Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லோக்சபா தேர்தல்.. முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. 91 தொகுதிகளில் பலப்பரீட்சை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Lok Sabha Election 2019: 91 Seats To Vote Today In First Phase

லோக்சபா தேர்தல்.. முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. 91 தொகுதிகளில் பலப்பரீட்சை!

நாடு முழுக்க மொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

பிரதமர் மோடியின் ஐந்து வருட பாஜக ஆட்சி முடிவிற்கு வந்ததை அடுத்து, தற்போது லோக்சபா தேர்தல் தொடங்கி உள்ளது. 17வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இன்று மொத்தம் 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடக்கிறது.

மொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது. மே 19ம் தேதி வரை இந்த தேர்தல் திருவிழா நடக்க உள்ளது. அதன்பின் மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஆந்திர பிரதேசம், அருணாசலப்பிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், அந்தமான் மற்றும் நிக்கோபார், லட்சத்தீவு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதேபோல் அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மஹாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, திரிபுரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கத்திலும் சில தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.

ஆந்திரா, சிக்கிம், அருணாசலப்பிரதேசம், ஒடிசா (சில தொகுதிகள்) ஆகிய சட்டசபைக்கும் இன்றுதான் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் நடக்கும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: https://tamil.oneindia.com/news/india/lok-sabha-election-2019-91-seats-to-vote-today-in-first-phase-346502.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நாடாளுமன்ற தேர்தல் – முதற்கட்ட வாக்குப்பதிவுகள் ஆரம்பம்!

இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுகள் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

ஒடிஸா மாநிலத்தில் 4 மக்களவைத் தொகுதிகளுடன் சேர்த்து, மொத்தமுள்ள 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், பிஹார், சத்தீஸ்கார், ஜம்மு காஷ்மீர், மகாராஸ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிஸா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

ஆந்திர பிரதேசத்தில் பா.ஜ.க., காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஜன சேனா ஆகியவை முக்கியமாக போட்டியிடும் கட்சிகளாகும். அதேநேரம், ஒடிசா மாநிலத்தில் இன்று நான்கு தொகுதிளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு, பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி இடம்பெறும்.

18 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 91 தொகுதிகளுக்கு நடைபெறும் இன்றைய தேர்தலில் 14.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அத்தோடு, 1,729 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் போட்டியிடுகின்றனர். நாடு முழுவதும் 1.70 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 120 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதிகளில் மத்திய துணை இராணுவப்படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏழு கட்டங்களாக நடைபெறும் இத்தேர்தல், எதிர்வரும் 18, 23, 29 ஆம் திகதிகளிலும், மே மாதம்  6, 12, 19 ஆம் திகதிகளிலும்  நடைபெறும்.  இந்திய நாடாளுமன்றில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக இந்தத் தேர்தல் இடம்பெறுகின்றது. வாக்கெண்ணும் பணிகள் மே மாதம் 23ஆம் திகதி இடம்பெறும்.

இதேவேளை, அடுத்தகட்டமாக தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/2019ஆம்-ஆண்டுக்கான-நாடாளுமன/

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பொதுத் தேர்தல் 2019: 17வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியில் தனது வாக்கை இன்று பதிவு செய்த பெண்படத்தின் காப்புரிமைNOAH SEELAM Image captionஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியில் தனது வாக்கை இன்று பதிவு செய்த பெண்

ஏழு கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தல் இன்று (வியாழக்கிழமை) ஏப்ரல் 11ம் தேதி காலை ஏழு மணிக்குத் தொடங்கியது.

18 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 91 தொகுதிகளுக்கு நடைபெறும் இன்றைய தேர்தலில் 14.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,729 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரங்களில் மேற்கு வங்கத்தில் 18.12%, மிசோராமில் 17.5%, சத்திஸ்கரில் 10.2% மற்றும் மணிப்பூரில் 15.6% வாக்குகள் பதிவாகியுள்ளன எனத் தேர்தல் ஆணையம் கூறுகிறது.

தெலங்கானாவில் 10.6%, அஸ்ஸாமில் 10.2% மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் 13.3% வாக்குகள் முதல் இரண்டு மணி நேரங்களில் பதிவாகியுள்ளன.

