Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை வரவு செலவு திட்டம் 2019

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றத்துக்குப் பின்னர் நிறுவப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், அதன் ‘மங்கல’ வரவு – செலவுத் திட்டத்தை, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் இன்று (25) சமர்ப்பிக்கவுள்ளது.
அடுத்த வருடத்தில் பல தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியகூறுகள் தென்படுவதால், மக்களுக்கு நிவாரணங்களை அள்ளி வழங்கக்கூடிய வகையில், இந்த வரவு – செலவுத் திட்டம் அமையலாமென, பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

அதுமட்டுமன்றி, நாட்டில் வறுமையை ஒழிக்கும் வகையிலான திட்டங்களை கொண்டிருக்கும் வகையிலேயே, இன்றைய வரவு – செலவுத் திட்ட யோசனைகள் அமைந்திருக்குமென்றும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்பதுடன், அரசாங்கத்தின் கொள்கை விளக்கத்தில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குப் பதில்கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில், இன்று (05) பிற்பகல் 2 மணிக்குக் கூடும். அதன் பின்னர், 2019ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் மங்கள சமரவீர, பிற்பகல் 2.02க்கு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுவார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீர, சம்பிரதாயபூர்வமான பெட்டியில், வரவு –செலவுத் திட்ட யோசனைகளை எடுத்துவருவரா? அல்லது கோவையிலேயே கொண்டுவருவாரா? என்பது தொடர்பில், இரகசியம் காக்கப்படுவதாக, நிதியமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையொட்டி, நாடாளுமன்ற வளாகத்திலும், நாடாளுமன்றத்தில் பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எம்.பிக்களின் அறைகள் உள்ளிட்ட சகல பகுதிகளிலும் விசேட சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் ஆகியோர் வருகைதரும் வாகனங்களைத் தவிர, ஏனைய உறுப்பினர்களின் வாகனங்களுக்கும் நாடாளுமன்ற பணியாளர்களின் வாகனங்களுக்கும் விசேட போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இன்றையதினம் சகல கலரிகளும் அழைக்கப்பட்ட அதிதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், ஏனைய விருந்தினர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என படைக்கல சேவிதர் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, வரவு – செலவுத் திட்ட யோசனைகளுக்கு அங்கிகாரம் பெற்றுக்கொள்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், விசேட அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் இன்றுகாலை நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு, அமைச்சரவை அந்தஸ்துள்ள சகல அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன.

2019ஆம் ஆண்டு நிதி ஒருக்கீட்டுச் சட்டமூலத்தின் மீதான விவாதம், சனிக்கிழமை உட்பட, 26 நாள்களுக்கு காலை முதல் இடம்பெறும். மார்ச் 12ஆம் திகதி வரையிலும் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதமும், இடம்பெறும், அன்றிலிருந்து ஏப்ரல் 5ஆம் திகதி வரையிலும் அமைச்சுகள் மீதான விவாதமும் இடம்பெற்று, அன்றையதினம் மாலை 6 மணிக்கு இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இந்நிலையில், இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும் வரையிலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சகலரும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதிக்கான ஒதுக்கீடுகளை தோற்கடிக்கும் முயற்சியொன்றை, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிகள் முயற்சித்துவருகின்றனர் என்பதால், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அன்றையதினம், கட்டாயமாக அவையிலிருக்கவேண்டுமென, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அறிவுறுத்தியுள்ளது.

 

04:26 PM உள்நாட்டு சாராய உற்பத்திகளின் விலைகள் இன்று நள்ளிரவில் திருத்தம். அதிவிசேட  சாராயத்தின் விலையில் மாற்றமில்லை

04:24 PM ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து அலுவலக நேரங்களில் அதிவேக நெடுஞ்சாலையின் கட்டணம் 100 ரூபாயால் அதிகரிப்பு

04:23 PM மடு தேவாலயத்தை அபிவிருத்தி செய்ய 200 மில்லியன் ஒதுக்கம்.

