Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் ஐந்து மாநில தேர்தல்கள்- பாஜகவின் மூன்று கோட்டைகளை கைப்பற்றும் நிலையில் காங்கிரஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஐந்து மாநில தேர்தல்கள்- பாஜகவின் மூன்று கோட்டைகளை கைப்பற்றும் நிலையில் காங்கிரஸ்

 

இந்தியாவில் ஐந்து மாநிலங்களின் சட்டசபைக்களுக்கு இடம்பெற்ற தேர்தல் வாக்களிப்பின் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்ற நிலையில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி  முன்னிலை வகிக்கின்றது 

சத்தீஸ்கர் ராஜஸ்தான் மத்தியபிரேதசம் தெலுங்கானா மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளிற்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டுள்ளன

இந்நிலையில் மத்திய பிரதேசம்,ராஜஸ்தான் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.

தெலுங்கானாவில் ஆளும் ராஸ்டிரிய சமிதி கட்சி முன்னிலை வகிக்கின்றது.

மிசோரமில் மிசோரம் தேசிய முன்னணி முன்னிலை வகிக்கின்றது.

election_india.jpg

ராஜஸ்தான் மாநிலத்திலும் சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் கட்சி 10 வருடங்களின் பின்னர் ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/46144

 

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
தேர்தல் முடிவுகள்

தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் தெலங்கானா, மிசோரம் தவிர்த்த மூன்று முக்கிய மாநிலங்களிலும் காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தது.

ஆனால் தற்போது மத்திய பிரதேசத்தில் காங்கிரசிற்கும் பாஜகவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

பல ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சி செய்து வந்த சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த மிசோரத்தில், தற்போது மிசோ தேசிய முன்னணி முன்னிலையில் உள்ளது.

பின்னடைவு

ரஜினிகாந்த்படத்தின் காப்புரிமை Getty Images

தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வுக்கு பின்னடைவு ஏற்பட்டு இருப்பதை காட்டுவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

சென்னையில் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ரஜினி இவ்வாறாக கூறி உள்ளார்.


அடையாளம்

கமல்படத்தின் காப்புரிமை Getty Images

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது என்று கமல் ஹாசன் ட்வீட் பகிர்ந்து உள்ளார்.


6.45: மிசோரமில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது. பத்து ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்த காங்கிரஸ் 40 தொகுதிகளில் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 இடங்களை வென்றது. மிசோ தேசிய முன்னணி கட்சி 26 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பா.ஜ.க ஒரு தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது.

மிசோரம்

5.30: சத்தீஸ்கரில் 9 தொகுதிகளில் காங்கிரஸூம், 1 தொகுதியில் பா.ஜ.கவும் வென்றுள்ளன.

5.25: தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். 45 தொகுதிகளில் வென்றுள்ளது.

5.20: ராஜஸ்தானில் 47 தொகுதிகளில் இந்திய தேசிய காங்கிரஸும். 32 தொகுதிகளில் பா.ஜ.கவும் வென்றுள்ளன.

5.15 : மத்திய பிரதேசத்தில் 30 தொகுதிகளில் பா.ஜ.கவும், 15 தொகுதிகளில் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது BBC News தமிழ்

முடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது BBC News தமிழ்

தெலங்கானா

தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இன்று 43 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 11:30 மணி நிலவரப்படி, 80 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இது பெரும்பான்மைக்கு போதுமானது என்பதால் டிஆர்எஸ் கட்சி ஆட்சியை தக்கவைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


#AccheDin வந்துவிட்டது

பிரதமரால் அதிகமாக உச்சரிக்கப்பட்ட #AccheDin இதோ இன்று வந்துவிட்டது. இந்த நாள் இனிய நாள் என கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.



டுவிட்டர் இவரது பதிவு @Devinder_Sharma: Rural distress has cast its shadow over election results. Whichever party eventually wins the message is loud and clear. Farmers cannot be taken for granted any more. #Results2018புகைப்பட காப்புரிமை @Devinder_Sharma @Devinder_Sharma <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @Devinder_Sharma: Rural distress has cast its shadow over election results. Whichever party eventually wins the message is loud and clear. Farmers cannot be taken for granted any more. #Results2018" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/Devinder_Sharma/status/1072360071600971778~/tamil/india-46516557" width="465" height="250"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @Devinder_Sharma</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@Devinder_Sharma</span> </span> </figure>

ஊரக பிரச்னைகள் இந்ததேர்தலில் எதிரொலித்து இருப்பதாக கூறுகிறார் வேளாண் கொள்கை அறிஞர் தேவேந்தர் சர்மா.


