Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியலை வரும் ஜூலை 2ஆம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

 

பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த 46 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பெண்கள் பாடசாலையில் தரம் 3 இல் கல்வி பயிலும் 8 வயது மாணவியை மலசல கூடத்துக்குள் வைத்து பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆசிரியர் உள்படுத்தினார் என்று பொலிஸாரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த மே மாதம் 27ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

எனினும் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்தே பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் மாணவியிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார், அவரை மந்திகை வைத்தியசாலையில் பரிசோதனைக்காகச் சேர்த்தனர்.

அத்துடன், மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வியாபாரிமூலையைச் சேர்ந்த 46 வயதுடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். அவர் நேற்று புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சந்தேகநபர் நேற்று பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். எனினும் சந்தேகநபர் விசாரணைகளில் தலையீடு செய்யலாம் என்றும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அவரால் அச்சுறுத்தல் உண்டும் எனவும் பொலிஸாரால் மன்றுரைக்கப்பட்டது.

அதனால் சந்தேகநபரின் விளக்கமறியலை எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதிவரை நீடித்து நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, மாணவி பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என்று சட்ட மருத்துவப் பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

https://www.virakesari.lk/article/58700

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிபரை இடைநிறுத்துமாறு ஆளுநர் பணிப்பு

 

பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Suren-Raghavan.jpg

மேற்குறிப்பிட்ட பாடசாலை மாணவி ஒருவர் அதே பாடசாலையின் ஆசிரியரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக,குறித்த மாணவியின் பெற்றோர் அதிபருக்கு முறையிட்டும், அதிபர் பொலிசாருக்கு இதுதொடர்பில் அறிவிக்காமல் இந்த சம்பவத்தினை மூடிமறைக்க முயற்சித்தாரென ஆளுநரின் விசேட செயலணியின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்ததனையடுத்தே குறித்த பாடசாலையின் அதிபரினை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிக இடைநிறுத்தம் செய்வதற்கு ஆளுநர் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு விசாரணைக் குழுவொன்றினையும் நியமிக்குமாறும் கௌரவ ஆளுநர் அவர்கள் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படும் குறித்த ஆசிரியரும் விசாரணைகள் முடியும்வரை சேவையிலிருந்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் வடமாகாணத்தில் இடம்பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமுடியாது எனக் குறிப்பிட்ட ஆளுநர், இவ்வாறு மோசமாக நடந்து கொள்பவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நீதித்துறையினூடாக அதியுச்ச தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் குறிப்பிட்டதோடு, வடமாகாண கல்வித்துறையில் இடம்பெறும் பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு விசாரணைக் குழுவொன்றினை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/58808

5 hours ago, கிருபன் said:

பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை

இந்த மாதிரி மிருகங்களும் அதிபராக இருப்பது கொடுமை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.