Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தண்ணீர்

Featured Replies

  • தொடங்கியவர்

நகரத்துக்குள் இந்த காடு இருக்கும் இடம் மட்டும் கொட்டுகிறது மழை!

எப்படி சாத்தியம்?

 

  • Replies 59
  • Views 12.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எப்படி அதிகப்படுத்தலாம்? 

நெருக்கடியான நகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எவ்வாறு அதிகரிப்பது? மழைநீர் சேமிப்புத்தொட்டி அமைப்பதன் மூலம் சாத்தியமென்றால், இட வசதி இல்லாத ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளில் இது எப்படி சாத்தியமாகும்? - த. விக்னேஷ் நம் #DoubtOfCommon man பகுதியில் எழுப்பிய கேள்வி.

தண்ணீர் அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையான தேவை. ஆனால் உலகில் கிடைக்கும் நன்னீரில் வெறும் 4 சதவிகிதத்தை மட்டுமே நம்மால் உபயோகிக்க முடியும். பூமியிலிருந்தும் கடலிலிருந்தும் நீரானது ஆவியாகி, கரு மேகங்களாக மாறி மழையாகப் பொழியும். இந்த இயற்கை நிகழ்வு ஒவ்வொருவருக்கும் போதுமான மழை நீரைக் கொடுக்கிறது. அவற்றைச் சேகரிக்க ஆறுகள், அணைகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் எனப் பல அமைப்புகள் இருக்கின்றன. ஆனாலும் நீர்த் தட்டுப்பாடு எப்படி உருவாகிறது? நிலத்தடி நீர்மட்டம் எப்படிக் குறைந்துபோனது?

 

மழைக் காலங்களில் இந்தியாவில் அதிக அளவு மழை பெய்யும், ஆனால் சேமிப்பு வரம்புகள் காரணமாக இந்த நீரில் 36%க்கும் குறைவான நீரே சேமித்து பயன்படுத்தப்படுகிறது. சேமிப்பு வசதிகள் இல்லாததால் 65 சதவிகிதம் மழை நீர் கடலில் கலக்கிறது. இந்திய நீர்ப் பாசன நீர் வள மேம்பாட்டு ஆணையத்தின் கூற்றுப்படி, நாம் எதிர்கொள்ளும் நீர்ப் பற்றாக்குறை பிரச்னையானது, நீரின் பற்றாக்குறையால் ஏற்படுவது அல்ல,அதற்கு மழை நீரை வீணாக்குவது மற்றும் சேமிக்காததே காரணம் என்று அறிவித்துள்ளனர். தண்ணீரை அதிகளவு வீணாக்குவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

மரபுவழியாக மழைநீர் சேமிக்க பல வழிகள் கையாளப்பட்டன. பெய்யும் மழை நீரை வீட்டிலேயே சேமிக்க வீட்டின் நடுப்பகுதியில் முற்றம் அமைத்துள்ளனர். கூரைக்கு நாட்டு ஓடுகள்தாம் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோயில்களில் குளங்களைக் கொண்டு மழைநீரைச் சேமித்தனர். அணைகளைக் கட்டினர். காலப்போக்கில் நகரமயமாக்கல், மக்கள் தொகைப் பெருக்கம், காடுகள் ஆக்கிரமிப்பு, அதிகரிக்கும் மாசுபாடு எனப் பல காரணங்களால் மழைநீர் சேமிப்பு குறைந்து போனது.

குழாயிலிருந்து 3 அடி தூரத்தில் சுமார் 3 அடி விட்டம் உள்ள நான்கு அடி ஆழமுள்ள ஒரு குழி தோண்ட வேண்டும். அதில் கூழாங்கற்களையும், ஆற்று மணலையும் அடுக்குகளாக இட்டு அந்தக் குழிக்குள் வீட்டு மாடியிலிருந்தோ அல்லது கூரையிலிருந்தோ வரும் மழைநீரைக் குழாய்கள் மூலம் இந்தக் குறிப்பிட தொட்டிக்குள் விட வேண்டும். இதன் மூலம் அவ்வப்போது பெய்யும் மழைநீரை வீணாக்காமல் சேகரிக்க இயலும். நிலத்தடி நீர் வற்றாமல் இருக்க இம்முறை உதவுகிறது.

