Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவியரசு கண்ணதாசனின் நெத்தியடி பதில்! - "தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்! அது தெரியாமல் போனாலோ வேதாந்தம்"

Featured Replies

கவியரசு கண்ணதாசனின் நெத்தியடி பதில்! -  "தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்! அது
தெரியாமல் போனாலோ வேதாந்தம்!"

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

அத்துவைத வேதாந்தம் பலராலும் புரிந்துகொள்ள முடியாமலும் ஏற்றுக்கொள்ள முடியாமலும் இருப்பது ஏன்? - இது 'quora' தளத்தில் கேட்கப்பட்ட வினா.

இவ்வினா இரண்டு வினாக்களை உள்ளடக்கியது!

1.        முதல் வினா: அத்துவைத வேதாந்தம் பலராலும் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பது ஏன்?

2.        அத்துவைத வேதாந்தம் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பது ஏன்?  

இதற்கு நான் பதிவிட்ட விடைகளை இங்கு தருகின்றேன்.

1. அத்துவைத வேதாந்தம் பலராலும் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பது ஏன்?

உண்மை! அத்துவித வேதாந்தம் பலராலும் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பதற்கான காரணிகள் சிலவற்றைக் காணலாம்:

சமற்கிருதத்தில் द्वे (dve) என்றால் இரண்டு என்று பொருள். இரண்டல்ல என்னும் பொருளில் வந்த சொல்லே 'அத்வைதம்';

"பிரம்மமும், ஆத்மா-வும் இரண்டு அல்ல" என்று 'அத்வைதம்' என்ற சொல்லுக்குப் பொருள் சொல்வது அத்துவித வேதாந்தம் என்னும் தத்துவம்.

"பிரம்மமும் ஆத்மா-வும் ஒன்றுதான்" என்று நேர்மறையில் ஏன் சொல்லவில்லை?

'இரண்டு அல்ல' என்றால் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் என்ன?

மூன்றாக, நான்காக, ... என்று ஏன் விரியக்கூடாது?

ஏன் ஒன்றும் இல்லாமலும் இருக்கக்கூடாது?

இப்படிக் குழம்ப, நிறைய இடம் கொடுக்கும் தத்துவம் என்பதால் பலரும் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது 'வேதாந்த அத்துவிதம்'!

'அத்துவிதம்': சித்தாந்தப் பார்வையும் - வேதாந்தப் பார்வையும்!

அத்துவிதம் என்னும் தத்துவம் உயிர்களுக்கும், முழுமுதற் கடவுள் சிவபெருமானுக்கும் உள்ள மூன்றுவிதத் தொடர்பைக் குறிக்கின்றது!

  1. இறைவன் எல்லா உயிர்களிலும் இரண்டறக் கலந்திருக்கிறான்! அதாவது, எங்கும் நிறைந்திருக்கும் தன்மையால், உயிர்களுடன் கலப்பினால் ஒன்றாக இருக்கிறான்!
  2. உயிர்கள் அறிவித்தால் மட்டுமே அறியும் திறன் கொண்டவை. இறைவன் தந்த பொறிகள்-புலன்கள் கொண்ட உடல் என்னும் கருவிக்கொண்டே உயிர்கள் அறிவைப் பெற இயலும். இறைவன் தானே அனைத்தும் அறிபவன்! உடல் கருவி-கரணங்கள் இறைவனுக்குத் தேவையற்றவை! எனவே, உயிர்களும், இறைவனும் பொருள் தன்மையால் தனித்தனியே இரண்டானவை!
  3.  உயிர்கள் செய்யும் நல்வினை-தீவினை அனைத்தும் உயிர்களின் செயலாக இருப்பினும், வினைகளால் பற்றப்படாத இறைவன், உயிர்களின் உடனாயும் இருந்து, உயிர்கள் இயற்றும்  வினைகளின் விளைவாகிய  இன்ப-துன்பங்களுக்குத் தானும் சாட்சியாக உடன்படுகின்றான்.

இவ்வாறு,

கலப்பினால் ஒன்றாகவும்(உப்பும் நீரும் கலந்த உப்புநீர் போல), பொருள் தன்மையால் இரண்டாகவும் (உப்பு நீரில் உப்பு என்ற பொருள் வேறு, நீர் என்ற பொருள் வேறு, ஆக, இரண்டு பொருட்கள் உள்ளன;), உயிர்களுடன் உடனாகவும் இருப்பதுவே 'அத்துவிதம்' என்று எளிமையாகச் சொல்லும் சைவ சித்தாந்தம்!