இன்று நடக்கும் வாக்குப்பதிவில் நாடெங்கும் உள்ள 7764 மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்திய பொதுத் தேர்தல் 2019படத்தின் காப்புரிமைDIPTENDU DUTTA Image captionமேற்கு வங்க மாநிலம் கூச் பெகாரில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் பெண்கள்.

இன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சுமார் 1.70 லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.

ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான தேர்தல்களுக்கும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.

சிக்கிம்படத்தின் காப்புரிமைELECTION COMMISSION OF INDIA Image captionசிக்கிம் மாநிலத்தில் 13,400 அடி உயரத்தில் அமைந்துள்ள நதாங் மசோங் எனும் சட்டமன்றத் தொகுதி

ஆந்திரப் பிரதேசத்தின் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்கும் தேர்தலில் வாக்களிக்க 3.93 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதிகளுக்கும், அருணாச்சலப் பிரதேசத்தின் மொத்தமுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் 28 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

இன்று ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், பிஹார், சத்தீஸ்கார், ஜம்மு காஷ்மீர், மகாராஸ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிஸா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

இந்திய பொதுத் தேர்தல் 2019

ஆந்திர பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை இன்று நடைபெற உள்ள மக்களவை தேர்தலுடன், அம்மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலும் பெறுகிறது.

ஆந்திர பிரதேசத்தில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு 319 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஜன சேனா ஆகியவை போட்டியிடும் முக்கிய கட்சிகளாகும். இங்கு 45,920 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒடிசா மாநிலத்தில் இன்று நான்கு தொகுதிளில் வாக்குப்பதிவு நடக்கிறது. பாஜக, காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நடக்கும் இங்கு 7,233 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தெலங்கானாவின் 17 தொகுதிகளில் 443 வேட்பாளர்கள் களத்தில் உள்ளார்கள். தெலங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகியன இங்கு பிரதான கட்சிகளாக உள்ளன. இங்கு 34,603 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவுபடத்தின் காப்புரிமைAFP

பிஹாரில் 4 மக்களவைத் தொகுதிகளுக்காக 44 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி, காங்கிரஸ் ராஸ்டிரிய ஜனதாதளம் கூட்டணியும் போட்டியிடும் முக்கிய கட்சிகளாகும். இன்றைய வாக்குப்பதிவுக்காக 7,486 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்காரில் நடைபெறும் ஒரு மக்களவைத் தொகுதிக்காக 7 வேட்பாளர்கள் ோட்டியிடுகின்றனர், பாஜக, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியும் போட்டியிடும் முக்கிய கட்சிகளாகும். இங்கு 1,878 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் 2 மக்களவைத் தொகுதிகளுக்காக 33 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்கள் ஜனநாயகக் கட்சி , காங்கிரஸ் மற்றும் ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாடு கூட்டணி மற்றும் ஜம்மு - காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி ஆகியன இங்கு போட்டியிடும் முக்கியக் கட்சிகளாகும். ஏப்ரல் 11ம் இங்கு 3,489 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மகாராஸ்டிராவில் 7 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில் 122 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக மற்றும் சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ், பிற சில முக்கிய கட்சிகள் இங்கு போட்டியிடுகின்றன. முதல் கட்ட தேர்தலுக்காக 14,731 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேகலாயாவில் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்காக ஒன்பது வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மணிப்பூர் மாநிலத்தின் ஒரு தொகுதிக்கு நடக்கும் தேர்தலில் எட்டு வேட்பாளர்களும், மிசோராமில் ஒரு தொகுதிக்கு நடக்கும் தேர்தலில் ஆறு வேட்பாளர்களும் இன்று களத்தில் உள்ளனர்.

நாகலந்தின் ஒரு தொகுதியில் நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஒடிசா மாநிலத்தில் இன்று நான்கு தொகுதிளில் வாக்குப்பதிவு நடக்கிறது. பாஜக, காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நடக்கும் இங்கு 7,233 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Electionபடத்தின் காப்புரிமைELECTION COMMISSION OF INDIA Image captionமேகாலயா மாநிலத்தில் தேர்தல் நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அடர்ந்த வனங்கள் வழியாகக் கொண்டு செல்லும் அதிகாரிகள்.