04:19 PM வரவு செலவு திட்ட வாசிப்பு நிறைவு. நாடாளுமன்றம் நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

04:19 PM கெசினோ அனுமதி கட்டணம் 200 மில்லியனிலிருந்து 400 மில்லியன் ரூபாய் வரை அதிகரிப்பு

04:17 PM நாளையிலிருந்து அதிசொகுசு வாகன இறக்குமதி வரியில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன். வாகன இறக்குமதிக்காக விதிக்கப்பட்டுள்ள 200 சதவீத வைப்பு இரத்து செய்யப்படவுள்ளது.

04:16 PM சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவிலிருந்து 5 ரூபாயால் அதிகரிப்பு 

04:14 PM யுத்தகாலத்தில் அழிவடைந்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய 5 பில்லியன் ஒடுக்கீடு

04:13 PM புகையிலைக்கான வரி 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை

04:10 PM வடக்கில்  10 பொருளாதார மத்திய நிலையங்கள். பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக வங்கிகளுக்கு 250 மில்லியன் ஒதுக்கீடு

04:06 PM இராணுவ வீரர்களின் சீருடைக்கான கொடுப்பனவை அதிகரித்தல்

04:03 PM இயற்கை அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்காக 20,000 மில்லியன்

04:00 PM சமுர்த்தி அபிவிருத்திக்கு 1,000 பில்லியன் 

03:59 PM கலைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை. 

03:59 PM பிளாஸ்ரிக், பொலித்தீன்  உற்பத்திகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் செப்டெம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயம் பதிவு செய்வது அவசியம்.

03:57 PM இயற்கை அனர்தங்களால் ஏற்பட்ட  பாதிப்புகளுக்கான நட்ட ஈட்டை துரிதமாக வழங்க நடவடிக்கை 

03:55 PM சமுர்த்தி வேலைத்திட்டத்தை மீள கட்டமைக்க நடவடிக்கை. சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை 6 இலட்சத்தால் அதிகரிக்கப்படும்.

03:53 PM இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை வலுப்படுத்த 100 மில்லியன். கிராம சக்தி வேலைத்திட்டத்துக்காக 500 மில்லியன்.

03:51 PM குடிநீர் திட்டத்துக்காக 45,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:47 PM அரச பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 40 பில்லியன் ஒதுக்கீடு 

03:46 PM ஜூலை முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவு

03:45 PM அதிக வசதிகளையுடைய ரயில் சேவைகளுக்கு அதிக கேள்விகள் நிலவுகின்றன. இதற்காக 4 புதிய ரயில் பாதைகள் அமைக்ககப்படவுள்ளன. மாலபே- கொழும்பு இலகு ரயில் பாதைக்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

03:45 PM அரச பணியாளர்களுக்கு 2,500 ரூபாய் அதிகரிப்பும் ஓய்வூதியர்களின் கொடுப்பனவை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வுக் காணவும் நடவடிக்கை. ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 12,000 மில்லியன் ஒதுக்கீடு

03:43 PM ஓட்டோ, சிறிய கார்களின் போக்குவரத்தை அதிகரிக்க கடன் திட்டமுறையொன்று அறிமுகப்படுத்தப்டவுள்ளது. அதற்கமைய தற்போதைய பாவனையிலுள்ள ஓட்டோக்கள் அகற்றப்பட வேண்டியுள்ளது.

03:41 PM 2016 ஆம் ஆண்டு எடுத்த தீர்மானத்துக்கமைய, அரச பணியாளர்களின் சம்பளம் 107 சதவீத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  மேலும் சம்பள தொகையை அதிகரிக்க 4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

03:39 PM கிராம  வீதிகளை புனரமைப்பு செய்ய 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:37 PM கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுபடுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:36 PM போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல், நகர வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை கருத்திற்கொண்டு பழைய கட்டடங்களை புனரமைக்க நடவடிக்கை

03:35 PM யாழ்ப்பாணம் பழைய நகர சபையை புனரமைப்பு செய்ய 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.கண்டியை அபிவிருத்தி செய்ய தற்போது 900 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

03:34 PM கொழும்பில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் வகையில் 10,600 மில்லியன் ஒதுக்கீடு.

