Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர்தப்பி வந்த மீனவர்கள் 'கடல்புலி'களான கதை: அம்பலப்படுத்துகிறார் தமிழக ச.ம.உ. ரவிக்குமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்தப்பி வந்த மீனவர்கள் 'கடல்புலி'களான கதை: அம்பலப்படுத்துகிறார் தமிழக ச.ம.உ. ரவிக்குமார் [ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007, 20:47 ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழக மீனவர்கள் படுகொலை விவகாரத்தில் உள்ள முரண்பாடுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார் அம்பலப்படுத்தியுள்ளார்.

தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் அவர் தெரிவித்துள்ளதாவது:

ஈழப்பிரச்னை தமிழக அரசியலில் மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. புலிகளின் விமானப்படை சாகசங்கள் தமிழக மக்களிடம் ஏற்படுத்தியிருந்த உற்சாகம், தமிழக மீனவர்கள் ஐந்து பேரைப் புலிகள்தான் கொன்றார்கள் என்ற தமிழக அரசின் அறிவிப்பால் தடுமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. தற்போது புலிகள் தரப்பு அதை மறுத்திருக்கிறது.

இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை வைத்து இந்திய அரசுடன் கூட்டுக் கடல் ரோந்து நடவடிக்கையை தொடங்குவதற்கும், அதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கவும் சிறிலங்கா அரசு கனவு காண்கிறது எனப் புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

புலிகளின் விமானப் படை குறித்த சுவாரஸ்யமான சில தகவல்கள் சௌத் ஆசியா அனலிசிஸ் குரூப் நடத்தும் இணையதளத்தில் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது. ப்ரசுன்.கே.சென்குப்தா என்ற இராணுவ ஆய்வாளர்,

புலிகளின் விமானங்கள் தென் ஆப்ரிக்காவிலிருந்து வாங்கப்பட்டிருக்கலாம். அவை 'ஸ்லின் இஸட் 242 எல்' (Zlin Z 242 L) என்ற ரகத்தைச் சேர்ந்தவை. செக்கோஸ்லேவேகியாவில் உள்ள தனியார் நிறுவனத்தின் தயாரிப்புகளான அவற்றை பிரித்து எடுத்துச் சென்று 'அசெம்பிள்' செய்ய முடியும். டீசலில் இயங்கக்கூடிய இலகுரக விமானங்களான அவற்றை தற்போது சிங்கள ராணுவம் வைத்துள்ள ராடார்களால் கண்டறிவது சிரமம். இஸ்ரேலில் தயாரிக்கப்படும் ராடார்களே அவற்றைக் கண்டறிய பயன்படும். இது மட்டுமின்றி, தற்போது சிங்களப் படையில் உள்ள விமானங்கள் குண்டு வீசுவதற்கு ஏற்றவையே தவிர வான்வெளியில் பறக்கும் விமானத்தை இடைமறித்துத் தாக்குவதற்கு ஏற்றவையல்ல... என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.

சிங்கள இராணுவத்தில் கிஃபிர் மற்றும் மிக் 27 வகை விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் மிக் ரக விமானங்களில் வானில் பறக்கும் இலக்குகளைக் கண்டறியும் ராடார் வசதி இல்லை. கிஃபிர் விமானங்களில் இந்த வசதி இருந்தபோதிலும் இரவில் அதைப் பயன்படுத்தும் திறன் சிங்களப் படையிடம் இல்லை என்று கூறும் சென்குப்தா, புலிகளின் விமானங்களை இயக்கும் வீரர்கள் இரவில் தமது இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் அபாரமான திறன் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். இதனிடையே விமானங்களைத் தாக்கும் தானியங்கி பீரங்கிகள் புலிகளிடம் இருப்பதும் இப்போது தெரியவந்துள்ளது.

ஒரு விமானம் அவர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் புலிகளை சமாளிக்க எப்படியாவது இந்தியாவை தனக்குச் சார்பாக இந்த யுத்தத் தில் ஈடுபடுத்தவேண்டும் என்ற நிலைக்கு சிங்கள அரசு தள்ளப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு குறித்து தற்போது வரும் செய்திகளை இந்தப் பின்னணியில் வைத்தே புரிந்துகொள்ள வேண்டும்.