உத்தரப்பிரதேசத்தில் இன்று தேர்தல் நடக்கும் எட்டுத் தொகுதிகளில் 96 வேட்பாளர்கள் மோதுகின்றன.பாரதிய ஜனதா, காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் ஆகிய இங்கு முக்கியக் கட்சிகள். இங்கு 16,633 வாக்குப்பதிவு மையங்கள் இன்றைய தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளன.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு 52 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இங்கு 11,235 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் இன்று தேர்தலிச் சந்திக்கும் இரண்டு மக்களவைத் தொகுதிகளில் 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி இங்கு பிரதானமாக உள்ளன. இங்கு 3,844 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று வாக்குப்பதிவு நடக்கும் அந்தமான் நிகோபார் தீவின் ஒரே மக்களவைத் தொகுதியில் 15 வேட்பாளர்களும்,லட்சத்தீவில் ஆறு வேட்பாளர்களும் களத்தில் உள்ளார்கள்.

நரேந்திர மோதிபடத்தின் காப்புரிமைBJP

ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கேரளா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம், தெலுங்கானா, தமிழ்நாடு, உத்தராகண்ட், ஆகிய மாநிலங்களிலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா ஹவேலி, டாமன் டையூ ஆகிய ஒன்றியப் பிரதேசங்களிலும் ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெறும்.

கர்நாடகா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா ஆகிய நான்கு மாநிலங்களிலும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

அஸ்ஸாம் மற்றும் சத்தீஸ்கரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும். மேலும், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.

ஐந்து கட்டங்களாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும், ஏழு கட்டங்களாக பிகார், உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தேர்தல் நடைபெறும்.

தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும் ஜம்மு காஷ்மிர் மாநிலத்தில் மக்களவை தேர்தலோடு சட்டசபை தேர்தல் நடைபெறாது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறும்.

https://www.bbc.com/tamil/india-47886274

  • கருத்துக்கள உறவுகள்

நூற்றுக்கணக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு: கடப்பா பூத்திற்கு பூட்டு; ஆந்திர வாக்குப்பதிவு நிலவரம்

Published :  11 Apr 2019  10:45 IST
Updated :  11 Apr 2019  10:49 IST
 
VijayawadaVotingjpg

விஜயவாடாவில் வாக்களிக்க காத்திருக்கும் மக்கள்.

ஆந்திரா மாநிலத்தில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 லோக்சபா தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.  தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி புதிய கட்சியாகக் களமிறங்கியுள்ளன.  பாஜக, காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் களமிறங்கியுள்ளது.

வாக்காளர்களுக்குப் பணம் கடப்பா பூத்திற்கு பூட்டு:

பிரகாசம் மாவட்டம் பல்லிக்குருவா மண்டலில் உள்ள வேமாவரம் கிராமத்தின் வாக்குச்சாவடி ஏஜெண்ட்கள் இருவர் கைது செய்யப்பட்டனர், இவர்கள் இருவரும் வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக கையும் களவுமாகப் பிடிபட்டனர்.

கடப்பாவில் 126வது பூத்தில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியினர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அடித்து நொறுக்கினர். கடும் வன்முறை ஏற்படும் அச்சத்தில் போலீசார் கும்பலைக் கலைக்க பலவந்தம் பிரயோகம் செய்தனர். கடப்பாவில் இந்த பூத்திற்கு இப்போதைக்கு பூட்டுப் போடப்பட்டு, வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நர்ஸராவ்பேட்டையில் தெலுங்கு தேசம் வேட்பாளர் அரவிந்த பாபு மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.  கும்பலைக் கலைக்க போலீஸார் சிறு அளவில் லத்தி சார்ஜ் நடத்தினர்.

100க்கும் மேற்பட்ட ஈவிஎம் எந்திரங்களில் கோளாறு:

குண்டூர் மாவட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சிக்கல்களைச் சந்தித்தார். ஈவிஎம் வேலை செய்யாததால் அங்கு சிறு பரபரப்பு ஏற்பட்டு பிறகு எந்திரம் மாற்றப்பட்டது.