03:33 PM அருவக்காடு கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்கு 7000 மில்லியன் ஒதுக்கீடு.

03:30 PM தேசிய ஒலிம்பிக் நிதியத்தை வலுப்படுத்த நடவடிக்கை

03:29 PM கொலன்னாவ மற்றும் அலுவிகார விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய 300 மில்லியன் 

03:25 PM சுகாதார துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 24,750 மில்லியன் ஒதுக்கீடு

03:21 PM விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்க நடவடிக்கை

03:20 PM பொருளாதார அபவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் உள்ளடக்கம்.

03:19 PM 3இலட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் தோற்றினாலும்  35,000  மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்றனர். ஏனையோர் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பிருந்தும் நிதி வசதி இல்லாமல் கல்வியைத் தொடர  முடியாதவர்களுக்கு ' மை பியுச்சர்' என்ற திட்டத்தின் கீழ்  1.1 மில்லியன் ரூபாய் வட்டியற்ற கடன் வழங்கப்படும் .

03:19 PM பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை அதிகரிக்க 32,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:18 PM பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:17 PM கம்பெரலிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்த 48,000 மில்லியன் ஒதுக்கீடு 

03:15 PM ருஹூணு பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடமொன்றை நிறுவ நடவடிக்கை

03:14 PM நிபந்தனையுடன் வெளிநாட்டில் உயர்கல்வியை தொடர வாய்ப்பு. 10 வருடங்கள் இலங்கையில் தொழில்புரிய வேண்டும் என்பது கட்டாயம்..

03:13 PM இலங்கையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உலகில் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு  

03:10 PM கல்வித் துறைக்கு 32 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:10 PM தகவல் தொழிநுட்ப சேவை தொழிற்றுறைக்கு கலைப்பட்டத்தாரிகளை இணைத்துக்கொள்வதற்காக 1300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

03:09 PM வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க அனைத்துவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

03:07 PM சகல உற்பத்திகளினதும் தரத்தை உயர்த்த நடவடிக்கை

03:06 PM தனியார் நிறுவனங்களுடன் கலந்துரையாடிய பின்னர் தேசிய வருமான சட்டத்தில் தேவையான திருத்தத்தை மேற்கொள்ளுதல்

03:01 PM அம்பேபுஸ்ஸ, வீரவில ஆகிய இடங்களில் இரண்டு விவசாய நிலங்களை சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து அமைப்பதற்கும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு கைவினைப் பொருட்களை செய்யும் மத்திய நிலையம் ஒன்று தொம்பே கிராமத்தில் அமைக்கப்படவுள்ளதுடன், இதற்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

03:00 PM வடக்கில் முஸ்லிம்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை

02:57 PM தனியார் நிறுவனங்களும் பிரசவ விடுமுறையை 3 மாத காலம் வழங்கும் வகையில் வழிவகைகளை செய்தல்.

02:54 PM 250 க்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களில் சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையத்தை அமைக்கும் தனியார் நிறுவனங்களுக்கு என்டபிரைஸஸ் ஸ்ரீ லங்காவின் கீழ் பாதுகாப்பு நிவாரண நிதியை வழங்க நடவடிக்கை
 

02:53 PM வெளிநாட்டில் தொழில்புரிவொருக்கு கனவு மாளிகா கடன் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

02:53 PM 25 வருடங்களில் செலுத்தக் கூடிய வகையில் 6 சதவீத வட்டி அடிப்படையிலான இலகுக் கடன் திட்டங்களை இளம் ஜோடிகளுக்கு வழங்க நடவடிக்கை

02:51 PM வடக்கு கிழக்கு ஆகிய பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். அத்துடன் அங்குள்ள மக்களுக்காக வீடமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க 24 பில்லியன் ஓதுக்கீடு

