Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களுக்கு பூச்சாண்டி காட்டும் சுமந்திரன் எம்.பி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(தயாளன்)

 

1 வலி. வடக்கில் 232 ஏக்கர் காணிகளைகடற்படைத்தளம் அமைப்பதற்காக சுவீகரிக்கும்நடவடிக்கையில் அரச இறங்கியுள்ளது. இதில்கணிசமானவை பொதுமக்களுக்குச் சொந்தமானவை.

2. மன்னார் முசலி பிரதேச செயலர் பிரிவிலுள்ளசிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி அங்குமக்களை மீள்குடியேற அனுமதிக்குமாறு கடந்த 15 ஆம்திகதியும் மக்கள் போராட்டம் நடநத்தியுள்ளனர்.

3. கேப்பாபிலவில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 70ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

4. முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவிலில்சட்டவிரோதமாக புத்தர்சிலை அமைக்கப்பட்டது.அங்கு பொங்கல் மற்றும் வழிபாட்டுக்குச் சென்றபிரதேச மக்களும் பௌத்த பிக்குகளுக்கும் இடையேமுரண்பாடு ஏற்பட்டது. பிள்ளையார் ஆலயத்தின்பெயர் பலகையை பிக்குகள் அடாவடியாக மாற்றினர்.இது குறித்து பொலிஸாரிடம் முறையிட்டபோதும்அவர்கள் இதுபற்றிக் கவனமெடுக்கவில்லை.பௌத்தபிக்குவை அச்சுறுத்தியமை, தொல்பொருள்திணைக்களத்திற்குரிய பொருட்களைச்சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின்பேரில்பிரதேச மக்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

5. முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 இடங்கள் தமதுஆளுகைக்கு உட்பட்ட இடங்களென்று உரிமைகோரிஅவற்றை உடனடியாக அளவீடு செய்து தருமாறுதொல்பொருள் திணைக்களம் நில அளவைத்திணைக்களத்திடம் கோரியுள்ளதாகத் தெரியவருகிறது. இவை தமிழரின் வழிபாட்டுத் தலங்கள்மட்டுமல்ல வாழ்விடங்களாகவும் இருந்தவை.

புல்மோட்டை அரிசி ஆலை மலைப் பகுதி குமுழமுனைகுருந்தூர் மலை, தென்னமரவாடி கந்தசாமி மலைமுதலானவற்றில் பௌத்த விகாரைகள்அமைக்கப்பட்டுள்ளன. இவை மாதிரிக்குக்குறிப்பிடப்பட்ட சில விடயங்களே. இதைப் போலபாகுபாடான ஆக்கிரமிப்பை நோக்கமாகக் கொண்டபல்வேறு விடயங்கள் உள்ளன. ஆனால் நாடாளுமன்றஉறுப்பினர் சுமந்திரன் என்ன சொல்கிறார்?

இந்த அரசுக்கு நாங்கள் முண்டுகொடுக்க வேண்டியதேவை இருக்கிறது. இல்லாவிட்டால் ஒக்ரோபரில்நடந்தது உடனடியாக இப்போது நடக்கும். அது தமிழ்மக்களுக்கு பயங்கரமான விளைவை ஏற்படுத்தும்'

என்ன பூச்சாண்டி காட்டுகிறார் இவர்? ஒரு வேட்டுச்சத்தத்தைக்கூடக் கேட்டிராதவர் இவர். வான், தரை,கடல் வழியாக நடந்த சகல தாக்குதல்களையும்சந்தித்தவர்கள் நாங்கள் - குறிப்பாக கொத்துக்குண்டு,பொஸ்பரஸ் தாக்குதல்களையும் சந்தித்தவர்கள்.உறவுகளின் சடலங்களைக் கடந்தே வந்தவர்கள். அந்தநிலைமையை விடவா ஒரு பயங்கரம் நடந்துவிடப்போகிறது?

பயங்கரம் பயங்கரம் என்று கெலித்து .தே.கவுக்குமுண்டு கொடுத்து ஓய்வதற்கு இடையில் எதிர்கட்சிதலைமையையுமே பறித்து விட்டாரல்லாவாசபாநாயகர். மஹிந்த மொட்டுக் கட்சியில்இணைந்தமைக்கான வலுவான ஆதாரம் உண்டு. அதுசந்தேகமறத் தெரியும். விஜயகலா விடயத்தில்விடாப்பிடியாக நின்று பதவி விலக வைத்தவர்களுக்குமஹிந்த விடயத்தில் நெகிழ்ச்சிப் போக்கு ஏன்?எல்லோருக்கும் தெரிந்ததுதான். விஜயகலா தமிழச்சிமஹிந்த பௌத்த -சிங்களவர்.