GantaSrinivasRaoFamilyPollsjpg

விசாகப்பட்டிணத்தில் ஆந்திர அமைச்சர் வாக்களிக்க வந்தார்.

 

பிரகாசம் மாவட்டத்தில் 3260 பூத்களில் வாக்குப்பதிவு தொடங்கியது, ஆனால் நூற்றுக்கணக்கான ஈவிஎம் எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. எந்திரங்களை மாற்றி வைத்தவுடன் வாக்குப்பதிவு தொடங்கியது.

அதே போல் குப்பம் பகுதியிலும் பூத்களில் ஈவிஎம் எந்திரங்கள் பல கோளாறு அடைந்துள்ளன. குப்பம் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியாகும்.

கடப்பா நகரில் 163வது வாக்குச்சாவடியில் ‘விசிறி’ சின்னத்திற்கு எதிராக உள்ள பொத்தான் வேலை செய்யவில்லை என்று பிரச்சினை ஏற்பட்டது. அதே போல் இன்னொரு பூத்தில் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்க முடியவில்லை. இதனையடுத்து ஈவிஎம்கள் மாற்றப்பட்டன.

இதே போல் அனந்தபூர், மங்களகிரி உட்பட பல பூத்களில் ஈவிஎம் எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு சிறு தகராறுகள் ஏற்பட்டது, பிறகு எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன, சில எந்திரங்களில் கட்சியின் சின்னங்கள் சரியாகவே தெரியவில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன.

 
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பொதுத் தேர்தல் 2019: ஆந்திரப் பிரதேச தேர்தல் வன்முறையில் ஒருவர் பலி

Andhra Pradesh Assembly polls

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒருவர் பலியானார். அங்கு மக்களவை தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அனந்தபூர் மாவட்டம் வீரப்புரம் கிராமத்தில் இரு கட்சியினரிடைய இந்த மோதல் ஏற்பட்டது.

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் இதில் உயிரிழந்தார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @ANI
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @ANI

இந்த மோதலில் காயமடைந்த சிலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டூர் மாவட்டத்திலும் இந்த இரு கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அந்த மாநில சபாநாயகர் ஷிவபிரசாத் ராவ் மயக்கமடைந்தார்.

முன்னதாக குண்டூர் மற்றும் சித்தூரில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டன.

கடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது BBC News தமிழ்
முடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது BBC News தமிழ்

எம்.எல்.ஏ மற்றும் எம்.பி வேட்பாளர்களை வாக்குப்பதிவு இயந்திரங்களில் தெளிவாக பிரித்து காட்டவில்லை என்று கூறி ஜனசேனா சட்டமன்ற வேட்பாளர் மதுசூதன் குட்டா வாக்குப்பதிவு இயந்திரங்களை தரையில் போட்டு உடைத்தார். அவரை போலீஸார் காவலில் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் பிபிசியிடம் பேசிய அவர், "நான் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்றேன். வாக்குப்பதிவு இயந்திரங்களில், எம்.எல்.ஏ மற்றும் எம்.பி வேட்பாளர்களை பிரித்து காட்டவில்லை. அது தெளிவாகவும் இல்லை. நான் தொட்டவுடன் வாக்குப்பதிவு இயந்திரம் கீழே விழுந்துவிட்டது" என்றார்.

தேர்தல் அதிகாரிகளுக்கு முறையான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவை தொடர்ந்து நடத்த மாற்று நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி கோபால கிருஷ்ண த்விவேதி தெரிவித்தார்.

ஆந்திர பிரதேசத்தில் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒன்றாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

மஹாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் பிரச்சனை நிலவும் கத்ரிச்சோலி மாவட்டத்தின் எடாப்பள்ளி

எனும் இடத்துக்கு அருகே நடந்த குறைந்த சக்தி உடைய வெடிகுண்டு ஒன்று வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் தொலைவில் வெடித்தது. இதில் யாரும் காயமடையவில்லை. அங்கு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.

https://www.bbc.com/tamil/india-47892917

Edited by ஏராளன்
space reduce

  • கருத்துக்கள உறவுகள்

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: மேற்குவங்கம், திரிபுராவில் 81%  வாக்குப்பதிவு

Published :  11 Apr 2019  21:30 IST
Updated :  11 Apr 2019  21:30 IST
புதுடெல்லி
 
Ghaziabadvoterjpg
 
முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கம் மற்றும் திரிபுராவில் 81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. வரும் மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

மக்களவைத் தேர்தலில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.