 

இரண்டாவது முறையானது, கொள்கலனில் சேமித்தல். இந்த முறை அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு உகந்தது. நிலத்திற்கு அடியில் பெரிய தொட்டி அமைத்து அனைத்து வீடுகளிலும் குழாய்கள் மூலம் மழை நீரை ஒருமுகப்படுத்தி வடிகட்டிச் சேகரிக்கலாம். நில மட்டத்திற்கு மேல் தொட்டியில் சேமிக்கலாம். ஏற்கெனவே உள்ள கிணறுகளைத் தூர்வாரி, அதில் வடிகட்டும் அடுக்கு அமைத்து மழை நீரை வடித்து கிணறுகளிலும் சேமிக்கலாம்.

போர்வெல்லிலும் சேமிக்கலாம். போர்வெல் இல்லையென்றால் அந்த இடத்தினுடைய மண்ணின் தன்மையைப் பொறுத்து 10- 20 அடி ஆழம் வரை குழி தோண்டுவதன் மூலம் நீரை நிலத்திற்கு அனுப்பலாம்.

நகர்ப்புறங்களில் அதிக அளவில் கட்டடங்கள் கட்டப்படுவதாலும், பெய்யும் மழைநீர் நிலத்திற்குக் கீழ் இறங்க போதிய நிலப்பரப்பு இல்லாததாலும் மழைநீரைச் சேமிக்க இயலாமல் வீணாகிறது. அப்படியென்றால் ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளில், இடவசதி இல்லாத பல கட்டடங்களில் மழைநீரை எப்படிச் சேமிப்பது?

கட்டப்பட்ட வீடுகளிலோ அல்லது கட்டடங்களிலோ மழைநீரைச் சேமிக்க ஒவ்வொரு வீட்டின் மேற்பரப்பில் குழாய்களை ஒருங்கிணைத்து சேமிப்புத் தொட்டி அல்லது கிணறுகள் மூலம் நிலத்தடி நீரைச் சேமிக்கலாம். இதை வடிவமைக்க ஆறு முக்கியமான அமைப்பு அடிப்படை தேவையாகிறது.

 

1. கொட்டு பரப்பு அல்லது பெய்யும் பரப்பு : பெய்யும் மழைநீரைச் சேமிக்கும், வீடு அல்லது கட்டடத்தின் மேற்பரப்பு.

2. கொண்டு போகும் அமைப்பு: மேற்பரப்பில் பெய்யும் மழையை ஒருங்கிணைக்கப் பயன்படுத்தப்படும் குழாய்கள்.

3. கூரைகளைச் சுத்தம் செய்தல்: அசுத்தங்களை நீக்கி வேறு இடத்துக்கு அந்த நீரை எடுத்துச் செல்லும் சேமிப்புக் குழாய்கள்.

4. சேமிப்பு:கிருமிகள் அண்டாத வகையில் பாதுகாப்பாக தொட்டியில் சேமிக்கவேண்டும்.

5. சுத்திகரித்தல்: அறுவடை செய்த நீரை வடிகட்டி சுத்தம் செய்யும் அமைப்பு.

6. பகிர்தல் : சேகரித்த மழை நீரை உபயோகிக்கச் செய்ய ஒரு சிறிய மோட்டார் அல்லது தொட்டி தேவைப்படும்.

இந்தத் தண்ணீர் நிலத்தடிக்கோ அல்லது நிலத்தின் மேலுள்ள டேங்குகளுக்கோ அனுப்பப்படுகின்றன. டேங்குகளில் மழைநீர் சேமிக்கப்பட்டால் காற்று, சூரிய ஒளி, கழிவுப் பொருள்கள் உட்புகாத படி டேங்குகள் அடைத்து வைக்கப்பட வேண்டும். படிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நீரைத் தெளிவடையச் செய்யலாம். ப்ளீச்சிங் பவுடர் பாக்டீரியாக்களைக் கொல்லுகிறது. இந்தத் தண்ணீரை தோட்டத்திற்கும் கழிவறைக்கும் துணி துவைப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். சேமித்த பிறகும் தண்ணீர் அதிகமாக இருந்தால் கிணறுகளிலும் சேமிக்கலாம்.

குழாய்கள், மழைநீர் வடிகட்டியை அமைக்க சிறிது பணம் செலவிட வேண்டும். சேமிப்புத் தொட்டி அமைக்க இயலாத நிலையில் கிணறுகள் சிறந்த தீர்வாக இருக்கும். குழாய்களை ஒருங்கிணைத்து, நீரை வடிகட்டி கிணற்றில் விடலாம்.

