sunil.jpg

சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு மாத்திரம் இந்த அறிக்கைகளைப் பயன்படுத்த முடியும் என  சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியிருப்பதால் இவற்றை இரகசிய ஆவணங்களாகப் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாவும் அவர் கூறினார். 

கடந்த  2002ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மத்திய வங்கியில் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்ற முறைமை தொடர்பில் தடயவியல் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவ்வறிக்கை கோப் குழுவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த அறிக்கை தொடர்பில்  அடுத்த கட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்காக கோப் குழு விசேடமாக இன்று கூடவிருந்தது. 

எனினும் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டமையால் இக்கூட்டம் நடைபெறவில்லை. 

இந் நிலையில்  கோப் குழுவின் முன்னாள் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி இது குறித்து கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வுகளை முடிவுக்கு கொண்டுவரும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விடுத்துள்ள நிலையில் பாராளுமன்ற குழுக்கள் அனைத்தும் கலைக்கப்பட்டுள்ளது. 

கோப் குழுவின் செயற்பாடுகளும் முழுமையாக நிறுத்தப்படும்.  இன்றைய தினம் காலையில் கோப் குழு கூடவிருந்தது. அதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இன்றைய தினம் மிகவும் முக்கியமான அறிக்கையான மத்திய வங்கி திறைசேரி முறி விவகாரம் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு அறிக்கையை குறித்து நடவடிக்கை எடுக்கவிருந்தோம். 

தடயவியல் கணக்காய்வு பற்றிய ஐந்து அறிக்கைகள் மத்திய வங்கியிடமிருந்து கிடைத்துள்ளன. இது குறித்த அடுத்த நடவடிக்கைகளை தெரிவுக்குழு தீர்மானிக்க வேண்டும். 

எனினும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை அடுத்து கோப் குழுவின் செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.  

https://www.virakesari.lk/article/70327