Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் இனவாதத்தை தூண்டும் செயற்பாடு - சிவகரன் அச்சம்!

Featured Replies

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வந்தமைக்கு தமிழர் தரப்பிலிருந்து தொடர்ந்தும் கடும் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு நிபந்தனையும் இன்றி ஆதரவு வழங்குவதன் ஊடாக சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் தொடர்பில் மேலும் இனவாதத்தை தூண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் எஸ்.சிவகரன் அச்சம் வெளியிட்டுள்ளார்.

 

 

இராஜதந்திர ரீதியில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த நடவடிக்கைகள் தான்தோன்றித்தனமாக செயற்பாடுகள் என ஐ.பி.சி. தமிழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் சிவகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்ரீலங்காவில் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டில் வெடித்த அரசியல் குழப்பம் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துவரும் ஐக்கிய தேசிய முன்னணிஇ ஜே.வி.பி. மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் மஹிந்த மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக நவம்பர் 14 மற்றும் 16 ஆம் திகதிகளில் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களையும் நாடாளுமன்றத்தில் நினைவேற்றியுள்ளன.

இந்தநிலையில் டிசெம்பர் 3 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகிப்பதற்கும்இ அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவி வகிப்பதற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்னை பலம் உடைய ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களுடன் ஜனாதிபதிக்கு கடிதமொன்றையும் கடந்தவாரம் அனுப்பி வைத்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு முன் நிபந்தனையும் இன்றி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குகின்றமைக்கு தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் கடும் கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முன் நிபந்தனை இன்றி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒரு வரலாற்று தவறினை இழைத்துள்ளதாகவும் சுரேஷ் பிறேமச்சந்திரன் கடந்த 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குற்றம் சாடியிருந்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எந்தவொரு நிபந்தனையும் இன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க முன்வந்தமையின் பின்னணியில் வல்லரசு நாடுகள் காணப்படுவதாக தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ இதன் மூலம் மக்களுக்காக பேரம் பேசும் சக்தியை கூட்டமைப்பு இழந்துள்ளதாக ஐ.பி.சி. தமிழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் குற்றம் சாட்டியிருந்தார்.

எனினும் தற்போதைய அரசியல் குழப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது நடு நிலை வகிப்பது மஹிந்த ராஜபக்சவிற்கு துணை போனதாகவே அமையும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன்இ வவுனியாவில் டிசம்பர் 6 ஆம் திகதியான நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்சிக்கு சார்பாக செயற்படாது இரு தரப்பினருடனும் கலந்துரையாடி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் எஸ்.சிவகரன் வலியுறுத்தியுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/110480

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எந்தவொரு நிபந்தனையும் இன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க முன்வந்தமையின் பின்னணியில் வல்லரசு நாடுகள் காணப்படுவதாக தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ இதன் மூலம் மக்களுக்காக பேரம் பேசும் சக்தியை கூட்டமைப்பு இழந்துள்ளதாக ஐ.பி.சி. தமிழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் குற்றம் சாட்டியிருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சிங்களத்துடன்தான் பேரம்பேச முடியவில்லை.! அவர்கள் பின்னணிக்கு வந்துள்ள வல்லரசு நாடுகளுடனாவது, பேரம்பேசும் பேசும் சக்தி கிடைக்கவில்லையா.? யார் தடுத்தது.?? 🤔

இன்று தமிழர்களைப் பாதுகாக்க, உலகில் பல தமிழ்த் தலைவர்களும், பல தமிழ் அமைப்புகளும் தோன்றியுள்ளன, அவற்றின் வீர தீர அறிக்கைகளும் வந்துகொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். இவற்றில் ஒன்றிற்காவது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த வல்லரசு நாடுகளுடன் பேசும் சக்தி கிடைக்கவில்லையா....?? ☹️    

  • தொடங்கியவர்
17 hours ago, Paanch said:

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சிங்களத்துடன்தான் பேரம்பேச முடியவில்லை.! அவர்கள் பின்னணிக்கு வந்துள்ள வல்லரசு நாடுகளுடனாவது, பேரம்பேசும் பேசும் சக்தி கிடைக்கவில்லையா.? யார் தடுத்தது.??

அந்த வல்லரசுகளில் ஒரு "வல்லரசு"  தமிழரை அழிப்பதில் குறியாக இருப்பது. அந்த கொலைகார வல்லரசிடமிருந்து சம்மந்தன், மாவை, சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்களின் குடும்பத்தினர் / உறவினர் / நண்பர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அவர்களின் பேரம் பேசும் சக்தியை இல்லாதொழித்துவிட்டன.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.