Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டனில் கடன் அட்டை மோசடி சம்பவங்களின் புலிகளுக்கு தொடர்பு என குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனில் கடன் அட்டை மோசடி சம்பவங்களின் புலிகளுக்கு தொடர்பு என குற்றச்சாட்டு

மு.சுப்பிரமணியம்

பிரித்தானியாவில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் நிரப்பவரும் பாவனையாளர்களின் கடன் அட்டைகள் சட்டவிரோதமாக பயன்படுத்துவதாகவும் பாவனையாளரின் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும் மோசடிகல் இடம் பெருவதாகவும் இவற்றில் பெருமளவு இலங்கையர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் எனவும் பி.பி.சி தொலைகாட்சி செய்தி பிரிவு செய்தி தெரிவித்துள்ளது குறிப்பிட்ட மோசடி சம்பவங்களில் இலங்கைகர்களுக்கு சிறிலங்காவில் தனிநாடு கோரி போராடும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது .

இன்று பி.பி.சி தொலைகாட்சிக்கு போட்டியளித்த பிரித்தானியவிற்கான இலங்கை தூதுரக அதிகாரி மக்ஸ்வெல் கில் குறிப்பிட்ட கடன் அட்டை மொசடியில் பல மில்லியன் பிரித்தானிய பவுண்ஸ்கள் சுரண்டப்பட்டு விடுதலைப்புலிகள் பணம் சேர்த்து வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்

ஆனால் நியு ஹம் மாநகர சபை கவுன்சிலர் போல் சத்தியநேசன் குறிப்பிட்ட கடன் அட்டை மோசடி தொடர்பில் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றும் மேலும் அங்கு வாழ் ஒட்டு மொத்த தமிழர்கள் இந்த செயலில் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவித்திருந்தார் எனினும் கடன் அட்டை விபரங்கள் திருடி பணம் சுரண்டும் குற்றச்செயலில் சில தமிழ் இளைஞர்களுக்கு தொடர்பு உள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.

வேண்டுமென்றே சிலர் கடன் அட்டை மொசடியில் விடுதலைப்புலிகளை சம்பந்தபடுத்தி வருகின்றனர் என்று மேலும் தெரிவித்திருந்தாஎ.

மேலும் குறிப்பிட்ட குற்றசெயல் தொடர்பாக பிரித்தானிய செயலாளார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் .

முறைப்பாடுகள் கவனத்தில் எடுக்கப்பட்டு எடின்பரோ , லீட்ஸ் , நொட்டின்காம் , பிரிஸ்டல் , ஹல் , நோர்விச் பல இடங்கலின் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன பிரித்தானியாவில் இயங்கும் 9500 பெற்றோல் நிறப்பு நிலையம் 200 நிரப்பு நிலையங்களில் குற்றசெயல்கள் நடைபெற்றுள்ளன .

பி.பி.சி தொலைக்காட்சி சிறிலங்கா அரசாங்கம் கடன் அட்டை மோசடியின் பின்புலமாக விடுதலைப்புலிகள் இயங்குவதாக தெரிவித்துள்ளது.

ஆனால் பொலிஸார் இக்குற்றசெயலில் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக இதுவரை தெரியவரவில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் ஒரு பக்கம்.. பழி புலி பக்கம்..! தமிழர்கள் தாங்களா சிந்திச்சு செயற்பட வேண்டும்..! :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் ஒரு பக்கம்.. பழி புலி பக்கம்..! தமிழர்கள் தாங்களா சிந்திச்சு செயற்பட வேண்டும்..! :P

எல்லா சமுதாயத்திலும் உழையாத கள்ளர்களும், காட்டிக்கொடுப்போரும், கூட்டிக்கொடுப்போரும் இருப்பார்கள்தானே. :P :P :P

எல்லா சமுதாயத்திலும் உழையாத கள்ளர்களும், காட்டிக்கொடுப்போரும், கூட்டிக்கொடுப்போரும் இருப்பார்கள்தானே. :P :P :P

கிரிமினலை கட்டுப்படுத்த வேண்டியது பொலிசாரின் கடமை அதை விட்டு ஒரு இனக்குழுமத்தின் மீது பழி போடுவது கள்ளத்தனம்.