மிசோ தேசிய முன்னணி முன்னிலை

2.15 - தெலங்கானாவின் கஜ்வேல் தொகுதியை டி.ஆர்.எஸ். தலைவர் சந்திரசேகர ராவ் தக்கவத்துக்கொண்டார்.

1.30 PM நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 180 இடங்களைத் தாண்டாது- பிபிசி பேட்டியில் மணிசங்கர் ஐயர்

12:15 டிஆர்எஸ் வெற்றியை கொண்டாடும் தொண்டர்கள்

டிஆர்எஸ்
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @DrTamilisaiBJP

வாக்கு இயந்திரங்கள் மீது குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழிசை செளந்தராஜன் கூறி உள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், வெற்றி தோல்விகள் எங்களை பாதிக்காது. வாக்கு இயந்திரங்கள் மீது குற்றஞ்சாட்டி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி உள்ளார்.


12:00 தேர்தல் முடிவுகள் எதை உணர்த்துகிறது?

செளதிக் பிஸ்வாஸ், பிபிசி

modiபடத்தின் காப்புரிமை Getty Images

இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் நடக்கும் சட்டமன்ற தேர்தல் இது.

நாடாளுமன்ற தேர்தல் வரை வேறு எந்த சட்டமன்ற தேர்தலும் இல்லை என்பதால் இந்த ஐந்து மாநில தேர்தல் அனைவராலும் கூர்ந்து பார்க்கப்பட்டது.

மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பது, அவர்களது தொண்டர்களை உற்சாகப்படுத்தும். யாராலும் தோற்கடிக்க முடியாத கட்சி, தோற்கடிக்காத பிரதமர் என்ற பிம்பம் உடைந்திருப்பது வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுடனான கூட்டணி பேரத்திற்கும் உதவும்.

குறிப்பாக மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தை வழிநடத்திய ராகுலின் பிம்பம் வெகுவாக உயர்ந்திருக்கிறது.

ராகுல்படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN

2014ஆம் நாடாளுமன்ற தேர்தலில் , இந்த மூன்று மாநிலங்களில் உள்ள 65 நாடாளுமன்ற தேர்தலில் 62 தொகுதிகளில் பா.ஜ.க வென்றது.

ஆனால், அதே நேரம் சட்டமன்ற தேர்தல்கள் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்று கருத முடியாது.


சந்திரசேகர ராவ் வெற்றிப் பயணம்:

தெலங்கானா என்ற தனி மாநிலத்தை அடைவது சாத்தியமற்றது அல்ல என்று உணர்ந்தபோது, முன்னாள் நக்சல் தலைவர் இன்னய்யா, ஜெய்சங்கர் மற்றும் தெலங்கானா சிந்தனையாளர் தலைவர்கள் சிலருடன் தீவிரமாக கலந்து ஆலோசித்தபிறகு ஏப்ரல் 7 ஆம் தேதி தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியை கே.சி.ஆர். தொடங்கினார்.

விரிவாக படிக்க:சந்திர சேகர ராவ் வெற்றிப் பயணத்தின் ரகசியம் என்ன?


ராகுல்படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN

11:50 "மக்கள் பாஜகவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இது மக்களின் தீர்ப்பு. இது இந்நாட்டு மக்களின் மற்றும் ஜனநாயகத்தின் வெற்றி" என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பேனர்ஜி ட்வீட் செய்துள்ளார்.

முடிவு டுவிட்டர் பதிவின் 2 இவரது @MamataOfficial

11:40 தேர்தல் முடிவுகள் குறித்த நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. "இந்தியாவுக்கு இன்று சிறப்பு வாய்ந்த நாள். இந்தியாவை ஏமாற்றியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது" என்று கருத்து பதிவிட்ட அருண் ஜேட்லியின் வார்த்தைகளை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன் என சசி தரூர் ட்வீட் செய்துள்ளார்.

11:30 தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில், கேசிஆர்-ன் மகள் கல்வகுன்ட்ல கவிதா பிபிசி தெலுகுவிடம் பேசுகையில், 100 இடங்கள் வரை பெறுவோம் என்று நம்புவதாக தெரிவித்தார்.

