Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினப் படுகொலையை விசாரிக்க கனடிய வெளிவிவகார பாராளுமன்ற குழு கோரிக்கை

Featured Replies

கனடிய எதிர்கட்சியான கன்சவ்வேட்டிவ்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கானட்ஜெனஸ் MP Garnett Genius ; அவர்களால், கனடிய வெளியுறவு மற்றும் பல்நாட்டுஅபிவிருத்திக்கான பாராளுமன்றக்குழுவில் முன்மொழியப்பட்டு அனைத்துக்கட்சிப் பாராளுமன்ற பிரதிநிதிகளாலும்ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டவரலாற்றுச் சிறப்புமிக்க வரைபுபின்வருமாறு:

 தற்போது செயற்பாட்டிலுள்ளவெளிநாட்டு அலுவல்கள் மற்றும்சர்வதேச முன்னேற்றத்திற்கானகுழுவால், கனடிய நாடாளுமன்றத்திற்குவழங்கப்படும் கோரிக்கை வருமாறு:

 1. சிறீலங்காவில் வன்முறைகள் மற்றும்பேர்ரினால் பாதிப்புற்ற அனைவருக்கும்எமது கவலையைத் தெரிவிக்கிறோம்.

2. அண்மைக் காலத்தில் சிறீலங்காவில்முஸ்லிம்களை இலக்குவைத்துநடத்தப்படும் தாக்குதல்களைக்கண்டிப்பதுடன், அடிப்படை மனிதஉரிமைகளை மதித்தவாறு இனவாதமற்றும் தீவிரவாத செயற்பாடுகளைதடுக்க அதிகரித்த நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு சிறீலங்கா அரசைவேண்டுகிறோம்.

3. உயிர்ப்பு ஞாயிறு தாக்குதலில்பாதிப்படைந்தோருக்கு நீதிவழங்கசிறீலங்கா அரசு முனையவேண்டும், அத்துடன் சமயத் தலங்களைப்பாதுகாப்பதற்கும் மதரீதியானசிறுபான்மை இனங்களின் உரிமையைப்பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

4. ஐநா மனித உரிமை சபையின்தீர்மானங்களான 30-1 மற்றும் 40-1 என்பவற்றில் தெளிவாகக்குறிப்பிடப்படும் காலக்கெடுவுக்குள்சிறீலங்கா தனது கடப்பாடுகளைநிறைவேற்ற வேண்டுமென்ற கனடியநிலைப்பாட்டை மீளவும்உறுதிசெய்வதுடன், அந்நாட்டில் வாழும்அனைத்து இன மக்களுக்குமானஅமைதி, இணக்கப்பாடு மற்றும்பொறுப்புக்கூறல் என்பவற்றைமுன்னெடுப்பதில் கனடாவின் ஆதரவுதொடருமெனவும் உறுதிகூறுகிறோம்.

5. 2009 போரின் இறுதிப்பகுதி உட்பட, தமிழர்களுக்கெதிராக சிறீலங்காவில்நடைபெற்றிருக்கக்கூடிய இனஅழிப்புக்குசுதந்திரமான சர்வதேச விசாரணைநடாத்துவதற்கு ஐநா சபையைக்கோருகிறோம்.

6. சட்டக்கோவை 109ற்கு அமைய, கனடிய அரச சபையில் இந்தக்கோரிக்கையை முன்வைப்பதுடன், இந்தஅறிக்கைக்கு அரசாங்கம் விரிவானபதிலை வழங்க வேண்டுமென்றும்கோருகிறோம்.

https://www.pathivu.com/2019/06/Tamil-genocide.html?fbclid=IwAR1OZmjs2o1_4rFbJLkemvOt9vLrW5KEdpgj7R2DpimMyyeR2uZSetDCDbQ

 

?t=15

 

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: à®à®°à¯

 

கனடிய பழமைவாத கட்சியின் மிக பூதாகரமான பயங்கர பிரமாண்டமான எதிர்ப்பிற்கு மத்தியில் சிறிலங்காவின் தமிழின அழிப்புக்கு ஐநாவில் நீதி கோரும் தீர்மானம் ஒருமனதாக எல்லோர் ஆதரவுடன் நிறைவேற்றபட்டது .. ஆனால் நேற்றைய தினம் கனடிய பழமைவாத கட்சி கனடிய வெளிவிவகார குழுவிடம் சிறிலங்காவின் தமிழின அழிப்புக்கு ஐநாவில் நீதிவேண்டியும் கனடாவின் அறிக்கை வேண்டியும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.

