Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சளிக்கு மருந்து பாட்டி கதைகளா? முறையான அறிவியலா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜெசிகா பிரவுண் பிபிசிக்காக
 
சளிக்கு மருந்து: பாட்டி கதைகளா... முறையான அறிவியலா?

சளி பிடிக்கும் அனுபவம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும். இது வருவதற்கு சுமார் 200 வைரஸ்கள் காரணமாக இருக்கின்ற நிலையில், இதற்கு பல தீர்வுகள் நமது வீடுகளிலேயே இருக்கின்றன.

ஆனால், அவற்றில் எதாவது பலன் தருமா?

வீட்டு சிகிச்சை என்பதன் அடிப்படையான விஷயமே, அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்பதுதான்.

நமது உடலில் ஒரு வைரஸ் நுழைந்தால் அது இரண்டு தற்காப்பு அரண்களைத் தாண்டி வருகிறது: உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி, செல்களில் ஊடுருவும் இவற்றை வெளியில் தள்ளுவதற்கு முயற்சி செய்கிறது;

இந்தக் கிருமிகளைப் பற்றிய தகவல்களை உடல் பராமரிப்புக்கான பதிவுப் பகுதியில் பதிவு செய்யும் வேலையை தகவேற்பு அமைப்பு செய்கிறது - எனவே மறுபடி இந்தக் கிருமி வரும்போது எப்படி எதிர்ப்பது என்ற தகவல் அங்கே பதிவு செய்யப்படுகிறது.

அதனால்தான் தட்டம்மை நமக்கு ஒரே ஒரு முறை மட்டுமே வருகிறது, ஆனால் சாதாரண சளி - ஒவ்வொருவருக்கும் மாறும்போது அதன் தோற்றத்தை மாற்றிக் கொள்வதால், உடலில் நோய்த் தகவல் பதிவு செல்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதால் அடிக்கடி வருகிறது.

வாழ்க்கை முறை பழக்கங்களும், உணவு முறையும் நமது நோய் எதிர்ப்பு சக்தி மண்டலங்களின் பலத்தைப் பாதிக்கின்றன என்பது நன்கு அறியப்பட்ட விஷயம்.

சளிக்கு மருந்து: பாட்டி கதைகளா... முறையான அறிவியலா?படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் மட்டுமே பாதிக்கப்படுவதால், வைட்டமின் அல்லது மினரல் பற்றாக்குறை ஏற்படும்போது, சளியை குணமாக்குபவை என்று சொல்லப்படும் உணவுகளை எடுத்துக் கொள்வது, ஏற்கெனவே நல்ல உணவுப் பழக்கத்தில் இருப்பவருக்கு, இது பெரிய மாறுதலைத் தராது என்று லண்டனில் இம்பீரியல் கல்லூரியின் தொற்று நோய்கள் பிரிவின் தலைவர் சார்லஸ் பங்ஹாம் கூறுகிறார்.

``வைட்டமின், துத்தநாகம் அல்லது இரும்புச் சத்து போன்ற, அவசியமான ஊட்டசத்து குறைபாடு உங்களுக்கு இருந்தால் மட்டும், அதை சரி செய்வதற்கான முறைகள் மிகவும் பயன்தரக் கூடியதாக இருக்கும்.

ஆனால் சமச்சீரான உணவுப் பழக்கத்தை கடைபிடிப்பவராக இருந்தால், இவற்றை கூடுதலாக சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் பலமானதாக ஆக்குவதாக இருக்காது'' என்று அவர் சொல்கிறார்.

கூடுதல் ஊட்டச்சத்து தீர்வு

அப்போதும்கூட, சாதாரண சளி தொந்தரவுக்குத் தீர்வைக் காண முயற்சிக்கும் ஆய்வுகளில், அவை வித்தியாசத்தைக் காட்டும் என கண்டறிந்துள்ளனர்.

சிலருடைய மரபணுக்கள், சில நோய்களுக்கு எளிதில் ஆட்படுத்தும்” சாரா ஸ்சிசென்கர், .

