Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆணவமும் அடக்கமும்  Having Ego and Being Humble 

Featured Replies

ஆணவமும் அடக்கமும்  Having Ego and Being Humble 

Ego என்பதற்கு சரியான தமிழ்ப்பதம் என்ன? ஆணவம், அகங்காரம், அகந்தை, அகம்பாவம், இறுமாப்பு, கர்வம், செருக்கு, சுயகவுரவம், தலைக்கனம், தற்பெருமை, திமிர்.  Humble என்பதற்கு சரியான தமிழ்ப்பதம் என்ன? மேலே உள்ள சொற்களின் எதிர்ச்சொல்லாக இருக்கலாம். 

ஒரு மனிதன் என்பவன் பல வேறு குணாதிசயங்களை கொண்டவன். பிறப்பு தொடக்கம் இறப்பு வரை அவனுக்குள் மாற்றங்கள் வந்து போகும். சில, ஒட்டிய வண்ணமே இருக்கும். 

அந்த குணங்களால் வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் நடந்து இருக்கும். அவற்றால். சில குண அம்சங்கள் மாறி இருக்கும், மாற்றப்பட்டு இருக்கும். மாற்றம் ஒன்று தான் வாழக்கை என்பவர்கள் பலர். நான் மாறவே மாட்டேன் என்று வாழ்ந்து போனவர்களும் உண்டு.  

தன்னைப் பற்றியே சிந்தித்தல், சுயநலம், வறட்டுக் கௌரவம், தலைக்கனம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய குணங்களின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகும். மனிதனுக்கு பணம், பதவி, அழகு, செல்வாக்கு கூடும் பொழுது, அதே நேரத்தில் படிப்படியாக மமதை, ஆணவம், செருக்கு, திமிர், கர்வம் சிலருக்கு கூடி விடுகிறது. அதேவேளை 'எல்லாமே இருந்தும்' அடக்கமாக சமுகத்திற்கு உபயோகமாகவும் வாழ்ந்து, பலருக்கும் முன்னுதாரணமாக வாழ்பவர்களும் எம் மத்தியில் உண்டு. 

இந்த இரண்டு துருவ குணாதியங்களுக்கும், Ego and humble,  பொதுவானது ஒன்று இருக்கலாம். ஒரு மனிதனது ‘சுய மதிப்பு’ (SELF WORTH) மற்றும் ‘சுயமரியாதை’ (SELF RESPECT) என்று சொல்லப்படுகிற ‘சுயம்' என்ற சொல்லில் இருந்து வரலாம். இவற்றை அவரவர் புரிந்து கொள்ளுதலில் நாம் வேறுபடுகின்றோம். 

சாதாரண மனிதர்களில் இருந்து உலகத்தின் பெருந்தலைவர்களால் வரை இந்த குணாதியசங்கள் ஒரு பகுப்பாய்விற்கு உள்படும். உதாரணத்திற்கு, ட்ரம்ப் ஒரு பெரிய தலைக்கனம் பிடித்தவர் என்பவர்கள். உள்ள அதே இடத்தில், அவர் தன் மக்களின் தேவையை புரிந்த ஒரு பண்பான கோடீஸ்வரர் என்பவர்களும் உண்டு.  ஆனால், தலாய் லாமா தலைக்கனம் இல்லாத ஒரு தன்னலமற்ற மனிதர் என்பது அநேகமான மக்களின் கருத்து.  காரணம் அவரின் துறவு வாழ்க்கை. 

சில மனிதர்களால் இடத்திற்கு ஏற்ப ஒரு இடத்தில் இருந்து மற்றைய இடத்திற்கு, 180பாகை மாறி செல்லும் குணாதியசம் இருக்கலாம். அது அவர்கள் செய்யும் வேலையால் கூட நிர்ணயிக்கப்படும். உதாரணத்திற்கு காவல்துறை அதிகாரிகள் ஆணவம் கொண்டவர்களாக இருப்பர். ஆனால், வேலை அற்ற வேளைகளில் அதற்கு எதிரானவர்களாக இருப்பர். சில முகாமைதத்துவம் சம்பந்தப்பட்ட தொழில் புரிவோர் சிறிது கடுப்பானவர்களாக இருந்தால்  வெற்றிகரமாக வேலையை முடிக்கலாம் என்பதும் யதார்த்தம்.

திருமணமான ஆண்களை பொறுத்தவரையில், எங்கு என்னவாக ( சிங்கமாக) இருந்தாலும், வீட்டில் அமைதியாக, ஆம் போடுபவராக (பூனையாக) இருத்தல் - சிறப்பு !. எதுவாக இருப்பினும் எமது மேல் அன்புள்ளவர்கள் நாம் கொஞ்சம் 'அகங்காரம்' பிடித்தவர்கள் என கூறும்பொழுது (சொல்லாமல் சொல்லும்பொழுது) நாம் அந்த இடத்தில் இருந்து 'இறங்குவதே' அந்த அன்பு வைப்பவர்களுக்கு நாம் காட்டும் அன்பாக இருக்கும். நாளடைவில் அந்த மாற்றங்கள் பெரும் மகிழ்ச்சியை தரும். 

உங்களிடம் ஏதாவது ஒன்று அதிகமாக மற்றையவனிடம் இல்லாத ஒன்று இருக்கும்பொழுது அவனிடம் கொஞ்சம் humble ஆக நடந்தால் சமூகம் சிறக்கும்!

மூலம் : சுய ஆக்கம் 

 

Edited by ampanai

9 minutes ago, ampanai said:

எதுவாக இருப்பினும் எமது மேல் அன்புள்ளவர்கள் நாம் கொஞ்சம் 'அகங்காரம்' பிடித்தவர்கள் என கூறும்பொழுது (சொல்லாமல் சொல்லும்பொழுது) நாம் அந்த இடத்தில் இருந்து 'இறங்குவதே' அந்த அன்பு வைப்பவர்களுக்கு நாம் காட்டும் அன்பாக இருக்கும். நாளடைவில் அந்த மாற்றங்கள் பெரும் மகிழ்ச்சியை தரும். 

உங்களிடம் ஏதாவது ஒன்று அதிகமாக மற்றையவனிடம் இல்லாத ஒன்று இருக்கும்பொழுது அவனிடம் கொஞ்சம் humble ஆக நடந்தால் சமூகம் சிறக்கும்!

👍 அருமையான சிந்தனைக் குறிப்பு, அம்பனை. நாளாந்தம் நாம் பழகும் உறவுகளிடையே இணக்கம் நீடிக்கப் பயனுள்ள கருத்துக்கள். 😊

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.