மழை நீர் சேமிப்பு என்பது அனைத்து நிலப்பரப்புக்கும் தேவையான ஒன்று. மழைநீர் சேமிப்பு எந்தப் பகுதிகளுக்கு மிகவும் ஏற்றது என்ற கேள்வி எழலாம். நிலத்தடி நீர்வளம் குறைவாக இருக்கும் பகுதிகளுக்கும், அசுத்தமான நிலத்தடி நீர் இருக்கும் பகுதிகளுக்கும், மழை நீர் நில்லாமல் ஓடக்கூடிய பகுதிகளுக்கும், மக்கள் தொகை அதிகமாக இருக்கும் பகுதிகளுக்கும், மின்சாரம் மற்றும் நல்ல தண்ணீரின் விலை அதிகமாகக் காணப்படும் பகுதிகளுக்கும் மழை நீர் தேவைப்படுகிறது. இந்த இடங்களில் எல்லாம் மழை நீர் சேகரிப்பு மிக முக்கியமான ஒன்று.

1. மழைநீர் சேகரிக்கும் இடம் சுத்தமாக இருப்பது நல்லது.

2. மழைநீர் சேகரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் பொருள்கள் அனைத்தும் சுத்தப்படுத்திய பிறகே உபயோகப்படுத்த வேண்டும்.

3. முதலில் கிடைக்கும் மழை நீரைச் சேகரிக்காமல் சற்று நேரம் வெளியேற்றிவிட்டு சுத்தமான நீர் கிடைக்கும் போது மட்டுமே பாத்திரங்களில் சேமிக்க வேண்டும்.

4. மழை நீரைச் சேகரிக்க பயன்படும் பொருள்கள் அவ்வப்போது சுத்தமாக்கப்படுவதுடன் மூடி வைக்கவும் வேண்டும்.

5. சேமிக்கப்படும் மழைநீரில் பாசிப்படிதல் மற்றும் பூச்சிகள் சேர்தலைத் தவிர்க்க வேண்டும்.

6. சமையல் அறை மற்றும் குளியல் அறையிலிருந்து வரும் கழிவு நீர் அல்லாத தண்ணீரைச் செடிகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீரை அதிகரிக்கலாம்.

7. வற்றிவிட்ட கிணறுகளைத் தூர்வாரி விட்ட பிறகு மழைநீரைச் சேமிக்கப் பயன்படுத்தலாம்.

8. மரங்களை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். புதிதாக மரங்களை நட வேண்டும்.

அன்றாட தேவையை மட்டும் கருத்தில் கொள்ளும் மக்கள் அடுத்த தலைமுறைக்கான தேவையை மறந்து விடுகிறார்கள். இன்று வீணாக்கப்படும் நீர் அடுத்த தலைமுறையின் உயிர் காக்கும் நீராகக் கூட இருக்கலாம்.

https://www.vikatan.com/news/environment/how-to-increase-groundwater-level-in-cities

  • தொடங்கியவர்

விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்!

 

 

  • தொடங்கியவர்

இரண்டாம் தலைமுறைஅமெரிக்காவில் இருந்து  ஊருக்கு வந்து தூர் வாருவது என்பது பெருமைப்பட வேண்டிய, மாற்றையவர்களுக்கும் கூற வேண்டிய நிகழ்வு  !

 

 

  • 1 month later...
  • தொடங்கியவர்

உங்கள் ஊர் நீர்நிலைகளை நீங்களே தூர்வாரலாம்..! என்னென்ன நடைமுறைகள்?

தூர்வாரப்பட வேண்டிய அல்லது சரிசெய்யப்பட வேண்டிய நீர்நிலைகள் குறித்த விவரங்களோடு அந்தப் பகுதி மக்கள் விண்ணப்பம் அளித்தால், அந்த நீர்நிலை குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் தூர்வாரித் தரப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரியைத் தூர்வாரும் பொதுமக்கள்

முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழகம் இந்த ஆண்டு கடும் தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சந்தித்திருக்கிறது. அதற்கான முக்கியக் காரணம், நம்மைச் சுற்றியிருக்கும் நீர்நிலைகளை முறையாகப் தூர்வாரிப் பராமரிக்காமல் இருந்ததும், பல நீர்நிலைகள்மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளும்தான். பருவநிலை மாற்றங்களால் பல நேரங்களிலும் மழை பெய்வதில்லை.