இதுவரை சிங்கள இராணுவத்தினர்தான் தமிழக மீனவர்களைக் கொன்றார்கள் என நம்பப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் தி.மு.க. சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட மாபெரும் பேரணியின் இறுதியில், இலங்கை டெபுடி ஹை கமிஷனர் அம்சாவிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது.

தமிழக முதல்வர், பிரதமருக்கு இரண்டு கடிதங்களை எழுதினார்.

பல்வேறு அரசியல் கட்சிகளும் மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துக் களமிறங்கின.

இலங்கை அரசுக்கு எதிராகத் தமிழகத்தில் அதிகரித்து வந்த எதிர்ப்பு உணர்வு ஈழத்தமிழருக்கான ஆதரவாக மாறிவருவதை உணர்ந்து கொண்ட சிங்கள அரசு இதை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் எனத் திட்டமிட்டது. தம்மிடம் மனு அளித்த தி.மு.க. தலைவர்களிடம் இலங்கை, இந்தியப் படைகள் கூட்டாக ரோந்து போகலாம் என்ற யோசனையை இலங்கை டெபுடி ஹை கமிஷனர் அம்சா தெரிவித்தார்.

ஆனால், முதல்வர் இந்தத் திட்டத்தை நிராகரித்துவிட்டார். தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் சுட்டுக்கொல்வது நிறுத்தப்படாவிட்டால் இந்த பிரச்னையை சர்வதேச அரங்குகளில் எழுப்பப்போவதாக தி.மு.க. குறிப்பிட்டிருந்தது.

இது சிங்கள அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் காட்சிகள் மாற்றப்பட்டு வேறு கதைகள் சொல்லப்படுகின்றன.

தமிழக மீனவர்களைப் புலிகள்தான் கொன்றார்கள் என்று தற்போது தெரியவந்துள்ளதாக தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் கூறுவதற்கு பதினோரு நாட்களுக்கு முன்பாகவே இலங்கை அரசு இதேவிதமாக அறிக்கையொன்றை வெளிவிட்டது.

17.4.2007 அன்று இலங்கைத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், மார்ச் 29ஆம் தேதி தமிழக மீனவர்கள் ஐந்து பேரைக் கொன்றது புலிகள்தான் எனக் குற்றம் சாட்டியிருந்தது.

இந்தியக் கடற்படையிடம் பிடிபட்ட ஈழத்தமிழர்கள் ஆறுபேர் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் இதைத் தெரிவித்திருப்பதாகவும், அவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் என க்யூ பிரிவு போலீசார் கூறியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழக அரசு ஒரு செய்தியை வெளியிடுவதற்குப் பதினோரு நாட்களுக்கு முன்பே அந்தச் செய்தி இலங்கை அரசுக்குத் தெரிந்து அவர்களின் அறிக்கையில் வெளியாகியிருப்பது வியப்பளிக்கிறது.

தற்போது தெரியவந்துள்ள "உண்மை" முன்பே இலங்கை அரசிடம் கூறப்பட்டதா?

அல்லது

சிங்கள அரசு என்ன சொல்லியதோ அதுவே இப்போது நமது அரசுகளாலும் சொல்லப்படுகிறதா?

புலிகளின் விமானப்படைத் தாக்குதலால் நிலைகுலைந்து சோர்வடைந்துள்ள சிங்கள அரசுக்கு உதவிக்கரம் நீட்டுகிற முயற்சியின் ஒரு வெளிப்பாடா இது?

இப்படி பல சந்தேகக் கேள்விகள் நமக்கு எழுவதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன.

மார்ச் 29 ஆம் தேதி துப்பாக்கி சூட்டில் தப்பித்து வந்த இரண்டு மீனவர்கள் தெரிவித்துள்ள செய்தி முக்கியமானதாகும்.

ஏப்ரல் 11 ஆம் தேதி ஆறு இந்திய மீனவர்களையும், ஆறு ஈழத்தமிழர்களையும் நமது கடற்படை கைது செய்தது.

