Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களவை தேர்தல்: முதல்வர் பழனிசாமி, நடிகர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா ஆகியோர் வாக்களிப்பு #LIVE

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்களவை தேர்தல்: முதல்வர் பழனிசாமி, நடிகர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா ஆகியோர் வாக்களிப்பு #LIVE

எடப்பாடி பழனினசாமி வாக்களித்தார்

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 18) மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

இந்திய மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் மொத்தம் 95 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது.

8:55 AM"கருணாநிதி இடத்தை மு.க ஸ்டாலின் நிரப்புவார்" - கனிமொழி

"எதிர்கட்சி வேட்பாளர்களை மட்டுமே குறிவைத்து சோதனைகள் நடைபெறுகின்றன. பாஜகதான் அதிமுகவை ஆள்கிறது. தமிழகத்தில் கருணாநிதியின் இடத்தை மு.க ஸ்டாலின் நிரப்புவார்" என்று திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்தார்.

கனிமொழிபடத்தின் காப்புரிமைANI

8:48 AM ஆழ்வார்பேட்டை கார்ப்பரேஷன் பள்ளியில் ஒரு மணி நேரம் காத்திருப்புக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஷ்ருதிஹாசன் இருவரும் வாக்களித்தனர்.

நடிகர் கமல்ஹாசன்படத்தின் காப்புரிமைANI Image captionநடிகர் கமல்ஹாசன்

8:30 AM சேலம் குகை மேல்நிலை பள்ளியில் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் வாக்களித்தார்.

சட்டப்பேரவை சபாநாயகர் தனபால்

8:15 AM வாக்களித்த பிரபலங்கள்

சூர்யா மற்றும் ஜோதிகா Image captionசூர்யா மற்றும் ஜோதிகா நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி Image captionநடிகர் சூர்யா மற்றும் கார்த்தி நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி Image captionநடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி Image captionஇசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி
கடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது BBC News தமிழ்

முடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது BBC News தமிழ்

8:05 AM தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்

சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரிசையில் நின்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்.

எடப்பாடி பழனினசாமி வாக்களித்தார் எடப்பாடி பழனினசாமி வாக்களித்தார்

8:00 AM இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் வாக்களித்தார்

7:58 AM ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மேதலோடையில் உள்ள எண் 160 வாக்குச்சாவடியில் வாக்குச் செலுத்தும் இயந்திரம் தொடக்கத்திலேயே பழுது வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் காத்திருப்பு மாற்று இயந்திரத்திற்காக காத்திருப்பு.

7:55 AM ஆழ்வார்பேட்டையில் கமல் வாக்களிப்பதில் தாமதம் - மின்வெட்டு காரணமா?

கமல்படத்தின் காப்புரிமைTWITTER

மகள் ஸ்ருதி ஹாசனுடன் ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார் கமல் ஹாசன். ஆனால், அங்கு மின் வெட்டு ஏற்பட்டதால் அவர் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அங்கு வாக்களிக்க காத்து கொண்டிருக்கிறார் கமல்.

7:50 AMவாக்களிக்க காத்திருக்கும் நடிகர் விஜய்

விஜய்

7:45 AM: "இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதிக இளைஞர்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோதி ட்வீட் செய்துள்ளார்.

7:30AM: ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்த நடிகர் ரஜினிகாந்த்

வாக்களிக்கும் நடிகர் ரஜினிபடத்தின் காப்புரிமைANI Image captionவாக்களிக்கும் நடிகர் ரஜினி

7:15AM: சூளையில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம்

சென்னை சூளையில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என்பதால் மக்கள் அங்கு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு 2 இவரது BBC News தமிழ்

முடிவு ஃபேஸ்புக் பதிவின் 2 இவரது BBC News தமிழ்

7:00AM: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது.

