பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது வைத்திய வட்டாரம்  தெரிவித்துள்ளது.

nawazh_sherif_s.jpg

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல்நல குறைவினால் கடந்த சில தினங்களுக்கு முன் பிணை வழங்கப்பட்டதையடுத்து அவர் உடனடியாக வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபிற்கு அல் அஜீசியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதனால் கடந்த டிசம்பர் மாதம், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.

இருதய நோய், நீரிழிவு நோயால் அவதிப்பட்ட நவாஷ் ஷெரீப்புக்கு அவருக்கு சிறையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையிலேயே நவாஸ் ஷெரீப்பின் உடல் நிலை குறித்து, அவருடைய பிரத்யேக வைத்தியர் தெரிவித்ததாவது,

நவாஸ் ஷெரீப்பின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர், உயிருக்காக போராடி வருகிறார். 

ரத்த அணுக்கள் குறைவு, நெஞ்சு வலி ஆகியவற்றால், அவரது சிறுநீரகங்களின் செயல்பாடும் பாதிக்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்துள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/67840