அபூர்வமாக மழை பெய்யும் தருணங்களிலும். மழைநீர் முறையாகச் சேமிக்கப்படாமல், வீணாகக் கழிவுநீர்களுடனும் கடல்நீருடனும்தான் கலந்துகொண்டிருக்கிறது. பெய்யும் மழைநீரைச் சேமிப்பதும். அதோடு, நம்மைச் சுற்றியிருக்கும் நீர்நிலைகளை முறையாகத் தூர்வாரிப் பராமரிப்பதுமே இதற்கு ஒற்றைத் தீர்வு.

யாரெல்லாம் நீர்நிலைகளைச் சரிசெய்ய முடியும்..?

`மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்ற பிறகே, நீர்நிலைகளைச் சரிசெய்ய இயலும் என்ற கட்டாய விதிகள் முன்னர் நடைமுறையிலிருந்தன. இந்த வருடம் ஜூன் மாதம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பொதுப்பணித்துறை திட்டச் செயலாக்க ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர், `தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், அந்தந்தப் பகுதிகளிலிருக்கும் ஏரிகள், குளங்களைத் தூர் வாரத் தாமாக முன்வந்தால் அனுமதி வழங்க அரசு தயாராக உள்ளது; அந்தந்தப் பகுதிகளிலிருக்கும் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்களிடம் அனுமதி பெற்று, அந்தப் பணிகளை மேற்கொள்ளலாம்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

 

யாரிடம் அனுமதி வாங்குவது..?

தடுப்பணைகள் கட்டுதல், ஏரிகள், குளங்களைத் தூர்வாருதல் போன்ற பணிகள், குடிமராமத்து திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. 2017 - 18-ம் ஆண்டு 1,511 ஏரிகளில் நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனையில் சுமார் 1,311 ஏரிகள் தூர்வாரப்பட்டிருப்பதாகவும் 2018 - 19-ம் ஆண்டில் 31 மாவட்டங்களில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் 1,829 பணிகளுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டு உலக வங்கி நிதியுதவியுடன், 22 மாவட்டங்களில் 1,325 ஏரிகள் மற்றும் 107 அணைக்கட்டுகளைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் அரசுத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மீதமுள்ள ஏரிகளையும் தூர்வார, அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதோடு, `தனியார் நிறுவனங்கள் அந்தந்தப் பகுதிகளிலிருக்கும் ஏரிகள், குளங்களைத் தூர் வார முன்வந்தால், அனுமதி வழங்க வேண்டும்’ என்று தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

 

இதன்படி, அந்தந்தப் பகுதி மக்கள் தூர்வாரப்பட வேண்டிய அல்லது சரிசெய்யப்பட வேண்டிய நீர்நிலைகள் குறித்த விவரங்களோடு விண்ணப்பம் அளித்தால், அந்த நீர்நிலை குடி மராமத்துத் திட்டத்தின் கீழ் தூர்வாரித் தரப்படும்.

அல்லது தாங்களாகவே நீர்நிலைகளைச் சரிசெய்யத் தயாராக இருந்தால். தூர்வாரப்போகும் நீர்நிலை பற்றிய விவரங்களோடு. அந்தப் பகுதி பொதுப்பணித்துறை அல்லது கிராம அதிகாரியிடம் மனு அளித்தால், அவர் அந்த நீர்நிலைகளில் ஆய்வு மேற்கொண்டு சில நிபந்தனைகளோடு ஒப்புதல் அளிப்பார்.

அதேபோல் வண்டல்மண் தேவைப்படுபவர்கள், வட்டாட்சியரிடம் அனுமதி பெற்ற பின்னர், அரசு நிர்ணயித்த அளவான நஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயியாக இருந்தால், ஏக்கருக்கு 25 டிராக்டர்களும், புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயியாக இருந்தால், ஏக்கருக்கு 30 டிராக்டர் என்ற அளவிலும் மண் அள்ளிக்கொள்ள அனுமதி அளிக்கப்படும். மண்பாண்டம் செய்பவர்களாக இருந்தால் 10 முதல் 20 டிராக்டர் அளவுக்கு மண் அள்ளிக்கொள்ளலாம்.

 

 

நடைமுறையில் என்ன நடக்கிறது..?

கடந்த இரண்டு வருடங்களாக, கோவையைச் சுற்றியிருக்கும் பல்வேறு நீர்நிலைகளைச் சீரமைத்துவரும், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரிடம் இது குறித்துப் பேசினோம். ``தூர்வார வேண்டிய அல்லது சீரமைக்க வேண்டிய நீர்நிலைகளைத் தேர்வுசெய்த பின்னர், அந்த நீர்நிலைகளின் நீர் உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் வழித்தடம், நீர்நிலைகளின் விவரங்களைச் சேகரித்து, அந்த நீர்நிலை உள்ள பகுதியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிப்போம். அவர்கள் மனு விவரங்களைப் பார்த்துவிட்டு, விண்ணப்பம் ஒன்றைக் கொடுப்பார்கள்.