.தே.. அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமுண்டு கொடுக்கட்டும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு முண்டு கொடுப்போர் தங்களுக்கானஅடுத்த தலைமையைத் தீர்மானிக்கட்டும்.

ரணிலுக்காகப் போராடி, நீதிமன்றில் வாதாடியசுமந்திரனே சம்பந்தனின் பதவிப் பறிப்பை ஒருபொருட்டாகக் கருதவில்லை. பிரதமருக்கு எதிரானநம்பிக்கையில்லாப் பிரேரணையோ, வரவு - செலவுத்திட்டமோ எதுவாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என்பதே இவரதுநிலைப்பாடு. அரசியல் கைதிகளின் விடுதலைமுதலான விடயங்களை வைத்துப் பேரம் பேசவேண்டும் என சிறிதரன் போன்றோர் கரடியாய்க்கத்தினாலும் சுமந்திரனின் நிலைப்பாடேநடைமுறைக்கு வரும்.

யாழ். மாநகர சபைக்கு ஆர்னோல்ட்தான் மேயர்என்றார் இவர். அப்படி ஒரு முடிவும் எடுக்கப்படவில்லைஎன்றனர் கட்சித் தலைவரும் செயலரும். இதுபற்றிக்கேட்டபோது அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்.ஆனால் ஆர்னோல்ட்தான் மேயர் என்றார் இவர்.கடைசியில் இவர் சொன்னதுதான் நடந்தது.அப்படியாயின் கட்சி என்ற ஒன்று எதற்கு?

மன்னார் புதைகுழி விவகாரத்தில் அதிர்ச்சிகரமானவிடயங்கள் வெளிவரும் என்றார் இவர். இதைப்போலவே 600 வருடத்துக்கு எலும்புக்கூடுகளே இவைஎன அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்தனர். சங்கிலியன்காலத்தை நினைவுபடுத்தி தமிழ்த் தேசியத்துக்குஉலை வைக்கும் நிகழ்ச்சி நிரலின் மணியோசைதான்சுமந்திரனின் அறிவிப்பு. எலும்புக் கூடுகளில் இருக்கும்இரும்புக் கம்பி உக்கவில்லை என்பது சுமந்திரனின்பொய்மையை உடைக்கப் போதுமானது.

கடந்த தேர்தலில் 'என்ன இருந்தாலும் ஏசுவைக்கும்பிடுபவர் இவர்' என்ற விடயம் முன்வைக்கப்பட்டது.அவ்வாறான விடயத்தை முன்வைத்தவர்களுக்குப்பின்னர் உரிய பலனும் கிடைத்தது.

தமிழ்த் தேசியத்துக்கு சுமந்திரன் உலை வைக்கும் முன்இங்கு இருந்த நிலைமைகளை விளங்கிக் கொள்வதுநல்லது. இலங்கைத் தமிழரைப் பொறுத்தவரைஒருவரின் மதமோ, பிறப்பிடமோ, பரம்பரையோ ஒருபொருட்டல்ல. செயற்பாட்டைப் பொறுத்தேதலைமையை ஏற்பர். அதனால்தான் மலோசியாவில்பிறந்த கிறிஸ்தவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தை'தந்தை' என்று ஏற்றுக் கொண்டாடினார்கள். அவரதுசடலம் புதைக்கப்படவில்லை - எரியூட்டப்பட்டது.சாம்பல் திருமலை உட்பட பல்வேறு பகுதிகளுக்குக்கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலமாகக் கொண்டுசென்று கடலில் கரைத்தனர்.

யாழ். ஆயராக இருந்தவர் குலேந்திரன். இவரதுசகோதரர் பிரபல வழக்கறிஞர் சாம். சபாபதி,இவருக்குப் பிள்ளைகள் இல்லை. இவரதுமறைவின்போது யார் கொள்ளி வைப்பது என்ற கேள்விஎழுந்தது. ஆயர் குலேந்திரன் இந்துசமயகிரியைகளின்படி எப்படி நடக்க வேண்டுமோ அப்படிநடந்து சகோதரருக்குக் கொள்ளி வைத்தார்.