எல்லா வெள்ளை இனப் பெண்களும் அரைகுரை உடுப்புடன் திரிவதால் அவர்கள் எல்லாரையும் விபச்சாரிகள் என்று சொல்வதில்லைதானே. அதுபோல்தான் இதுவும்

  • கருத்துக்கள உறவுகள்

டன் புலனாய்வு தகவலின் படி.....

பிரித்தானியாவில் இடம்பெறும் திருட்டுகளில் அதிலும் CASHPOINT மெசினையே கனரக வாகனங்கள் உதவியோடு களவெடுத்து செல்லும் ஊ***தை பிரித்தானியரின் செயல்களுக்கு பின்னால் பிரித்தானிய அரசும்,பிரித்தானிய புலனாய்வு குழுவும் செயற்படுவதாக நம்பகரமாக தெரியவருகின்றது. இதை புழுகு இணையத்தளம் தேனி.கொக்கரோக்கோ சா கொம்,மற்றும் நெருப்பு உறுத்திப்படுத்தியுள்ளது. :angry: :angry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடன் அட்டை விவகாரம்: சிறிலங்கா தூதரக அதிகாரியின் பொய்க்கு சு.ப.தமிழ்ச்செல்வன் பதில் [ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2007, 19:21 ஈழம்] [செ.விசுவநாதன்]

கடன் அட்டை முறைகேடுகள் நடைபெறுவதன் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருப்பதாக பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதரகத்தின் முதல்நிலைச் செயலாளர் தெரிவித்த குற்றச்சாட்டை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழ்நெட் இணையத்தளத்துக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்:

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சிறிலங்கா அரசாங்கமானது அதனைத் திசை திருப்பும் வகையில் இத்தகைய குற்றச்சாட்டைக் கூறுகிறது.

இத்தகைய பொய்யான பரப்புரைச் செய்திகள் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என்று பி.பி.சி. போன்ற பொறுப்பான ஊடகங்களை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது தமிழர் தாயகத்தில் உயரிய நெறிகளோடு குற்றமற்ற சூழலை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம் என்பதை இராஜதந்திர சமூகத்தினர் நன்கு அறிவர்.

புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தாங்கள் வாழும் நாடுகளின் சட்டங்களைச் செயற்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்றும் நாம் கேஎட்டுக் கொள்கின்றோம் என்றார் தமிழ்ச்செல்வன்.

பி.பி.சி.யில் கடந்த சனிக்கிழமை பிரித்தானியாவில் கடன் அட்டை மோசடி உள்ளிட்டவைகளின் பின்னணியில் விடுதலைப் புலிகள் இருப்பதாக பிரித்தானியாவுக்கான சிறிலங்காவின் தூதரக அதிகாரி மேக்ஸ்வெல் பொய்யாக குற்றம் சாட்டியதனைத் தொடர்ந்து சு.ப.தமிழ்ச்செல்வன் இந்த விளக்கம் அளித்துள்ளார்.

புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

`பிரிட்டனில் கடன் அட்டை மோசடியில் ஈடுபடும் சில தமிழர்களால் தமிழ் இனத்திற்கும் விடுதலைப் போராட்டத்திற்குமே அவப்பெயர்'

[23 - April - 2007]