11:15 பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதை அறிந்த, அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Presentational grey line

பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் பின் தங்கி இருந்தாலும், சித்தாந்தரீதியாக அந்தக் கட்சி வெற்றி பெற்று இருக்கிறதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைகள் கோசாலைகளுக்கு முன்னுரிமை அளித்தது, தேர்தல் பிரசாரங்களில் அந்த கட்சியின் உள்ளூர் தலைவர்கள், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் கட்டுவோம்" என்றது, ராகுல் தன் கோத்திரம் குறித்து விவரித்தது இந்த கேள்விக்கு வலுசேர்கின்றன.

தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் என்ன நினைக்கிறார்கள்?

விரிவாக படிக்க: சித்தாந்த ரீதியாக பா.ஜ.க வென்று இருக்கிறதா?

Presentational grey line தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ்

11:00 நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கும் நிலையில், அவைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோதி, அவை உறுப்பினர்கள் தங்கள் கட்சிக்காக நேரத்தை செலவிடாமல் மக்களுக்காக அவையின் நேரத்தை செலவிடவேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார்.

டுவிட்டர் இவரது பதிவு @PMOIndia: I hope the productivity of the Winter Session is high. Let us strive to work hard and complete the legislative agenda pending. May national interest always prevail over party considerations  PM @narendramodiபுகைப்பட காப்புரிமை @PMOIndia @PMOIndia <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @PMOIndia: I hope the productivity of the Winter Session is high. Let us strive to work hard and complete the legislative agenda pending. May national interest always prevail over party considerations PM @narendramodi" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/PMOIndia/status/1072365143500181504~/tamil/india-46516557" width="465" height="250"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @PMOIndia</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@PMOIndia</span> </span> </figure>

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் எந்த ஒரு மாநிலத்திலும் பாஜக-வுக்கு வெற்றி முகம் காட்டாத நிலையில் பிரதமரின் கருத்து வெளியாகியுள்ளது.

மோதிபடத்தின் காப்புரிமை NurPhoto

10:50 மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்க் சௌஹான், புத்னி தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

10:30 ராஜஸ்தான் ஜல்ராபட்டன் தொகுதியில் முதலமைச்சர் வசுந்தர ராஜே முன்னிலையில் உள்ளார்.

10:10 2003-ம் ஆண்டில் இருந்து சத்தீஸ்கர் முதல்வராக உள்ள பாஜக-வின் ரமன் சிங் தமது சொந்த தொகுதியில் பின்னடைவு.

10:05 தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி 66 இடங்களில் முன்னிலை. காங்கிரஸ் 31 இடங்களிலும், பா.ஜ.க 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

10:00 மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி முகம் காட்டுவதை அடுத்து தில்லியில் உள்ள ராகுல்காந்தி வீட்டுக்கு வெளியே ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்கா, மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகியோர் படங்களை வைத்து அவற்றின் மீது மலர் தூவி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

9:50 மிசோரத்தில் எம்.என்.எஃப் 22 இடங்களிலும் காங்கிரஸ் 11 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

9:35 ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் உள்ளது.

மோதிபடத்தின் காப்புரிமை Hindustan Times

9:15 தெலங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி உள்ளது.

9:05 மிசோரத்தில் காங்கிரசை விட மிசோ தேசிய முன்னனி முன்னிலை வகிக்கிறது.

9.00 மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் பாஜக-வை விட அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

8.45 முதல் முதலாக வெளியாகியுள்ள முன்னிலை நிலவரங்களின்படி ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸை விட ஒரு இடத்தில் கூடுதலாக பாஜக முன்னிலை வகிக்கிறது. தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ். கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

8:00 தபால் ஓட்டுகள் எண்ணிக்கை தொடங்கியது.

தேர்தல்படத்தின் காப்புரிமை ECI

வாக்குப் பதிவுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் கூறியது என்ன?

முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் (Exit Poll) பெரும்பான்மையானவை ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மிக நெருக்கமான போட்டி நிலவும் என்றும் தெரிவிக்கின்றன.

தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சிக்கும், சத்தீஸ்கரில் காங்கிரசுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக சில கணிப்புகள் கூறுகின்றன.

மிசோரம் மாநிலத்தை பொறுத்த வரையில் அங்உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் காங்கிரஸ் 14-18 தொகுதிகளிலும், மிசோ தேசிய முன்னணி 16-20 தொகுதிகளிலும், சோரம் மக்கள் இயக்கம் 3-7 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

https://www.bbc.com/tamil/india-46516557

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.