Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈஸ்டர் நாளில் படிந்த இரத்தக்கறை…! இலங்கை இலக்கானதன் பின்னணி என்ன ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் நாளில் படிந்த இரத்தக்கறை…! இலங்கை இலக்கானதன்  பின்னணி என்ன ?

 

  அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புகள்  இன்று உலகமெங்கும் இயங்கி வருகின்றன. பலவேறு சந்தர்பங்களில் மதத்தின் பெயரால் அவை பல தீவிரவாத செயற்பாடுகளை . முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக மேற்குலக கலாசாரம் அதை அடிப்படையாகக்கொண்ட கிறிஸ்தவர்கள் செறிவாக வாழ்ந்து வரும் நாடுகளே இத்தனை நாட்களாக இவற்றின் இலக்காக இருந்து வந்தன.

ester.jpg

எனினும் சிறுதொகையான மக்கள் வாழ்ந்து வரும் அதே நேரம் மேற்குலக கலாசாரத்தை முழுமையாக உள்ளீர்க்காத கீழைத்தேய கலாசாரத்தில் ஊறிப்போன இலங்கை போன்ற சிறிய தீவுக்குள் இவ்வாறான அமைப்புகள் ஏன் தமது தீவிரவாத தாக்குதலை முன்னெடுக்க வேண்டும் என்ற கேள்வி சாதாரணமாக அனைவருக்கும் எழுவது இயல்பே.

அந்த வகையில் ஈஸ்டர் திருநாளில் கத்தோலிக்க ஆலயங்களையும் நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களின் உரிமையை கோரி நிற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்று அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பின் தற்போதைய நிலைப்பாடு பற்றிய புரிதல் அவசியமாகும். ஈராக் மீதான அமெரிக்காவின் போரின் போது உருவாக்கப்பட்ட இவ் அமைப்பு ஈராக் மற்றும் சிரியாவை உள்ளடக்கிய ஒரு இஸ்லாமிய பேரரசை உருவாக்கும் நோக்கத்துடன் உருவானது.

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்களின் பின்னர் அல்-கய்தா இயக்கத்தை உச்சரிக்காதோர் இல்லை எனலாம். அந்த அமைப்போடு கைகோர்த்து தனது இராஜ்னியத்தை விஸ்தரித்த அமைப்பே ஐ.எஸ். எனினும் சுமார் பத்து வருடகாலத்துக்குபின்னர் அல் கய்தா 2014 ஆம் ஆண்டு இவ்அமைப்புடனான தொடர்புகளை நிறுத்திக் கொண்டது. ஏனென்றால் அல் கய்தாவை விட அபாயகரமான ஓர் அமைப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ் விளங்கியமையே இதற்குக்காரணம்.

தாக்குதல்கள்

மிகக்கொடூரமான முறையில் தாக்குதல்களையும் கொலைகளையும் செய்து வரும் இவ் அமைப்பினரின் பிரதான இலக்கு இஸ்லாம் மதக்கொள்கைகளுக்கு எதிராக சகல விடயங்களையும் அழித்தலாகும். இதில் மதத் தலங்கள்,வரலாற்றுச் சின்னங்கள் ஏன் மக்களும் அடங்குகின்றனர். பணயக்கைதிகளாக மேற்கு நாட்டவர்களை பிடித்து வைத்து அவர்களை சிரச்சேதம் செய்தல் உள்ளிட்ட கொடூரமான காரியங்களை இவ் அமைப்பு செய்து வந்தது. இதன் காரணமாக ஒரு காலத்தில் மோசமான அடிப்படைவாத இயக்கங்களாக விளங்கிய  அல் கொய்தா, தலிபான் போன்றவற்றை விட ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பு உலகம் முழுதும் பேசப்பட்டது.  2017 ஆம் ஆண்டு இறுதி வரை இவ் அமைப்பு 29 நாடுகளில் 143 தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன் இதில் 2050 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