அந்த விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கொடுத்த பின்னர், விவரங்களைச் சரிபார்த்து, எவ்வளவு மண் அள்ள வேண்டும்... கரையை எவ்வளவு பலப்படுத்த வேண்டும்... நீர் வழித்தடம் மற்றும் கரைகள் எதையும் சேதப்படுத்தக் கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகளோடு அனுமதியளிப்பார்கள். நீர் வரும் அல்லது செல்லும் நீர்வழித் தடங்களைக் கண்டறிய உதவியும் செய்வார்கள். அரசு அதிகாரிகளிடமிருந்து இதுவரை எங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும், பல ஆலோசனைகளும் கிடைத்துள்ளன. எவ்வித இடையூறும் இதுவரை எங்களுக்கு வந்ததில்லை’’ என்று சொன்னார்கள்.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்

 

https://www.vikatan.com/government-and-politics/environment/what-is-the-process-to-clean-public-water-bodies

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

காஞ்சிபுரத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்க புதிய முயற்சி: பிளாஸ்டிக் தொட்டிகள் மூலம் மழைநீர் சேகரிப்பு அமைப்பு

Dkn_Tamil_News_2019_Oct_23__874859035015107.jpg

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தவிக்க புதிய முயற்சியாக பிளாஸ்டிக் தொட்டிகள் மூலம் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழிற்சாலைகள், மக்கள்தொகைப் பெருக்கம், பருவநிலை மாற்றம், மக்களிடையே தண்ணீர் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சென்னைக்குத் தண்ணீர் வழங்கும் நீராதாரங்களான 4 ஏரிகளும் வறண்டுவிட்டன. இந்நிலையில் மழைநீரைச் சேகரிப்பதே உடனடித் தீர்வாக இருக்க முடியும். இத்தகைய எண்ணத்துடன் காஞ்சிபுரம் அடுத்துள்ள கருங்குழி பேரூராட்சியில் பிளாஸ்டிக் தொட்டி மூலம் மழைநீர் சேகரிக்கும் அமைப்பை பேரூராட்சி நிர்வாகம் நிறுவி உள்ளது.

கருங்குழி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடும் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் கிணற்றில் தண்ணீர் வற்றியது. குடிநீருக்காக மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனால் இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி குறித்து விழுப்புணர்வை பேரூராட்சி நிர்வாகம் ஏற்படுத்தியது. இந்த திட்டத்தில் பிளாஸ்டிக் ட்ரம்மை 5 அடிக்குக் குழி தோண்டி புதைக்கப்பட்டு அதனை சுற்றிலும் அடியிலும்  துளைகள் இடப்படும். அதேபோல 1.5 அங்குலத்துக்கு ஜல்லியும் நிரப்பப்படும். இதனால் மழைநீரானது வீணாக கடலில் கலக்காமல் பாதுகாக்கப்படுகிறது.

தற்போது 80 விழுக்காடு குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்காக அரசு கட்டடங்கள் மற்றும் வழிபாட்டு தளங்கள் என மொத்தம் 100 இடங்களில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க முடிவு செய்தனர். இதனால் அடுத்த ஆண்டு இந்த பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தெரிவித்துள்ளார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=536678

  • தொடங்கியவர்

ஆழ்துளைக் கிணற்றை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றுவது எளிது! வழிகாட்டும் விவசாயி

திருவையாறு அருகே உள்ள அம்மையாகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம் விவசாயி தினேஷ். இவர் தன்னுடைய வயலில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றை ஆறு மாதத்துக்கு முன்னரே மழை நீரைச் சேகரிக்கும் வகையில் மாற்றியமைத்து அசத்தியிருக்கிறார்.

ஆழ்துளைக் கிணறுகள்

மழைநீர் சேகரிப்பு அமைப்பு

 

காவிரியில் பல ஆண்டுகளாக முறையாகத் தண்ணீர் வரவில்லை. இதனால் ஆறு மட்டுமல்ல வயலும் வறண்டு கிடந்தது. இதையடுத்து என்னுடைய வயலில் 110 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்தேன். என்னுடைய போதாத நேரம் அதில் தண்ணீர் வரவில்லை. அத்துடன் அதற்குச் செய்த செலவும் வீணாகிப்போனது. பின்னர், மீண்டும் வேற இடத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்தேன். அதில் தண்ணீர் வந்தது. தொடர்ந்து நெல் சாகுபடியும் செய்து வருகிறேன்.