இந்த ஆய்வுகளில் மிகப் பெரும்பாலானவை உணவை விட, கூடுதல் ஊட்டச்சத்து மீது கவனம் செலுத்துகின்றன - உண்மையில், சிக்கன் சூப் போன்ற பலரும் சொல்லும் வைத்திய முறைகள் பலன் தருகிறதா என்பது குறித்து நம்பகத்தன்மை உள்ள எந்த ஆய்வும் செய்யப்படவில்லை.

ஆனால், தீர்வு தரக் கூடிய ஒரு கூடுதல்உணவாக இருப்பது, வீட்டு சிகிச்சையாக உள்ள பூண்டு. ஒரு சிறிய ஆய்வில், ஆரோக்கியமாக உள்ள 146 பெரியவர்களுக்கு மனமயக்கி மருந்து அல்லது தினசரி பூண்டு கூடுதல் ஆகாரம், குளிர்காலத்தில் 12 வாரங்களுக்கு அளிக்கப்பட்டது. மருந்தில்லா நிலையில் இருந்த குழுவில் இருந்தவர்களில் 65 முறை சளிபிடித்து 366 நாட்கள் நோயுற்றனர் - அதேசமயத்தில் பூண்டு கூடுதல் ஆகாரமாக இருந்தவர்களுக்கு 24 முறை சளிபிடித்து 111 நாட்கள் நோயுற்றனர்.

சளிக்கு மருந்து: பாட்டி கதைகளா... முறையான அறிவியலா?படத்தின் காப்புரிமை Getty Images

சளிக்கான அறிகுறி தோன்றியதும் பலரும் நாடும் அடுத்த கூடுதல் சத்து வைட்டமின் சி. நீங்கள் நினைக்கிற அளவுக்கு இல்லாவிட்டாலும் - இதுவும் சளி குறைய உதவும் என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

வைட்டமின் சி பற்றிய 29 ஆய்வுகளைப் பகுப்பாய்வு செய்ததில், சளிபிடிப்பதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதில் கூடுதல் ஊட்டச்சத்துகளுக்குப் பெரிய பங்கு இல்லை என்றோ அல்லது அறிகுறிகளை நீக்கவில்லை என்றோ கண்டறியவில்லை.

ஆனால் குழந்தைகளில் 14% பேருக்கு இதனால் சளி நீடிக்கும் காலம் குறைந்துள்ளது; பெரியவர்களுக்கு 8% நாட்கள் குறைந்துள்ளது என்று அதில் கண்டறியப்பட்டது.

கூடுதல் ஊட்டச்சத்து என்பது ஆபத்துகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால், நோயை குணமாக்க அது உதவுமா என்பது முயற்சி செய்து பார்ப்பதில் தவறு இல்லை என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

ஆரஞ்சுப் பழச்சாறு குறைவான பயன் தரக் கூடியதாக இருக்கலாம்; சளியைத் தடுப்பதில், அறிகுறிகளை நீக்குவதில் அல்லது சளி பிடித்திருக்கும் நாட்களைக் குறைப்பதில் ஆரஞ்சுப் பழச்சாறு உதவுகிறது என்பதற்கு பலமான ஆதாரம் எதுவும் கிடையாது.

ஏனெனில், தினசரி கூடுதல் ஊட்டச்சத்தில் உள்ள அதே அளவுக்குப் போதுமான வைட்டமின் சி சத்து இதில் இல்லை என்று, ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மக்கள் ஆரோக்கிய ஆராய்ச்சியாளரும், வைட்டமின் சி ஊட்டச்சத்து பரிசீலனை என்பதன் கட்டுரையாளருமான ஹேரி ஹெமிலா கூறுகிறார்.

சாதாரணமாக கிடைக்கும் அளவில் உள்ள சிறிய பாட்டிலில் உள்ள பிரஷ்ஷான ஆரஞ்சுப் பழச்சாற்றில் 72 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது என்று அமெரிக்க வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது - ஒரு நாளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச அளவான 40 மில்லிகிராமைவிட இது அதிகம். ஆனால் பல கூடுதல் உணவுகளில் உள்ளதைவிடவும் இது குறைவு.