தோல்விகளால்  துவண்ட ஐ.எஸ்.ஐ.எஸ்

அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க விசேட படைகள்  அழித்ததும் உலக அளவில் தீவிரவாதத்துக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் கைகோர்க்கவும் அதன் ஒத்துழைப்பை பெறவும் பல நாடுகள் முடிவு செய்தன. ஈராக் ஆக்கிரமிப்புக்குப்பின்னர் அங்கும் சிரியாவிலும் தனது அரசை தாபிப்பதில் முன்னின்ற ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை அங்கிருந்து அகற்ற சிரியா அமெரிக்க படையினரின் உதவியை நாடியது. அதன் படி அமெரிக்க இராணுவத்தினருடன் சிரியாவின் ஜனநாயக படைகள் இணைந்து தொடர்ச்சியாக மேற்கொண்ட தாக்குதல்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பின்வாங்கத்தொடங்கியது. இவ்வருடம் பெப்ரவரி மாதமளவில் சிரியாவிலிருந்து முற்றிலுமாக இவ் அமைப்பினர் துரத்தியடிக்கப்பட்டனர்.  எனினும், நைஜீரியா, ஏமன், ஆப்கானிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளில் ஐஎஸ் அமைப்பு தனது இருப்பை தக்க வைத்திருக்கிறது என்பது முக்கிய விடயம். ஈராக் மற்றும் சிரியாவில் தனது இஸ்லாமிய அரசை தோற்றுவிப்பதில் தோல்வி கண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தனது அமைப்பு மீதான அச்சத்தை உலக நாடுகளில் தக்க வைக்க வேண்டும் என்ற திட்டத்தை கைவிட வில்லை. அதே வேளை ஈராக்,சிரியாவிலிருந்து இவ் அமைப்பை விரட்டி விட்டோம் என  அமெரிக்க சார்பு மேற்குலக நாடுகளும் இதை பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. இந்நிலையிலேயே ஐரோப்பிய நாடான பிரான்சில் 2015 ஆம் ஆண்டு இவ் அமைப்பு குண்டுத்தாக்குதல்களை நடத்தியது. அதன் பின்னர் ஐரோப்பா உட்பட பல நாடுகள் தமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தன.

சமூக ஊடகங்கள் வழியாக தொடர்புகள் விஸ்தரிப்பு

 இந்த சம்பவத்துக்குப்பின்னர் ஐ.எஸ்.தீவிரவாதிகாளால் சில நாடுகளுக்குள் இலகுவில் நெருங்க முடியவில்லையானாலும் எல்லா நாடுகளுக்குள்ளேயும் உள்ள இஸ்லாமிய மத அமைப்புகள் தனி மனிதர்களிடம் சமூ ஊடகங்கள் ஊடாக தொடர்பினை ஏற்படுத்தியது அமைப்பு. மதத்தின் பெயரில் இவர்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டது. இவர்களின் வார்த்தைகள் வீராவேச பேச்சுக்களால் பல இளைஞர்கள் தமது குடும்பங்களை தவிர்த்து தனிமைப்பட்டனர். இக்குழுக்களை தேடி பயணித்தனர். இதில் வேறு மதத்தவர்களும்  அடங்குகின்றனர் என்பது தான் ஆச்சரியம். பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி கற்கும் மாணவர்களே இவர்களின் இலக்கானது. இதன் மூலம் தமது செயற்பாடுகளை அமைப்பு விரிவுபடுத்தியது. அவ்வாறு சென்றவர்கள் எக்காரணம் கொண்டும் அவர்களிடமிருந்து தப்பித்து வர முடியாது என்ற காரணத்தினால் அவர்கள் கொடுக்கும் பணியை செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டனர். இலங்கையில் நடந்ததும் அது தான்.