இந்த நிலையில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவது என்னை யோசிக்க வைத்தது. உடனே மழை நீரைச் சேமிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அத்துடன் மழைக் காலங்களில் வயலில் வீணாகத் தேங்கி நிற்கும் மழை நீரையும் சேமிக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

பாதுகாப்பாக மூடி வைத்திருந்தாலும் பலரும் தண்ணீர் வராத ஆழ்துளைக் கிணற்றை நிரந்தரமாக மூடச் சொன்னார்கள். அதை மூடுவதற்கும் பெரும் தொகை செலவாகும் என்பதும் என்னை யோசிக்க வைத்தது. அப்போதுதான் செயல்படாத ஆழ்துளைக் கிணற்றை மழை நீர் சேகரிக்கும் தொட்டியாக மாற்றும் எண்ணம் வந்தது. இதையடுத்து போர்வெல் குழாயைச் சுற்றி வயலுக்கு மேல் குழாய் தெரியும் அளவில் 10 அடி அகலத்திலும் ஆழத்திலும் குழி எடுத்தேன். பின்னர், 10 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் குழாயையொட்டிக் கான்கிரீட் உறைகள் இறக்கினேன். பின்னர், உறைக்குள் 5 அடி ஆழத்திற்குக் கல், கரிக்கட்டை, ஜல்லி போன்றவற்றைக் கொண்டு நிரப்பினேன். மேலும், நிலத்திலிருந்து ஆழ்துளைக் குழாயில் தண்ணீர் செல்லும் வகையில் குழாயில் ஓட்டைகள் அமைத்தேன்.

அத்துடன் வேறு எதுவும் உள்ளே செல்லாத வகையில் நைலான் வலையைக் கொண்டு குழாயைச் சுற்றிக் கட்டிவிட்டேன். இதன் மூலம் தண்ணீர் குழாய் வழியாக நிலத்துக்குள் செல்லும்போது வடிகட்டப்பட்டு சுத்தமான நீராகவும் செல்லும். அத்துடன் அந்த இடத்தைச் சுற்றி மழை பெய்யும்போது மழை நீர் வயலுக்குச் செல்லும் வகையிலும், நிலத்தடியிலிருந்து மழை நீர் ஆழ்துளைக் குழாய் பகுதிக்கு வரும் தண்ணீர் உள்ளே செல்லும் வகையிலும் இடைவெளி விட்டுச் சிமென்ட் சுவர் அமைத்துவிட்டேன். இதற்கு மொத்த செலவே ரூபாய் 50,000 தான் ஆனது. ஆரம்பத்தில் என்னைத் தேவையில்லாத வேலை செய்கிறானெனப் பேசியவர்கள் கூடப் பணி முடிந்து மழை நீர் உள்ளே செல்வதைப் பார்த்துப் பாராட்டத் தொடங்கினர்.

இன்றைக்கு மழை பெய்யும்போது ஆழ்துளைக் குழாய் வழியாக மழை நீர் உள்ளே செல்வதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. பயன்பாட்டில் உள்ள ஆழ்துளைக் கிணற்றிலும் இதுபோல் ரீச்சார்ஜ் முறையைப் பயன்படுத்தி மழை நீரைச் சேமிக்கலாம். தண்ணீர் பிரச்னையின் அவசியத்தை உணர்ந்ததால் நான் இதைச் செய்தேன். இதை அறிந்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரடியாக வந்து பார்த்துவிட்டுப் பாராட்டிவிட்டுச் சென்றனர். கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நீர் தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து நான் பேசினேன். கலெக்டர் எழுந்து வந்து என்னை விவசாய விஞ்ஞானி எனப் பாராட்டினர்.