சளிக்கு மருந்து: பாட்டி கதைகளா... முறையான அறிவியலா?படத்தின் காப்புரிமை Getty Images

அடுத்து துத்தநாக சத்து இருக்கிறது. சாதாரண சளிக்கு தினமும் துத்தநாக அசிடேட் மிட்டாய் தரும்போது, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு நாட்கள் மூன்றில் ஒரு பங்காகக் குறைகிறது என்பதுடன், தும்மலை 22% குறைக்கிறது என்றும் இருமலை பாதியாகக் குறைக்கிறது என்றும் கண்டறிந்துள்ளனர்.

முதல் அறிகுறி தோன்றிய 24 மணி நேரத்துக்குள் தொடங்கி, தினமும் 80 மில்லிகிராம் துத்தநாக அசிடேட் மிட்டாய்கள் சாப்பிட்டால் சாதாரண சளி சிகிச்சைக்கு உதவிகரமாக இருப்பதாக ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

இருந்தபோதிலும், சளியின் அறிகுறி எவ்வளவு நாட்களுக்கு இருக்கிறது என்பதைக் கணக்கிடுவதைவிட, சளியில் இருந்து முழுமையாக குணம் ஆவது பற்றி ஆய்வு செய்வது தான் மிகவும் சரியானதாக இருக்கும் என்று ஹெமிலா வாதிடுகிறார் - சளி நீடிக்கும் நாட்களைக் கணக்கிடும்போது, முழுமையாகக் குணமாவதற்கு முன்னதாகவே ஆய்வில் இருந்து விலகியவர்களைப் பற்றிய தகவல் சேகரிக்கப்படுவதில்லை.

எனவே ஆய்வு முடிவுகளில் மாறுபாடு ஏற்படுவதை இது தவிர்க்கும். சாதாரண சளி ஏற்பட்ட 199 பேரிடம் அவர் மேற்கொண்ட ஆய்வில், சளிபிடித்தவர்களில் துத்தநாக மிட்டாய் தரப்பட்டவர்கள் மூன்று மடங்கு வேகமாக குணம் அடைந்தனர் என்று கண்டறியப்பட்டது.

வைட்டமின்கள் மற்றும் மினரல்களை கூடுதல் ஊட்டச்சத்தாகத் தருவதைவிட உணவின் மூலமாக எடுத்துக் கொள்வது சிறந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் - கூடுதல் ஊட்டச்சத்தாக தரும்போது, வைட்டமின் சி பொருத்தவரை, அது கூடுதல் அளவாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சளிக்கு மருந்து: பாட்டி கதைகளா... முறையான அறிவியலா?படத்தின் காப்புரிமை Getty Images

இருந்தபோதிலும் துத்தநாகத்தைப் பொருத்தவரை, இதற்கு நேர்மாறான நிலை உள்ளது. சளி சிகிச்சைக்கு துத்தநாகம் மிட்டாய் தர வேண்டுமே தவிர, துத்தநாக மாத்திரைகள் அல்லது துத்தநாக சத்துமிக்க உணவுகள் மூலமாக தரக் கூடாது என்று ஹெமிலா கூறுகிறார்.

``துத்தநாக மிட்டாய்கள் தொண்டை பகுதியில் மெதுவாகக் கரைவதால், அந்தப் பகுதியில் அது விளைவைக் காட்டுகிறது'' என்று அவர் கூறுகிறார். ``இந்த விளைவுக்கான உயிரிவேதியல் செயல்பாடு என்ன என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், வாயில் 30 நிமிடங்கள் வரை கரையக் கூடிய பெரிய மிட்டாய்கள் தரும் போது நல்ல பலன் கிடைப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.''

சளிக்கு ஆறுதல்

ஆனால், சளி பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு, அவர்களுக்கு வைட்டமின் சி அல்லது துத்தநாகம் குறைபாடு இருந்ததா என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் கவனிக்கவில்லை என்பது ஒரு சிக்கலாக இருக்கிறது. எனவே, சளிக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வது, கூடுதல் ஊட்டச்சத்து எடுத்துக் கொள்வதன் மூலம், ஏற்கெனவே ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதைவிட, சில நோயாளிகள் ஒரு குறைபாட்டை சரி செய்கிறார்கள் என்பது தான் உண்மையாக இருக்கிறது.

