Jump to content

“ஓர் பாலின ஈர்ப்பாளராக இருப்பது என் பிழை அல்ல…”- சென்னையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!


Recommended Posts

பதியப்பட்டது

அவின்ஷு படேல் என்கிற அந்த இளைஞர், இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதிவுகளை இட்டுள்ளார்.

சென்னையில் வசித்து வரும் மும்பையைச் சேர்ந்த 19 வயது இளைஞர், கடலில் மூழ்கி தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அந்த இளைஞர், ஓர் பாலின ஈர்ப்பாளர் என்றும், அதனால் பல பாகுபாட்டுக்கு ஆளாக்கப்பட்டார் என்றும், அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என்றும் காவல் துறை தகவல் தெரிவிக்கிறது. 

அவின்ஷு படேல் என்கிற அந்த இளைஞர், இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதிவுகளை இட்டுள்ளார். தனது முடிவுக்கு யாரும் காரணமல்ல என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார். 

ஜூலை 2 ஆம் தேதி, அவின்ஷு படேல் இட்ட பதிவில், “நான் ஒரு ஆண். ஆனால், நான் நடக்கும் விதம், யோசிக்கும் விதம், உணரும் விதம், பேசும் விதம் பெண் போல இருக்கும். இதை இந்திய மக்கள் விரும்ப மாட்டார்கள். 

 

ஓர் பாலின ஈர்ப்பாளர்களுக்கு மரியாதை கொடுக்கும் மற்ற நாடுகளை நான் மதிக்கிறேன். இந்தியாவிலும் ஓர் பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களை நான் மதிக்கிறேன். நான், ஓர் பாலின ஈர்ப்பாளராக இருப்பது எனது பிழை இல்லை. அது கடவுள் செய்த பிழை. எனது வாழ்க்கையை வெறுக்கிறேன்” என்று உருக்குமாக கூறியுள்ளார். 

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அவின்ஷுவின் உடல், ஜூலை 3 ஆம் தேதி கரை ஒதுங்கியது. அதைப் பார்த்த உள்ளூர்வாசிகள், போலீஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கல்வி அறிவு பெற்று சிந்தனைகள் மேம்படும்போது சமூகத்தின் பார்வைகள் மாறலாம்.

அர்த்தநாரீஸ்வரராக இறையை வழிபடும் சமூகம் மனிதர்களிடம் அதை காண்கையில் கேலி கிண்டல் செய்வது வருந்தத்தக்கது.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/12/2019 at 1:07 AM, ஏராளன் said:

 

கல்வி அறிவு பெற்று சிந்தனைகள் மேம்படும்போது சமூகத்தின் பார்வைகள் மாறலாம்

 

பொதுவாக கல்வியறிவு, அனுபவம் தரும் பாடங்களிலிருந்து மனிதனின் சிந்தனைகள் முன்னேற்றமான வழியில் மாற வேண்டும் ..ஆனால் நடைமுறையில் அது எந்தளவிற்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

அவுஸ்ரேலியாவில் ஆவணி 30ந் திகதி “ #Wearitpurple Day “ ஆகும்.. இந்த அமைப்பு இளவயது LGBTIQவினருக்கு உதவும் ஓர் அமைப்பு.. 

Everybody has the right to be proud of who they are.

ஒவ்வொரு மனிதர்களும் வித்தியாசமான எண்ணங்களையும் இயல்புகளையும் கொண்டவர்கள்.. ஒருவர் தான் எப்படி இருக்கவேண்டும் என்பது அவரவர் உரிமை..

https://www.wearitpurple.org/our-story

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.