ஆந்திரா 25, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பிஹார் 4, சத் தீஸ்கர் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகாலயா 2, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலங்கானா 17, திரிபுரா 1, உத்தர பிரதேசம் 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது.

இதுபோலவே, உத்தராகண்ட் 5, மேற்கு வங்கம் 2, அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1, லட்சத்தீவுகள் 1 என மொத்தம் 91 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 18 மாநிலங்களில், 2 யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெற்றது.

இந்தநிலையில் முதல்கட்டத் தேர்தலில் மாலை 5 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் தற்போது வெளியோகியள்ளது. அதன் விவரம் வருமாறு:

வாக்குப்பதிவு நிலவரம்

 

மேற்குவங்கம் 81%

திரிபுரா - 81.23%

சிக்கிம் - 69%

மிசோரம் - 60%

மேகாலயா - 62%

லட்சத்தீவுகள்: 65.9%

நாகலாந்து - 78%

மணிப்பூர் - 78.20%

தெலங்கானா - 60.57%

அசாம் - 68%

உ.பி. - 59.77%

பிஹார் - 53.06%

https://tamil.thehindu.com/india/article26809291.ece

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

34ce8829dd70c20c0f4389dfe3f54f44.jpg

ஆந்திர பிரதேசம்: நள்ளிரவு வரை நீடித்த வாக்குப்பதிவு

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் சில இடங்களில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நீடித்திருந்தது.

குந்துர், கிருஷ்ணா, நெல்லூர், கர்னூல் ஆகிய மாவட்டங்களிலுள்ள சில வாக்குச்சாவடிகளில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதேவேளை இயந்திரக்கோளாறு, மோதல் ஆகியவற்றால் 400 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமானது.

அந்தவகையில் 17ஆவது மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இந்த தேர்தல், ஆந்திரா 25, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பிஹார் 4, சத்தீஷ்கார் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகாலயா 2, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலுங்கானா 17, திரிபுரா 1, உத்தர பிரதேசம் 8 உத்தரகாண்ட் 5, மேற்கு வங்காளம் 2, லட்சத்தீவுகள் 1, அந்தமான் நிகோபார் தீவுகள் 1 என 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் நடைபெற்றது.

ஆந்திராவில் மக்களவை தேர்தலோடு அம்மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. ஆந்திராவில் சில இடங்களில் வன்முறை நடைபெற்ற போதிலும் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகின.

http://athavannews.com/ஆந்திர-பிரதேசம்-நள்ளிரவ/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Parliament-Election-2019-2.jpg

மாவோயிஸ்ட்டுகள் மிரட்டல்: ஒரு வாக்கு கூட பதிவாகாத வாக்குச் சாவடிகள்

ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளின் மிரட்டலால் 2 வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

மக்களவைத் தேர்தலில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.

ஆந்திரா 25, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பிஹார் 4, சத்தீஸ்கர் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகாலயா 2, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலங்கானா 17, திரிபுரா 1, உத்தர பிரதேசம் 8 என மொத்தம் 91 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் ஒடிசாவில் உள்ள மலகன்கிரி பகுதி மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி. தேர்தலை சீர்குலைக்க அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் இருந்ததால் அங்கு கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் பங்கேற்கக் கூடாது என மாவோயிஸ்டுகள் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்திருந்தனர். இதனால், மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் அதிகமுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும் மக்கள் வாக்களிக்க அச்சப்பட்டனர்.

மல்கன்கிரியில் பல வாக்குச்சாவடிகளில் குறைவான அளவே வாக்குகள் பதிவாகின. குறிப்பாக 2 வாக்குச்சாவடிகளில் ஒரே ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மாவோயிஸ்ட்டுகளின்-மிரட்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.