பிரிட்டனில் கடன் அட்டை (கிரெடிற்காட்) மோசடியில் ஈடுபடும் தமிழர்கள் சிலரால், ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் பெரும் அவப்பெயர் ஏற்பட்டு வருவதாக பிரிட்டனில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளுள் ஒன்றான நியூஹாம் பகுதியின் நகரசபை கவுண்சிலரும், பிரிட்டிஷ் பொலிஸாருக்கு தமிழ் சமூக கலாசார மற்றும் குற்றச் செயல் விடயங்கள் குறித்து ஆலோசனை வழங்குபவருமான போல் சத்தியநேசன் கவலை தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் பெற்றோல் நிலையங்களில் பாவனையாளர்களின் கடன் அட்டைகளின் விபரங்கள் திருட்டுத் தனமாக எடுக்கப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணம் சுரண்டப்படும் மோசடியோடு விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தொடர்பிருப்பதாக பி.பி.சி. தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ள நிலையில் இது குறித்து பிரிட்டிஷ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே போல் சத்தியநேசன் `பி.பி.சி.'க்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறுகையில்;

பல இனத்தவர்கள் இப்படிப்பட்ட மோசடிகளில் ஈடுபடுவது போல தமிழர்களும் ஈடுபட்டுள்ளார்கள். இதனை மிகவும் மனவருத்தத்துக்குரிய விடயமாகப் பார்க்கின்றோம்.

இதில் தனிப்பட்டவர்கள் மிகவும் குறுகிய அளவிலே ஈடுபடுவதினால் இது ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்திற்கும் ஒரு இழிவாகவும் அவமானப்படக் கூடிய செயலாகவும் பார்க்கக் கூடிய அளவுக்கு இருக்கின்றது.

இன்றைக்கு தமிழர்கள் கூட, தமிழர்கள் வேலை செய்யும் பெற்றோல் நிலையங்களுக்குப் போய் கடன் அட்டைகளைப் போடுவதற்கு பயப்படுகிறார்கள்.

பணத்தைக் கொடுத்துத்தான் தங்கள் காரியங்களைப் பார்க்கின்ற அளவிற்கு நிலைமை இருக்கின்றது.

கூடிய விரைவில் இதை குற்றவியல் சம்பந்தப்பட்ட அளவிலே பார்க்கும் பொழுது நிச்சயம் அதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கமோ அல்லது சம்பந்தப்பட்டவர்களோ எடுப்பார்கள் என்று சொன்னால் இதனைத் தடுத்து நிறுத்தக் கூடிய பக்குவத்தை பார்க்கலாம்.

இந்த மோசடியில் விடுதலைப் புலிகள் ஈடுபடுவதாக தற்போது குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால் இதில் உண்மையில்லையென்றே கூற வேண்டும்.

ஏனெனில், விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் இதிலே ஈடுபடுவது என்று சொல்வது, விடுதலைப் புலிகளின் புனிதமான ஒரு போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகத்தான் நான் கருதுகிறேன்.

அந்தக் காலத்திலிருந்து கிட்டத்தட்ட நான் 22 வருடங்களாக வெளிநாட்டிலே இருக்கிறேன். வெளிநாட்டில் இருக்கும் போது பல நாடுகளிலே போதைப் பொருள் கடத்துபவர்கள் எல்லோரும் சொல்வது என்னவென்றால், இயக்கத்திற்கு தான் பணம் சேர்த்தோம், எம்முடைய போராட்டத்துக்காகத்தான் இதனைச் செய்தோம் என்று கூறுவர்.

தனிப்பட்டவர்கள் செய்கின்ற இவ்வாறான தவறுகளை ஒரு போராட்டத்திற்குத்தான் செய்வதாகக் கூறி போராட்ட அமைப்புகளின் பெயர்களை பயன்படுத்தி தாங்கள் தப்பிக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

பொலிஸார் இவர்கள் எல்லோருடைய வீடுகளுக்கும் சென்றாலும் அங்கு தலைவர் பிரபாகரனின் படம் இருக்கும். விடுதலைப் புலிகளின் கொடிகளும் இருக்கும்.

இதனால் குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நிச்சயமாக சம்பந்தம் இருக்கிறது என்று கூறுவது தவறு.

தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் புலிகளின் படங்களை வைத்திருக்கலாம் கொடிகளையும் வைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் தனிப்பட்ட முறையில் செய்யும் குற்றச்செயல்களானது ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்திற்கோ, அல்லது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கோ சம்பந்தம் இல்லை என்பதே தனது அவதானிப்பெனவும் தெரிவித்தார்.

