Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரேசி மோகனின் மறைவும் சமூக வலைத்தளங்களின் அஞ்சலியும்

Featured Replies

”மற்ற மாநில மக்களைவிட தமிழ்ச்சமூகத்துக்கு இசையறிவு அதிகம். காரணம், ராஜாவும் ரகுமானும்” - நிவாஸ் கே பிரசன்னாவைப் பேட்டி எடுத்திருந்தபோது இப்படிச் சொன்னார். தமிழர்களுக்கு இசையறிவைவிட நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம். அதற்குச் சமீபத்திய உதாரணம் மீம்ஸ். வேறு எந்த மொழியிலும் இவ்வளவு கிரியேட்டிவாக மீம்ஸ் வருவதில்லை. இதற்குக் காரனமென என்.எஸ்.கேவில் தொடங்கி யோகி பாபு வரை பலருக்கும் கிரெடிட் தரலாம். முக்கியமாக, வடிவேலுவையும் கவுண்டமணியையும் சொல்வார்கள். ஆனால், இந்தப் பட்டியலில் தவறாமல், முக்கியமான இடத்தில் இடம்பிடிக்க வேண்டிய பெயர் கிரேஸி மோகன்.

நகைச்சுவை பல விதம். எந்த வசனமுமில்லாமல் வெடித்துச் சிரிக்க வைத்த சார்லி சாப்ளின், சூழலை வைத்து காமெடி செய்த விவேக், உடல்மொழியால் மட்டுமே நம்மைச் சிரிக்க வைத்த வடிவேலு, இரட்டை அர்த்தங்களின் ஒட்டுமொத்த காண்ட்ராக்டர் வெண்ணிற ஆடை மூர்த்தி, இன்னொருவரை அடித்தே நம்மைச் சாய்த்த கவுண்டர், ரியாக்‌ஷன்களிலே களை கட்டிய செந்தில்,  கவுண்ட்டர்களாலே கரியரை வடிவமைத்த சந்தானம் என உலகம் முதல் உள்ளூர் வரை பெரிய பட்டியலே உண்டு. இதில் கிரேஸி வித்தியாசமானவர். மொழியின் சாத்தியங்களை வைத்து கவிதை எழுதியவர்கள் உண்டு; அதில் காமெடி சரவெடியைக் கொளுத்தியது கிரேஸிதான். 

முன்னாடி பின்னாடி 

“இது என்ன இன்னொரு கீ.. டூப்ளிகேட் கீ யா?” 

எச்சகலைன்னா நாய்தானா? எச்சைக்கலை புலி, எச்சைக்கலை சிங்கம்,

தட் ஹவ் டு ஐ நோ சார்.

என கிரேஸியின் வசனங்களை 3 வார்த்தைகள் சொன்னால் போதும். அந்த ஜோக் முடியும் முன்னரே சிரிப்பு வந்துவிடும். கிரேஸியின் கவுண்ட்டர்கள் வெடி சிரிப்பையெல்லாம் வரவைக்காது. ஆனால் தொடர்ந்து ஜோக்குகளாக கொட்டும்போது கொஞ்சம் கொஞ்சமாக ஹைபிட்ச்சில் சிரித்துக்கொண்டிருப்போம். அதனால்தான் முதல் முறை பார்க்கும்போது பல ஜோக்குகளைத் தவறவிட்டு விடுகிறோம். ’சிவன் பபுள் எல்லாம் விட மாட்டார் சம்பந்தம்’ - ஒரு காட்சி போதும். 

காதலா காதலா படத்துக்கு விகடன் தந்த விமர்சனம் இன்றும் நினைவிலிருக்கிறது. இரண்டு பக்கம் முழுவதும் கிரேஸியின் ஜோக்குகளை மட்டும் போட்டு, இரண்டு பாக்ஸில் ஜோக்குகளை ப்ளஸ் என்றும் மற்றவற்றை மைனஸ் என்றும் எழுந்தியிருந்தார்கள். 

