக்குரிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர்,  சீனத் தூதுவர், சிறிலங்கா அரசின் உயர்மட்டங்களுடன் இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்களை நடத்துவது இது இரண்டாவது முறையாகும்.

sarath-amunugama-chen-xiyuan-1.jpgsarath-amunugama-chen-xiyuan-2.jpghttp://www.puthinappalakai.net/2018/11/28/news/34937