தினக்குரல்

லண்டனில் வற்fஓட் நகரில் நடந்த்க ஆற்பாட்டத்தினை காணொளியில்கான

சந்தர்பத்தை பயன்படுத்தி உடனடியாக களத்திலிறங்கிய எம்தமிழுறவுகளுக்கும் அங்கு எம் நிலையினை உணர்ந்து எம்மவர்களுடன் சேர்ந்து நிகழ்வின் உண்மைத்தன்மையை உலகறியச் செய்த அரசியல் பிரமுகர்களுக்கும் குறுகிய இடைவெளியில் நிகழ்ச்சியினை ஒழுங்குபடுத்திய ஒருங்கமைப்பாளர்களுக்கும் யாழ்களம் சார்பாகவும் கனடிய உறவுகள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

www.nitharsanam.com www.dailymotion.com/video/x1s 7te-watford.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் ஒரு பக்கம் பிரிட்டன் ஒரு பக்கம் என்று தமிழர்களே தமிழர்களுக்கு ஆப்பு வைக்க உதவிட்டு இருக்கிறாங்க..! செய்வதை எனித் திருந்திக்குங்க..! ஐரோப்பிய ஒன்றியத்தடை இறுக்கமாகும் வேளை இது என்றே தெரிகிறது..! புலிகள் இந்தத் தகாத காலத்தைக் கழிக்க ஓவ்வொரு புலம்பெயர்ந்த தமிழனும் தனக்குரிய பங்கை உணர வேண்டும். உணர்த்த வேண்டும்..! :(

UK warns of 'Tamil Tiger fraud'

The British government has warned of widespread fraud scams across the country, which it says could be funding terrorist acts in Sri Lanka.

Foreign office minister Kim Howells told MPs intelligence reports indicated that fraudulently obtained money might be making its way to Tamil rebels.

Mr Howells also ruled out lifting the ban on the Tamil Tigers.

Earlier on Wednesday, parliament formed an all-party group to examine how to resolve ethnic conflict in Sri Lanka.

The parliamentary group wants to arrange a summit in London with the Sri Lankan government, the Tamil Tigers and Norwegian peace mediators.

It emerged last month that thousands of UK motorists who use a bank card to buy petrol were thought to have lost millions of pounds in an international criminal operation.

The Tamil Tigers said allegations that they were involved were no more than an example of the "spin doctoring of the Sri Lankan government".

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6617035.stm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விடயத்தில் ஊடகங்களுடனும் அரசுடனும் நியாயம் கேட்பதை விடுத்து கடன் அட்டை மோசடி செய்யும் இளைஞர்கள், யுவதிகள் (இவர்களும் திறமையாக செயற்படுகின்றார்கள்) குடும்பங்களை நேரடியாக சந்தித்து அவர்களை அடக்கி வைப்பது சிறந்தது...

எனக்கு தெரிந்த ஒரு நபர் இந்த மாதிரியான விடயங்களில் கில்லாடி.. ஆனால் பேசும் போது உலகில் தன்னை விட்டால் சிறந்த மனிதன் இல்லை என்றது போல பேசுவார்.. அவர் மனைவி (?) அவருக்கு ஏற்ற நல்ல ஜோடி... அவர் தாயக மக்களுக்கும் மண் மீட்பு நிதிக்கும் என்று பணம் அனுப்புவது எனக்கு தெரியும். ஒரு வருடத்துக்கும் முன்னர் அவரது பெயர்,அவர் மனைவி பெயர் ஒரு நகரசபை பத்திரிகையில் வரும் போது தான் எனக்கு அவர் என்னவெல்லாம் செய்து பணம் சம்பாதித்து அதில் ஒரு சிறு பங்கை அனுப்புகின்றார் என்பது எனக்குப்புரிந்தது...

அவர் செய்யும் பாவத்தை கழுவுகின்றார் என நினைத்துக்கொண்டேன் அன்று...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.