புலிகளின் மன்னார் மாவட்டத் தளபதியாக இருந்தலெப்.கேணல் விக்ரருக்கு அரியாலை திருமகள் வீதியில்அந்தியேட்டிக் கிரியைகள் நடந்தன. இன்றும்கூடகிளிநொச்சி கனகபுரம் பாடசாலைக்குஅண்மையிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தின்பெருநாளுக்கு சைவ மக்களே உணவு சமைத்துவழங்குகின்றனர். சகல கிறிஸ்தவர்களும்ஆராதனையில் கலந்து கொள்வதற்கு ஏதுவாகஇப்பொறுப்பை சைவர்கள் ஏற்றார்கள். மடுப்பெருநாள், பாiசூயூர் அந்தோனியார் கோயில்என்பவற்றில் மத வேறுபாடுகளைத் தாண்டியே மக்கள்வழிபாடுகளில் கலந்து கொள்கின்றனர்.

தேசிய விடுதலை போராட்டத்திலும் கரும்புலிகள்உட்பட சகல வழிகளிலும் உணர்வுபூர்வமாகப்பங்குபற்றியவர்கள் கிறிஸ்தவர்கள். தலைவர்பிரபாகரன் தந்தை என்ற நிலையை அடைந்தவுடன்சார்ள்ஸ் அன்ரனி என்றே மகனுக்குப் பெயரிட்டார்.இவ்வாறான நிலையெல்லாம் சுமந்திரனுக்குப் பின்கொஞ்சம் கொஞ்சமாக மாறும் அபாய நிலையுள்ளது.கி.பி.ஃகி.மு. என்று சொல்வது போல சு.முஃசு.பி. என்றுகூறும் நிலை கடந்த பொதுத் தேர்தலில் உருவானது.மன்னார் புதைகுழி குறித்த இவரது கருத்து ஒரு நீண்டசதித்திட்டத்தைப் புலப்படுத்துகிறது என்றே கருதவேண்டியுள்ளது.

தமிழ்த் தேசிய உணர்வை - புலிகளைக்கொச்சைப்படுத்துவதில் இவருக்கு நிகர் யாருமில்லை.படுகொலைகளுக்கு நீதி கோரும் முயற்சியை'விண்ணாதி விண்ணர்கள் இருந்தால் நிறைவேற்றிக்காட்டட்டும்" என்ற இவரின் கொச்சைப்படுத்தல் மிகத்தெளிவாகவே புலப்படுத்துகிறது.

சர்வதேச நீதியாளர்களின் விசாரணை தேவையில்லை.உள்;ர் விசாரணையே போதும் என்பது இவரதுநிலைப்பாடு. இவரது விருப்பத்துக்கு மாறாகவேஎல்லாம் நடந்தது. 'முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்ததுஇனப்படுகொலையே' என்ற தீர்மானத்தை இவரதுமுடிவுக்கு முரணாக எடுத்ததால்தான்முன்னாள்முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் எல்லாச்சங்கடங்களையும் எதிர்கொள்ள நேரிட்டது என்பதுஇரகசியமான விடயமல்ல.

கிளிநொச்சி நீதிமன்றில் புலிகளைப் பற்றிக்குறிப்பிடும்போது பயங்கரவாதிகள் என்றார்.தென்னிந்திய திருச்சபை தொடர்பான வழக்கொன்றில்எதிர்த்தரப்பினரை பயங்கரவாதிகளுடன்தொடர்புபட்டவர்கள் என்று குறிப்பிட்டார். ஆட்சேர்ப்புதொடர்பாக புலிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.இதன் பின்னர் இவ்விடயம் தொடர்பானவழக்கொன்றில் யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பிரிவு விரிவுரையாளரான கணேசசுந்தரம்கண்ணதாசன் என்பவருக்கு ஆயுள் தண்டனைகிடைத்தது.

இவ்வாறாக பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டலாம்.பொதுவாக எங்கு உரையாற்றினாலும் புலிகளைநேரடியாகவோ, மறைமுகமாகவோ சாட இவர்தவறுவதில்லை. ஒருவகையில் இந்தக் குழப்பத்துக்குகஜேந்திரகுமாரும் ஒரு காரணம். அவர் கூட்டமைப்பைவிட்டு விலகியதாலேயே சுமந்திரன் தீர்மானிக்கும்சக்தியாக உருவாக முடிந்தது. இல்லையேல் சம்பந்தன்ஐயாவுக்கு கோவை தூக்கித் திரிபவராக மட்டுமேஇருந்திருப்பார். மொத்தத்தில் தமிழரின் சாபக்கேடுசுமந்திரனின் அரசியல் பிரவேசம்.

http://battinaatham.net/description.php?art=19016

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.