இரண்டு வள்ளங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களிடம் உதவிகேட்டு ஒரு படகிலிருந்த இலங்கைத் தமிழர்கள் கூக்குரலிட்டதாகவும், உயிருக்குப் போராடும் தங்களைக் காப்பாற்றி போலீஸிடம் ஒப்படையுங்கள் என அவர்கள் கோரியதாகவும் தமிழக மீனவர்கள் கூறியுள்ளனர்.

அவர்கள் மீது இரக்கப்பட்டு அவர்களை தமிழக மீனவர்கள் தமது வள்ளங்களில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்தப் பக்கமாக வந்த கடற்படையினரிடம் இந்த விவரங்களைத் தமிழக மீனவர்கள் கூறியுள்ளனர். அதன்பிறகே கடற்படை அவர்களைப் பிடித்துள்ளது. பின்னர் கரைக்கு வந்ததும், மார்ச் 29 ஆம் தேதி துப்பாக்கி சூட்டில் தப்பிய இரண்டு மீனவர்களை அழைத்து வந்து இலங்கைத் தமிழர்களைக் காட்டி முன்பு துப்பாக்கி சூடு நடத்தியது இவர்களா என்று கேட்டுள்ளனர்.

இவர்கள் இல்லை என அந்தத் தமிழக மீனவர்கள் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்கள். அதன் பிறகு அந்த ஆறு பேரும் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களோடு பறிமுதல் செய்யப்பட்ட மரியா என்ற படகிலோ அவர்களிடத்திலோ ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

13.4.2007 இல் தினசரிகளில் வெளியான செய்திகளிலும் இது உறுதி செய்யப்பட்டிருந்தது. அதற்கு நான்கு நாள் கழித்துத்தான் இலங்கைத் தூதரக அறிக்கை வெளிவந்துள்ளது.

அதன்பிறகே வேறு கதை இப்போது சொல்லப்படுகிறது.

இலங்கை அரசு இப்போது புதிய தந்திரம் ஒன்றைக் கையாண்டு வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் இதுவரை வெளிப்படையாக ரத்து செய்யப்படாத நிலையில் இராணுவத்தைக் கொண்டு நேரடியாகத் தமிழர்களைத் தாக்கினால் சர்வதேச நாடுகளின் கண்டனத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் சிங்கள இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சியளித்து சிவில் இராணுவமாக அவர்களைப் பயன்படுத்துகிறது.

தமிழ்ப் பகுதிகளில் இவர்களே பெரும்பாலான கொலைகளைச் செய்கிறார்கள் எனத் தமிழ்மக்கள் கூறுகின்றனர். இந்தியக் கடற்பகுதியில் மீன்பிடிக்கும் தங்களை புரியாத பாஷை பேசும் இதுபோன்ற இளைஞர்கள் அடிக்கடி வழி மறித்துத்தாக்குவது மட்டுமல்லாமல் சித்திரவதையும் செய்வதாகத் தமிழக மீனவர்கள் கூறுகின்றனர்.

தற்போது பிடிபட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் அப்படிப்பட்டவர்களில்லை என்பதோடு அவர்கள் வலைகளைச் சுருட்ட தமக்கு உதவியதை வைத்து அவர்களும் மீனவர்கள்தான் என உறுதியாகக் கூறலாம் என்றும் தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொன்றது புலிகள்தான் என்கிற குற்றச்சாட்டு பற்றி குழப்பம்தான் அதிகரிக்கிறது.

சிங்கள அரசாங்கம் சிக்கலில் இருக்கும்போது அதற்கு ஓடிச்சென்று உதவுவது இந்திய அரசின் சுபாவம். தற்போது சொல்லப்படும் கதையைப்பற்றி நமக்கு ஐயம் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

இதைப்புரிந்து கொள்ள கச்சத்தீவு தாரை வார்த்துத் தரப்பட்ட பின்னணியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

1971ஆம் ஆண்டு இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே.வி.பி.) இயக்கம் மிகப்பெரும் கலகத்தில் ஈடுபட்டது.

ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களைக் கொன்று அந்தக் கலகத்தை இலங்கை அரசு ஒடுக்கியது. அதன்பிறகு அங்கு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. சர்வதேச அளவில் பெயர் கெட்டிருந்த இலங்கை அரசின் இமேஜை உயர்த்தி அதற்கு தைரியத்தைத் தரும் நோக்கத்தோடுதான் கச்சத்தீவை விட்டுக்கொடுக்கும் முடிவை இந்தியா எடுத்தது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன்மூலம் இலங்கையில் ஜே.வி.பி. பரப்பிய இந்திய எதிர்ப்பு உணர்வை மட்டுப்படுத்தலாம் என்பது இந்திய அரசின் திட்டமாக இருந்தது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கச்சத்தீவை தாரை வார்ப்பது தொடர்பாக இரண்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

1974 ஆம் ஆண்டு போடப் பட்ட முதல் ஒப்பந்தத்தின் பின்னணியில் வேறொரு அரசியலும் இருந்தது.

1974, மே மாதம் இந்தியா அணுகுண்டை வெடித்தது. இதனால் பல சர்வதேச நாடுகள் இந்தியாவைக் கண்டித்தன. ஐ.நா.சபையில் இருந்த பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட தற்காலிக கமிட்டி மூலமாக இந்தியாவைக் கண்டித்துத் தீர்மானம் போட பாகிஸ்தான் முயற்சித்தது. அப்போது அந்தக் கமிட்டியின் தலைமைப் பொறுப்பிலிருந்த இலங்கையின் ஆதரவோடு அந்த முயற்சியை இந்தியா முறியடித்தது.

இந்த நிலையில் கச்சத்தீவை இலங்கை அரசு கேட்டதும் இந்திய அரசாங்கம் தமிழக மீனவர்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் அதற்கு சம்மதித்து விட்டது.

கச்சத்தீவு குறித்த இரண்டாவது ஒப்பந்தம் தமிழகத்தில் இருந்த தி.மு.க. அரசு கலைக்கப்பட்டு இந்தியாவில் அவசர நிலை அமலில் இருந்த காலத்தில் போடப்பட்டதாகும். அப்போது இந்திய-இலங்கை அதிகாரிகள் பரிமாறிக் கொண்ட கடிதங்களும்கூட அந்த ஒப்பந்தத்தின் அங்கமாகக் கருதப்பட்டது.

1974 ஆம் ஆண்டு போட்ட ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு ஆறுதலாக இருந்த அம்சங்களும்கூட 1976 ஆம் ஆண்டில் பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்களால் செல்லாமல் ஆகிவிட்டதாக இலங்கை அரசு கூறிவருகிறது.

அதை இந்திய அரசும் கேட்டுக்கொண்டு சும்மா இருக்கிறது.

2002 ஆம் ஆண்டில் ராஜ்யசபாவில் இதுபற்றிப் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் பி.ஜி.நாராயணன்

"கச்சத் தீவு இராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமாக இருந்தது பற்றி வரலாற்று ஆதாரங்கள் உள்ளன"என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஆதாரங்களைக் காட்டி கச்சத்தீவை மீட்பதற்கு நமது அரசாங்கங்கள் முன்வரவேண்டும். இப்போது சொல்லப்படும் செய்திகள் ஈழப்பிரச்னையைக் குழப்புவதற்குப் பயன்படலாமே தவிர தமிழக மீனவர்களை இது பாதுகாக்காது.

கச்சத்தீவை மீட்பது ஒன்றே இதற்குத் தீர்வு. இதை முன்வைத்து தமிழக மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ரவிக்குமார் அதில் கூறியுள்ளார்

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் தமிழ் இன விரோதிகளும், பாப்பன சத்திகளும், தமிழை விட தனது நலனே பெரிது என்று நினைப்பவர்களும், ஈழத்தமிழருக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பினாலும், தமிழை நேசிப்பவர்கள், தமிழர்களை நேசிப்பவர்கள் உண்மையை அறிவார்கள்.

கந்தப்பு ஆனந்த விகடன் பத்திரிகை

எஸ்.எம்.எஸ் மூலம் நடத்திய கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 68 வீதமானோர் தமிழக மீனவரின் கொலை மற்றும் கடத்தலில் விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்டிருக்க மாட்டார்கள் என கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.