சுருக்கமாகச் சொன்னால்,

  1.    'நான்' என்னும் எனக்குள் இருக்கிறான் கடவுள்' - என்பது சித்தாந்தம்! - (தன்னை நன்றாக அறிந்த தன்னடக்கம்)
  2.    'நானே கடவுளாக இருக்கிறேன்!(तत्त्वमसि, -tát túvam ási - You are that)' என்பது வேதாந்தம்!

'நானே கடவுள்' என்ற தத்துவம் படிப்பவனின் மண்டையைக் குழப்பி, புரியாமல் ஆக்குவதில் வியப்பில்லை தானே!

எழுதி முடித்ததும் நிறைவாக இருந்தது! தற்செயலாக ஒலித்தது கவியரசு கண்ணதாசனின் 'தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு!' என்ற பாடல்! இந்தப் பாடலில்,

"தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்! அது

தெரியாமல் போனாலோ வேதாந்தம்

மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத்தங்கச்சி!

என்னைத்தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என்கட்சி"

என்ற வரிகள் என்னை நெத்தியடியாகத் தாக்கின! ஆகா! இரண்டே வரியில் வேதாந்தம் ஏன் பலருக்கும் புரியாது என்று திருக்குறளைப் போல விளக்கம்! அதிர்ந்துபோனேன்!

பரவாயில்லை; நான் எழுதியது கண்ணதாசனின் கவிதைக்கு உரையாக அமைந்த அளவில் மகிழ்ச்சியே!

2. அத்துவைத வேதாந்தம் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பது ஏன்?  

பலராலும், குறிப்பாகத் தமிழர்களின் தொல்சமயமான சிவனியம் பின்பற்றும் சைவ சமயிகளுக்கு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று உண்டு!

சிவனியக் கோட்பாட்டின்படி,

  • சிவபெருமான் ஒருவனே முழுமுதற் கடவுள்!
  • மும்மூர்த்திகள்(பிரமன், திருமால், உருத்திரன்) உள்ளிட்ட ஏனைய அனைவரும் உயிர் வர்க்கங்கள்!
  • சிவபெருமான் கருப்பப்பையில் நுழைந்து, கருவாகிப் பிறக்கும் எந்த அவதாரமும் எடுப்பதில்லை!
  • உயிர்வர்க்கங்களில் சிலர் பிரமன், திருமால், உருத்திரன் உள்ளிட்ட மிக உயர்ந்த பதவிகளை அடைந்து, சிவபெருமான் அருள் ஆணைப்படி, படைத்தல், காத்தல், துடைத்தல் மற்றும் ஏனைய பணிகளைச் செய்வர்.

சமண சமயம் கடவுள் கொள்கை குறித்து ஏதும் கூறாத சமயம் !

சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள் சமண சமயத் துறவி!

கண்ணகியும், கவுந்தி அடிகளும், மதுரை செல்லும் வழியில் கடந்துசென்றவைகளாகக் குறித்தவற்றில் சிவன் கோயிலும் ஒன்று!

தமிழ்ச் சமணத்துறவி இளங்கோவடிகளின் சான்றாண்மை!

சிவபெருமானின் திருக்கோயிலை,

"பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்!",

அதாவது, "யாக்கை என்னும் உடல்பிறவி எடுக்காத பெரியோன் கோயிலும்" என்று சைவர்கள் தத்துவமான 'உடல்பிறவி எடுக்காத முழுமுதற் கடவுள் சிவபெருமான்' என்ற கருத்தை உள்ளிட்டு அழகாகக் குறிக்கின்றார் இளங்கோவடிகள்.

இதில் நாம் இரண்டு விடயங்களைக் கவனிக்க வேண்டும். சமணத் துறவியான இளங்கோவடிகள் காட்டியது சமயப்பொறை மட்டுமன்று! பிற சமயக் கொள்கைத் தனிச் சிறப்பை, குன்றாமல், மனமுவந்து உரைக்கும் பேராண்மை! பெருந்தன்மை! உள்ளிட்ட இன்னபிற சான்றாண்மை இளங்கோவடிகளுடையது!