02:49 PM சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்களை அதிலிருந்து மீட்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்

02:47 PM சிறுநீரக நோயாளர்களுக்கு 1800 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

02:46 PM அங்கவீனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை 3,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை 

02:45 PM மொரகாகந்த, களுகங்கை திட்டங்களை அடுத்தாண்டு நிறைவு செய்ய எதிர்பார்ப்பு

02:45 PM நாட்டில் சகல பாடசாலை மாணவர்களுக்கும் ஒரு கோப்பை பால் இலவசமாக வழங்கப்படும்

02:40 PM புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு அவை தனியாருக்கு நிர்வகிக்க கொடுக்கப்படும்.

02:39 PM 100,000 க்கு மேற்பட்டோருக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. மொனராகலையில்  மாத்திரம் 35,000 குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. கடந்த அரசாங்கம் இதனை கவனிக்கவில்லை. இந்த வருடம் சகலருக்கும் கழிப்பறை வசதிகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் 4 பில்லியன் ஒதுக்கீடு

02:34 PM மீன் ஏற்றுமதி மூலம் 209 மில்லியன் ரூபாய் இலாபம் வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது. 

02:33 PM பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைத் தொடர்பில், தேயிலை சபையுடன் கலந்துரையாடி விரைவானத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

02:31 PM கறுவாப்பட்டையை  ஏற்றுமதி செய்யும் வகையில், அத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்கு 75 மில்லியன் ரூபாய் ஒதுக்க நடவடிக்கை 

02:30 PM தேசிய இளைஞர் சேவைகள் சபையின் உறுதிப்படுத்தப்பட்ட பயனாளிகளிகளுக்கு என்டபிரைஸஸ் கடன் திட்டத்தை பெற்றுக்கொடுக்கும் போது முக்கியதுவம் வழங்கப்படும். இதுவரை 60,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

02:29 PM இறப்பர் உற்பத்திக்கு 800 மில்லியன் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தெங்கு உற்பத்தியை அதிகரிக்கவும் தெங்கு உற்பத்தியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கவும் நடவடிக்கை 

02:28 PM விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்க 250 பில்லியன் ஒதுக்கப்படும். அநுராதபுரம், குருநாகல், புத்தளம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நடவடிக்கை மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் தெரிவிப்பு.

02:25 PM சிறிய மற்றும் மத்திய தர வர்த்தகர்களை ஊக்குவிக்க நடவடிக்கை

02:21 PM என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த நடவடிக்கை. இதன் மூலம் கடன் வசதிகளை வழங்க நடவடிக்கை

02:19 PM கடந்தாண்டு அரசியல் சூழ்ச்சியால் முதலில் நிறுத்தப்பட்டது கம்பெரலிய வேலைத்திட்டமாகும்.

02:09 PM பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு செல்ல முடிந்த போதும், கடந்தாண்டு நவம்பர் மாதம் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கைக்கு கிடைக்கவிருந்த பல கடன் திட்டங்கள் இல்லாமல் போயின

02:08 PM வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படுவதற்கு முன்னர், நிதியமைச்சர் மங்கள சமரவீர சபையில் தற்போது உரையாற்றுகிறார்.

02:05 PM நிதியமைச்சர் மங்கள சமரவீர, 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்ததை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க தயாராகிறார்.

02:04 PM நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் ஆரம்பம்.

02:00 PM 73 ஆவது வரவு செலவுத் திட்டம், இலங்கையில் 24 ஆவது நிதி அமைச்சரான, மங்கல சமரவீரவால் சற்று நேரத்தில் சபையில் சமர்பிக்கப்படவுள்ளது.

01:58 PM 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், நாடாளுமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் சமர்பிக்கப்படவுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வருகைத்தந்தவாறு உள்ளனர்.
 