ஜோக் அமைய சூழலும் கைகொடுக்க வேண்டும் என்பார்கள். கிரேஸீக்கு அதெல்லாம் தேவையில்லை. அபூர்வ சகோதரர்கள் படத்தில் நாகேஷ் யாருடனோ பிஸியாகப் பேசிக்கொண்டிருப்பார். அன்று அவர் வீட்டில் பார்ட்டி. அப்போது ஒரு பெண் வந்து “சார் போன் வந்திருக்கு” என்பார். பதிலுக்கு நாகேஷ்  சீரியஸ் டோனில் “யார் வந்தா என்னம்மா? உள்ள கூப்ட்டு உட்கார வைங்க “ என்பார். இந்தக் காட்சியைப் பார்க்கும்போது ஒவ்வொருமுறையும் அருகிலிருப்பவர்களைதான் நான் கவனிப்பேன். அது ஜோக் என்றே கண்டுபிடிக்காமல் கடந்தவர்கள் பலர். இது தான் கிரேஸியின் பலமும் பலவீனமும். இதைக் கவனிக்காதவர்கள் உடனே “இதெல்லாம் ஒரு ஜோக்கா” எனக் கிண்டலடிப்பதுண்டு. ஆனால், கிரேஸி ஸ்டைல் புரிந்தவர்கள், அறிந்தவர்களுக்கு அவர் படங்கள் எல்லாமே ஃபுல் மீல்ஸ்தான். 

கமலும் கிரேஸியும் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த செம காம்போ. மைக்கேல் மதன காம ராஜனில் தொடங்கி வசூல்ராஜா வரை அவர்கள் இணைந்துப் படைத்த ஒவ்வொரு படமும் எவர்க்ரேன் ஸ்ட்ரெஸ் பஸ்டர்ஸ். எத்தனை முறை பார்த்தாலும் சிரிக்க வைக்கும். தமிழ் சினிமாவில் நிறைய காமெடி படங்கள் செய்தவர் என்ற பெயர் கிரேஸீக்கு இல்லாமல் போகலாம். ஆனால், நிறைய காமெடிகளை எழுதியவர் அவராகத்தான் இருப்பார். அதனால்தான் பார்த்த ஜோக்கையே திரும்பப் பார்த்தாலும் பாதி மறந்து போயிருக்கின்றன. ஒரு படத்தில் 1000 ஜோக் வைத்தால் எத்தனைதான் நினைவில் வைத்துக் கொள்வது?

கிரேஸி கமலுடன் சேர்ந்தாலும் சரி யாருடன் சேர்ந்தாலும் சரி.. தைரியமாகக் குடும்பத்துடன் பார்க்கலாம். இரட்டை அர்த்த வசனங்கள் தவறெனச் சொல்லவில்லை. ஆனால், கிரேஸியின் காமெடி பக்கா யூ சர்ட்டிஃபிகேட். 

கிரேஸியின் நாடகக் குழுவைச் சேர்ந்தவர் ஒருவர் சொன்னது. கறுப்பு நிறத்தில் ஒருவர் இருந்திருக்கிறார்.அவர், கிரேஸீ இருக்கும் ரூமைக் கடந்தபோது “என்ன தீஞ்ச வாடை வருது” என்றாராம் ஒருமுறை. ஆனால், சினிமாவில் இப்படியாக ஜோக்குகளைப் பார்த்ததாக நினைவிலில்லை. அந்தப் பொறுப்பு கிரேஸிக்கு இருந்திருக்கிறது.

கிரேஸி ஒன்றும் அபாரமான நடிகரல்ல. ஆனால், வசூல்ராஜாவில் அவர் சிரிக்க மட்டும் வைக்கவில்லை; கொஞ்சம் அழவும் வைத்திருப்பார். 

கிரேஸிக்கு இன்னும்கூட கொஞ்சம் நல்லது நடந்திருக்கலாம்; புகழ் கிடைத்திருக்கலாம் என்ற புகார் எல்லாம் எனக்கு ஏதுமில்லை. அவருக்குமே இருந்திருக்காது. 70களில் புகழ்பெறத் தொடங்கிய அவர் ஜோக்குகள் எத்தனை ஆண்டுகள் கழித்தும் ரசிக்கப்படும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அதுதான் ஒரு படைப்பாளிக்குக் கிடைக்க வேண்டிய விருது. இப்போதும் யாராவது வண்டியைத் திருப்பி கீழே விழுந்தால் அந்தக் காட்சி நினைவுக்கு வருகிறதா இல்லையா?