சைவ சமயத்தை அவமதித்த சங்கராச்சாரியார்!

அத்துவித தத்துவத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, 'நாமெல்லாம் இந்துக்கள்! ஒற்றுமையாக இருக்க வேண்டும்!" என்று நயவஞ்சகமாகக் கூறிக்கொண்டு சைவ சமயத்தை உள்வாங்கிச் செரித்து, விழுங்கி அழித்துவிடத் துடித்துத் திரியும் சங்கராச்சாரியார்களும், அவர்களின் அடிப்பொடிகளும்,

"தர்மத்தை நிலை நிறுத்த, அந்த பரமசிவனின் மறு அவதாரமாக அவதரித்தவர்தான் ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதாள் அவர்கள்." என்று பிதற்றுகிறார்கள்.

இதைவிடக் கேவலமாக சைவ சமயத்தை ஒருவர் அவமதிக்க முடியுமா?

இவ்வாறான பிதற்றல், "சிவபெருமானே முழுமுதற்கடவுள்!" என்னும் சைவ சமயிகளின் சமய நம்பிக்கையை, கொள்கையைக் காலில் தூக்கிப்போட்டு மிதிக்கும் அவமானமான செயல்!

சமண சமயத்துறவியாக இருப்பினும், சைவ சமயத்துக்குரிய மதிப்பும், போற்றுதலும் நல்கிய இளங்கோவடிகளின் மாண்பு எங்கே?

'இந்து-பொந்து என்று பிதற்றிக்கொண்டு, தன்னை 'ஜகத்குரு' என்று காட்டிக்கொள்ள முயற்சிக்கும் அதேவேளையில், சைவ சமய அடிப்படைக் கொள்கையை அவமதித்துக் கீழ்மை செய்யும், 'ஸ்மார்த்த குரு' சங்கராச்சாரியார் எங்கே?

வேண்டுமானால், அத்துவிதக் கொள்கைப்படி,

"தர்மத்தை நிலை நிறுத்த வந்த பரப்பிரம்மத்தின் மறு அவதாரமாக அவதரித்தவர்தான் ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதாள் அவர்கள்." என்று கொண்டாடுங்கள்! நாங்களும் வாழ்த்துகிறோம்! .

ஆனால், அவர்கள் அவ்வாறு கூற மாட்டார்கள்! ஏனென்றால், ஆரியர்களின் முழுமுதற்கடவுளான 'பிரமம்' உடற்பிறவி எடுத்த ஆதிசங்கரர் என்று இழிவுபடுத்த ஆரியர்களின் மனம் ஒப்புக் கொள்ளாது!

சந்தடிச் சாக்கில், தமிழர்களின் சமய நம்பிக்கைகளைக் காலில் போட்டு மிதித்தால், ஆரிய மேலாண்மை நிறுவப்படுகின்றது அல்லவா? அவ்வாறான செயல்களை, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஆரியர்கள் கண்டிப்பாகச் செய்வார்கள்!

மனிதராகப் பிறந்த ஆதிசங்கரரை 'அத்துவித மத நிறுவனர்; துறவி!' என்ற முறையில் சைவர்களான தமிழர்கள் மதிக்கிறோம். பிறந்து, இறந்த ஒரு மனிதத் துறவியை "சிவபெருமானின் மறு அவதாரம்" என்று சொல் எத்துணை நீசச்செயல்!

சிவபெருமான் உடல்பிறவி அவதாரம் எடுத்ததாக, ஆரியர்களே இட்டுக்கட்டிப் புனைந்த எந்தப் புராணமும் கூறவில்லை என்பது இங்கு நினைவு கூறத்தக்கது!

சைவர்களின் சமய நம்பிக்கையை இழிவுசெய்யும் சங்கராச்சாரியார்களையும், அவர்கள் அடிப்பொடிகளையும் வன்மையாகக் கண்டிக்கும் தமிழர்கள், குறிப்பாக சைவர்கள், அத்துவிதக் கொள்கைகளையோ, சங்கராச்சாரியாரின் 'உலககுரு'த் திட்டத்தையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!

வேற்றுமையில் ஒற்றுமை காட்டிய தமிழரான இளங்கோவடிகளே வள்ளுவம் வகுத்த துறவு நெறியில் வாழ்ந்த உண்மையான துறவி!

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்

உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!

கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு

துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.