01:49 PM கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவிருந்த, வரவு செலவுத் திட்டம், நாட்டில் இடம்பெற்ற அரசியல் குழப்பங்களின் காரணமாக சமர்பிக்கப்படவில்லை. இந்நிலையில், அன்று சமர்பிக்கத்தவறிய வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சரால் இன்று (05) சமர்பிக்கப்படவுள்ளது. இதற்கு இன்று அமைச்சரவையின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.

01:33 PM இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் 2,500 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

12:29 PM நிதியமைச்சர் மங்கல சமரவீரவால், இன்று (05) சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில், அரச ஊழியர்கள், ஓய்வுப்பெற்றவர்கள், சாதாரண மக்கள் ஆகியோருக்கு நிவாரணங்கள் பல உள்ளடக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
 

12:04 PM அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு செலவுத் திட்டத்தில், மக்களை வலுவூட்டுதல், வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு நிவாரணமளித்தல் ஆகியன உள்ளடக்கப்பட்டிருப்பதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

11:54 AM உயர்தரத்தில் சித்திப்பெற்றவர்களுக்கு, தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்மொன்றும், வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

11:44 AM அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில், இம்முறை வரவு செலவு திட்டத்தில் யோசனையொன்று முன்வைக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.

11:32 AM இன்று (05) சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு - செலவுத் திட்டத்தினூடாக, விவசாயிகளுக்கு இலவசமாகப் பசளை வழங்குவதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்வுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

11:20 AM கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றத்துக்குப் பின்னர் நிறுவப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், அதன் ‘மங்கல’ வரவு – செலவுத் திட்டத்தை, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் இன்று (25) சமர்ப்பிக்கவுள்ளது.

http://www.tamilmirror.lk/liveblog/230366/பி-ப-2-02க்கு-மங்கல-பாதீடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2019 வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு!!

2019 ஆம் ஆண்டுக்கான சம கால அரசின் வரவு செலவுத் திட்டம் தற்போது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரச ஊழியர்களின் சம்பள உயர்விற்காக 40 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. ஜூலை முதலாம் திகதி முதல் உத்தியோகத்தர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு.

ஓய்வூதிய முரண்பாடுகளை சரி செய்ய 12 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

இலகு ரயில் திட்டத்திற்கு 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இலங்கை போக்குவரத்து சேவைக்கு 250 புதிய பேருந்துகள், இத்திட்டத்திற்கு 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

பொது போக்குவரத்து சேவை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் பேருந்துச் சேவை அபிவிருத்தி திட்டம்.

போகம்பரை சிறைச்சாலை பொது இடமாக அபிவிருத்தி செய்ய 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

மாத்தளை – பெர்னார்ட் அலுவிஹாரே விளையாட்டரங்கும் கொலன்னாவை மல்லமராச்சி விளையாட்டுத் திடலும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

கல்முனை, வாழைச்சேனை, தலைமன்னார் உள்ளிட்ட நகரங்களின் அபிவிருத்திக்காக மேலும் பல ஒத்துழைப்புகளை வழங்குதல்

காட்டு யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வரவு வெசவுத் திட்டத்தின் ஊடாக விசேட கவனம்

தேசிய தொழில் தகுதியுடனான (NVQ) தொழிற்பயிற்சித் திட்டங்களை இலங்கை இராணுவம் நடத்தவுள்ளது.

சுவசெரிய போக்குவரத்து சேவைக்காக 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 300 தரிப்பிடங்கள் அபிவிருத்தி

க.பொ.த உயர் தரத்தில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு வௌிநாட்டில் பயில நிதியுதவி வழங்கப்படும்

தமிழ் மொழி ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பல்கலைக்கழக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 25000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

400,000 டொலர்களுக்கும் மேல் முதலீடு செய்த வௌிநாட்டவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு குடியிருப்பு விசா

பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 32000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பொது பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெறும் மாணவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் கற்பதற்கான வாய்ப்பு..