சளிக்கு மருந்து: பாட்டி கதைகளா... முறையான அறிவியலா?படத்தின் காப்புரிமை Getty Images

மற்றொரு சிக்கலாகக் கருதப்படுவது, மன மயக்கி மருந்தின் ஆற்றல். பூண்டு கூடுதல் ஊட்டச்சத்து போன்ற பல ஆய்வுகளில், மருந்து எடுத்துக் கொள்ளாதவர்களை மட்டுமே கொண்ட குழுவில் சளி கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் விளைவுக்கு மருந்து எடுத்துக் கொள்ளாதது மட்டுமே காரணம் அல்ல.

சிக்கன் சூப் அல்லது ஆரஞ்சுப் பழச்சாறு போன்றவை உண்மையில் நம்மை குணமாக்கும் என்பதற்கு குறைவான ஆதாரம் அல்லது அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லாதபோது, மருந்தில்லா வைத்தியத்தில் அது ஏற்பட்டிருக்கலாம் என நாம் உறுதி செய்ய வேண்டியுள்ளது.

பல அறிகுறிகளை நீக்குவதில் வீட்டு வைத்தியங்கள் நல்ல பலனைத் தருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றாலும், வலி முதல் குடல் எரிச்சல் வரையிலான அறிகுறிகள் இந்த வைத்தியங்களால் நீங்குகின்றன.

மேலும், வைட்டமின் சி அல்லசு சிக்கன் சூப் இருந்தாலும், வீட்டு வைத்தியம் மட்டுமே கூட சளியில் இருந்து விடுபடுவதற்கு நமக்கு உதவியாக இருக்கும்.

சளிக்கு எதிரான குணங்களைக் கொண்ட எச்சினாசியா என்ற மூலிகை பலனைத் தருகிறது என்று நம்புவர்கள், தினமும் அதை எடுத்துக் கொள்வதால், அதை நம்பாதவர்களைக் காட்டிலும் சளி பாதிப்பு நாட்கள் குறைவதைக் காண முடிந்தது.

முந்தைய ஆய்வுகளில் எச்சினாசியா தருவதை அறியாத நோயாளிகளுக்கு சளி அறிகுறி மறைவதைக் காண முடியவில்லை.

அது மாறுபாடாகவும் வேலை செய்கிறது. நமக்கு சளி இருக்கும் போது பால் சாப்பிட்டால் கோழை உற்பத்தியை மோசமாக்குகிறது என்று நீண்டகாலமாகக் கருதப்பட்டு வருகிறது.

அது பொய் என்று நிரூபிக்கப்பட்டாலும், அவ்வாறு கருதப்படுகிறது. கோழையை பால் அதிகரிக்கிறது என்று நம்புபவர்கள், பால் குடித்த பிறகு மூச்சுக்கோளாறு அறிகுறி தோன்றுவதாகத் தெரிவித்தனர்.

மன மயக்கி மருந்து ஆய்வு சோதனைகளில் டாக்டர்கள் அளிப்பது வழக்கம் என்ற நிலையில், வீட்டு வைத்தியங்களில் கிடைக்கும் மருந்தில்லாத வைத்தியத்தின் பலன்களை தினசரி வாழ்வில் பெறலாம் என்று சவுத்தாம்டன் பல்கலைக்கழக ஆரோக்கிய உளவியல் துறை அசோசியேட் பேராசிரியர் பெலிசிட்டி பிஷப் கூறுகிறார்.

``மன மயக்கி மருந்தின் ஆற்றல், நோயாளிகளுக்கும் அக்கறை கொண்ட, நம்பிக்கையுடன் சிகிச்சை அளிக்கக் கூடிய ஆரோக்கியம் பேணும் நிபுணருக்கும் இடையிலான நம்பகமான உறவின் மூலமாக கிடைக்கிறன என்று ஆய்வுகள் காட்டுகின்றன'' என்று அந்தப் பெண்மணி கூறுகிறார்.