  • தொடங்கியவர்

உடனடி அறிக்கைக்கு
ஜூன் 19, 2019 மாலை 5:00

தமிழ் இனவழிப்பை ஐ.நா விசாரணை செய்யக்கோரி கனடிய பாராளுமன்றத்தில் தீர்மானம்

Toronto: பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கனேடிய பாராளுமன்றத்தில் தமிழின அழிப்பிற்கான ஐ.நா விசாரணை செய்யக்கோரிய தீர்மானம் 3 முறை தோற்கடிக்கப்பட்டு 4 வது முறையாக இத்தீர்மானம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) வன்முறையாலும் போராலும் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறது,

2) உயிர்த்தஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குமாறும், மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்குமாறும் இலங்கை அரசிடம் கோருகிறது,

3) ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 30/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களின் கீழ் பணிக்கப்பட்டவாறு, தெளிவான கால அட்டவணைக்கு அமைவாக அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு இலங்கையிடம் கனேடிய அரசு விடுத்த கோரிக்கையை மீள உறுதிசெய்வதுடன், பொறுப்புக் கூறலை மேற்கொள்வது, சமாதானத்தை ஏற்படுத்துவது, நாட்டில் உள்ள அனைவருக்கும் இடையில் மீளிணக்கத்தை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்குக் கனடாவின் ஆதரவை மீள உறுதிசெய்கிறது,

4) இலங்கையில் தமிழர்கள் மீது புரியப்பட்டதாகக் கூறப்படும் இனப்படுகொலை மற்றும் 2009 ஆம் ஆண்டில் போரின் இறுதிக் காலம். குறித்த விசாரணை செய்வதற்கு சுதந்திரமான, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் கனடிய அரசு கோரிக்கை விடுக்கிறது.

இந்த தீர்மானம் NDP கட்சியின் மனித உரிமைக்கு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் Cheryl Hardcastle பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார். NDP கட்சிக்கும் மற்றும் அதன் தலைவர் Jagmeet Singh அவர்களுக்கும் கனடிய தமிழர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இம்முயற்சியில் Liberal கட்சியினுடைய முன்முயற்சியை, MP Shaun Chen ன் ஊடாக பாராளுமன்றதில் மே 25ல் தீர்மானமாக கொண்டு வந்ததற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Minister Nadeep Bains மற்றும் MP Gary Anadasangaree ஆகியோர் தொடர்ச்சியாக NCCT யுடன் தீர்மான வரைபில் ஈடுபட்டு, NDP கட்சி பாராளுமன்றத்தில் தீர்மானம் முன்வைத்ததை ஆதரித்திருந்தனர். கனடிய பிரதமர் Justin Trudeau மற்றும் கனடிய வெளிநாட்டமைச்சு இந்த விடயத்தில் முக்கிய தலைமத்துவத்தை கொடுத்ததை வரவேற்று கனடிய தமிழர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Conservative கட்சி சார்பில் MP Garnett Genuis அவர்கள் இவ்வரைபை மே 25 பாராளுமன்றத்தில் முன்வைத்ததற்கும், தீர்மானத்தின் திருத்தத்தை ஏற்றுக் கொண்டதற்கும், மீண்டும் அத் தீர்மானத்தை வெளிநாட்டு அமைச்சின் குழுவிற்கு ஜூன் 18ல் சமர்ப்பித்ததற்கும், எதிர்க்கட்சி தலைவர் Andrew Scheer அவர்கள் இவ்விடயத்தில் ஒருமித்த ஆதரவை வழங்கியதற்கும் கனடிய தமிழர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன் ஒன்ராரியோ பாராளுமன்ற உறுப்பினரான விஜய் தணிகாசலம் அவர்கள் மத்திய Conservative கட்சியுடனான பேச்சுவார்த்தை பரிமாற்றத்திற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

கனடியத் தமிழர் தேசிய அவை தொடர்ச்சியாக இத் தீர்மானத்தின் வரைபை முன்வைப்பதற்கு அயராது உழைத்து, அனைத்து கட்சியையும் இத்தீர்மானத்தை ஆதரிக்க வைத்திருந்தனர்.

இத் தீர்மான வரைபில், கனடியத் தமிழர் தேசிய அவை தொடர்ச்சியாக, மற்றைய பிரதேச அமைப்புக்கள், தன்னார்வலர்கள், கனடிய தமிழர் தேசிய அவையின் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களின் கடுமையான உழைப்பினூடகவே நிறைவேற்றி இருந்தனர்.

தமிழர்களின் நீதிக்கான ஒரு சரியான முன்னகர்வாக அமைகின்றது.

நன்றி!
தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை (NCCT)
தொலைபேசி: 416.830.7703
மின்னஞ்சல்: info@ncctcanada.ca

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.