வெளிநாட்டு மாணவ சுற்றலாப் பயணிகளுக்கான நுழைவுச் சீட்டு கட்டணம் 50% குறைப்பு

SLTDA இல் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மாத்திரம் 2020 ஏப்ரல் முதலாம் திகதி முதல் online பதிவுகளை மேற்கொள்ள முடியும்

பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களுக்கு வௌிநாட்டு நாணய பற்றுச்சீட்டுகளுக்கு NBT நீக்கம்.

பிங்கிரிய அபிவிருத்தி வலயத்திற்கு ரூபா 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இயந்திரங்களுக்கான துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் வரி விதிப்பு 2.5% குறைக்கப்படும்.

தேசிய ஏற்றுமதி மூலோபாயத்திற்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

புதிதாக திருமணமான தம்பதியினரக்கு 6% வீத வட்டி அடிப்படையில் HOME SWEET HOME விசேட கடன் திட்டம் 25 ஆண்டுகளில் செலுத்தப்பட வேண்டும்.

சிறுநீரக நோயாளர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டத்திற்கு 1,480 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்காக வீரவில மற்றும் அபேபுஸ்ஸ ஆகிய பகுதிகளில் சீர்திருத்த நிலையங்கள்.

வேலைத்தளத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 3 மாதங்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும்.

விசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை 3000 ரூபாவிலிருந்து 5000 ரூபா வரை அதிகரிப்பு

கழிவறை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க 4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

எமது அரச காலம் முடிவுறுவதற்கு முன்னதாக யாழ்ப்பாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை பணிகளை நிறைவு செய்வோம்.

பருத்தித்துறை மற்றும் பேசாலையில் மீன்பிடி துறைமுகங்களை அமைப்பதற்கு 1300 மில்லியன் ரூபா

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.

இலங்கை கறுவாப்பட்டை பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. ஏற்றுமதிக்கு முன்னதாக அனைத்து பொருட்களின் தரமும் பரிசோதிக்கப்படும். கறுவாப்பாட்டை பயிற்சி நிலையத்திற்கு 75 மில்லியன் ரூபாஒதுக்கீடு

இறப்பர் உற்பத்தி அபிவிருத்திக்காக 800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைகள் வழங்குவதற்கு Enterprise Sri Lanka-வினை விரிவுபடுத்த வேண்டும்.

சிறிய ட்ரக் வாகனங்களுக்கான வரியை குறைக்க திட்டம்

மத வழிப்பாட்டுத் ஸ்தளங்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் தொகையானது 5 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பு

கம்பெரலிய அபிவிருத்தித் திட்டத்திற்காக 48.000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

கடவுச்சீட்டு விநியோகத்திற்கான கட்டணம் ஒரு நாள் சேவை 5000 ரூபாவாலும், சாதரண சேவை 3500 ரூபாவாலும் அதிகரிக்கப்படும்

சிகரெட் மற்றும் பீடியின் விலை அதிகரிப்பு

கொழும்பை அழகுபடுத்தும் திட்டத்திற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

https://newuthayan.com/story/16/2019-வரவு-செலவுத்-திட்டம்-சமர.html

  • கருத்துக்கள உறவுகள்

வரிச்சுமை கூடிய வரவு செலவு திட்டம் - மஹிந்த

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வரிச்சுமை கூடிய வரவு செலவு திட்டத்தையே இம்முறையும் அரசாங்கம் முன்வைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

mahinda.jpg

இந்த வரவு செலவு திட்டத்தின் மூலமாக நாட்டினை முன்னெடுக்கவோ அல்லது மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவோ முடியாது. மாறாக நாட்டினை மேலும் கடன் சுமைக்குள் தள்ளும் வேலைத்திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சரும் அரசாங்கமும் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வரிகளை கொண்டு ஆட்சியை நடத்தவே  முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். 

 

http://www.virakesari.lk/article/51234

வரவு- செலவுத்திட்டம்  ;  பாராளுமன்றத்தில் நடந்தவை என்ன?