சாதாரண விவசாயி பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றை மழை நீர்த் தொட்டியாக மாற்ற ரூ 50,000 செலவு செய்ய முடியாத நிலையில் அவர்களின் பொருளாதாரம் உள்ளது. எங்க பகுதியில் இதுபோல் பயன்பாட்டில் இல்லாமல் பல ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. அரசு மானியம் வழங்கினால் இவற்றை மழை நீர் சேகரிப்புக் குழாயாக மாற்றலாம் என்று கோரிக்கை வைத்தேன். இதை எப்படிச் செயல்படுத்துவது என்பதைச் செயல் விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யூடியூபில் பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

மழைநீர் சேமிப்பு அமைப்பு

மண்ணை நாம் காத்தால் மண் மனிதனைக் காக்கும் என நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். அந்த வகையில், செயல்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை இது போன்று மாற்றியமைத்தால் மழை நீர் நேரடியாக நிலத்துக்குள் இறங்கி நிலத்தடி நீர் மட்டம் உயரும். குழந்தை அதற்குள் விழுந்து உயிரிழக்கும் நெஞ்சை ரணமாக்கும் சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க முடியும்.

இப்போது அரசு செயல்படாத ஆழ்துளைக் கிணற்றை, மழை நீரைச் சேமிக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் எனக் கூறியிருப்பது வரவேற்கத் தக்கத்து. பலர் ஆழ்துளைக் கிணற்றை மூட வேண்டும் எனக் கூறுகின்றனர். அப்படிச் செய்தால் எதற்கும் உபயோகம் இல்லாமல் போய்விடும். இதை நாம் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு மண்ணையும் மழலையின் உயிரையும் காக்கின்ற வகையில் இது போன்ற முறையைப் பின்பற்ற வேண்டும் என்றார்.

https://www.vikatan.com/news/environment/a-farmers-idea-to-use-borewells-for-rain-water-harvesting

  • தொடங்கியவர்

30 வருடங்களில் உலகில் நதிகளே இருக்காது!

நாம் பணத்தை விட அதிக அளவில் செலவு செய்வது தண்ணீரைத்தான். பொதுவாக சென்னை போன்ற மாநகரங்களில் ஒவ்வொரு வீட்டிலும் போர் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றனர். தவிர, கட்டடங்கள் கட்டுவதற்கு, வணிக வளாகங்கள், திரையரங்குகள் என மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் எல்லாம் நிலத்தடி நீர்தான் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்கிறது.

இந்நிலையில் ‘‘இன்னும் முப்பது வருடங்களில் ஆயிரக்கணக்கான நதிகளும் ஓடைகளும் காணாமல் போய்விடும் அல்லது தங்களின் செயல்பாட்டை இழந்துவிடும்...’’ என்று எச்சரிக்கை செய்கிறது ‘நேச்சர்’ இதழில் வெளியான கட்டுரை ஒன்று. ‘‘உலகம் முழுவதும் அளவுக்கதிகமாக நிலத்தடி நீரை பம்ப் வைத்து உறிஞ்சுவதுதான் நதிகளின் அழிவுக்கு முக்கிய காரணம்...’’ என்று அந்தக் கட்டுரை தெளிவாக எடுத்துரைக்கிறது.

ஏனென்றால் நதிகளின் செயல்பாட்டில் முக்கியப்பங்கு வகிப்பதே நிலத்தடி நீர்தான். வறட்சியின்போது கூட நதி பாய்வதற்கு உந்துசக்தியாக நிலத்தடி நீர்தான் இருக்கிறது. சமீப காலங்களில் டிரில்லியன் லிட்டர் அளவுக்கு தண்ணீரை பூமியிலிருந்து மனிதன் எடுத்துவிட்டான்.

இன்னும் எடுத்துக்கொண்டே இருக்கிறான். இதே நிலை தொடர்ந்தால் 2050ல் பல நதிகள் வற்றிப்போய்விடும். அந்த நதிகள் வற்றிப்போவதால் நதியை ஒட்டியிருந்த காடுகள், கிராமங்கள், விலங்குகள், பறவைகள் எல்லாமே பாதிப்படையும்.

‘‘நிலத்தடி நீரை எடுப்பது டைம் பாமை செட் செய்வதைப் போன்றது. இப்போது அதன் பாதிப்பு எதுவும் நமக்குத் தெரியாது. ஆனால், பத்து வருடங்களில் அதன் பாதிப்பு மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கும். இப்போது வற்றிப்போன நிலையிலிருக்கும் நதிகளுக்குக் காரணம் அந்த நதி பாயும் சுற்றுவட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சியதுதான். நிலத்தடி நீரை எடுப்பது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் டைம் பாம்...’’ என்கிறார் நதிகளை ஆய்வு செய்யும் நிபுணர் டே கிராப்.                      