நியூசிலாந்து தாக்குதல்

இதனிடையே உலகெங்கும் இஸ்லாத்தை அடிப்படையாகக்கொண்ட குழுக்களின் செயற்பாடுகளை பலரும் வெறுத்து வந்த அதே வேளை சிலர் இதற்கு தகுந்த பதிலடியை கொடுக்க வேண்டும் என காத்திருந்தனர். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூட தான் ஜனாதிபதியானவுடன் முஸ்லிம்கள் மீதான வெறுப்பை வௌிப்படுத்தியவர். எனது நாட்டில் வேறு இனத்தவர்கள் இருப்பதை நான் விரும்பவில்லை என அவர் வௌிப்படையாகவே கூறியிருந்தார். இந்நிலையிலேயே இவ்வருடம் மார்ச் மாதம் நியூசிலாந்தின் கிறைஸ்ட் சேர்ச் பகுதி மசூதி ஒன்றில் புகுந்த நபர் ஒருவர் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த 49 பேரை சுட்டுக்கொன்றார். இது பலருக்கு அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக இருந்தாலும் முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களின் அடாவடித்தனத்தை உலகெங்கும் வெறுத்து வந்தவர்களை நிமிர்ந்து உட்காரச்செய்தது. ஆனால் மறுபுரம் யாரோ செய்த செயல்களுக்கு அப்பாவி மக்களை பழிவாங்குவதா என்ற கேள்வியும் எழுந்தது.  இலங்கை மீதான தாக்குதல் நியூசிலாந்து தாக்குதலுக்கான பதிலடியே என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்திருந்தார். ஆனால் நியூசிலாந்து நாட்டில் இடம்பெற்ற சம்பவத்துக்கு ஏன் இலங்கையில் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கேள்வியும் நியாயமானது அதே வேளை ஆராய்ச்சிக்குரியது.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்  இல்லாத பத்து வருடங்கள்

2009 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் கடந்த பத்து வருடங்களாக இலங்கை நாட்டின் மக்கள் அச்சம் இல்லாத சுதந்திர காற்றை சுவாசித்து வந்தனர். 30 வருடங்களாக உள்நாட்டுத் தாக்குதல்களுக்கும் சம்பவங்களுக்கும் முகங்கொடுத்து வந்த இலங்கை மக்களுக்கு தீவிற்கு வௌியே இருந்து எவரும் தாக்குவார்கள் என்பதை கனவில் கூட நினைத்திருக்க மாட்டர். இதையே அரசாங்கமும் எண்ணியது. உலகின் மிக அபாயகரமான இயக்கமாக கருதப்பட்ட விடுதலை புலிகளைளே அழித்து விட்ட இறுமாப்பில் மாற்று எதிரிகள் பற்றிய சிந்தனையில்லாமலேயே இலங்கை கடந்த பத்து ஆண்டுகளாக பயணித்தது. புலிகளை எவ்வாறு தோற்கடித்தோம் என்பது குறித்து உலக நாடுகளுக்கு பாடம் நடத்தும் அளவுக்கு பல பாதுகாப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. ஆனால் எத்தனையோ ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள ஒரு அமைப்பு   தனது நாட்டிற்குள் ஊடுறுவி பலரையும் மூளைச்சலவை செய்து வந்ததை அது அவதானிக்கவில்லை.  இதை வேறு பல மத அமைப்புகள் சுட்டிக்காட்டியும் அது குறித்து தீவிரமாக சிந்திக்கவில்லை அரசாங்கம்.

இலங்கை இலக்கு

இந்நிலையில்  சகல விதத்திலும் ஒரு குழுவை தயார்ப்படுத்திய ஐ.எஸ்.அமைப்பு தருணம் பார்த்து காத்திருந்தது. இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களை அவ் அமைப்பு உன்னிப்பாக அவதானித்து வந்தது. இதில் திகன சம்பவம் பிரதானமானது. இதனிடையே கடந்த வருட இறுதியில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புகள் இவ் அமைப்புக்கு சாதகமான சில விடயங்களை செயற்படுத்துவதில் உதவின. அந்த மூன்று மாதங்களும் இலங்கை அரசாங்கத்தின் உயர்பீடங்கள் தேசிய பாதுகாப்பில் காட்டிய அக்கறையைத் தவிர ஆட்சியை எவ்வாறு தக்க வைப்பது என்றே யோசித்தன. அந்த காலகட்டத்திலேயே இவ் அமைப்பு திட்டங்களை வகுத்திருக்கக்கூடும். இவ்வருடத்தில் எப்போதாவது ஒரு நாளில் தாக்குதல்களை முன்னெடுக்க அமைப்பு திட்டமிட்டிருக்கலாம். அதற்கு  தென்கிழக்காசியாவில் அது இலங்கையை தேர்ந்தெடுக்கக் காரணம் நாம் ஆரம்பத்தில் கூறியிருந்த ஏனைய நாடுகளின் பாதுகாப்பு அரண்களாகும். இந்தியாவில் லோக்சபா தேர்தல் காலத்தில் பாதுகாப்பு உச்சத்தில் இருக்கும். அதுவும் பாகிஸ்தானுடனான எல்லை பிரச்சினைக்குப்பிறகு இந்தியா தனது பாதுகாப்பை பல மடங்கு பலப்படுத்தியுள்ளது. ஆகவே அங்கு தனது உட்பிரவேசிப்பது இலகுவானதன்று. ஆகவே அதன் தெரிவு இலங்கையாக இருந்திருக்கலாம். ஏனெனில் இலங்கை இது வரை தீவுக்கு வௌியேயிருந்து இவ்வாறான தாக்குதல்களுக்கு முகங்கொடுத்ததில்லை. இனியும் அப்படி நடக்காது என்ற மனநிலையே அதற்குக்காரணம்.   இதனிடையே நியூசிலாந்து பள்ளித்தாக்குதலும் இடம்பெற அமைப்பானது கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவ மக்களை இலக்கு வைத்துத் தாக்க முடிவெடுத்திருக்கலாம். ஆகவே இதில் இலங்கை இவ் அமைப்பின் தாக்குதல் நாடானது.