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்  2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம்  நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில்  இன்று சமர்ப்பிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் இராஜதந்திரிகள் என பலரும் இன்று குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 

buget.jpg

சபாநாயகர் கரு ஜயசூரியவின்  தலைமையில் பாராளுமன்றம் இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடியது. 

செங்கோல் கொண்டுவருவதற்கு முன்னரே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபைக்குள் வருகை தந்ததுடன், ஆளும் கட்சியின் பலரும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வருகை தந்தனர்.  

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  செங்கோல் கொண்டு வந்ததன் பின்னரே வருகை தந்தார். இலங்கை  தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கையில் கட்டுடன்   சபைக்குள் வந்திருந்தார். சபை அமர்வுகள் ஆரம்பிக்க முன்னர் தொண்டமன் எம்.பியும்  அவருடைய ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும்  நீண்ட நேரமாக அளவளாவிக்கொண்டிருந்தனர். 

தொண்டமான் எம்.பி யின்  இடது கையில் கறுப்புத் பெண்டேச் கட்டியிருந்ததை அவதானித்த பல எம்.பிக்களும் அவரிடம்  குசலம்  விசாரித்தனர். எதிர்க்கட்சி தலைவர்  மஹிந்த ராஜபக்ஷவும்  கையை காண்பித்து தொண்டமானிடம் ஏதோ வினாவினார்.

புன்னகையுடன் நிதி அமைச்சர் 

இந்நிலையில் மக்களை வலுவூட்டல், ஏழைகளை பாதுகாத்தல் என்ற  தொனிப்பொருளில் இந்த ஆண்டுக்கான  வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்காக  நிதியமைச்சர் மங்கள சமரவீர சபைக்குள் பிரவேசித்த போது சபையிலிருந்து ஆளும் கட்சியினர்  மேசைகளில் கைகளால் தட்டி வரவேற்றனர். தன்னுடைய ஆசனத்திற்கு வந்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர  தன்னுடைய கையிலிருந்த கறுப்பு நிறத்திலான பையை தூக்கி காண்பித்துகொண்டு சிரித்துகொண்டே ஆசனத்தில் அமர்ந்தார். இதன் பின்னர் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்  பலரும் தாமதித்தே  சபைக்குள் வந்தமர்ந்தனர். 

 சந்திரிக்காவும் - வெளிநாட்டு தூதுவர்களும்

இன்றைய வரவு செலவு திட்ட அமர்வுகளுக்கு தூதுவர்கள்,  உயர்ஸ்தானிகர்கள், இராஜதந்திரிகள், இலங்கை முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர், மற்றும் அமைச்சின் செயலாளர்கள் எள பலர் வருகைதந்திருந்தனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் சபாநாயகர் கலரியில் அமர்ந்திருந்தார். இதன் பின்னர் நிதி அமைச்சர் வரவு செலவு திட்ட உரையினை ஆரம்பித்தார். 

இதன்போது கடந்த கால ஆட்சியின் மோசடிக்கார வேலைத்திட்டங்கள், மற்றும் இந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட வேலைதிட்டம்  என்பன குறித்த தனது விமர்சனக் கருத்துக்களை அவர் முன்வைத்தார். 

தனியார் துறைக்கான இடம் 

அதேபோல் தனியார் துறை சார் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அதிகமான இடங்களில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் பாதுகாப்பு விடையங்கள் குறித்து பேசிய நிதி அமைச்சர், மஹிந்த ராஜபக் ஷ எப்போதும் இராணுவத்தை காட்டியே ஆட்சி நடத்துகின்றார், இராணுவம் இல்லையென்றால் இவர்களின் அரசியல் இல்லாமல் போய்விடும். அவ்வாறு இராணுவம் பற்றி பேசும் இவர்கள் இராணுவத்தின் நலன்களுக்காக எந்தவொரு கொடுப்பனவுகளையும், சலுகைகளையும் செய்யவில்லை என கூறினார். இந்தக் கருத்துக்களை அவர் முன்வைக்கும் போது எதிரணியில் மஹிந்த தரப்பில் இருந்த அனைவரும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். 