த.சக்திவேல்

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539134

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வறண்ட கிணற்றில் மழைநீர் சேமிப்பு.. விவசாயத்தில் அசத்தும் விவசாயி..!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விவசாயி ஒருவர் வறண்டு கிடந்த தனது விவசாய  கிணற்றில் மழைநீரை சேமித்து,  தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி உள்ளார்.

சங்கரன்கோவில் அருகே உள்ள கோமதிமுத்துபுரத்தைச்சேர்ந்தவர் குணசீலன். 70 வயது நிரம்பிய பிஎஸ்என்எல் முன்னாள் ஊழியரான இவர் இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட அலாதி பிரியத்தால் தோட்டம் அமைத்து விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்.

கடுமையான வறட்சியால் குளங்கள் நிறைவதே சவாலான நிலையில் இவரது தோட்டத்து கிணற்றில் 4 அடிக்கு மேல் தண்ணீர் வந்ததே கிடையாது. இந்நிலையில் குணசீலன் JCB எந்திரம் மூலம் ஊரணி அமைத்து, அதில் ஓடைகளை இனைத்து மழைகாலத்தில் ஓடும் தண்ணீரை சேமித்துள்ளார். பின்பு மோட்டார் மூலம் மழைநீர் சேமிப்பு தொட்டியில் நிரப்பி அங்கிருந்து கிணற்றுக்குள் பாய்ச்சியுள்ளார்.

இதன்மூலம் தனது 6 ஏக்கர் தோட்டத்தில் 100 சப்போட்டா மரம், 150 புளியமரம், தென்னை, பனை, வாழை, மக்காச்சோளம், பருத்தி, பாசி, கற்றாழை போன்றவற்றை விவசாயம் செய்து வருகிறார்.கிணற்றுக்குள் சேமிக்கும் மழை நீர் கோடைகாலத்திலும் விவசாயத்துக்கு கை கொடுப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்,குணசீலன்.

இவரைப்போல் வறண்ட பயனற்ற கிணறுகளில் மழை நீரை நிரப்பினால் தண்ணீர் பஞ்சம் என்ற நிலையே வராது என்று இயற்கை ஆர்வலர்கள் பாராட்டுகிறார்கள்.

https://www.polimernews.com/dnews/89717/வறண்ட-கிணற்றில்-மழைநீர்சேமிப்பு..-விவசாயத்தில்அசத்தும்-விவசாயி..!

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

சொந்த செலவில் வாய்க்கால் அமைத்து வீணாக சென்ற உபரி நீரை ஏரியில் நிரப்பும் விவசாயிகள்

Tamil_News_2019_Dec_05__125789821147919.jpg

காரிமங்கலம் :  காரிமங்கலம் அருகே விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் சுமார் 1 கி.மீ தொலைவுக்கு வாய்க்கால் அமைத்து, வீணாக சென்ற உபரி நீரை ஏரிக்கு கொண்டு வந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே சோமலிங்க ஐயர் ஏரி (பெரிய ஏரி) உள்ளது. இந்த பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. ஆனால், அருகாமையிலுள்ள கொண்டிசெட்டிபட்டி குறவன் ஏரிக்கு, தண்ணீர் வரும் வாய்க்கால் சேதமடைந்து இருப்பதால், தண்ணீர் வீணாகி கொண்டிருந்தது. இதையடுத்து, கொண்டிசெட்டிபட்டி, புதுக்குடியானூர், குட்டூர் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஒன்றுசேர்ந்து, பெரிய ஏரியில் இருந்து கொண்டிசெட்டிப்பட்டி ஏரிக்கு, சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு, தங்களது சொந்த செலவில் வாய்க்கால் வெட்டி, வீணாக செல்லும் தண்ணீரை நிரப்பி வருகின்றனர்.

சுமார் 16 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரியில், தண்ணீரை கொண்டு வருவதால் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதியும், நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அரசை எதிர்பார்க்காமல் விவசாயிகள் தாங்களே களத்தில் இறங்கி, வாய்க்கால் அமைத்து ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்த விவசாயிகளை இப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பெரிய ஏரியில் இருந்து உபரி நீரை, கொண்டிசெட்டிப்பட்டி ஏரிக்கு கொண்டு வர, வாய்க்கால் வசதி ஏற்படுத்த வேண்டும்  என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதிகாரிகள் நிதி இல்லை என கூறி விட்டனர். எனவே, இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் சுமார் ₹68 ஆயிரம் நிதி திரட்டி, பொக்லைன் மூலம் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வாய்க்கால் அமைத்து ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்தோம் ,’ என்றனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=546835

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.