கிரேஸி எழுதிய கே.பி.டி. சிரிப்புராஜ சோழன் புத்தகத்தை மிஸ் செய்துவிடாதீர்கள். சினிமாவைவிடவும் அதிக நேரம் சிரிக்க வைத்திருப்பார். கிரேஸியின் பெயர்கள் எப்போதும் ஆச்சர்யம்தான். எல்லா நாடகத்திலும் வரும் ஜானகி நிஜமான நபர். அதைச் சொல்லவில்லை. மற்ற கதாபாத்திர பெயர்கள். இந்தப் புத்தகத்தில் வரும் ராஜகுருவின் பெயர் படுகிழத்தோப்பனார்.

வசூல்ராஜா படத்தில் ஒரு வசனம். “பேரு மட்டும் கங்காதரன் காவிரி தறேன் வச்சுக்கிற... ஆனா வாங்குன காசையே தர மாட்றியாமே” என எழுதியிருப்பார். அதிலிருந்து எந்தப் பெயரைக் கேட்டாலும் படித்தாலும் அதில் ஏதும் ஜோக் அடிக்க முடியுமா என அனிச்சையாக என் மூளை யோசிக்கும். அப்படி ஒருநாள் ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பார்க்க நேர்ந்தது. அடைக்கலராஜ் என்பவர் மாரடைப்பால் இறந்துபோய்விட்டதாக எழுதப்பட்டிருந்தது. “அதான் அடைச்சுக்குச்சே.. இனி என்ன அடைக்கலராஜ்” என்றேன். எப்போதாவது கிரேசி மோகனிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தால் இதையும் அவரிடம் சொல்லிக் காட்ட நினைத்திருந்தேன். ஆனால், இனி யாரிடம் சொன்னாலும் சிரிப்புக்கு பதில் வருத்தமே மிஞ்சும். காரணம், கிரேசியின் உயிரைப் பறித்ததும் மாரடைப்புதான்.

 

கார்க்கி

  • தொடங்கியவர்

முழுநீள நகைச்சுவைப் படங்களின் உச்சகட்டக் காட்சியில் அதிர்ச்சி ஏற்படும் விதமாக நெஞ்சை நெகிழ்த்தும்  காட்சி ஒன்றை அமைத்துப் படத்தை முடிப்பார்கள். அப்படி அமைந்துவிட்டது #கிரேசிமோகன் அவர்களின் மரணம். எதிர்பாராத அதிர்ச்சி. சத்தமில்லாத சாதனையாளர் கிரேசி மோகன்  . ஆனால் அவரது எழுத்துக்களுக்குச் சத்தம் உண்டு. அது அரங்கே அதிரும் சிரிப்புச் சத்தம். அது எப்போதும் ஓயாது. அவரது டைமிங் சென்ஸ் அவ்வளவு நுட்பமானது. தரமான  நகைச்சுவை , கவித்துமான மொழித்திறன் , இயல்பான கதை சொல்லல் எனத் தன் எழுத்தை ஆடம்பரம் இல்லாமல் செய்தவர். காமடியில் கலக்குபவர் மட்டுமல்ல...சென்டிமெண்டிலும்  கலங்கவைக்க அவருக்குத் தெரியும். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் குள்ளமான கமல் தன் அம்மாவிடம் பேசும் காட்சி ஒன்றே போதும். 

'மத்தவங்க என்னவேணா சொல்லட்டும்... நீ ஒன்னு சொன்னா எனக்கு அது ஆயிரம் மடங்கும்மா...' 

நகைச்சுவைக்கு உதாரணம் சொன்னால் அது பக்கம் பக்கமாகப் போகும். ஒவ்வொரு வினாடியிலும் ஏதாவது செய்துவிடுவார். அசாத்திய திறமைசாலி.

சில இழப்புகளைச் சந்திக்கும்போது எதை இழந்தோம் என்பதை நீண்டகாலத்திற்குப் பிறகுதான் உணர்வோம். அப்படி ஒரு இழப்பு தமிழ்த் திரை உலகுக்கு. நகைச்சுவையை கிரேசி மோகன் போல் எழுத ஒருவர் இப்போது இல்லை என்பதுதான் உண்மை.
அவருக்கு என் அஞ்சலிகள்.

பிருந்தா சாரதி

  • கருத்துக்கள உறவுகள்

கிரேசி மோகனின் மறைவிற்காக எழுத்தாளர் ஜெயமோகனின்  "கறாரான" அஞ்சலி

https://m.jeyamohan.in/122725#.XQJvC308w1K

Edited by மலையான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.