நாய்களுக்கும் பாதுகாப்பு 

அதேபோல் இந்த வரவு செலவு திட்டத்தில் அபிவிருத்திகளுக்கு, மக்களுக்கு மட்டும் அல்லாது நாய்களுக்கும் நிவாரணங்களை வழங்குகின்றோம். இந்த யோசனையை கேட்டதும் நிமல் சிறிபாலடி சில்வாவின் மனைவி அதிகமாக சந்தோஷப்படுவார் எனக் குறிப்பிட்டார்.  

அதேபோல் இந்த வரவு செலவு திட்டத்தின் போது  புதுமணத் தம்பதிகள்  தங்களுடைய கனவை நனவாக்கிக் கொள்வதற்காக  குறைந்த வட்டி வீதத்தில் கடன் சேவை ஆரம்பிக்கப்படுமென அறிவித்தார். இதன்போதும்  ஒன்றிணைந்த எதிரணியின்  உறுப்பினர்கள் சிலர் கேலியாக விமர்சித்ததை அடுத்து மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பியின் பெயரை குறிப்பிட்டு அவ்வாறான நபர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கடன்களை வழங்கவேண்டும் எனவும் குறிப்பிட்டவாறு சிரித்தார். 

அந்த 24 பேரையும் அணிப்புவீர்களா 

மேலும் சிறைச்சாலைகளில் உள்ள குற்றவாளிகளுக்கு யோசனை ஒன்றும் அவரால் முன்வைக்கப்பட்டது. அதாவது போதைப்பொருள் பாவனையில் கைதாகிய நபர்கள் விடுபடும் போது அவர்கள் போதைப்பொருள் வியாபாரிகளாக வெளியேறுகின்றனர். ஆகவே அவ்வாறு கைதான நபர்களுக்கு புனர்வாழ்வு நிலையங்களை அமைத்து அவர்களுக்கு நன்னடத்தை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டார். அப்போது எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்த சிலர் " அந்த 24 பேரையும் அனுப்புவீர்களா? " என கேள்வு எழுப்பினர். இதற்கு  பதிலளித்த அமைச்சர் மங்கள சமரவீர,  அவ்வாறு இருப்பார்களானால்  அவர்களையும் அனுப்புவோம் என்றார்.

பலர் வெளியேறினர்

வரவு-செலவுத்திட்ட யோசனையை பிற்பகல் 2 .10 மணிக்கு வாசிப்பதற்கு ஆரம்பித்த நிதியமைச்சர் மங்கள சமரவீர தன்னுடைய உரையை மாலை 4.20க்கு நிறைவுக்கு நிறைவு செய்தார். அவரது உரை ஆரம்பிக்கப்பட்ட போது ஆளும் கட்சியின் அனைவரும் மேசைகளை தட்டி அவரது முன்மொழிவுகளை ஆதரித்தனர். எனினும் சற்று நேரம் கடக்கையில் ஆளும் தரப்பில் உறுப்பினர்கள் ஒருவர் இருவராக வெளியேறி பாதி ஆசனங்கள் காலியானது. அதேபோல் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இடை நடுவே வெளியேறினர். வரவு செலவு திட்ட உரையினை எதிர்க்கட்சி தலைவரும் முழுமையாக சபையில் இருந்து கேட்கவில்லை. அவரும் வெளியேறியிருந்தார். 

வரவு செலவு திட்ட உரை நிறைவடைந்த பின்னர் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அமைச்சர்களுக்கான உணவறையில் தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர். இதன்போது எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த- பிரதமர் ரணில், நிதி அமைச்சர் - தமிழ் தேசிய கூட்டமைப்பு, பிரதமர் ரணில் -மற்றும் பிரதிநிதிகள் என பலரும் கூடி பேசிக்கொண்டனர்.

 

http://www.virakesari.lk/article/51240

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.