வேலூர் தொகுதியை தவிர 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். இதேபோல் இன்று தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

சென்னை பெரியமேட்டில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருக்கும் பொதுமக்கள் Image captionசென்னை பெரியமேட்டில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருக்கும் பொதுமக்கள் பெரியமேடு

பேருந்துகள் இல்லை என மக்கள் போராட்டம் - கோயம்பேட்டில் தடியடி

இந்நிலையில், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல  பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என்று நேற்று இரவு மக்கள் குற்றஞ்சாட்டினர். 

தேர்தலில் வாக்களிக்க தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல நேற்று இரவு 7 மணி முதலே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

ஆனால், போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணம் அதிகளவில் இருப்பதாகக்கூறி  திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்பேட்டில் தடியடிபடத்தின் காப்புரிமைFACEBOOK

அவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் பொதுமக்கள் செல்ல மறுத்ததால் போலீஸார் தடியடி நடத்தினர்.

போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அங்கேயே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

முன்னதாக தேர்தலுக்காக அதிகளவில் மக்கள் வெளியூர் செல்வார்கள் என்பதால், அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

தமிழ்நாட்டின் வேலூர் மக்களவைத் தொகுதியில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரத்து செய்துள்ளதாக தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் ஷெஃபாலி ஷரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ஏப்ரல் 18ம் தேதி திரிபுரா கிழக்கு மக்களவைத் தோகுதியில் நடைபெறுவதாக இருந்த தேர்தல், ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு எந்திரங்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆந்திர பிரதேசம் (மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்கள்), அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், பிகார், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 11-ஆம் தேதி முதல்கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்களவைத் தேர்தலின் இரண்டாவது கட்ட தேர்தலில், தமிழ் நாடு (38 தொகுதிகள்), புதுச்சேரி (1 தொகுதி), அஸ்ஸாம் (5 தொகுதிகள்), பிகார் (5 தொகுதிகள்), சத்தீஸ்கார் (3 தொகுதிகள்), ஜம்மு காஷ்மீர் (2 தொகுதிகள்), கர்நாடகா (14 தொகுதிகள்), மகாராஷ்ரா (10 தொகுதிகள்), மணிப்பூர் (1 தொகுதி), ஒடிஸா (5 தொகுதிகள்), உத்தரபிரதேசம் (8 தொகுதிகள்), மேற்கு வங்காளம் (3 தொகுதிகள்) என மொத்தம் 95 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது,

கோடு கோடு

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக), பாட்டாளி மக்கள் கட்சி (பாமக), தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக), புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை இணைந்து இந்த முறை தேர்தலை எதிர்கொள்கிறது.

முதல்முறையாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மக்களவைத் தேர்தலில் பங்கெடுக்கிறது. நாம் தமிழர் கட்சி எல்லா தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை இடைத்தேர்தல்

வாக்குப்பதிவு

பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, தஞ்சாவூர், ஓசூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம், திருவாரூர் ஆகிய 18 தொகுதிகளுக்கு தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நாளிலேயே, அதாவது ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் அதாவது மே 19ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கோடு கோடு

தேர்தல் பிரசாரம் நடைபெற்றபோது, வருமான வரித்துறை பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தியுள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அத்தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் சுயேச்சை வேட்பாளர் கே.சுகுமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தலை நிறுத்திவைத்தது செல்லும் என்று ஏப்ரல் 17ம் தேதி புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

இந்திய நாயணம் 2000 ரூபாய்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மேலும், புதன்கிழமையன்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தேர்தல் பணிமனையில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கோடியே 48 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனையைத் தடுத்தபோது காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறவிருக்கிறது

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் 135.41 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

கோடு கோடு

பணம் தவிர, 37.42 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள், 37.8 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள், 1022 கிலோ தங்கம், 645 கிலோ வெள்ளி ஆகியவை பிடிபட்டுள்ளன. சேலை, குக்கர் போன்ற பரிசுப் பொருட்களும் 8.15 கோடி ரூபாய் அளவுக்கு கைப்பற்றப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 4525 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பல விதங்களிலும் தமிழ்நாட்டிற்கு திருப்பு முனையான, இந்தத் தேர்தல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தலாம் என்பதால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உற்றுநோக்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/india-47967143

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.