``இது பெற்றோர்கள், அவர்களுடைய இளமைக் காலத்தில் செய்தவையாக உள்ளன. அந்த நபர் யார் என்பதைவிட, உறவின் இயல்பு முக்கியமானதாக உள்ளது'' என்கிறார்.

சளிக்கு மருந்து: பாட்டி கதைகளா... முறையான அறிவியலா?படத்தின் காப்புரிமை Getty Images

நம்பிக்கைக்குரிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தில், உணவு எப்படி வலியுறுத்தப்படுகிறது என்பது, மருந்தில்லா மருத்துவத்தின் பயன்களை அதிகரிக்கச் செய்யும், என்று பிஷப் கூறுகிறார்.

நல்ல செய்தி என்ன? வீட்டு வைத்தியங்கள், மன மயக்கி மருந்துகள் என்று அறிந்திருந்தாலும், நமது அறிகுறிகளை நீக்குவது அதனால் தடைபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. `` மருந்தில்லா வைத்தியம் என்றும் அது சிலருக்குப் பலன் தந்துள்ளது என்றும் நோயாளிக்கு டாக்டர் சொல்லும்போது, நோயாளியை இன்னும் நன்றாக குணமாக்குகிறது'' என்றும் பிஷப் குறிப்பிடுகிறார்.

அவ்வாறான உணவுகளால் கிடைக்கும் சவுகரியமும் மற்றொரு விளைவாக இருக்கிறது. உதாரணத்துக்கு, சிக்கன் சூப் சாப்பிடும் போது ஏற்படும் நிவாரணம், கொஞ்சம் நன்றாக இருப்பதாக உணர்வைத் தருகிறது என்று உணவியல் நிபுணர் சாரா ஸ்சிசென்கர் தெரிவிக்கிறார்.

நம் உடலில் எந்த அளவுக்கு வைட்டமின் சி சேமிப்பில் இருந்தாலும், குளிர்காலத்தில் எந்த அளவுக்கு அவரால் சளியைத் தவிர்க்க முடிகிறது என்பது பெரும்பாலும் தனிப்பட்ட நபரைப் பொருத்து அமைகிறது. மருந்தில்லா வைத்தியத்தில் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதுடன், நமது மரபணுக்களைப் பொருத்தும் அமையும்.

``சிலருடைய மரபணுக்கள், சில நோய்களுக்கு எளிதில் ஆட்படுத்தும். மரபணு ரீதியாக நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர்கள் என்பது மிகவும் முக்கியமான விஷயம். சிலருக்கு ஃப்ளூ காய்ச்சல் இருக்கும், அதை அவர்கள் உணர மாட்டார்கள், மற்ற சிலருக்கு மிக தீவிரமான நோயாக வந்திருக்கும். இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய உங்களுடைய மரபணுக்களாலும் ஓரளவுக்கு முடிவு செய்யப்படுகிறது.''

நம்மில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக உள்ள பெரும்பாலானவர்களுக்கு, குளிர்கால நோய்களில் இருந்து தப்புவதற்கு மன மயக்கி மருந்துகளை சார்ந்திருப்பதைவிட, சற்று கூடுதலாக ஏதாவது செய்ய வேண்டியுள்ளது. துத்தநாகம் அல்லது பூண்டு கூடுதல் ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதும் உதவும்.

வைட்டமின் சி கூடுதல் ஊட்டச்சத்து குறித்த ஓர் ஆய்வில், சளி பிடிக்கும் வாய்ப்பை இவை பெரிய அளவில் குறைப்பதாகக் கண்டறியப்படவில்லை

சளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துத்தநாக மிட்டாய்கள் தந்தபோது மூன்று மடங்கு வேகமாக குணம் அடைந்தனர்

சளிக்கு எதிரான குணங்களைக் கொண்ட எச்சினாசியா என்ற மூலிகை பலனைத் தருகிறது என்று நம்புவர்கள், தினமும் அதை எடுத்துக் கொள்வதால், அதை நம்பாதவர்களைக் காட்டிலும் சளி பாதிப்பு நாட்கள் குறைவதைக் காண முடிந்தது.

https://www.bbc.com/tamil/science-46480807

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.