கிறிஸ்தவர்கள் மட்டுமா இலக்கு?  

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கையே இஸ்லாம் மதம் அல்லாதவர்களை அழிப்பது அல்லது அவர்களை இஸ்லாம் மதத்துக்கு மாற்றுவதாகும். ஈராக்கை கைப்பற்றுவதற்கு அது மேற்கொண்ட தாக்குதலின் போது ஈராக்கில் கிறிஸ்தவர்கள் வாழ வேண்டுமானால் ஓன்று இஸ்லாம் மதத்தை தழுவ வேண்டும் அல்லது எமக்கு வரியை செலுத்த வேண்டும் இரண்டும் இல்லாவிடின் எமது வாளுக்கு இரையாக வேண்டி வரும் என கடுமையாக எச்சரித்திருந்தது. ஆகவே இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களை வைத்து நாம் ஐ.எஸ் அமைப்புக்கு கிறிஸ்தவர்களும் தேவாலயங்களும் மட்டுமே இலக்கு என்று நினைத்துவிடக்கூடாது.

மட்டுமன்றி உள்நாட்டு போரில் இலங்கை அரசாங்கம் ,இராணுவம்,புலனாய்வு துறை, பொலிஸார் ஆகியோர் கையாண்ட யுக்திகள் இந்த விடயத்தில் பொருந்தாது. புவியியல் ரீதியாக ஒரே இடத்தில் யுத்தத்துக்கு முகங்கொடுத்த சந்தர்ப்பம் அது. ஆனால் புதிய தலைவலி அப்படியில்லை. எந்த திசையிலிருந்து எப்போது ஆபத்துக்கள் வரும் என்பதை அனுமானிக்க முடியாதுள்ளது. இதன் காரணமாகவே இண்டர்போலின் உதவியும் நாடப்பட்டுள்ளது.  மட்டுமன்றி தாக்குதல் சம்பவங்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் கிடைத்த புலனாய்வு தகவல்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இது அரசாங்கத்தின் பிளவு பட்டு நிற்பதை  காட்டுகிறது. ஸ்திரமான அரசியல் நிலைமையே இனி இவ்வாறான தாக்குல்களை தவிர்க்க உதவும்.

எது எவ்வாறாயினும் எமது நாட்டில் இரத்த கறை படிந்த வரலாறுகள் பல உள்ளன. அதில் 2019 ஈஸ்டர் திருநாளும் அமைந்து விட்டது. இதற்கு முற்றிலுமாக வெளிச்சக்திகள் காரணம் என்று புறந்தள்ளி விட முடியாது .உள்ளூர் சக்திகளே அதற்கு துணை போயுள்ளன என்பதை இங்கு மறுக்க முடியாதுள்ளது. ஆகவே உள்ளூரிலில் உருவாகியிருக்கும் தீய சக்திகளை இனங்கண்டு  வேரோடு பிடிங்கி எறியும் சவாலுக்கு இலங்கைக்கு முகங்கொடுத்துள்ளது என்பதே உண்மை.  

http://www.virakesari.lk/article/54856

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.